30/03/2012
கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றுதல்.
கர்த்தருக்குக் கீழ்ப்படியும்படிவேதாகம்ம் மிகச் சிறப்பாக்க் கூறுகிறது.( உபாகமம்.4:30,11:132தானி.7:27,அப்5:29) விஷேடமாகஅவருடையவார்த்தையைக்கேட்டுஅதன்படிசெய்யும்படிகேட்கிறது.( யாக். 1:22)
கர்த்தர்மேல் நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடே கீழ்ப்படிதலாகும்.(1யோவான்.2: 3-4)கர்த்தரை நாம்நேசித்தால் , அவருக்கு நாம் ஊழியம்செய்ய விரும்புவோம். அத்துடன் அவருக்கு ஊழியம்செய்யும்போது , அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய விரும்புவோம். கீழ்படிதலின்வெளிப்பாடாக, கர்த்தரை ஆழமாகநேசிக்கிறோம் என்பதன் உள்ளார்ந்த வெளிப்பாடாக , எங்களை முழுவதும் அர்ப்பணம்செய்கிறோம்.
எல்லா அதிகாரமும் அவருடைய பூரண திட்டத்தின்படி கர்த்தரிடத்திலிருந்து வருகிறதென்று உணர்ந்து எங்களுக்குமேலாக அதிகாரிகளாக கர்த்தர் ஏற்படித்தியிருக்கும் மனிதர்களுக்கும் நாங்கள் கிழ்ப்படியவேண்டும், ( எபி. 13: 7, 17. 1.பேதுரு2:13,14) அடிமைகள் எஜமானுக்கு கீழ்ப்படிகிறார்கள் (கொலோசியர் 3:22) கிறிஸ்தவர்கள் ஆலயத்தலைவர்களுக்கு கீழ்ப்படிகிறார்கள்,( 1தெச 5: 12,13. எபி 13:7) பிரஜைகள் தங்கள் அரச ஊழியர்களுக்கு கீழ்ப்படிகிறார்கள் ( எபி 13:7)
கீழ்படிதல் என்பது தன்னியக்கமாகசெயலபடும் ஒருசெயற்பாடல்ல. இது கற்றுத்தேறவேண்டியது, அத்துடன்நேர்மாறானது, நாம் இதை பிள்ளைகளுக்குப்போதிக்கவேண்டும். ( உபா. 6: 7-9) கர்தருடைய திட்டத்தின் பங்காளராகவிருக்கும் அதிகார வரிசையிலுள்ளவர்களுக்கும் கீழ்படிதல் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அபிவிருத்திசெய்வதற்கு அவசியமானது, ஆகவே எங்களுடையசொந்த விருப்பங்களை நிறைவுசெய்வதல்ல ஆனால் சுவிஷேசத்தை மற்றவர்களுக்கு அறிவித்தலும் முக்கியமானதாகும்.
எங்களுக்குக்கொடுத்த அதிகாரங்களுக்குக் கீழ்படியும்போது, கர்த்தருடைய கட்டளைகளை உடைத்துப்பொடக்கூடாது என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும் (மேசேயின் தாய்மோசேயை ஒளித்துவைத்தல், தானியேலையும், சாத்திராக்,மேசாக், ஆபேத்நெகோ என்பவர்கள் அதிகாரிகளுக்கு கீழ்படியாமல் முற்றுமுழுதாக கர்த்தருடைய கட்ளைக்கு கீழ்ப்படிந்தார்கள்—யாத். 1:17, 2:3-10, தானி. 3: 9-26, 6: 13-22) நாங்களும் எங்கள் அதிகாரிகளின்வேண்டுதலுக்கு நீதிநியாயத்தின் ரையறைக்குள் எங்கள்சொந்த விருப்பங்கள், முன்னுரிமை,அபிப்பிராயங்கள், அல்லது உணர்வுகளுக்கு ஏற்றபடசெயற்படாமல் கிழ்படிதல்வேண்டும்.—எங்கள் கீழ்படிதலை மதிக்கும்படியும்,எங்கள்மேலுள்ள அதிகாரிகளை வழிநடத்தும்படியும், கர்த்தருடைய விருப்பத்தின்படி அவர்கள்செயற்படும் கர்த்தரை நம்பவேண்டும். எங்களுடைய கீழ்படிதலின் பலாபலன்கள் அவருடைய அதிகாரத்திலுள்ளது.
கர்த்தர் எங்கள் எதிரிகளிடமிருந்து விடுதலைகிடைக்கும் என்று வாக்குக்கொடுத்துள்ளார். (யாத். 23:22), பலமும், ஆசீர்வாதமும் நாங்கள் கீழ்ப்படிவதைப்பொறுத்தேயுள்ளது. மறுபக்கத்தில் பார்ப்போமாகில் கீழ்ப்படியாமை பொருளாதரம் சம்பந்தமாகவும், மனவுளைச்சல்கள்சம்பந்தமாகவும், ஆவிக்குரிய விதமாகவும்அழிவைக் கொண்டுவரும். அப்படியிருந்தும், கீழ்படியாமையானது பாவசுபாவத்தின் ஒரு பகுதியாகவும் ஒருக்கிறது, அத்துடன் எங்கள் வாழ்க்கையில் அதைத்தவிர்க்கமுடியாமலுள்ளது. இஸ்றவேலர்கள் அடிக்கடி கர்த்தருடைய சத்த்த்தைக்கேட்காமலும் அதன்படி நடக்கவும் தவறியுள்ளார்கள்.( எரேமியா 713, ஓசியா. 9:17) நாங்கள் கீழ்ப்படியாமலிருந்தால், எங்கள் கீழ்ப்படியாமை மன்னிக்கப்படக்க கூடயது என்பதை இருதயத்தில்வைத்துக்கொள்ளல்வேண்டும். தங்களுடைய கீழ்ப்படிதலை அறிக்கைசெய்து இனிமேல் கீழ்ப்படிவேன் என்று புதிய தீர்மானம்செய்பவர்களுக்கு கர்த்தர் தன்னுடைய அளவற்ற இரக்கத்தையும் மன்னிப்பையும் முற்றுமுழுவதுமாக் கொடுக்க விருப்பமுள்ளவராக இருக்கிறார்.(றோமர். 11: 30-32)