Al Bahjathul Ibraheemiyyah Arabic College

Al Bahjathul Ibraheemiyyah Arabic College An Arabic College From Fort Galle, Srilanka

🕌 அல் பஹ்ஜாவின் பெருமை... உம்மு ஸாவியாவின் உஸ்தாத்... இனி அல்-அஸ்ஹர் நோக்கி! 🕌எமது அல் பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யா அறபுக் க...
19/05/2026

🕌 அல் பஹ்ஜாவின் பெருமை... உம்மு ஸாவியாவின் உஸ்தாத்... இனி அல்-அஸ்ஹர் நோக்கி! 🕌

எமது அல் பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யா அறபுக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், உம்மு ஸாவியாவில் உஸ்தாதாகத் திறம்படக் கடமையாற்றியவருமான அன்புச் சகோதரர் அல் உஸ்தாத் ஆதில் அல் பஹ்ஜி அவர்கள், எகிப்தின் உலகப் புகழ்பெற்ற அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் (Al-Azhar University) தனது உயர் கல்வியைத் தொடரவிருக்கிறார் என்ற செய்தி அறிந்து எமது கல்லூரி மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறது. 🎉

எமது அல் பஹ்ஜாவின் நிழலில் ஆன்மீக மற்றும் மார்க்கக் கல்வியின் அடிப்படைகளைக் கற்றுத் தேர்ந்ததுடன் நின்றுவிடாமல், உம்மு ஸாவியாவில் உஸ்தாதாகப் பணியாற்றி அடுத்த தலைமுறைக்குக் கல்வியூட்டியவர். இன்று இஸ்லாமிய உலகின் மிக உயரிய கல்வி மையத்தில் எமது மத்ரஸாவின் மாணவர் தடம் பதிக்கவிருப்பது எமது கல்லூரிக்கும் , ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்த பெரும் பாக்கியமாகும். 🎓✨

அன்புச் சகோதரர் ஆதில் அல் பஹ்ஜி அவர்கள் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலும் சிறந்து விளங்கி, மார்க்க அறிவிலும் நற்பண்புகளிலும் இன்னும் பல உயரங்களைத் தொட்டு, எதிர்காலத்தில் நம் சமூகத்திற்கு நல்வழி காட்டும் மாபெரும் அறிஞராகத் திகழ வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

கல்வியைத் தேடிப் புறப்படும் உங்களது இந்தப் புதிய பயணம் பரக்கத் நிறைந்ததாகவும், மகத்தான வெற்றிகளைத் தருவதாகவும் அமைய அல் பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யா அறபுக் கல்லூரி நிர்வாகம், அதிபர் , உஸ்தாதுமார்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக எமது நெஞ்சார்ந்த துஆக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்! 💐

ஒரு நாட்டின் ஜனாதிபதியை உருவாக்கிய இலங்கையின் அரபுக்கல்லூரி.படத்தில் இருப்பவர், மாலைத்தீவின் மூன்றாவது ஜனாதிபதியான மஹ்மூ...
25/04/2026

ஒரு நாட்டின் ஜனாதிபதியை உருவாக்கிய இலங்கையின் அரபுக்கல்லூரி.

படத்தில் இருப்பவர், மாலைத்தீவின் மூன்றாவது ஜனாதிபதியான மஹ்மூன் அப்துல் கையூம் (President Maumoon Abdul Gayoom) அவர்கள். அவர் அண்மையில் முன்னர் தாம் கற்ற காலி பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா (பஹ்ஜா அல்லது பஹ்ஜி) அரபுக்கல்லூரிக்கு விஜயம் செய்தார். அடிப்படையில் அவர் ஓர் ஆலிமாகக் கருதப்படுகிறார்.

மஹ்மூன் அப்துல் கையூம் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முன்னர் காலி உனவட்டுன பௌனா விஸ்தா கல்லூரியிலும், காலி கோட்டை பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா அரபுக் கல்லூரியிலும் கொழும்பு ரோயல் கல்லூரியிலும்
கற்றார். அதன் பின்னரே அல் அஸ்ஹரில் பட்டபெற்றார்.

மஹ்மூன் அப்துல் கையூம் உட்பட சிறந்த ஆளுமைகளை உருவாக்கிய இடமே பஹ்ஜதுல் இப்றாஹிமிய்யா அரபுக்கல்லூரியாகும்.

Sir முஹம்மத் மக்கான் மாக்கார் அவர்களின் தயாரின் மாசற்ற நீயத்தினால் உருவாக்கப்பட்ட இந்த அரபுக்கல்லூரி கி.பி 1892 முதல் பல ஆளுமைகளை உருவாக்கிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ்ஹான் நவாஸ்

Fazhan Nawas

21/03/2026
அல் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யாஹ் அரபுக் கல்லூரியின் 2026-ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு, கல்லூரி அதிப...
23/01/2026

அல் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யாஹ் அரபுக் கல்லூரியின் 2026-ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு, கல்லூரி அதிபர் அல் உஸ்தாத் ரஸூக் அல் பஹ்ஜி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதிய மாணவர்களுக்கு மத்ரஸா சட்டதிட்டங்கள் மற்றும் அன்றாடச் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மேலும், புதிதாக இணைந்த 10 மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டது . ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, துஆப் பிரார்த்தனையுடன் இனிதே நிறைவுற்றது .

🌺 அகில இலங்கை ரீதியாக அல் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யாஹ் மாணவர்களின் சாதனைகள்🌺காலி முஸ்லிம் கலாச்சார சங்கத்தினால் வருடா வருடம்...
17/09/2025

🌺 அகில இலங்கை ரீதியாக அல் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யாஹ் மாணவர்களின் சாதனைகள்🌺

காலி முஸ்லிம் கலாச்சார சங்கத்தினால் வருடா வருடம் நடாத்தப்படும் மீலாத் விழா போட்டிகளில், எமது கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்று, சிறப்பான வெற்றிகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ்வருடம் (2025) எமது மாணவர்கள் படைத்த சாதனைகள்

🥇 முதலிடம் பெற்றவர்கள்
•✍️ அரபு எழுத்தணி
முஹம்மத் இப்ராஹீம்

•🎤 தமிழ்பேச்சுப் போட்டி
அப்துல்லாஹ்

•🗣️📝 சிங்கள மொழி பேச்சுப் போட்டி & கட்டுரைப் போட்டி (இரண்டிலும்)
ஸெய்யித் புஹாரி

• 🎙️ ஆங்கிலப் பேச்சுப் போட்டி
முஹம்மத் அர்கம்

🥈 இரண்டாம் இடம் பெற்றவர்கள்

•✍️ அரபு எழுத்தணி
முஹம்மத் உஸ்மான்

•🎤 தமிழ்பேச்சுப் போட்டி
முஹம்மத் ஸாபீத்

•🗣️📝 சிங்கள மொழி பேச்சுப் போட்டி & கட்டுரைப் போட்டி (இரண்டிலும்)
முஹம்மத் அன்ஸாப்

🥉 மூன்றாம் இடம் பெற்றவர்கள்

•✍️ அரபு எழுத்தணி
அஹ்மத்

•🎤 தமிழ்பேச்சுப் போட்டி
முஹம்மத்

•🗣️ சிங்கள மொழி பேச்சுப் போட்டி
அப்துர் ரஹ்மான்

•📝 சிங்கள மொழி கட்டுரைப் போட்டி
முஹம்மத் அகீல்

🌟 இம்மாணவர்கள் தொடர்ந்து தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டு, வருங்காலங்களில் இன்னும் பல சாதனைகளைப் பெற்றிட வாழ்த்துகிறோம். 🌟

காலி மஜ்லிஸுல் உலமாவினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் மீலாத் விழாவின் ஒரு பகுதியாக, இவ்வருடம் (2025) தென் மாகாண அரப...
16/09/2025

காலி மஜ்லிஸுல் உலமாவினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் மீலாத் விழாவின் ஒரு பகுதியாக, இவ்வருடம் (2025) தென் மாகாண அரபுக் கலாபீடங்களுக்கு இடையே இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, அல்-இமாம் முஹம்மத் இப்னு அலவி அல்-மாலிகீ அல்-ஹசனீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் தாரீகுல் ஹவாதிஸ் வல் அஹ்வாலுன் நபவிய்யா
(تاريخ الحوادث والأحوال النبوية )
என்ற கிதாபை அடிப்படையாகக் கொண்டு அரபு மொழி எழுத்துத் தேர்வு போட்டி நடாத்தப்பட்டது. அப் போட்டியில் அல்-பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யாஹ் மாணவர்கள் பெற்றுக் கொண்ட இடங்கள்

சிரேஷ்ட பிரிவு
🥇 முதலாம் இடம்: முஹம்மத் ஸாபித்

கனிஷ்ட பிரிவு
🥈இரண்டாம் இடம் : முஹம்மத் அன்ஸாப்
🥉மூன்றாம் இடம்: முஹம்மத் அகீல்

🌟 இம்மாணவர்கள் எதிர்வருங்காலங்களில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க நாங்கள் வாழ்த்துவதோடு பிரார்த்தனைகள் செய்கின்றோம் . 🌟

எங்கள் கல்லூரி அல்-பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யாவை நிறுவிய அன்னையார் ஆமினா உம்மா (ரஹ்மதுல்லாஹி அலைஹா) அவர்களின் நினைவாக நடைபெ...
12/09/2025

எங்கள் கல்லூரி அல்-பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யாவை நிறுவிய அன்னையார் ஆமினா உம்மா (ரஹ்மதுல்லாஹி அலைஹா) அவர்களின் நினைவாக நடைபெற்ற ஹத்முல் குர்ஆன் மஜ்லிஸின் சில இனிய தருணங்கள்

காலி அல்-பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா பெற்றோர்-ஆசிரியர் ஒன்றுகூடல்காலி அல்-பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரியில் கல்வி பயி...
03/06/2025

காலி அல்-பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா பெற்றோர்-ஆசிரியர் ஒன்றுகூடல்

காலி அல்-பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற முக்கிய கருப்பொருளைக் கொண்டு, “அல்-பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரி பெற்றோர்-ஆசிரியர் ஒன்றுகூடல்” நேற்று மாலை 4:30 மணியளவில், அதிபர் கலீபதுஷ் ஷாதுலீ முஹம்மது ரஸூக் அல்-பஹ்ஜி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் கலந்து சிறப்பித்ததுடன், அதிபர், உப-அதிபர் மற்றும் கல்லூரியின் விரிவுரையாளர்களால் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் பங்களிப்பு, மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம், விடுமுறைக் காலங்களில் பெற்றோர் பிள்ளைகளுடன் எவ்வாறு பழக வேண்டும், பிள்ளைகளின் வளர்ச்சிக்காக பெற்றோர் எவ்வாறு பங்களிக்க வேண்டும் என்ற பல்வேறு முக்கிய கருத்துகள் உரையாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கூட்டம் மிகவும் மன எழுச்சிகளைத் தூண்டக்கூடியதாகவும், பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் செய்யும் தியாகங்களை உணர்த்தக்கூடியதாகவும், விடுமுறைக் காலங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக ஏற்படுத்தக்கூடிய சலுகைகள் அவர்களின் வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்த்தக்கூடிய வகையிலும், வாழ்க்கை மாற்றங்களை உருவாக்கக்கூடியதாகவும் சிறப்பாக நடைபெற்றது.

04/04/2025

Masha Allah! ❤️

A very beautiful recitation of Waleefa at the Zaviya Shadhuliya at Moroni, Comoros, East Africa.

மாஷா அல்லாஹ்! ❤️

கிழக்கு ஆபிரிக்காவின் கொமோரோஸில் உள்ள மொரோனி எனும் ஊரில் உள்ள ஜாவியா ஷாதுலியில் மிக அழகாய் வழீபா ஓதும் காட்சி.

30/03/2025

EID MUBARAK -2025
Eid-ul-Fitr Thakbeer
Voice of Moulavi Fazil Al Bahji Akuressa.

Address

No 60, Church Street, Fort Galle
Galle
80000

Alerts

Be the first to know and let us send you an email when Al Bahjathul Ibraheemiyyah Arabic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share