இந்து தேசம்

இந்து தேசம் This is official fan page of Hindu peoples & Hinduthesam.com website

19/12/2021

சிவாய நம

*நமது இந்து மதத்தின் பெருமைகள்*

#பைபிளுக்கு முன் கிருஸ்துவர்களே கிடையாது.

#முகம்மதுவுக்கு முன் முஸ்லீம்களே கிடையாது .

#ரிஷப தேவருக்கு முன் ஜெயினர்களே கிடையாது.

#புத்தருக்கு முன் பௌத்தர்களே கிடையாது.

#குருநானக்கிற்கு முன் சீக்கியர்களே கிடையாது.

#கார்ல் மார்க்ஸ்கிற்கு முன் கம்யூனிஸ்டுகளே கிடையாது .

ஆனால்....

🔅ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன்னதாக, ஸ்ரீராமருக்கு முன்னதாக,
ரிஷி ஜமதக்கினிக்கு முன்னதாக,
ரிஷி அத்திரிக்கு முன்னதாக, ரிஷி அகத்தியருக்கு முன்னதாக,
ரிஷி பதஞ்சலிக்கு முன்னதாக,
முனி கனட் முனிக்கு முன்னதாக, யுகம் யுகமாக,
சணாதன ஹிந்து தர்மம் இருந்துள்ளது, அந்த தர்மத்தில் பிறந்த எண்ணில் அடங்கா ஞானிகளுக்கும், முனிவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும், அவதார புருஷர்களும் வாழ்ந்துள்ளார்கள். இவை அணைத்திற்கும், படைத்தவர் யார்? என்பதே அறியாத நான்கு வேதங்களே ஆதாரம்!
#இதுபிறமதங்களைகுறைகாண்பதற்கான அல்ல, இந்து மதத்தின் பெருமையை தொன்மையை விளக்கும் சரித்திர உண்மைகள்.

எனவே இந்துக்களே,
*சமுதாயத்திற்காக வாழுங்கள்.
*சத்யத்திற்காக வாழுங்கள்.
*சனாதன ஹிந்து தர்மத்தை காப்போம்!

*மதம் பற்றி வாழ்வோம், மதம்பிடித்து அல்ல!!*

இந்து மதம் என்பது, நமது கடவுளரை வழிபாடு செய்வது மட்டுமன்று, அது நமது கலாச்சாரம், வாழ்வியல் முறை! சுவாமி விவேகானந்தர் 125 ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்காவின் சிகாகோ நகரில் சர்வசமய மாநாட்டில் நமது இந்து மதமே உலகிலுள்ள அனைத்து மதங்களுக்கும் தாய் மதம் என்று உரக்க - உறைக்கப் பதிவு செய்துள்ளார்.

*தேசியமும் தெய்வீகமும் நமது இரு கண்கள்!

மொழி, சாதி, கட்சி வேறுபாடுகளை விடுத்து இந்துவாக பெருமையுடன் வாழ்வோம்!

🙏🙏🙏

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

சிவாய நம

#வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்..

🙏🙏🙏

24/06/2021

நாட்டில் நிலவும் கொரோனா அசாதாரண நிலைமை நீங்கவும் அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் சுபீட்சமாகவும் வாழும் பொர....

18/05/2021

மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழ....

17/05/2021

மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகிய.....

16/05/2021

எல்லா எண்களுக்கும் இந்த முதலாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன் இதனை ஆட்சி ...

16/05/2021

மேஷம் இன்று மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்.....

15/05/2021

மேஷம் காரியங்கள் வெற்றியை தரும். பண வரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார் போல் இருக்.....

15/05/2021

நம்மிடத்தில் எத்தனை வளங்கள் இருப்பினும் செல்வ வளம் முக்கியமானது, பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பும் அதுவே. இ...

15/05/2021

கல், மண் தோன்றா காலத்தில் தோன்றிய தமிழ் மொழியையும், ஆதியும், அந்தமும் இல்லாத சைவ மரபினையும் பின்பற்றும் ஒவ்வொர.....

21/03/2021

இருபது வகையான பிரதோஷமும்
அதன் விரத வழிபாட்டு பலன்களும்...!!
1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாகஅன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.
3. மாதப் பிரதோஷம் : பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் : பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் : திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப்பிரதோஷம் : பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆரா
தனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் : பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் : வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் : ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
10. உத்தம மகா பிரதோஷம் : சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் : வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் : வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் : வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் : வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் : சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இதுமுருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் : ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்துநீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் : ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் : அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்.

16/02/2021
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆலயங்கள் மற்றும் சமய இலக்கியங்களிலும் ஏட்டுச் சுவடிகளிலும் வரலாறாகக் குறிப்பிடப்பட்டு வரு...
31/01/2021

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆலயங்கள் மற்றும் சமய இலக்கியங்களிலும் ஏட்டுச் சுவடிகளிலும் வரலாறாகக் குறிப்பிடப்பட்டு வருகின்ற சைவ ஆலயங்கள் பலவற்றில் பௌத்த தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் கடந்த 10 ஆண்டுகளாக உரிமை கோரி வருகின்றது.

அவற்றில் சில,

1. ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம்
2. மாந்தைகிழக்கு பத்திரகாளி அம்மன் கோவில்
3. குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில்
4. குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில்
5. பாண்டியன்குளம் சிவன் கோவில்
6. வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில்
7. குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில
8. மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவில்
9. மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில
10. ஒதியமலையில் வைரவர் கோவில்
11. முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில்
12. திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை
13. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்
14. புல்மோட்டை அரிசி ஆலை மலை கோவில்
15. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம்
16. மூதூர், சூடைக்குடா மலைப்பகுதி முருகன் ஆலயம்
17. திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம்
18.மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன்,
19. சிவபுரம் சிவாலயம்,
20. மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில்
21. குஞ்சுமப்ப பெரியசாமி கோவில்
22. ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில்
23. கல்லுமலை பிள்ளையார் கோவில்
24. மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம்
25. மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை
26. குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில்
27. மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம்
28. கன்னியா வெந்நீர் ஊற்று
29. உருத்திரபுரம் சிவன் கோவில்
30. குசலமலை சைவ குமரன் ஆலயம்
31. காங்கேசன்துறை சைவ ஆலயம்
32. வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயம்

மேற்குறிப்பிட்ட ஆலயங்களில், திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், நிர்மாணிக்கப்பட்டு வந்த சகல கட்டுமானங்களையும், தொல்பொருளியல் திணைக்களம் 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்து வருகிறது . குறிப்பாக இந்தக் கோவில் வளாகத்தில் இருக்கின்ற கட்டுமாணங்களில் 99 சதவீதமானவை, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. என்றும் அந்த இடம் பௌத்த மதத்திற்கு உரியது என்றும் அறிவித்து இருக்கிறார்கள் அதே நேரம் கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் அவர்கள் திருக்கோணேஸ்வர ஆலயம் அனுராதபுர காலத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே கட்டப்பட்டுள்ளது என்று உரிமை கோரி இருக்கிறார்

அதே போல திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில் அழிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பாசன பப்பாத ராஜமஹா விகாரை (Pashana Pabbatha Rajamaha Vihara) என்கிற பௌத்த ஆலயம் அமைத்து இருக்கிறார்கள்

இது மட்டுமின்றி திருகோணமலை மாவட்டத்தில் முகத்துவாராம் பிரதேசத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் முழுமையாக அழிக்கப்பட்டு அந்த கோவில் இருந்த இடத்தில இப்போது "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் புதிய விகாரை ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது.

திருகோணமலையில் பட்டணமும் சூழலும் பிரதேசபை நிருவாகத்தில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டு வர பட்டு பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக உரிமை கோருகிறார்கள்

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை ஆலயத்தில் வழிபாடு நடத்த தொல்லியல் திணைக்களம் தடை விதித்து இருக்கிறது. கந்தசாமி மலை பௌத்த மத பூமி என உரிமை கோரி இருக்கிறார்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் . நீதிமன்ற உத்தரவுகளை மீறி கோவில் வளாகத்தில் புத்த பிக்கு ஒருவரின் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டன

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாடுகள் நடத்த தொடர்ச்சியாக தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதோடு ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்

குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் சூலத்தை அக்ற்றியதோடு நீதிமன்ற உத்தரவுகளை மீறி பௌத்த விகாரை ஒன்றை நிறுவும் வேலைகளை தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக இந்த ஆலய சூழலில் குருந்த அசோகராம என்கிற புராதன பௌத்த ஆலயம் இருந்ததாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றது

காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலயம் ஒன்று இடிக்கப்பட்டு ஆலய சூழலில் கெமுனு விகாரை என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குசலமலை சைவ குமரன் ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக பௌத்த பிக்குகள் உரிமை கோரி வரும் நிலையில் குறித்த ஆலயத்தின் முன் கதவு , மூலஸ்தான விக்கிரம் என்பன அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன

Address

Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when இந்து தேசம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share