15/04/2026
🎉 தமிழ் புத்தாண்டு 2026 விழா &
🎓SPM 2025 மாணவர்களுக்கு பாராட்டு விழா 🎉
லின்சும் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் சார்பாக,
SMK Rantau மற்றும் SMK Dato Shamsuddin Naim பள்ளிகளிலிருந்து
SPM 2025 தேர்வில் கலந்து கொண்ட 13 மாணவர்களுக்கு சிறிய பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த மாணவர்கள் அனைவரும் 5A மற்றும் அதற்கு மேல், சிலர் Straight A’s பெற்ற சிறந்த மாணவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்.
இந்த நிகழ்வின் மூலம், மாணவர்களின் முயற்சியையும் உழைப்பையும் பாராட்டும் வகையில்
ஒரு சிறிய நினைவுப் பரிசாக 🎁
🎒 ஒரு பேக் (Bag)
🔋 ஒரு பவர் பேங்க் (Power Bank)
☕ ஒரு (Stainless Steel Tumbler – Hot)
வழங்கப்பட்டது.\
இது அவர்களின் அடுத்த கல்விப் பயணத்திற்கு உதவியாகவும்,
பெற்றோரின் சுமையை சிறிதளவு குறைக்கும் ஒரு முயற்சியாகவும் அமைந்தது.
💐 அன்பான மாணவர்களே,
உங்கள் எதிர்காலம் பிரகாசமாக அமைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்.
உங்கள் முயற்சிகள் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லட்டும்.
🙏 இந்த முயற்சியை தொடர்ந்து, கல்விக்காக ஆதரவு அளிப்பதில்
லின்சும் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயமும் அதன் குழு உறுப்பினர்களும்
எப்போதும் உங்களுடன் இருப்போம்.
எல்லா மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟