04/09/2026
அன்பார்ந்த மலேசிய இந்து சங்கத் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் வணக்கம்.
Dear MHS Leaders and Members, greetings.
# # அருள்துணை — இறையருளால் உறுதுணை
# # ARULTHUNAI — Support Through Divine Grace
நமது சமூகத்தில் மனநலம், சமூக நலன் மற்றும் பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் எவரும் தனிமையில் இருப்பதாக உணரக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், மலேசிய இந்து சங்கம் இந்த இலவச உதவி எண் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Malaysia Hindu Sangam has introduced this free Careline service with the noble aim of ensuring that no one in our community feels alone when facing emotional, welfare-related or general concerns.
அனைத்து அழைப்புகளும் இரகசியமாகக் கையாளப்படுவதுடன், தேவைக்கேற்ப தகுந்த வழிகாட்டுதலும் பரிந்துரைகளும் வழங்கப்படும்.
All calls will be handled confidentially, with appropriate guidance and referrals provided where necessary.
☎️ **மனநல ஆதரவு | Mental Health Support**
**03-7627 2941**
☎️ **சமூக நலன் உதவி | Welfare Support**
**03-7627 2942**
☎️ **பொதுத் தொடர்பு | General Enquiry**
**03-7627 2943**
⏰ **செயல்படும் நேரம் | Operating Hours**
**காலை 11.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை**
**11.00 a.m. to 11.00 p.m.**
இந்த உயரிய சேவை உதவி தேவைப்படும் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். ஆகையால், மலேசிய இந்து சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் இச்சுவரொட்டிகளைத் தங்களது WhatsApp குழுக்கள், ஆலயங்கள், குடும்பங்கள் மற்றும் சமூக வட்டாரங்களில் பரவலாகப் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
The true value of this noble initiative lies in reaching those who need it. We humbly encourage every MHS leader and member to share these posters through your WhatsApp groups, temples, families and community networks.
**நீங்கள் பகிரும் ஒரு செய்தி, ஒருவருக்கு உதவியையும் நம்பிக்கையையும் புதிய வழியையும் அளிக்கலாம்.**
**Your simple act of sharing may become someone’s first step towards receiving help, hope and support.**
நன்றி | Thank you.