Sri Ayyappan Satsanggam Sg.Petani

Sri Ayyappan Satsanggam Sg.Petani DEVOTIONAL CENTER

26/04/2025

*Biggest Banner*
Launch at
*Muthaiyas* Sungai Petani,
*26.04.2025*
(TODAY) *6.00 pm* .
*Join us* there!
*Suttaa Thale Enakku *,
Biggest Action Malaysia Tamil Film
on *15 MAY 2025* in Nationwide Cinemas.

30/10/2024

தேடிப் போய் செய்வது *தர்மம்*
தேடி வருவோர்க்குச் செய்வது *தானம்*
எதுவாயினும் ...
செய்வதற்குத் தேவை நல்ல *மனம்*
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

21/10/2024

வணக்கம்.
நேற்று அடியேனின் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள். இறையருள் பெருகட்டும்.
Tqvm to all good hearts whom wishes me yesterday on my birthday! God bless all.

முனைவர் இரா.இலட்சப்பிரபு PHD
Dr.DR.Latcha Prabu PhD

03/08/2024

நண்பன் ...

தடுமாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம் மாறும் போது
தட்டிக் கேட்பவனும்தான்
*நண்பன்*

தடுமாறும் போது
ஜாலியாக பார்ப்பவனும்
தடம் மாறும் போது
ஜால்ரா அடிப்பவனும்
*நண்பன் அல்ல*

19/07/2024

எந்த முயற்சியிலும் *பயம்* இருப்பது நிச்சயம்!
பயத்தைப் புறம் தள்ளி முன்னேறினால் *ஜெயம்* என்பது நிச்சயம்!

வணக்கம்.*கடார சிவாஜி கலாச்சார மன்றம்*பெருமையுடன் வழங்கும்...கெடா தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான *மலேசிய மக்களின் பாரம்பரி...
07/07/2024

வணக்கம்.

*கடார சிவாஜி கலாச்சார மன்றம்*
பெருமையுடன் வழங்கும்...

கெடா தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான *மலேசிய மக்களின் பாரம்பரிய நடனப் போட்டி - சீசன் 2 !*

*மாபெரும் இறுதிச் சுற்று!*

*நாள் : 13.09.2024 (வெள்ளி)*
*நேரம் : மாலை மணி 6.00 முதல் - இரவு மணி 11.00 வரை*
*இடம் : காந்தி நினைவு மண்டபம், சுங்கைப் பட்டாணி, கெடா*.

இந்த நடனக் கலை விழா *இரவு உணவோடு* நடைபெறுகிறது.
இந்த டிக்கெட்டுகளின் விலை தனி நபருக்கு *ரி.ம.30, ரி.ம.50 மற்றும் ரி.ம.100* ஆகும்.

10 நபர்கள் சேர்ந்து உணவு அருந்த ஒரு மேசையின் விலை *ரி.ம.300, ரி.ம.500 மற்றும் ரி.ம.1000.* ஆகும்.

*தாங்கள் ரி.ம.500 க்கு டிக்கட் வாங்கினால், ரி.ம.300 விலை கொண்ட 1 மேசை, பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்படும்*.

*தாங்கள் ரி.ம.1000 க்கு டிக்கட் வாங்கினால், ரி.ம.300 விலை கொண்ட 2 மேசைகள், பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்படும்*.

டிக்கெட்டுகள் தற்பொழுது விற்பனையில் உள்ளன.

*டிக்கெட்டுகளுக்கு*

(1). முனைவர் இரா.இலட்சப்பிரபு PhD - 0164356900
(2). Dr.மதியழகன் HD - 0164673880
(2). திரு.விக்னேஷ் பிரபு - 0164509539
(3). திரு.தனேஷ் பிரபு - 0103801814

தங்களின் நல் ஆதரவுக்கு நன்றி.

அன்புடன்,
*முனைவர் இரா.இலட்சப்பிரபு PhD*

Good day to all !

Hi Friends, once again in 2024 we ...

PERSATUAN KEBUDAYAAN SENIMAN SIVAJI KEDAH,

Proudly presents ...

*PERTANDINGAN TARIAN TRADISIONAL RAKYAT MALAYSIA ANTARA SJK. TAMIL NEGERI KEDAH 2024*.

*GRAND FINALE*

*Date : 13.09.2024 ( Friday )*
*Time : 5.30 pm - 11.00 pm*
*Venue : Dewan Peringatan Gandhi, Sungai Petani, Kedah*.

This event will goes with a Grand Gala Dinner.

We are selling the event tickets for ticket pricing *per person RM30, RM50 & RM100* and
*per table RM300, RM500 & RM1000*.

Note:

We are *providing foods without any charges for the Tamil School participating Students and Teachers* around 150 persons ( 15 tables ) for their commitment and enthusiasm shown in this programme continuesly.

So, your kind help by buying a table is meaning that ANOTHER table will be occupied by the students and teachers for FREE.

*If you buy RM 500 table - ONE RM 300 table will be given FREE to SJKT students*

*If you buy RM 1000 table - TWO RM 300 table will be given FREE to SJKT students*

So, if anyone needs the tickets please contact ...

(1). Dr.DR.LATCHA PRABU PhD – 0164356900
(2). Dr.N.MATHEYALAGAN HD – 0164673880
(3). L.VIKNES PRABU – 0164509539
(4). L.THANESH PRABU – 0103801814

GRAB THE TICKETS BEFORE ITS FINISHED ! TICKETS ARE SELLING FAST !

*Dr.Latcha Perrabu PhD*
Program Director
0164356900

*Account details*:

Nama : *Persatuan Kebudayaan Seniman Sivaji Kedah*
Bank : *Bank Muamalat*
No. Akaun : *02020002938714*

You can kindly bank in your donation/sponsor into *my NGO account*.

Tqvm for your kind support.

*Dr.DR.Latcha Prabu PhD*
Program Director
0164356900

*கல்கி 2898 AD**மகாபாரதப் போரை* முழுமையாக அறிந்திருந்தால் ஒழிய, இத்திரைப் படத்தை உருவாக்குவது எளிதல்ல! முறையுமல்ல!இயக்கு...
04/07/2024

*கல்கி 2898 AD*

*மகாபாரதப் போரை* முழுமையாக அறிந்திருந்தால் ஒழிய, இத்திரைப் படத்தை உருவாக்குவது எளிதல்ல! முறையுமல்ல!
இயக்குனர் *நாக் அஷ்வின்* நன்கு அறிந்து உள்ளார்!

*திரை விமர்சனம்* :

திரைப் படத்தின் தொடக்கத்திலேயே மகாபாரதப் போர் நடந்து முடியும் தருணம்.
துரியோதனின் இராஜகுரு, அவதாரப் புருஷர், துரோணாச்சாரியார் மகன் *அஸ்வத்தாமனாக* (அமிதாப் பச்சன்), எதிரிகள் அனைவரையும் கொன்று குவிக்கிறான். இறுதியில் தன்னைக் கொல்ல ஒரு சிசு உருவாகிறது என்பதை அறிந்து, பாண்டவர் குடும்பத்தில் "உத்திரையின்" கருவில் இருந்த "அபிமன்யுவின்" குழந்தை மீது பிரம்மாஸ்திரத்தை எய்து அதையும் கொல்கிறான்.
இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்காகக் கடும் கோபம் அடைந்த பகவான் கிருஷ்ணன் அவனைக் கொல்ல முற்படுகிறார்.
ஆனால், அஸ்வத்தாமன் நெற்றியில் உள்ள இரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) அவனிடம் உள்ளவரை அவனைக் கொல்வதென்பது நடவாது என அறிகிறார்.
எனவே, அவருடைய ரத்தினக்கல்லைப் (ஸ்யமந்தக மணியை) சூழ்ச்சியால் பறிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
"உன் இரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) உன்னிடம் இல்லாததால் இனி உன்னை எந்த நோயும் தீண்டும். உன் நெற்றியில் இருந்து உதிரம் எப்போதும் நிற்காமல் வடியும். உனக்குப் பசியோ, தாகமோ, தூக்கமோ எதுவும் வராது. மனித நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நீ நுழையக் கூடாது" என்று சாபம் இடுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
"அஸ்வத்தாமனிடம்" இருந்த மரணத்தைப் பறித்துக் கொண்டார். வாழும் காலம் முழுவதும் நீங்கா வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் சிரஞ்சீவியாக வாழ வேண்டுமென்று சாபம் கொடுத்தார்.
"உனக்கு இனி மரணமே இல்லை! நான் *கலியுகத்தில்* ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் போது, அத்தருணம் என்னை நீதான் காப்பாற்ற வேண்டும்! அப்போதுதான் உன் சாபம் தீரும்" என்கிற பரிகாரமும், பிராயச்சித்தமும் தருகிறார்.
பின்னர், 6000 வருடங்கள் ஓடி 898 வருடமாக உயிரோடு இருக்கும் *யாஷ்கின் கலி (கமல்)* உலகின் கடைசி நகரமான காசியில் மக்களை அடிமைப் படுத்தி ஓர் ஊரை (காம்பிளக்ஸ்) உருவாக்கி வைத்து ஆண்டு வருகிறார்.
அந்த ஊரில் ஒரு "பவுண்டி ஹண்டராக" (Bounty Hunter) *பிரபாஸ்* வலம் வர, "ஒரு மில்லியன் யூனிட்" இருந்தால் கமல் இருக்கும் "காம்பிளஸ்குள்" வரலாம் என்று ஒரு விதி!
இதற்காகப் பிரபாஸும் போராட, அதே நேரத்தில் கமல், தன்னை பராக்கிரமவாதியாக உருவாக்க தன் பிடிக்குள் இருக்கும் பல பெண்களின் கருவில் இருந்து 150 நாட்களைத் தாண்டிய ஒரு "சீரோம்"மை (serum) எடுக்க முயற்சிக்கிறார்.
அப்போது அங்கிருக்கும் *தீபிகா படுகோன்* வயிற்றில் ஒரு குழந்தை உருவாக, அதில் "சீரோம்" எடுக்கும் போது, அது *கடவுள் கிருஷ்ணன்தான்* என்பது தெரிய வர, அமிதாப்பின் (அஸ்வத்தாமன்) பல வருட தவிப்பிற்குப் பலனாக தீபிகாவைத் தேடி வர, இதற்குப் பிரபாஸ் எந்த விதத்தில் பயணிக்கிறார்?, அதோடு, கமல் நினைத்ததை அடைந்தாரா? என்ற பிரமாண்டமே இந்த கல்கி 2898 AD.
இந்தத் திரைப் படத்தைப் பற்றிய அலசல் *மஹாபாரதம்* புராணக் களத்தை கையில் எடுத்துக் கொண்டு அதற்கு எதிர்காலத்தில் ஒரு தொடர்ச்சி இருந்தால் எப்படியிருக்கும் என்ற அற்புதான அசுரக் கண்ணோட்டத்துடன் *இயக்குனர் நாக் அஷ்வின்* இன்றையக் காலக் கட்டத்தின் தொழில் நுட்பத்தைப் பொருத்தி, இதைக் கையாண்டதற்காகவே இவருக்குப் பெரும் பாராட்டுகளைக் கொடுக்கலாம்.
இருப்பினும், இத்திரைப் படத்தில், *பிரபாஸை* விட அஸ்வத்தாமனாக வந்த *அமிதாப்* தான் ரியல் ஹீரோ!
6000 வருடத்திற்கு மேல், மரணமில்லா சாபத்தால் உயிரோடு இருந்து ஓர் உயிரைப் பாதுக்காக்க அவர் எடுக்கும் தவம், அந்தக் குழந்தை உருவானதும் ஒரே ஆளாக *அமிதாப்* ஆடும் ஆட்டம் ருத்ரதாண்டவம்.
அதோடு, அந்தக் கருவைச் சுமக்கும் பெண்ணாக *தீபிகா படுகோன்*, அவரைக் காப்பாற்றப் போராடும் *அண்ணாபென்*, *ஷோபனா*, *பசுபதி* என அனைவரும் அற்புதமான நிறைவான நடிப்பு.
ஆங்கிலப் படங்களுக்கு இணையான "கிராபிக்ஸ்" காட்சிகள், அதிலும் கமல் வாழ்ந்து வரும் காம்பிளெக்ஸ் உலகம் அத்தனை பிரமாண்டம். அதிலும் லிப்ட் போல் பயன்படுத்தும் பிரமாண்ட உருவம், கிளைமேக்ஸில் *புஜு* ஒரு ரோபோட் போல் மாறி துரத்தல் சண்டை செய்வது என அனைத்து பிரமாண்டமும் அட்டகாசம்.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையைச் சோதிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. பிரபாஸின் கேரக்டர் போகப் போக வலுவாக மாறினாலும், ஆரம்பத்தில் அவரை எதோ காமெடியன் போல் காட்டியது தனி ரகம் தான்.
*கமலுக்கு* இரண்டாம் பாகத்தில்தான் ( கல்கி 2898 AD - 2 ) அதிக வேலை இருக்கும் போல திரைப் படம் நிறைவை நாடியது. இதில் அவர் நடிக்காமல் கணினி வரைகலை ( Computer Graphic ) வைத்து *டப்பிங்* மட்டும் கொடுத்து விட்டாரோ? என்று நம்பத் தோன்றுகின்றது. ஒளிப்பதிவு மிகவும் அற்புதம். *சந்தோஷ் நாரயணன்* இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை என்றாலும், பின்னணி இசை சூப்பர். படத்தின் VFX காட்சிகள், இரண்டாம் பாதி துரத்தல் (chasing) காட்சிகள் மிகச் சிறப்பு. கிளைமேக்ஸில் பிரபாஸ் யார் என்று தெரியும் இடம் சற்று தொய்வுதான்!
மொத்தத்தில் இந்தக் *கல்கி*யின் அடுத்த அவதாரத்தை் காண இப்போதே எதிர்ப்பார்ப்பை அமைத்துக் கொடுத்து விட்டனர்.
மாபெரும் வெற்றி பெறும் *கல்கி 2898 AD* & *கல்கி 2898 AD-2* என்பதில் ஐயமில்லை!

அன்புடன்...
முனைவர் இலட்சப்பிரபு.
திரை விமர்சகர்.

Good day to all !Hi Friends, once again in 2024 we ...PERSATUAN KEBUDAYAAN SENIMAN SIVAJI KEDAH, Proudly presents ... *P...
20/06/2024

Good day to all !

Hi Friends, once again in 2024 we ...

PERSATUAN KEBUDAYAAN SENIMAN SIVAJI KEDAH,

Proudly presents ...

*PERTANDINGAN TARIAN TRADISIONAL RAKYAT MALAYSIA ANTARA SJK. TAMIL NEGERI KEDAH 2024*.

*GRAND FINALE*

*Date : 13.09.2024 ( Friday )*
*Time : 5.30 pm - 11.00 pm*
*Venue : Dewan Peringatan Gandhi, Sungai Petani, Kedah*.

This event will goes with a Grand Gala Dinner.

We are selling the event tickets for ticket pricing *per person RM30, RM50 & RM100* and
*per table RM300, RM500 & RM1000*.

Note:

We are *providing foods without any charges for the Tamil School participating Students and Teachers* around 150 persons ( 15 tables ) for their commitment and enthusiasm shown in this programme continuesly.

So, your kind help by buying a table is meaning that ANOTHER table will be occupied by the students and teachers for FREE.

*If you buy RM 500 table - ONE RM 300 table will be given FREE to SJKT students*

*If you buy RM 1000 table - TWO RM 300 table will be given FREE to SJKT students*

So, if anyone needs the tickets please contact ...

(1). Dr.DR.LATCHA PRABU PhD – 0164356900
(2). Dr.N.MATHEYALAGAN HD – 0164673880
(3). L.VIKNES PRABU – 0164509539
(4). L.THANESH PRABU – 0103801814

GRAB THE TICKETS BEFORE ITS FINISHED ! TICKETS ARE SELLING FAST !

*Dr.Latcha Perrabu PhD*
Program Director
0164356900

வணக்கம்.

*கடார சிவாஜி கலாச்சார மன்றம்*
பெருமையுடன் வழங்கும்...

கெடா தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான *மலேசிய மக்களின் பாரம்பரிய நடனப் போட்டி - சீசன் 2 !*

*மாபெரும் இறுதிச் சுற்று!*

*நாள் : 13.09.2024 (வெள்ளி)*
*நேரம் : மாலை மணி 6.00 முதல் - இரவு மணி 11.00 வரை*
*இடம் : காந்தி நினைவு மண்டபம், சுங்கைப் பட்டாணி, கெடா*.

இந்த நடனக் கலை விழா *இரவு உணவோடு* நடைபெறுகிறது.
இந்த டிக்கெட்டுகளின் விலை தனி நபருக்கு *ரி.ம.30, ரி.ம.50 மற்றும் ரி.ம.100* ஆகும்.

10 நபர்கள் சேர்ந்து உணவு அருந்த ஒரு மேசையின் விலை *ரி.ம.300, ரி.ம.500 மற்றும் ரி.ம.1000.* ஆகும்.

*தாங்கள் ரி.ம.500 க்கு டிக்கட் வாங்கினால், ரி.ம.300 விலை கொண்ட 1 மேசை, பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்படும்*.

*தாங்கள் ரி.ம.1000 க்கு டிக்கட் வாங்கினால், ரி.ம.300 விலை கொண்ட 2 மேசைகள், பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்படும்*.

டிக்கெட்டுகள் தற்பொழுது விற்பனையில் உள்ளன.

*டிக்கெட்டுகளுக்கு*

(1). முனைவர் இரா.இலட்சப்பிரபு PhD - 0164356900
(2). Dr.மதியழகன் HD - 0164673880
(2). திரு.விக்னேஷ் பிரபு - 0164509539
(3). திரு.தனேஷ் பிரபு - 0103801814

தங்களின் நல் ஆதரவுக்கு நன்றி.

அன்புடன்,
*முனைவர் இரா.இலட்சப்பிரபு PhD*

17/06/2024

கூன்பிறை வணங்கியே
குர்ஆனை ஓதுவோம்

மேன்மை மெக்காவின்
மாண்பைப் பாடுவோம்!

தேன்போல் சுவையாம்
தேவனின் வேதமதை

வான்புகழ் மறையாம்
வாழ்விலே போற்றுவோம்!

*வரமாக வந்த ஈசன்* !.........................................வரமாக வந்த ஈசனே - எந்தன்     வாழ்வின் அன்பு நேசனேதரமாக ஈந்த ...
16/06/2024

*வரமாக வந்த ஈசன்* !.........................................

வரமாக வந்த ஈசனே - எந்தன்
வாழ்வின் அன்பு நேசனே
தரமாக ஈந்த கல்வியில் - உந்தன்
தயவால் கண்டேன் வெற்றியே!
உருவாக இங்கு நானுமே - இன்றும்
உயிரில் கலந்த புனிதமே
கருவான தினம் முதலே - என்றும்
திருவாக நிறைந்த தெய்வமே!

22/05/2024

வணக்கம்.

ததாகதர் ஸ்ம்ருதி வாழ்க!

*22.05.2024 இந்துக்கள் வைகாசி விசாகம் என்றும் பெளத்தர்கள் விசாகத் திருநாள் என்றும் கொண்டாடி மகிழ்கிறோம்*

*புத்தர் கூறிய அறிவுரை & அறவுரை!*

# # # # # # # # # # # # # # # # # # # #

*புத்தம் சரணம் கச்சாமி*
*தம்மம் சரணம் கச்சாமி*
*சங்கம் சரணம் கச்சாமி*

# # # # # # # # # # # # # # # # # # # #

*புத்தம் சரணம் கச்சாமி என்றால்...*

புத்தம் என்றால் புத்தி, அறிவு, ஞானம்.

ஒவ்வொருவரும் உள்ளத்தைப் பகுத்து, ஆராய்ந்து, உய்த்து அறிந்து அதன் மூலம் அறியும் அறிவில் சரண் புக வேண்டும் என்பதே புத்தர் சொன்ன புத்தம் சரணம் கச்சாமி!

*தம்மம் சரணம் கச்சாமி என்றால்...*

தம்மம் என்றால் சத்தியம் அறவழி ஒழுக்கம்.

ஒவ்வொருவரும் தனது புத்தியால் உய்த்து, ஆராய்ந்து அறிந்த பகுத்தறிவால் எது சத்தியம் என்று உணர்கிறார்களோ அந்தச் சத்தியத்தில் சரண் புகுங்கள் என்கிறார்.
எதையும் ஆராய்ந்து அறிந்து உண்மை சத்தியம் என்று உன் அறிவுக்குப் பட்டால் அதை ஏற்றுக் கொள். அதில் சரண் புகு என்கிறார்!

*சங்கம் சரணம் கச்சாமி என்றால்...*

சங்கம் சரணம் கச்சாமி என்றால் சங்கத்தின் பண்புகளைப் பிக்குகளின் பண்புகளை என்னுள் வளர்த்து அந்தப் பண்புகளில் சரண் புகுகிறேன் என்று அர்த்தம்.

ஒழுக்கம், அறிவு, அன்பு, கருணை, முதித்தா, சகிப்புத் தன்மை, தியாகம், சத்தியம் எனும் சங்கத்துக்கான உயர்ந்த பண்புகளிடம் சரண் புகுவதே சங்கம் சரணம் கச்சாமி.
தீயப் பண்புகளிடம் சரண் புகாமல் நற்பண்புகளிடம் சரண் புகுவதே சங்கம் சரணம் கச்சாமி!

*வெற்றிக்கு... நல்ல புரிதல், நல்ல சிந்தனை, நல்ல செயல், நல்ல பேச்சு, நல்ல எண்ணம், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல நோக்கம் என்றும் வேண்டும்!*

16/05/2024

*கடவுளே! இறைவனே! ஈசனே!*.....................................................

இழைந்த மனதிலே
எந்தன் உள்ளத்துள்
நுழைந்த கடவுளே!

உழலும் நெஞ்சிலே
உறுதி நிறையவே
உழைத்த இறைவனே!

கற்றக் கல்வியைக்
கருத்தாய் நல்கிட்ட
வற்றாக் கடலே!

பெற்ற அறிவைப்
பண்புறப் பதித்திட்ட
உற்றதோர் ஈசனே!

உமக்கு எமது உளமார்ந்த *ஆசிரியர் தின* நல் வாழ்த்துகள்!

வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!

அன்புடன்...
முனைவர் இரா.இலட்சப்பிரபு PhD

Address

Jalan Sekerat
Sungai Petani
08000

Telephone

+60195596024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ayyappan Satsanggam Sg.Petani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category