Raakah Islamic Centre Tamil

Raakah Islamic Centre Tamil அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் அடிப்படைய?

30/03/2023

ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
'ஃபித்னா (சோதனை) பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் மனனம் செய்திருக்கிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்டார். 'நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்! 'ஒருவர் தம் குடும்பத்தினர். தம் செல்வம், மற்றும் அண்டை வீட்டார் விஷயத்தில் சோதனைக்கு ஆளாகும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்குப் பரிகாரமாக அமையும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்!'
(ஸஹீஹுல் புகாரி: 1895. , அத்தியாயம்: 30. நோன்பு)

25/03/2023

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِذَا كَانَتْ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ، وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَنَادَى مُنَادٍ : يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ. وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ ".

ابن ماجه ١٦٤٢
ரமழான் ஆரம்ப இரவாகி விட்டால் ஷெய்தான்களும் தீய ஜின்களும் விளங்கிடப்படுகின்றனர். நரகின் கதவுகள் மூடப்படுகின்றன. அவற்றில் ஒன்றும் திறக்கப்படுவதில்லை. சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன அவற்றில் ஒன்றும் மூடப்படுவதில்லை. அழைப்பு விடுக்கின்ற ஒருவர்”நன்மையை விரும்புபவரே அதற்கு முன்வாரும் , தீமையை விரும்புபவரே அதை விட்டு விடும்” என்று அழைப்பார். அல்லாஹ்வால் நரகிலிருந்து விடுதலை பெறுகின்றவர்கள் உள்ளனர். இது ஒவ்வொரு இரவிலும் உள்ளது.

(நூல் : இப்னு மாஜஹ்1642)

20/03/2022

மௌத்துக்குத் தயாரகுதல் ஏன்? எப்படி??

மனித வாழ்வில் அனைவரும் சந்திக்கும் மிகக் கடுமையான சோதனை மரணத்தையன்றி வேறெதுவுமில்லை. சமகால உலகில் மனித ஆயுளை நீடிப்பதற்கும் என்றும் இளமையுடன் இருப்பதற்கும் மருத்துவத்துறை அதீத ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆயினும் மரணப்பிடியிலிருந்து எந்த மருத்துவமும் யாரையும் காப்பாற்றாது என்பது யாவரும் அறிந்ததே.

மரணம் யாவரையும் அடைந்தே தீரும் என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் அல் குர்ஆன் வசனங்கள் பின்வருமாறு.....

'நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.
(அல்குர்ஆன் 4:78)

'நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. '

(அல்குர்ஆன் 62:8)

மரணம் எப்போதும் சம்பவிக்கலாம் அது எப்போது நிகழுமென்பதை யாருமே அறிந்ததில்லை...

தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

(அல்குர்ஆன் 31:34)

எப்படித்தயாராகுவது மௌத்துக்கு?????

1- கடமையான வணககங்களைத் தவறாமல் நிறைவேற்றுவது. மற்றும் ஹராமான காரியங்களை முழுமையாக விலகி வாழ்தல்.

2- நற்காரியங்களைச் செய்வதில் முந்திக்கொள்தல்.

3- பயனுள்ள அறிவை அதிகரித்துக் கொள்தல்.

4- தனது மரணத்துக்குப் பின்னரான கடமைகள், அமானிதங்கள் உள்ளடக்கிய தனது உயிலை எழுதி வைத்துக் கொள்ளல்.

மரணத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள அனைவரும் செய்தாகவேண்டிய இந்த அம்சங்களில் கவனமெடுப்போமாக! வல்லவன் ரஹ்மான் நம்மனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக!

14/03/2022

இறுகிய உள்ளங்கள் இலகுவதற்கு என்ன வழி???????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு மனிதர் உம்மு-தர்தாவிடம் வந்துஇ கூறினார்: எனக்கு மிகப்பெரிய நோய் உள்ளதுஇ எனவே உங்களிடம் அதைக் குணப்படுத்த மருந்துண்டா எனக் கேட்டார்? அதற்கு அது என்ன நோய்? என்று கேட்டார். நான் இதயத்தில் கடினத்தன்மையைக் காண்கிறேன் என்று அவர் கூறினார். உங்கள் நோய் மிகப்பெரிய நோய். நோய்வாய்ப்பட்டவர்களிடம் சென்று நலம் விசாரியுங்கள், ஜனாஸாவில் கலந்து கொள்ளுங்கள், கப்றறைகளைப் பாருங்கள், ஒருவேளை அல்லாஹ் உங்கள் இதயத்தை மென்மையாக்குவான். என்று உம்முத் தர்தா (ரழி) அவர்கள் அந்நபருக்குக் கூறினார்கள். அந்நபர் அதைச் செய்தார் அதனால் தனக்குள் மென்மையை உணர்ந்தது போல் இருந்ததை உணர்ந்த அந்த மனிதர் உம்மு-தர்தாவிடம் வந்து அவருக்கு நன்றி கூறினார்.

அஸ்ஸுஹ்த் - இமாம் அபூதாவூத் அஸ்ஸிஜிஸ்தானீ

13/03/2022

துஆச் செய்யும் போது கவனிக்க வேண்டியது

அல்லாஹ்விடம் நாம் பிராத்திக்கும் போது பாவமன்னிப்பைக் கோரிய நிலையில் நமது தேவைகளைக் கேட்பது இஸ்லாம் வலியுறுத்தும் ஓர் அம்சமாகும். ஏனெனில் நம்மிடம் இருக்கின்ற பாவத்தின் காரணமாக நமது துஆ ஏற்றுக்கொள்ளப்படாமலிருக்கலாம் கீழ்வரும் இரு வசனங்களில் பாவமன்னிப்பைக் கேட்பதுடன் சேர்த்து தேவைகளை அல்லாஹ்விடம் வேண்டப்பட்டிருப்பதிலிருந்து இதை விளங்கலாம்.

'என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்' எனக் கூறினார்.
(அல்குர்ஆன் 38:35)

எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்' என்று கூறுகிறான்.
(அல்குர்ஆன் 46:15)

அறபு மொழியுடன் இஸ்லாமிய அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொள்ள உங்களுக்கோர் அரிய வாய்ப்பு
09/03/2022

அறபு மொழியுடன் இஸ்லாமிய அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொள்ள உங்களுக்கோர் அரிய வாய்ப்பு

06/03/2022

ஷஃபான் மாதமும் நோன்பும்

இறைத்தூதர் அவர்களே ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று எந்த மாதத்திலும் நீங்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை என்று நான் கூறினேன். அதற்கு 'அது ரஜப் மற்றும் ரமழானுக்கு இடையில் மக்கள் புறக்கணிக்கும் ஒரு மாதமாகும் மேலும் இது அகிலத்தின் இறைவனிடம் செயல்களை உயர்த்தும் மாதமாகும் எனவே நான் நோன்பாளியாக இருக்கும் போது எனது செயல்கள் உயர்த்தப்படுவதை நான் விரும்புகிறேன்'. என்று அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரழி) , (நஸாஈ)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: '(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!'
(ஸஹீஹுல் புகாரி: 1969. , அத்தியாயம்: 30. நோன்பு)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். 'உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!' என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 1970. , அத்தியாயம்: 30

02/03/2022

உக்ரைன் மீதான ரஷ்யப்படையெடுப்பு இஸ்லாமிய மற்றும் வரலாற்றுப் பார்வை....

ரஷ்யா உக்ரைனைத் தாக்கப் போகிறது, ஆனால் நீங்கள் ஒரு முஸ்லீம், உக்ரைனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உக்ரைன் வரலாற்றை படங்களாகவும், காணொளி களாகவும் நீங்கள் பார்க்க விரும்பினால், உய்குர்களுடன் சீனா இன்று என்ன செய்கிறது என்பதைப் பாருங்கள், மஸ்ஜிதுகளும் இஸ்லாமிய நிறுவனங்களும் பரவியிருந்த உக்ரைன் இஸ்லாமிய பூமியாக இருந்தபோது ரஷ்யா உக்ரைனுக்கு என்ன செய்தது என்ற அனைத்து காட்சிகளையும் விட்டு விடுங்கள்.

முஸ்லீம் உக்ரைன் கி.பி 1833 இல், ரஷ்யப் படைகள் இஸ்லாமிய நூலகங்களைக் கைப்பற்றி அழித்ததோடு, இஸ்லாமிய நூற்களையும் குர்ஆன்களையும் எரித்து அழித்தன.

மஸ்ஜிதுகளைப் பொறுத்தவரை, 900 க்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகள் இடிக்கப்பட்டு வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டன, இதுவரை பல கிரிமியன் கிராமங்களில் நிர்முலமாக்கப்பட்ட அந்த மஸ்ஜிதுகளின் அடையாளங்கள் உள்ளன. கி.பி 1876 இல், ரஷ்ய அதிகாரிகள் புனித ஹஜ் யாத்திரை செல்வதற்கு முஸ்லிம்களுக்குத் தடை விதித்தனர்.

ரஷ்ய அதிகாரிகள் கிரிமியாவின் முஸ்லிம்களை நோக்கி இன மற்றும் மதச் சுத்திகரிப்பு பிரச்சாரங்களைத் தொடங்கினர். 1890 ஆம் ஆண்டில், அதிகாரிகள் மஸ்ஜிதுகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடிவிட்டனர், இதன் எண்ணிக்கை 1550 முதல் 275 கல்வி நிறுவனங்களாகக் குறைந்து முஸ்லிம்களை தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது.

மஸ்ஜிதுகள், பாடசாலைகளுடன் தமது நாசகர செயற்பாடுகளை ரஷ்யர்கள் போதுமாக்கிக் கொள்ளவில்லை முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்களிலும் கைவைத்தனர். அவை தோண்டி எடுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன, கட்டுமானப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுவதற்காக அவற்றிலிருந்து கற்கள் திருடப்பட்டன.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்........)

01/03/2022

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு... தொடர் - 3

உக்ரைனில் நடப்பதைப் மேற்கத்தேய அறிக்கைகள் பல கண்டித்திருந்த போதிலும் அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ உக்ரைனை ஆதரித்து அதனுடன் உண்மையான வழியில் நிற்கும் என்பது சாத்தியமில்லை. உண்மையில், இந்த நாடுகள் 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை அல்ல. அவர்களின் வாழ்க்கை முறையும், இன்பங்களில் மூழ்கிய அவர்களின் நிலையும் போரிடவும், பின் தொடரவும் இயலாதவர்களாக அவர்களை ஆக்கிவிட்டது. ஆப்கானிஸ்தான், மாலி, சோமாலியா மற்றும் பிற நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் நடத்திய அனைத்துப் போர்களும் அவர்களின் இயலாமை மற்றும் தோல்வியை நிரூபித்தன. "மேற்கின் மரணம்" என்ற புத்தகத்தை எழுதிய அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் "பேட்ரிக் புகானின்" போன்ற அவர்களின் அறிவுஜீவிகள் பலர் இதைத்தான் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு புதிய உலக ஒழுங்கு மற்றும் யதார்த்தத்தை திணிப்பதற்கும் தனது லட்சியங்களை நிறைவு செய்வதற்கும் இது ரஷ்யாவுக்கு உதவும், குறிப்பாக சீனா அதை ஆதரித்தால்.

இறுதியில், தாம் அசையாமலிருந்த நிலையில் வலப்புறமும் இடப்புறமும் தம்மை வீசியெறிகின்ற அலைகளுக்காக காத்திருக்காமலிருப்பது முஸ்லிம்களுக்கு அவசியமாகின்றது. வலிமையான இஸ்லாமிய நாடுகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உலக அமைப்பில் ஒரு கனத்தையும் சொல்லையும் பெறுவதற்குத் தங்களின் அனைத்துத் திறனுடனும் பாடுபட வேண்டும். அந்த நாள் வரும் என்றும், பல நூற்றாண்டுகளாக இருந்ததைப் போன்று மீண்டும் உலகத் தலைவர்களாக முஸ்லிம்கள் திரும்புவார்கள் என்றும் நம்புகிறோம்.

28/02/2022

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு... தொடர் - 2

முதலாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியன் - போல்ஷிவிக்குகள் ரஷ்யாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு - மேலும் விரிவடைந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, போலந்து மற்றும் உக்ரைன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதன் கட்டுப்பாட்டின் வரைபடம் மாறவில்லை. கருங்கடல், பால்டிக் கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் உறைந்த துருவம் ஆகியவற்றை காணும் கண்டத்தின் அளவு ஒரு நாடாக மாறும் வரை அது மேலும் அதிகரித்தது, அதன் பரப்பளவு 400,000 கிமீ முதல் 14 மில்லியன் கிமீ வரை உயர்ந்தது.

அதன்பிறகு, மேற்குலகின் போர்கள் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்தன, நேரடி மோதலால் அல்ல, மாறாக ஆயுதப் போட்டி, தொழில்நுட்பப் போட்டி மற்றும் ப்ராக்ஸி போர்கள் மூலம் அவை களம் கண்டன. ரஷ்யர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் காலடி எடுத்து வைக்கும் வரை பனிப்போர் தொடர்ந்தது. ரஷ்யா தங்கள் நாட்டிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தும் வரை வீரத்துடன் போராடி யிருந்தார்கள். பின்னர் சோவியத் யூனியன் சரியத்துவங்கியது. மேலும் பல நாடுகள் அதிலிருந்து பிரிந்து தங்கள் சுதந்திரத்தை அறிவித்தன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த நேரத்தில், மேற்கத்தேய நாடுகள் நீண்ட காலமாக காத்திருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒருமுனை அமைப்பு என்று அழைக்கப்படும் உலகில் தமது ஆதிக்கத்தை நிறைவு செய்தன.

மீண்டும் போர்??????

தற்போது மேற்குலகின் மோதலில் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான வளர்ச்சி, இன்று நாம் பார்க்கின்ற உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆகும். பின்தங்கிய நாடுகளின் பங்குகளை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதன் மூலம் அல்லது அவர்களில் ஒருவர் மற்றவருக்கு என்ன வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, இறைமறுப்பாளர்கள் ஒருவரையொருவர் தங்கள் துப்பாக்கிகளை நீட்டுகிறார்கள் என்று வரலாறு குறிப்பிடுகிறது. எனவே, ஐரோப்பிய-அமெரிக்க கூட்டணியில் உக்ரைன் இணைவதைத் தடுக்க ரஷ்யா முயல்கிறது என்று சொல்லி திருப்தி அடைவது சரியல்ல. மாறாக இவ்விடயம் அதை விடவும் ஆழமானது. ரஷ்யா தனது செயலிழந்த சாம்ராஜ்யத்தை உயிர்ப்பிக்க விரும்புகிறது, அதற்கு மேல் எதுவும் இல்லை. நேரம் வந்துவிட்டது, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது சரியானது என்று அது விரும்புகிறது. இராணுவ சமநிலை மற்றும் தொழில்நுட்ப திறன்களுடன், இரு நாடுகளுக்கும் இடையே எந்த ஒப்பீடும் இல்லை, ரஷ்யர்கள் மீண்டும் உக்ரைனை ஆக்கிரமிப்பது எளிது. ரஷ்ய ஜனாதிபதி "விளாடிமிர் புடின்" சமீபத்தில் கூறி யதைப் போல அவர்கள் உக்ரைன் நாட்டை அங்கீகரிப்பதே இல்லை, அதைத் தங்களின் உரிமையாகக் கருதுகிறார்கள். (இன்ஷா அல்லாஹ் தொடரும்........)

27/02/2022

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு... புதிய உலக ஒழுங்கு தொடங்கியதா?
(இது 'தரீகுல் இஸ்லாம்' இணையத்தில் பிரசுரமான அரேபியக் கட்டுரையின் தமிழாக்கமாகும்)

கடந்த எண்பது ஆண்டுகளில், போர்கள் பல ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பல அரபு நாடுகளின் முக்கிய அம்சமாக இருந்தன, அவை தங்களுடைய சொந்தப் பொருளாகவும், தங்கள் மக்களுக்கு ஒரு தனித்துவமான முழக்கமாகவும் மாறிவிட்டன. எல்லோரும் ஐரோப்பாவை ஒரு மரியாதைக்குரிய தேசமாகப் பார்த்தார்கள், அது தன்னை மதிக்கிறது மற்றும் அதன் குடிமக்களைக் கவனித்துக்கொள்கிறது மற்றும் வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது, மேலும் இது இழந்த சொர்க்கமாகும், பலர் இதை அடைய ஓடுகிறார்கள்.

பலரும் அறியாத விடயம் என்னவென்றால், மனித வரலாற்றில் இரத்தக்களரி மற்றும் கொடூரமான போர்கள் ஐரோப்பாவில் நடந்தன, கடந்த காலத்தில், போப் மற்றும் பைசான்டியம் இடையே, கத்தோலிக்கர்கள் மற்றும் புராட்டஸ்டன்ட்டுகளுக்கு இடையே நடை பெற்ற போர்கள் மதம் சார்ந்ததாக இருந்தன. மில்லியன் கணக்கிலானவர்களை இரையாக்கி, அனைத்தையும் தகர்த்து வராலாறு இதற்கு முன் கண்டிராத நட்டங்களை ஏற்படுத்திய முதலாம் இரண்டாம் உலகப்போர்களில் நடை பெற்றதைப் போன்று பின்னர் அது ஒரு தேசியவாத புள்ளியாக மாறியது. 'மூர்க்கமான போர்களே ஐரோப்பாவின் ஆபத்து' என்று புகழ்பெற்ற ஜெர்மன் தத்துவஞானி பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் கூறினார்.

வெற்றியாளர்கள் தோற்கடிக்கப்பட்டவர்களின் சொத்துக்களில் தங்கள் கையை நீட்டுகிறார்கள் என்பது போர்களில் தெளிவாகத் தெரிவதுவே இதில் ரஷ்யா ஒன்றும் விதிவிலக்கில்லை. மாறாக அந்த நேரத்தில் காலனித்துவ நாடுகளைப் போலவே உலகப் போருக்கு முன்பே புதிய பகுதிகளை ஆக்கிரமிக்க அழிவுகரமான போர்களை ரஷ்யா நடத்தத் தொடங்கியது. ரஷ்யாவைத் தெரியாதவர்களுக்கு நாம் சொல்ல விளைவது யாதெனில், முதலில் ஐரோப்பாக் கண்டத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு ரஷ்யா , யேமன் அளவை விட பெரியது அல்ல.

எவ்வாறாயினும், பேரரசர்களின் சகாப்தத்திலிருந்து அது இரும்பு மற்றும் நெருப்பு மற்றும் பயங்கரமான படுகொலைகளுடன் ஃபைஹாவின் பரந்த நிலங்களை ஆக்கிரமித்தபின் அதன் முதல் அளவைப் பதினைந்து மடங்கு அடையும் வரை சிறிது சிறிதாக விரிவடைந்து வருகிறது. அவற்றுள் பெரும்பான்மையானது இஸ்லாமிய தேசங்கள். இதில் யூரல்ஸ் - சைபீரியா - காகசஸ் - துர்கிஸ்தான் - கிரிமியா ஆகியன உள்ளடங்கும்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Address

Andhalus Street
Khobar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raakah Islamic Centre Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Raakah Islamic Centre Tamil:

Share