Sri Navasakthi Vinayagar Jüchen

Sri Navasakthi Vinayagar Jüchen Möge das Raffinement der hinduistischen Lehre in die gesamte Welt scheinen.

Vinayagar Chaturthi Festival              🐚🐚🐚🐚🐚Navottara Sahasra (1008) ShankhabhishekamOn Monday, September 14, 2026, o...
06/09/2026

Vinayagar Chaturthi Festival
🐚🐚🐚🐚🐚
Navottara Sahasra (1008) Shankhabhishekam
On Monday, September 14, 2026, on the auspicious occasion of Vinayagar Chaturthi, special celebrations will take place at the Navasakthi Vinayagar Temple, Jüchen.
08:30 AM: Begins with Vinayagar Puja followed by special Dravya Abhishekam for Lord Vinayagar.
10:30 AM: 1008 Shankhabhishekam (conch shell bathing ritual).
12:00 PM: Special Puja followed by Annadhanam (sacred food distribution) for all devotees.
06:00 PM: Daily (Nithya) Puja.
06:30 PM: Lord Navasakthi Vinayagar, the remover of obstacles and leader of the Ganas, will grace the Alankara Mandapam in grand decoration, followed by special Shodasa Upachara Puja and the Deity Procession (Veethi Ula).

Vinayagar Chaturthi Fest
🐚🐚🐚🐚🐚
Navottara Sahasra (1008) Shankhabhishekam
Am Montag, den 14. September 2026, findet anlässlich von Vinayagar Chaturthi ein feierliches Fest im Navasakthi Vinayagar Tempel Jüchen statt.
08:30 Uhr: Beginn mit Vinayagar Puja, gefolgt von der speziellen Dravya Abhishekam (heilige Waschungszeremonie) für Lord Vinayagar.
10:30 Uhr: 1008 Shankhabhishekam (Waschungsritual mit 1008 Muscheln).
12:00 Uhr: Spezielle Puja, gefolgt von Annadhanam (Speisung der Gläubigen).
18:00 Uhr: Tägliche (Nithya) Puja.
18:30 Uhr: Lord Navasakthi Vinayagar, der Beseitiger aller Hindernisse, wird festlich geschmückt im Alankara Mandapam aufgestellt. Es folgt eine spezielle Shodasa Upachara Puja sowie die feierliche Prozession (Veethi Ula).

06/09/2026
01/09/2026

விநாயகர் சதுர்த்தி உற்சவம்.
🐚🐚🐚🐚🐚
நவோத்ர ஸஹஸ்ர (1008) சங்காபிஷேகம்.
14.09.2026 திங்கட்கிழமை நலம்பல நல்கும் நவசக்தி விநாயகபெருமான் சன்னதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் ஆரம்பமாகி விநாயகப் பெருமானிற்கு விஷேட திரவிய அபிஷேகமும்,10.30 மணிக்கு 1008 சங்குகளினால் அபிஷேகம் இடம்பெற்று மதியம் 12 மணிக்கு விஷேட பூஜையுடன் அடியார்களிற்கு அன்னதானமும் வழங்கப்படும்.
மாலை 6 மணிக்கு நித்திய பூஜையுடன் 6.30 மணிக்கு வினைகளை அறுப்பவரும் கணங்களின் அதிபதியுமாகிய நவசக்த்திவிநாயகப் பெருமான் அலங்கார நாயகனாக அலங்கார மண்டபத்தில் வீற்றிருக்க விஷேட ஷோடஷ உபசார பூஜை இடம்பெற்று எம்பெருமான் வீதி உலாவந்து அருள்பாலிக்கவுள்ளார்🔥

Vinayagar Chaturthi Festival
🐚🐚🐚🐚🐚
Navottara Sahasra (1008) Shankhabhishekam
On Monday, September 14, 2026, on the auspicious occasion of Vinayagar Chaturthi, special celebrations will take place at the Navasakthi Vinayagar Temple, Jüchen.
08:30 AM: Begins with Vinayagar Puja followed by special Dravya Abhishekam for Lord Vinayagar.
10:30 AM: 1008 Shankhabhishekam (conch shell bathing ritual).
12:00 PM: Special Puja followed by Annadhanam (sacred food distribution) for all devotees.
06:00 PM: Daily (Nithya) Puja.
06:30 PM: Lord Navasakthi Vinayagar, the remover of obstacles and leader of the Ganas, will grace the Alankara Mandapam in grand decoration, followed by special Shodasa Upachara Puja and the Deity Procession (Veethi Ula).

Vinayagar Chaturthi Fest
🐚🐚🐚🐚🐚
Navottara Sahasra (1008) Shankhabhishekam
Am Montag, den 14. September 2026, findet anlässlich von Vinayagar Chaturthi ein feierliches Fest im Navasakthi Vinayagar Tempel Jüchen statt.
08:30 Uhr: Beginn mit Vinayagar Puja, gefolgt von der speziellen Dravya Abhishekam (heilige Waschungszeremonie) für Lord Vinayagar.
10:30 Uhr: 1008 Shankhabhishekam (Waschungsritual mit 1008 Muscheln).
12:00 Uhr: Spezielle Puja, gefolgt von Annadhanam (Speisung der Gläubigen).
18:00 Uhr: Tägliche (Nithya) Puja.
18:30 Uhr: Lord Navasakthi Vinayagar, der Beseitiger aller Hindernisse, wird festlich geschmückt im Alankara Mandapam aufgestellt. Es folgt eine spezielle Shodasa Upachara Puja sowie die feierliche Prozession (Veethi Ula).

பௌர்ணமி பூஜை     🔥🔥 🔥பௌர்ணமி பூஜைகளை முன்னிட்டு  மீனாட்சி அம்பாளுக்கு விஷேட அபிஷேகம் பூஜைகளுடன் அம்பாள் வீதி உலா வரும் க...
27/08/2026

பௌர்ணமி பூஜை
🔥🔥 🔥
பௌர்ணமி பூஜைகளை முன்னிட்டு மீனாட்சி அம்பாளுக்கு விஷேட அபிஷேகம் பூஜைகளுடன் அம்பாள் வீதி உலா வரும் காட்சிகளும் இடம்பெற்றன.

பன்னிரெண்டு பௌர்ணமி விரத ரகசியங்கள்…

சித்திரை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 15-வது பௌர்ணமி திதி சித்ரா பௌர்ணமி தேவர்களுக்கு உகந்தது. சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பூமியை ஸ்ரீ பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது. சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சித்ரா பௌர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி ஸ்ரீ குபேரன் துணைவியார் ஸ்ரீ சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.

சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது பலரும் அறிந்த ஒரு வி~யமே ! பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும்.
பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப்படுத்துவதாக கூறப்படுகிறது. பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம்.
பௌர்ணமியில் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட, வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

1. சித்திரை : இந்த பௌர்ணமி சித்ரா பௌர்ணமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நாம் முறையாக பூஜை செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நைவேத்யமாக எலுமிச்சை சாதம், பானகம், ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் வைக்க செல்வம் நிலைக்கும். தானியம் பெருகும்.

2. வைகாசி : இப் பௌர்ணமி விரதம் செய்தால் பிறவா நிலையை அடையலாம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கலும், விளாம்பழமும் வைப்பது சிறப்பானது. இதனால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.

3. ஆனி : இந்ந மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால், காரிய வெற்றி கிட்டும். எடுத்த காரியங்கள் அனைத்தும் சுபமாக முடியும். நைவேத்தியமாக உளுந்தம் பருப்பு சாதமும், முக்கனிகளையும் படைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். இந்நாளில் சாவித்திரி பூஜை செய்வது மாங்கல்ய பலம் அதிகரிக்க செய்யும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை உண்டாகும் என்பது உண்மை.

4. ஆடி : ஆடி மாதம் வரும் பௌர்ணமி மிகவும் விசே~மானது. அன்றைய தினத்தில் நம் குல தெய்வத்தை நினைத்து, மந்திரங்கள் ஜபித்து, விரதம் அனு~;டித்து அம்மனுக்கு பால் அபிN~கம் செய்து, வாழைப்பழத்தை சாதத்துடன் கலந்து நைவேத்தியமாக படைத்து, விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் வந்து சேரும். ஆடி மாத பௌர்ணமியிலும ஸ்ரீ சாவித்திரி விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை தரும். வடமாநிலத்தவர்கள், கோபத்ம விரதம், ஸ்ரீ சாவித்ரி விரதம் இந்த பௌர்ணமியில் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஆவணி : இந்த பௌர்ணமியில் விரதம் இருப்பது கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும் . இந்த நாளில் ஸ்ரீ அம்பிகையை துதித்து விளக்கேற்றி , நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மேலோங்கி இருக்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

6. புரட்டாசி : புரட்டாசியில் வரும் பௌர்ணமி அன்று விரதமிருந்து திருமாலை வணங்கி, மாவிளக்கு இட்டு. வழிபட்டால் வாழ்வில் சகல நன்மைகளும் நடைபெறும். குடும்பத்தில் ஸ்ரீ லட்சுமி கடாட்சம் உண்டாகும். புராட்டாசி பௌர்ணமிக்கு நைவேத்தியமாக இளநீர் படைப்பது விசே~மானது.

7. ஐப்பசி : ஐப்பசியில் வரும் பௌர்ணமி விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் பசி, பிணிகள் நீங்கும். வெண் பொங்கலும், நெய் பொங்கல் படைத்து ஸ்ரீ அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

8. கார்த்திகை : கார்த்திகை மாத பௌர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி ஈசனை வழிபட, விரதம் மேற்கொண்டு, சிவன் தலத்திற்கு சென்று வழிபட்டால் பேரும், புகழும் நிலைத்து நிற்கும் . இந்த மாத பௌர்ணமி தீபத் திருவிழாவாக விசே~மாக கொண்டாடப்படுகிறது.

9. மார்கழி : மார்கழி மாதம் வரும் பௌர்ணமியில் ;விரதமிருந்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும் உடல் நலம் சீராகும். நைவேத்தியமாக களியை படைத்து வழிபாடு செய்தால் க~;டங்கள் நீங்கும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

10. தை : தை மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி சூரிய பகவானை வழிபட்டு, வெல்ல பாயசம் நைவேத்தியம் படைத்து, வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும். தை மாதம் வரும் பௌர்ணமியில் திருவிடைமருதூர் திருக்கோயில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

11. மாசி : மாதி மாதம் வரும் பௌர்ணமியில் ஸ்ரீ மகாலட்சுமியை துதித்து, பாடி, தாமரை மலர்களால் பூஜித்து, கல்கண்டு பாயசம் நைவேத்தியம் செய்தால் எதிர்பாராத விதமாக செல்வம் பெருகும்.

12. பங்குனி : பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து வழிபாடு செய்தால் தர்மம் செய்த பலன் கிடைக்கும். பொங்கல் படைத்து, ஹரிஹரனை வணங்கி, விரதமிருந்தால் சிவ தீட்சை பெற்ற யோகம் இந்த வழிபாடு பெற்று தரும்.

பௌர்ணமி என்பதே சிறந்த நாளாக இருக்கும். கிரிவலம் வருவது, திருஆலய தரிசனம் செய்வது, திருகோபுர தரிசனம் செய்வது, ஸ்ரீ பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் ஸ்ரீ சத்ய நாராயணா பூஜையில் பங்கு பெறுதல், காலத்தை நிர்ணயம் செய்யும் ஸ்ரீகால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுதல், சிவபெருமானை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபடுவது மற்றும் மகான்களின் தரிசனம் சிறப்பான பலன்களை தரும்.

26/08/2026
கிருஷ்ண ஜெயந்தி           🐄🐄🐄மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' அல்லது ...
24/08/2026

கிருஷ்ண ஜெயந்தி
🐄🐄🐄
மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' அல்லது 'கோகுலாஷ்டமி' என்று கொண்டாடுகிறோம்.

அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டவும், உலகைக் காக்கவும் கிருஷ்ணர் பூமிக்கு வந்ததை நினைவு கூர்ந்து, மக்களிடம் அன்பும், பக்தியும் பெருக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீமையை அழித்தல்:
தீய சக்திகளையும் கொடிய அரசனான கம்சனை அழிக்கவும் கிருஷ்ணர் அவதரித்தார்.

தர்மம் காத்தல்:
உலகில் நீதியை நிலைநாட்டவே பகவத் கீதையை அருளிய கிருஷ்ணரின் பிறப்பு கொண்டாடப்படுகிறது.

அன்பும் பாசமும்:
கிருஷ்ணரின் குழந்தைப் பருவ
லீலைகளை நினைவுகூர்ந்து மகிழ
இது உகந்த நாளாகும்.

யூச்சின் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..வரலட்சுமி விரதம் ஆட...
21/08/2026

யூச்சின் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..

வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தின் கடைசி நன்நாளில் வெள்ளிக்கிழமை இன்று அனுசரிக்கப்படுகிறது.செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை மகிழ்விக்க வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதம் அனைவருக்கும் வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இந்த விரதம் மற்றும் வழிபாட்டின் மூலம், லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற்று, செல்வம், பெருமை, குழந்தை, மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றைப் பெறுகிறார். வரலட்சுமி விரத நாளில்,பெண்கள் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக நாள் முழுவதும் விரதமிருந்து லட்சுமி தேவியை வழிபடுவார்கள்.

1. ஓம் அகில லட்சுமியே போற்றி
2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி
3. ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
4. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
5. ஓம் அமர லட்சுமியே போற்றி
6. ஓம் அம்ச லட்சுமியே போற்றி
7. ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி
8. ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி
9. ஓம் அனந்த லட்சுமியே போற்றி
10. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
11. ஓம் ஆதி லட்சுமியே போற்றி
12. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
13. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
14. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
15. ஓம் இன்ப லட்சுமியே போற்றி
16. ஓம் இதய லட்சுமியே போற்றி
17. ஓம் ஈகை லட்சுமியே போற்றி
18. ஓம் உதய லட்சுமியே போற்றி
19. ஓம் உத்தம லட்சுமியே போற்றி
20. ஓம் உபாசன லட்சுமியே போற்றி
21. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
23. ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி
24. ஓம் கருணா லட்சுமியே போற்றி
25. ஓம் கனக லட்சுமியே போற்றி
26. ஓம் கபில லட்சுமியே போற்றி
27. ஓம் கமல லட்சுமியே போற்றி
28. ஓம் கற்பக லட்சுமியே போற்றி
29. ஓம் கஜ லட்சுமியே போற்றி
30. ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி
31. ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
32. ஓம் குண லட்சுமியே போற்றி
33. ஓம் குரு லட்சுமியே போற்றி
34. ஓம் கோமள லட்சுமியே போற்றி
35. ஓம் கோமேதக லட்சுமியே போற்றி
36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி
37. ஓம் சங்கு லட்சுமியே போற்றி
38. ஓம் சக்கர லட்சுமியே போற்றி
39. ஓம் சர்வ லட்சுமியே போற்றி
40. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி
41. ஓம் சகல லட்சுமியே போற்றி
42. ஓம் சாந்த லட்சுமியே போற்றி
43. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
44. ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி
45. ஓம் சீதா லட்சுமியே போற்றி
46. ஓம் செல்வ லட்சுமியே போற்றி
47. ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
48. ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
49. ஓம் சுப லட்சுமியே போற்றி
50. ஓம் ஜெய லட்சுமியே போற்றி
51. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
52. ஓம் ஞான லட்சுமியே போற்றி
53. ஓம் தங்க லட்சுமியே போற்றி
54. ஓம் தயா லட்சுமியே போற்றி
55. ஓம் தர்ம லட்சுமியே போற்றி
56. ஓம் தன லட்சுமியே போற்றி
57. ஓம் தவ லட்சுமியே போற்றி
58. ஓம் தான லட்சுமியே போற்றி
59. ஓம் தான்ய லட்சுமியே போற்றி
60. ஓம் தாமரை லட்சுமியே போற்றி
61. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
62. ஓம் தீப லட்சுமியே போற்றி
63. ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி
64. ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
65. ஓம் நாக லட்சுமியே போற்றி
66. ஓம் நித்ய லட்சுமியே போற்றி
67. ஓம் நிர்மல லட்சுமியே போற்றி
68. ஓம் நீல லட்சுமியே போற்றி
69. ஓம் பதும ராக லட்சுமியே போற்றி
70. ஓம் பவள லட்சுமியே போற்றி
71. ஓம் பக்த லட்சுமியே போற்றி
72. ஓம் பத்ம லட்சுமியே போற்றி
73. ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
74. ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி
75. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
76. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
77. ஓம் பால லட்சுமியே போற்றி
78. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
79. ஓம் புவன லட்சுமியே போற்றி
80. ஓம் புனித லட்சுமியே போற்றி
81. ஓம் பொன் லட்சுமியே போற்றி
82. ஓம் போக லட்சுமியே போற்றி
83. ஓம் மகா லட்சுமியே போற்றி
84. ஓம் மதன லட்சுமியே போற்றி
85. ஓம் மதுர லட்சுமியே போற்றி
86. ஓம் மங்கள லட்சுமியே போற்றி
87. ஓம் மாதவ லட்சுமியே போற்றி
88. ஓம் மகா லட்சுமியே போற்றி
89. ஓம் மகுட லட்சுமியே போற்றி
90. ஓம் மரகத லட்சுமியே போற்றி
91. ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி
92. ஓம் மாதா லட்சுமியே போற்றி
93. ஓம் முத்து லட்சுமியே போற்றி
94. ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
95. ஓம் யோக லட்சுமியே போற்றி
96. ஓம் ரத்தின லட்சுமியே போற்றி
97. ஓம் ராம லட்சுமியே போற்றி
98. ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
99. ஓம் வரலட்சுமியே போற்றி
100. ஓம் வித்யா லட்சுமியே போற்றி
101. ஓம் விஜய லட்சுமியே போற்றி
102. ஓம் விமல லட்சுமியே போற்றி
103. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
104. ஓம் வீர லட்சுமியே போற்றி
105. ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
106. ஓம் வேணு லட்சுமியே போற்றி
107. ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி
108. ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!

படிப்போருக்கு செல்வம் கொழிக்கும்,
மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்,
வாழ்க வளமுடன்🙏

Adresse

HochStr. 10b
Jüchen
41363

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Sri Navasakthi Vinayagar Jüchen erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen