30/03/2026
திருச்சிற்றம்பலம்
29.03.2026- மலேசிய இந்து சங்கம் பண்டார் டத்தோ ஒன் பேரவை தனது 6-ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மார்ச் 29, 2026 , காலை 11.00 மணியளவில் தெப்ராவ் தோட்ட தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
- ஜோகூர் மாநிலத் கல்வி பிரிவு தலைவர் தொண்டர்மணி சு. சண்முகநாதன் மாநில பிரதிநிதியாக கலந்து கொண்டார்.
- மீவா மற்றும் தெப்ராவ் பள்ளியின் குழு வாரியர் தலைவர் டத்தோ கே. புருஷோத்தமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- YDP திரு. ஆண்ட்ரூ ,
- முன்னாள் கூலாய் வட்டாரத் தலைவர் தொண்டர்மணி மு. முர்த்தி,
- முன்னாள் கோத்தா திங்கி வட்டாரத் தலைவர் தொண்டர்மணி சிவராம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றுகையில், இந்துகளின் இடையில் ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பண்டார் டத்தோ ஒன் பேரவை தனது சேவையைத் திறம்படச் செய்து வருவதாக பாராட்டினார் . ஜோகூர் மாநில சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார். 2026/27 ஆண்டுகான பேரவையின் தலைவராக மீண்டும் விவேகரத்னா வே.வனஜா தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் ,
- எஸ் பி ம் மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
- பேரவையின் சமய வகுப்பு மாணவர்களுக்கும் நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
- 2025-26 ஆண்டு செயலவை உறுப்பினர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆண்டுக்கூட்டம் பெரியபுராணம் பாடலுடன் நிறைவு பெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நன்றி 🙏🏻
இறை சேவையில் ,
விவேகரத்னா அன்புக்கரசி காஞ்சிமலை
29.3.2026