ஆன்மீகம்

Directions

ஆன்மீகம் religion related

06.10.2026 செவ்வாய்க்கிழமை ராசிபலன் – 12 ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்06 அக்டோபர் 2026, செவ்வாய்க்கிழமை அன்று சந்திரன...
06/10/2026

06.10.2026 செவ்வாய்க்கிழமை ராசிபலன் – 12 ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்

06 அக்டோபர் 2026, செவ்வாய்க்கிழமை அன்று சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கும் நாளாக அமைகிறது. செவ்வாய்க்கிழமை என்பதால் செவ்வாய் பகவானின் ஆதிக்கமும் காணப்படும். குடும்பம், மனநிலை, தொழில், பணவரவு, உறவுகள் போன்றவற்றில் சந்திரனின் நிலை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். கீழே 12 ராசிகளுக்குமான பொதுப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

இன்று குடும்ப விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. மனதில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பணவரவு இருந்தாலும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அமைதியாக அணுகவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் சிறிய சோர்வு ஏற்படலாம். அதிர்ஷ்ட நேரம்: காலை 9.30 முதல் 11.00 மணி வரை.

ரிஷபம்

இன்று முயற்சிகள் வெற்றியை நோக்கி நகரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பயணத் திட்டங்கள் உருவாகலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல பலன் பெறலாம். அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12.00 முதல் 1.30 மணி வரை.

மிதுனம்

பண விஷயங்களில் இன்று சற்று கவனமாக இருக்க வேண்டும். அவசரமாக முடிவெடுப்பதை தவிர்க்கவும். தொழிலில் சிறிய தடைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் திறன் உங்களுக்கு இருக்கும். குடும்பத்தில் ஒருவரின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பழைய நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. கடன் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் ஆவணங்களை சரிபார்க்கவும். அதிர்ஷ்ட நேரம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.

கடகம்

சந்திரன் உங்கள் ராசியில் இருப்பதால் இன்று மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றலாம். குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். முக்கியமான முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். பணவரவில் ஏற்றம் காணப்பட்டாலும் குடும்பச் செலவுகளும் அதிகரிக்கலாம். தாயார் அல்லது வயதில் மூத்தவரின் ஆதரவு கிடைக்கலாம். உடல் மற்றும் மன அமைதிக்காக ஓய்வு அவசியம். அதிர்ஷ்ட நேரம்: காலை 8.00 முதல் 9.30 மணி வரை.

சிம்மம்

இன்று மறைமுகமாக இருந்த சில பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம். அலுவலகத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறலாம். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் விரைவில் சரியாகும். ஆன்மிக சிந்தனைகள் மன அமைதியைத் தரும். அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2.00 முதல் 3.30 மணி வரை.

கன்னி

நண்பர்கள் மற்றும் தொடர்புகள் மூலம் நன்மை கிடைக்கும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வாய்ப்பு கிடைக்கலாம். பணவரவு தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலை ஒன்று முடிவுக்கு வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு குறித்து பேசப்படலாம். உடல் நலத்தில் உணவு மற்றும் தூக்கத்தில் கவனம் செலுத்தவும். அதிர்ஷ்ட நேரம்: காலை 11.00 முதல் மதியம் 12.30 மணி வரை.

துலாம்

தொழில் மற்றும் பண விஷயங்களில் இன்று பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். மேலதிகாரிகளின் கவனம் உங்கள் மீது இருக்கலாம். கடினமாக உழைத்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் அவசரப்பட வேண்டாம். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது மனநிம்மதியைத் தரும். பழைய பிரச்சினை ஒன்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம். அதிர்ஷ்ட நேரம்: மாலை 4.00 முதல் 5.30 மணி வரை.

விருச்சிகம்

இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கக்கூடிய நாள். எதிர்பாராத உதவி கிடைக்கலாம். தொழிலில் புதிய பொறுப்பு அல்லது வாய்ப்பு வரலாம். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணவரவு அதிகரிக்கக்கூடும். தொலைதூரப் பயணம் தொடர்பான திட்டங்கள் உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்ட நேரம்: காலை 9.00 முதல் 10.30 மணி வரை.

தனுசு

பண விஷயங்களில் இன்று எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். இருப்பினும் உங்கள் முயற்சிக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் ஒருவரின் உடல்நலம் குறித்து கவனம் தேவைப்படலாம். கடன் அல்லது முதலீடு தொடர்பான முடிவுகளை சிந்தித்து எடுக்கவும். அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1.30 முதல் 3.00 மணி வரை.

மகரம்

கூட்டாண்மை மற்றும் உறவுகள் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணவரவு சீராக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் முக்கியமான விஷயங்களைப் பேச நல்ல நாள். மாணவர்களுக்கு கவனம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நேரம்: காலை 10.00 முதல் 11.30 மணி வரை.

கும்பம்

வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதை திட்டமிட்டு செய்தால் வெற்றி பெறலாம். அலுவலகத்தில் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். எதிரிகளின் செயல்களைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் பணியில் கவனம் செலுத்துங்கள். பழைய கடன் அல்லது நிலுவைத் தொகை தொடர்பாக முன்னேற்றம் ஏற்படலாம். உடல்நலத்தில் வயிறு தொடர்பான சிறிய பிரச்சினைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். அதிர்ஷ்ட நேரம்: மாலை 3.00 முதல் 4.30 மணி வரை.

மீனம்

இன்று மனதிற்கு பிடித்த செயல்களில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். படைப்புத் திறன் அதிகரிக்கும். காதல் மற்றும் குடும்ப உறவுகளில் நல்ல புரிதல் ஏற்படும். தொழிலில் புதிய யோசனைகளை செயல்படுத்துவதற்கு ஏற்ற நாள். பணவரவில் முன்னேற்றம் இருக்கலாம். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்தி கிடைக்கலாம். மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்ய வேண்டும். அதிர்ஷ்ட நேரம்: காலை 8.30 முதல் 10.00 மணி வரை.

🌟 இன்றைய முக்கிய குறிப்புகள்

சந்திர ராசி: கடகம்
கிழமை: செவ்வாய்க்கிழமை
முக்கிய தாக்கம்: சந்திரன் – மனநிலை, குடும்பம், உணர்வுகள்
செவ்வாய் ஆதிக்கம்: தைரியம், முயற்சி, செயல்திறன்

அதிர்ஷ்டம் அதிகம் பெறக்கூடிய ராசிகள்: விருச்சிகம், ரிஷபம், மீனம், கன்னி

குருவின் பார்வை பட்டாச்சு... இந்த 3 ராசிகளுக்கு இனி நல்ல காலம்தான்!ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவ...
05/10/2026

குருவின் பார்வை பட்டாச்சு... இந்த 3 ராசிகளுக்கு இனி நல்ல காலம்தான்!

ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் அதிர்ஷ்டம், அறிவு, வளர்ச்சி, செல்வம் ஆகியவற்றின் காரணியாக பார்க்கப்படுகிறார்.

தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான், தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வருகிறார்.ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மரியாதை கிடைக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை.

ஆண்டுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் குரு பகவான், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவார். தற்போது ஆயில்யம் நட்சத்திரத்தின் 3ஆம் பாதத்தில் பயணித்து வரும் குரு பகவான், அக்டோபர் 8ஆம் தேதி 4ஆம் பாதத்திற்குள் நுழையவுள்ளார்.

இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் குருவின் இந்த நிலை மாற்றத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம்
ஆயில்யம் நட்சத்திரத்தின் 4-ஆம் கட்டத்திற்குச் செல்லும் குரு பகவானால் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். பணிபுரிபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைப்பதுடன், நீண்டகாலமாக முடியாமல் இருந்த பணிகளும் வெற்றிகரமாக நிறைவேறும்.சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம்
ஆயில்யம் நட்சத்திரத்தின் 4-ஆம் கட்டத்திற்குச் செல்லும் குரு பகவானால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தைரியம், ஆற்றல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கும்.

பணியிடத்தில் கடின உழைப்புக்கு பாராட்டு கிடைப்பதுடன், வேலை மற்றும் தொழிலில் இருந்த சிரமங்கள் குறையும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பும் ஏற்படும். குறிப்பாக நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.

கடகம்
ஆயில்யம் நட்சத்திரத்தின் 4-ஆம் கட்டத்திற்குச் செல்லும் குரு பகவானால் கடக ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

வாழ்வின் பல துறைகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சட்ட விவகாரங்களிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம்.

மகர ராசிக்குள் நுழையும் ராகு - உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 4 ராசிகள்! ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம்  நிழல் கிரகம...
05/10/2026

மகர ராசிக்குள் நுழையும் ராகு - உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 4 ராசிகள்!

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு பகவான், மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் எப்போதும் வக்ர நிலையில் பயணிப்பவர்.
மேலும், ராகுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை. திடீர் வெற்றி, குழப்பம், தர்மசங்கடம், அரசியல் மற்றும் லட்சியம் ஆகியவற்றின் காரணியாக ராகு கருதப்படுகிறார். ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்குவார். தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் ராகு, டிசம்பர் 05ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.

மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். பஞ்சாங்கத்தின்படி, மகர ராசியில் நுழையும் ராகு 2028ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அங்கு பயணித்து, பின்னர் தனுசு ராசிக்குள் செல்லவுள்ளார்.

சனி பகவானின் ராசியான மகரத்தில் ராகுவின் பெயர்ச்சி ஏற்படுவதால், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இதன் தாக்கம் காணப்படும்.குறிப்பாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களும், எதிர்பாராத திருப்பங்களும் ஏற்படும் என ஜோதிட ரீதியில் கணிக்கப்பட்டுள்ளது.

அப்படியெனில், மகர ராசிக்குள் செல்லும் ராகுவால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் நன்மைகளும் கிடைக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்
டிசம்பரில் நடக்கும் ராகு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையப் போகிறது. ராகு 10-ஆவது வீட்டிற்கு செல்வதால், பணியிடத்தில் நல்ல மாற்றங்களும், வேலை மற்றும் தொழிலில் வெற்றியும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.புதிய சொத்துக்களை வாங்குவதற்கான யோகம் கைகூடிவரும்.

ரிஷபம்
டிசம்பரில் நடக்கும் ராகு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். ராகு 9-ஆவது வீட்டிற்கு செல்வதால், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வேலை காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில், கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி
ராகு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ராகு 5-ஆவது வீட்டிற்கு செல்வதால் மனநிம்மதி கிடைக்கும். புதிய நட்புகள் உருவாகி, அவற்றின் மூலம் நல்ல ஆதாயங்களும் கிடைக்கலாம்.

வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி மற்றும் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், பணப் பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருப்பது சிறப்பு.

மகரம்
டிசம்பர் மாத ராகு பெயர்ச்சியால் மகர ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: பணமழையில் நனையும் 4 ராசிகள்!வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கையால் உருவ...
04/10/2026

அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: பணமழையில் நனையும் 4 ராசிகள்!

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் இணைந்து யோகம் உருவாகும்போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியனும், அசுரர்களின் குருவான சுக்கிரனும் இணைந்து பயணிக்கவுள்ளனர். இதன் மூலம் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது.

அதுவும் சுக்கிரனின் சொந்த ராசியான துலாமில் இந்த யோகம் உருவாகவுள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் தொழில் நிலையில் பெருமளவில் சாதக பலன்கள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வேத நாட்காட்டியின்படி, சூரியன் அக்டோபர் 17ஆம் தேதி சுக்கிரனின் சொந்த ராசியான துலாமில் நுழைகிறார். அப்போது அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரணியாகக் கருதப்படும் சுக்கிரனும் அங்கு இருப்பதால், இரு கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறது.

இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக இந்த 4 ராசிக்காரர்கள் தொழில், பணம் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களைப் பெறப்போகின்றார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியின் 7-வது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடியும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். இருப்பினும், பெரிய நிதி முடிவுகளை எடுக்கும்போது நன்கு சிந்திப்பது நல்லது.

கடகம்
கடக ராசியின் 4-வது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

புதிய வீடு வாங்கும் ஆசை நிறைவேறலாம். பணியில் இருப்பவர்களுக்கு கடின உழைப்புக்கான நல்ல பலன் கிடைக்கும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தொழிலதிபர்களுக்கும் இந்த காலம் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிகளை திட்டமிட்டு செய்து முடித்தால் எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கலாம்.

கன்னி
கன்னி ராசியின் 2-வது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் நிதி நிலை மேம்படும்.

வருமான ஆதாரங்கள் அதிகரிக்கலாம். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வர வாய்ப்புள்ளது. முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கலாம்.

வியாபாரிகளுக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், உங்கள் செயல்திறனுக்கும் மதிப்பு கிடைக்கும். இருப்பினும், நிதி முடிவுகளை எடுக்கும் முன் முழுமையான தகவல்களை அறிந்து செயல்படுவது நல்லது. திட்டமிட்டு செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம்.

துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிலருக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் தரும் ஒப்பந்தங்கள் அமையலாம். பணிகளை வெற்றிகரமாக முடிப்பதால் மனநிம்மதி கிடைக்கும்.

தன்னம்பிக்கை அதிகரித்து, புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் உத்வேகம் ஏற்படும். பல்வேறு வழிகளில் இருந்து வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதால், நிதி நிலையும் மேம்படும்.

சூரியன்–சனி எதிரெதிர் நிலை: இந்த 3 ராசிகளுக்கு இன்று ராஜயோகம் தான்!ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் கர்மவினை மற்றும் செயல்கள...
04/10/2026

சூரியன்–சனி எதிரெதிர் நிலை: இந்த 3 ராசிகளுக்கு இன்று ராஜயோகம் தான்!

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் கர்மவினை மற்றும் செயல்களுக்கு ஏற்ப வரங்களையும் தண்டனைகளையும் வழங்கும் நீதியின் கிரகமாக சனி கருதப்படுகிறது.

நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாகச் சஞ்சரிக்கும் சனி, ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருக்கும். தற்போது சனிபகவான் மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து, பல்வேறு கிரகங்களுடன் வெவ்வேறு நிலைகளில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

அந்தவகையில், அக்டோபர் 04 ஆம் திகதி (இன்று) சூரியனும் சனியும் எதிரெதிர் நிலையில் அமைய உள்ளனர். ‘பிரதியுதி’ எனப்படும் இந்த கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது, சூரியனும் சனியும் ராசி மண்டலத்தில் ஒன்றுக்கொன்று நேர் எதிரே அமையும். இந்த அரிய கிரக அமைப்பால் நற்பலன்களைப் பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது. புதிய வாய்ப்புகள், பணியிடத்தில் அங்கீகாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணலாம். பணத்தைச் சேமிப்பதிலும் வெற்றி பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களின் உறவுகளில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகத் தீரலாம். நிதி நிலை மேம்படும். மூதாதையர் சொத்து கிடைக்கவும், கடன் பிரச்சினைகள் குறையவும் வாய்ப்புள்ளது.

மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுவதால் பொருளாதார நிலையும் சேமிப்பும் அதிகரிக்கலாம். இதன் மூலம் நீண்டகால இலக்குகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான சூழ்நிலைகள் மற்றும் சவால்களில் இருந்து நிம்மதி கிடைக்கலாம். செயல்திறன் அதிகரித்து, முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

வாழ்க்கைத்துணையுடன் இனிமையான நேரத்தை செலவிட முடியும். பணியிடத்தில் நல்ல பலன்கள் கிடைப்பதுடன், சம்பள உயர்வு மற்றும் போனஸ் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். வியாபாரத்திற்காக தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

செவ்வாய் பெயர்ச்சி: அடிமேல் அடி வாங்கும் ராசியினர் யார்? யார்?கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயால் பண விவகாரம் மற்றும் உ...
04/10/2026

செவ்வாய் பெயர்ச்சி: அடிமேல் அடி வாங்கும் ராசியினர் யார்? யார்?

கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாயால் பண விவகாரம் மற்றும் உத்தியோகத்தில் எச்சரிக்கையாக இருக்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

செவ்வாய் பெயர்ச்சி
நவகிரகங்களில் ஒன்றாக இருக்கும் செவ்வாய் வீரம், துணிச்சல் மற்றும் வலிமை இவற்றிற்கு அதிபதியாக இருக்கின்றார். மேஷம் மற்றும் விருச்சிக ராசியினரின் அதிபதியாக இருக்கும் செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் சஞ்சரிப்பார்.

அந்த வகையில் தற்போது கடக ராசியில் பயணிக்கும் செவ்வாய், நவம்பர் 12ம் தேதி வரை நீடிக்கின்றார். கடக ராசியினருக்கு அதிபதியாக இருக்கும் சந்திரன் இருப்பதால் இரண்டு கிரகங்களின் சந்திப்பு சில சவால்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டு வருகின்றது.

இக்காலக்கட்டத்தில் எந்தெந்த ராசியினர் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது என்பதையும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினரையும் தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியில் 4ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இந்த காலக்கட்டம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். மற்றவர்களை நம்புவதை தவிர்ப்பதுடன், உத்தியோகத்தில் எதையும் செய்யவும் கூடாதாம். எளிய வழிகளைத் தேடுவது, விதிகளுக்கு புறம்பாக நடப்பது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

முக்கிய முடிவு எடுப்பதில் யோசிப்பது நல்லது. திருமண வாழ்வில் சில தடைகளும் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: துவரம் பருப்பு அல்லது சிவப்பு நிற வஸ்திரங்களை செவ்வாய் கிழமைகளில் ஏழைகளுக்கு தானமாக வழங்குவது தோஷத்தை குறைக்கும்.

கடகம்
கடக ராசியினரின் உடல்நலனில் அதிக கவனம் தேவைப்படுவதுடன், ஆரோக்கியத்தில் அலட்சியம் மட்டும் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் தேவையற்ற போட்டிகள் உருவாகக்கூடும்.

பண விடயங்களில் யோசனை செய்து முடிவெடுக்கவும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் நவகிரக சன்னதியில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

கன்னி
கன்னி ராசியில் 11வது வீட்டில் செவ்வாய் சஞ்சர்ப்பதால் இக்காலக்கட்டத்தில் ஓரளவு பணவரவு இருக்கும் என்றாலும், அதற்கு தகுந்தாற் போன்று செலவும் அதிகரிக்கும்.

பொருளாதார நிலையை சீராக வைத்திருப்பதற்கு செலவுகளை கடுமையாக கட்டுபடுத்துவது சிறந்தது. நிலுவையில் உள்ள வழக்குகளால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம்.

அவசரப்பட்டு எந்தவொரு காரியத்தையும் செய்வதோ, குறுக்கு வழியில் ஆதாயம் தேடுவதோ இருப்பது நல்லது.

பரிகாரம்: நோட்டு புத்தகங்கள் ஏழை மாணவர்களுக்கு வாங்கி கொடுப்பது நல்ல பலன் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியினரின் 10ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால், உத்தியோகம் மற்றும் தொழிலில் சில சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். கூடுதல் உழைப்பு மேற்கொள்ளவும் செய்யலாம். புதிய முதலீடு தவிர்ப்பது நல்லது. மன உழைச்சலைத் தவிர்ப்பதற்கு யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது சிறந்தது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் துர்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்ததாகும்.

04.10.2026  ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் – 12 ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்04 அக்டோபர் 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சந்திர...
04/10/2026

04.10.2026 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் – 12 ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்

04 அக்டோபர் 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சந்திரன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு நகரும் முன்பகுதி வரை தொடர்புடைய பலன்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. நேரக் கணக்கின்படி, அதிகாலை 5:52 மணிக்கு தேய்பிறை அஷ்டமி முடிந்து நவமி தொடங்குகிறது. அதிகாலை சுமார் 1:23 மணிக்கு திருவாதிரை முடிந்து புனர்பூசம் தொடங்குகிறது. புனர்பூசம் மறுநாள் அதிகாலை வரை தொடர்கிறது. இந்த நாளுக்கான பஞ்சாங்கக் கணக்குகள் இடத்துக்கு ஏற்ப சில நிமிடங்கள் மாறக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய வழிபாடு சிறப்பானதாகக் கருதப்படுகிறது. புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு என்பதால் கல்வி, அறிவு, குடும்ப நலம், ஆன்மிக சிந்தனை போன்றவற்றில் கவனம் செலுத்துவதற்கு ஏற்ற நாளாக ஜோதிட மரபில் பார்க்கப்படுகிறது.

மேஷம்

இன்று மேஷ ராசியினருக்கு சில முக்கியமான விஷயங்களில் பொறுமை தேவைப்படும். பணவரவு இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பேச்சுவார்த்தை மூலம் சரியாகும். தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளை அவசரமாகத் தொடங்காமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு புதிய தகவல் கிடைக்கலாம். உடல் சோர்வு ஏற்படக்கூடும் என்பதால் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இன்று பொருளாதார ரீதியாக கவனம் செலுத்த வேண்டிய நாள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம். தொழில் தொடர்பான முக்கியமான முடிவுகளை குடும்பத்தினருடன் ஆலோசித்து எடுப்பது நல்லது. உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவி கிடைக்கலாம். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பது சேமிப்புக்கு உதவும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்று சிந்தனைத் திறன் அதிகரிக்கும். புதிய யோசனைகளை செயல்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். அலுவலகத்தில் உங்களுடைய திறமை கவனிக்கப்படும். தொழிலில் வாடிக்கையாளர்களுடன் பேசும்போது நிதானமாக செயல்படுங்கள். பணம் சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களை மட்டும் நம்பாமல் ஆவணங்களை சரிபார்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசியினருக்கு இன்று குடும்பம் தொடர்பான விஷயங்கள் முக்கியத்துவம் பெறும். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். அதே நேரத்தில் உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம். கடன் அல்லது பெரிய முதலீடு தொடர்பான முடிவுகளை அவசரப்படாமல் ஆராய்ந்து எடுக்கவும். மன அமைதிக்காக தியானம் அல்லது வழிபாட்டில் ஈடுபடலாம்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வேலை தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலதிகாரிகளுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. வருமானத்தை அதிகரிக்கும் புதிய வழிகள் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் விரைவில் சரியாகும். பயணங்கள் தொடர்பாக சிறிய தாமதம் ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்று வேலைப்பளு அதிகமாக இருக்கலாம். ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். திட்டமிட்டு செயல்பட்டால் அனைத்தையும் சிறப்பாக முடிக்க முடியும். பண விஷயத்தில் நண்பர்களுக்காக அதிக பொறுப்புகளை ஏற்க வேண்டாம். தொழிலில் போட்டி அதிகரித்தாலும் உங்கள் அனுபவம் உதவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். உடல்நிலையில் உணவு மற்றும் தூக்கத்தில் கவனம் செலுத்தவும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்று சமூக ரீதியாக நல்ல தொடர்புகள் உருவாகலாம். நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் முக்கியமான தகவல் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறலாம். பணவரவு சீராக இருக்கும். ஆனால் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இன்று பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு கிடைக்கலாம். வேலை தொடர்பாக நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதில் கிடைக்கலாம். தொழிலில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனடியாக முடிவு எடுக்க வேண்டாம். பணத்தை பாதுகாப்பாக கையாளுங்கள். குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை அல்லது தேவைக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆன்மிக சிந்தனை மன அமைதியை அளிக்கும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கலாம். கல்வி, பயணம், வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கலாம். தொழிலில் விரிவாக்கம் குறித்து சிந்திப்பவர்கள் முதலில் செலவு மற்றும் வருமானத்தை கணக்கிடுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சந்திப்பு ஏற்படலாம். பண விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.

மகரம்

மகர ராசியினருக்கு இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். வேலைப்பளுவால் மன அழுத்தம் ஏற்படாமல் ஒவ்வொரு பணியையும் தனித்தனியாக முடிக்க முயற்சி செய்யுங்கள். பணவரவு இருந்தாலும் சேமிப்பு குறையக்கூடும். பழைய கடன் அல்லது நிலுவைத் தொகையைச் சரிசெய்யும் வாய்ப்பு கிடைக்கலாம். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை முக்கியமாக இருக்கும். உடல்நலத்தில் முதுகு, மூட்டு மற்றும் சோர்வு போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்று நண்பர்கள் மற்றும் தொழில் தொடர்புகள் மூலம் பயனுள்ள வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய திட்டம் குறித்து ஆலோசனை நடத்துவீர்கள். அலுவலகத்தில் உங்களுடைய கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம். பணவரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும் உடனடி முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள் தேவையான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்று மனதில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். வேலை அல்லது தொழில் தொடர்பாக புதிய பாதை குறித்து சிந்திப்பீர்கள். பணவரவில் முன்னேற்றம் ஏற்படலாம். இருப்பினும் மற்றவர்களின் பேச்சை நம்பி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் கவனமாகப் படித்தால் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆன்மிகம் மற்றும் இறை வழிபாடு மன அமைதியை அதிகரிக்க உதவும்.

இன்றைய பொதுப் பலன்

04 அக்டோபர் 2026 அன்று தேய்பிறை நவமி, புனர்பூசம் நட்சத்திரம் நிலவுகிறது. கணக்கின்படி சூரிய உதயம் சுமார் 5:54 AM, சூரிய அஸ்தமனம் 6:03 PM. ராகு காலம் 4:32 PM–6:03 PM, எமகண்டம் 11:59 AM–1:30 PM எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் பெரிய முடிவுகளை எடுப்பவர்கள் அவசரப்படாமல் தேவையான தகவல்களைச் சரிபார்த்து செயல்படுவது நல்லது. குறிப்பாக பணம், தொழில் ஒப்பந்தம், கடன், முதலீடு போன்ற விஷயங்களில் நடைமுறை அணுகுமுறை அவசியம்.

அக்டோபர் 17ல் நிகழும் சூரிய பெயர்ச்சி: பலன் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இன்று கால...
03/10/2026

அக்டோபர் 17ல் நிகழும் சூரிய பெயர்ச்சி: பலன் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இன்று கால்பதித்துள்ளோம். இந்த மாதத்தில் பல முக்கியமான விழாக்களும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. அதுமட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் அக்டோபர் மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

காரணம், இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. குறிப்பாக, கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன் தனது ராசியை மாற்றவுள்ளார்.

ஆற்றல், அங்கீகாரம் மற்றும் தலைமைத்துவத்தின் அதிபதியாகக் கருதப்படும் சூரியன், அக்டோபர் 17ஆம் தேதி கன்னி ராசியிலிருந்து விலகி, சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் சாதகமான பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக, இந்த சூரிய பெயர்ச்சி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களையும் நன்மைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

அந்த வகையில், இந்த பெயர்ச்சியால் அதிகபலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவது சிறப்பான பலன்களைத் தரும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும்.

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் இது நல்ல காலமாக இருக்கும்.

சிம்மம்
சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக இருப்பதால், இந்த காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். அதிர்ஷ்டம் அதிகரித்து, நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும் காலமாக இது இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலம் சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் நல்ல பலன்களைத் தரும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வெளிநாட்டு பயணம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

பணியில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைத்து, சேமிப்பு அதிகரிக்கலாம்.

திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறுவதால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். மேலும், பிள்ளைகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெறலாம்.

ஊர் சுற்றுவதில் கெட்டிக்காரர்கள் இந்த 3 ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,...
03/10/2026

ஊர் சுற்றுவதில் கெட்டிக்காரர்கள் இந்த 3 ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும், அவர்களிடம் காணப்படும் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையின் மீது அதிக ஈடுபாடும், புதிய இடங்களைச் சுற்றிப் பார்த்து அனுபவிப்பதில் தனி ஆர்வமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

குறிப்பாக, சுற்றுலா செல்வது, புதிய இடங்களைக் கண்டறிவது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஊர் சுற்றுவது போன்றவற்றில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.

ஒரே இடத்தில் இருப்பதைவிட, அவ்வப்போது புதிய இடங்களுக்குச் சென்று, இயற்கை அழகையும் புதிய அனுபவங்களையும் ரசிப்பதில் இவர்கள் அதிக மகிழ்ச்சி அடைவார்கள்.

அப்படி பயணம் செய்வதிலும், ஊர் சுற்றுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாகக் கருதப்படும் ராசியினர் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான கிரகமான குருவால் ஆளப்படுகிறார்கள். புதிதாக எதையாவது தேடிக்கொண்டே இருப்பது இவர்களின் இயல்பு.

நீண்ட பயணம், புத்தகம் அல்லது ஆழமான உரையாடல் என தொடர்ந்து மனம் மற்றும் உடலுக்கு இயக்கம் தேவைப்படும்.

பிறர் கட்டுப்படுத்துவதை விரும்பாத இவர்கள், சுதந்திரம் வழங்கும் உறவுகளையும் வேலைகளையும் விரும்புகிறார்கள். இவர்களின் நேர்மறை ஆற்றலும் அச்சமற்ற மனப்பான்மையும் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மாற்றம் மற்றும் கிளர்ச்சியின் கிரகமான யுரேனஸால் ஆளப்படுகிறார்கள். சிந்தனைச் சுதந்திரத்தை மிகவும் மதிக்கும் இவர்கள், பொதுவான பாதையைப் பின்பற்றாமல் தங்களுக்கென தனிப் பாதையை உருவாக்குவார்கள்.

நட்பானவர்களாகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பதுடன், சில நேரங்களில் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள தனிமையையும் விரும்புவார்கள்.

அசாதாரணமான வாழ்க்கை முறை, தொழில் அல்லது நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கும் இவர்களின் சுதந்திரமான மற்றும் எதிர்கால நோக்குச் சிந்தனை தனித்துவமானது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஆற்றல் மற்றும் தைரியத்தின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுகிறார்கள். தைரியமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும்.

இவர்கள், புதிய விஷயங்களை முயற்சிக்கத் தயங்கமாட்டார்கள். ரிஸ்க் எடுப்பதையும் விரைவாகச் செயல்படுவதையும் விரும்புவார்கள்.

கட்டுப்படுத்தப்படுவதை விரும்பாத இவர்களின் முதலில் செயல்பட்டு, பின்னர் சிந்திக்கும் அணுகுமுறை பல துணிச்சலான சாகசங்களுக்கு வழிவகுக்கும்.

கடக ராசியில் செவ்வாய்: நவம்பர் 12 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!நவகிரகங்களில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவ...
03/10/2026

கடக ராசியில் செவ்வாய்: நவம்பர் 12 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

நவகிரகங்களில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை இருப்பார்.

அந்த வகையில், தற்போது செவ்வாய் கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். அவர் நவம்பர் 12ஆம் தேதி வரை கடக ராசியில் இருப்பார். கடக ராசியின் அதிபதி சந்திரன்.

ஜோதிட நம்பிக்கைகளின்படி, செவ்வாய் மற்றும் சந்திரன் இருவரின் தன்மையும் தாக்கமும் வெவ்வேறானதாகக் கருதப்படுகிறது. இதனால் கடக ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலம் சில ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தக்கூடும்.

சில நேரங்களில் சரியான முடிவை எடுக்க முடியாமல் குழப்பம் ஏற்படலாம். அதேபோல், அவசரமாக எடுக்கும் முடிவுகள் சிக்கல்களை மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே, இந்த காலகட்டத்தில் எந்தவொரு செயலையும் மிகவும் கவனமாக மேற்கொள்வது நல்லது.

குறிப்பாக, பணம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாயால் எந்தெந்த ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியின் 4-ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளதால், இக்காலத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். மற்றவர்களை அளவுக்கு அதிகமாக நம்புவதையும், வேலையில் அவசரப்படுவதையும் தவிர்க்க வேண்டும்.

குறுக்கு வழிகள், விதிமீறல்களைத் தவிர்க்காவிட்டால் பிரச்சனைகளில் சிக்க நேரிடும். திருமணத்திலும் தடைகள் ஏற்படலாம்.

முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் நன்மை, தீமைகளை ஆராய வேண்டும். பணிபுரிபவர்கள் சிரமங்களால் வேலைமாற்றம் குறித்து சிந்திக்க நேரிடும்.

கன்னி
கன்னி ராசியின் 11-ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளதால், நிதி ஆதாயங்கள் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். எனவே செலவுகளை கட்டுப்படுத்தி நிதி நிலையை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.

நீதிமன்ற வழக்குகளால் அலைச்சல் ஏற்படலாம். எந்த செயலிலும் அவசரப்படாமல், குறுக்கு வழிகளைத் தவிர்த்து திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

முக்கியமாக பணவிடயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதுடன் புதிய முதலீடுகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.

கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உள்ளதால், ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பணியிடத்தில் சக ஊழியர்களுடன் போட்டி அதிகரிக்கலாம். நிதி விஷயங்களில் நன்கு சிந்தித்து முடிவெடுப்பதுடன், தேவையற்ற செலவுகள் மற்றும் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது சிறப்பு.

காதல் உறவில் சிறு விஷயங்களால் தவறான புரிதல்கள் ஏற்படலாம். குறிப்பாக நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

Address

Ha Tri

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆன்மீகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share