அருள்மிகு ஞானபைரவ சுவாமி திருக்கோயில்

  • Home
  • Sri Lanka
  • Trincomali
  • அருள்மிகு ஞானபைரவ சுவாமி திருக்கோயில்

அருள்மிகு ஞானபைரவ சுவாமி திருக்கோயில் பிரதான வீதி,
திருக்கோணமலை

13/05/2026
எல்லாம் வல்ல அருள்மிகு பைரவசுவாமியின் மெய்அடியார்களேவருடாந்த மரபுவழி வைகாசிப்பொங்கல் திருவிழா - 2025 திருவருளுடன் பக்திப...
17/06/2025

எல்லாம் வல்ல அருள்மிகு பைரவசுவாமியின் மெய்அடியார்களே
வருடாந்த மரபுவழி வைகாசிப்பொங்கல் திருவிழா - 2025 திருவருளுடன் பக்திபூர்வமாக இடம்பெற்றது.எல்லோருக்கும் பைரவ சுவாமியின் திருவருள் கிடைக்கப்பிராத்திக்கின்றேன். நன்றி 🙏

எல்லாம் வல்ல அருள்மிகு ஞான பைரவ சுவாமி திருக்கோயின் வைகாசிப்பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு 15/6/2025 அன்று வளந்து பானை ...
16/06/2025

எல்லாம் வல்ல அருள்மிகு ஞான பைரவ சுவாமி திருக்கோயின் வைகாசிப்பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு 15/6/2025 அன்று வளந்து பானை ஆலயத்திற்கு நகர்வலமாக வந்தடைந்தது. இன்றைய தினம் 16/6/2025 திங்கட்கிழமை மாலை 7.00 மணியளவில் பொங்கல் பூசை இடம் பெறும்.

இன்றைய தினம் 3.1.2025 வெள்ளிக்கிழமை அருள்மிகு ஞானபைரவசுவாமி திருக்கோயிலில் விசேட மதிய பூசையின் பிற்பாடு திருவமுது( அன்னத...
03/01/2025

இன்றைய தினம் 3.1.2025 வெள்ளிக்கிழமை அருள்மிகு ஞானபைரவசுவாமி திருக்கோயிலில் விசேட மதிய பூசையின் பிற்பாடு திருவமுது( அன்னதானம்)ஆலய தொண்டர்களால் வழங்கப்பட்டது. இன்றில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருவமுது இடம் பெற திருவருள் கூடியுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

 #சீராளனைஉயிர்ப்பித்துஅருளும் #உத்திராப்பதியார்🙏 நாம் இங்குண்பதவன் வந்தால்    நாடி யழையு மெனநம்பர்தாமங் கருளிச் செயத்தரி...
06/05/2024

#சீராளனைஉயிர்ப்பித்துஅருளும்
#உத்திராப்பதியார்🙏
நாம் இங்குண்பதவன் வந்தால்
நாடி யழையு மெனநம்பர்
தாமங் கருளிச் செயத்தரியார்
தலைவரமுது செய்தருள
யாமிங் கென்செய் தாலாகும்
என்பார் விரைவுற் றெழுந்தருளால்
பூமென் குழலார் தம்மோடும்
புறம்போ யழைக்கப் புகும்பொழுது

வையம் நிகழுஞ் சிறுத்தொண்டர்
மைந்தா வருவாயென வழைத்தார்
தையலாருந் தலைவர்பணி
தலைநிற் பாராய்த் தாமழைப்பார்
செய்ய மணியே சீராளா
வாராய் சிவனாரடியார் யாம்
உய்யும் வகையால் உடன்உண்ண
அழைக்கின்றார் என்று ஓலமிட

பரமரருளாற் பள்ளியினின்
றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன்
தன்னை யெடுத்துத் தழுவித்தம்
கரமுன்னணைத்துக் கணவனார்
கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
புரமூன் றெரித்தார் திருத்தொண்டர்
உண்ணப் பெற்றோ மெனும் பொலிவால்

வந்த மகனைக் கடிதிற்கொண்
டமுது செய்விப் பான்வந்தார்
முந்தவே அப் பயிரவராம்
முதல்வர் அங்கண் மறைந்தருளச்
சிந்தை கலங்கிக் காணாது
திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறியமுதுங்
கலத்திற் காணார் வெருவுற்றார்

செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே
ஒளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய
மறைந்த அவர்தாம் மலைபயந்த
தையலோடுஞ் சரவணத்துத்
தனயரோடுந் தாமணைவார்

தனிவெள் விடைமேல் நெடுவிசும்பில்
தலைவர் பூத கணநாதர்
முனிவ ரமரர் விஞ்சையர்கள்
முதலா யுள்ளோர் போற்றிசைப்ப
இனிய கறியுந் திருவமுதும்
அமைத்தார் காண எழுந்தருளிப்
பனிவெண் திங்கள் முடிதுளங்கப்
பரந்த கருணை நோக்களித்தார்🙇

#புராணநடையில்🥀
வைரவர் சிறுத்தொண்டரே நாம் உமது புதல்வன் வந்தால் தான் உண்போம் இப்போது உதவான் என்கிறீர் அவன் எப்போதும் உதவுவான் நீர் சென்று நாடி அழையும் என்றார் சிறுத்தொண்டர் மனைவியுடன் வெளியே சென்று மைந்தனை அழைக்கின்றார். பரமேஸ்வரன் திருவருளால் பள்ளியினின்று வருவார்போல சீராளதேவர் காலில் சதங்கை ஒலிக்க தளர்நடையிட்டு ஓடி வந்தார். பெற்றோர் மகிழ்ந்து இனி சிவனடியார் உண்ணப்பெற்றோம் என்று உவகை கொண்டனர் திருமகனை உச்சி மோந்து உள்ளே சென்றனர் வைரவராக வந்த முதல்வர் மறைந்தருளினார் அவரைக்காணாது சிறுத்தொண்டர் சிந்தை கலங்கி அடியற்ற மரம் போல் வீழ்ந்தார் மறைந்த அப்பரமபதி அன்னை உமையோடும் முருகக்கடவுளோடும் வெள்ளை விடைமேல் வானிடை காட்சி
கொடுத்தார் இனிய கறியமுது படைத்த
அடியார்க்குத் திருவருள் தந்தருளினார் . சிறுத்தொண்டர் மனைவி மகன் மற்றும் சந்தன நங்கை ஆகியோருடன் மண்மிசை வீழ்ந்து வணங்கி திருவருளை எண்ணி கண்ணீர் வடித்தார் அந்நால்வரையும் உடன் அழைத்துக்கொண்டு இறைவர் சிவலோகத்திற்கு எழுந்தருளினார்

திருக்கோணமலை பிரதானவீதியில் அருள்பாலிக்கும் எல்லாம் வல்ல அருள்மிகு ஞான பைரவசுவாமி திருக்கோயிலில் இன்றைய தினம் தேய்பிறை அ...
01/04/2024

திருக்கோணமலை பிரதானவீதியில் அருள்பாலிக்கும் எல்லாம் வல்ல அருள்மிகு ஞான பைரவசுவாமி திருக்கோயிலில் இன்றைய தினம் தேய்பிறை அட்டமி அபிடேகத்தை தொடர்ந்து விசேட பூசை இரவு 7.30 க்கு இடம் பெறும்.

எல்லாம் வல்ல பைரவசுவாமியின் அலங்காரங்களுக்கும் அம்பாளின் நவராத்திரி கால அலங்காரங்களுக்கும் பூமாலை கட்டி உதவிபுரிந்த மணோன...
08/11/2023

எல்லாம் வல்ல பைரவசுவாமியின் அலங்காரங்களுக்கும் அம்பாளின் நவராத்திரி கால அலங்காரங்களுக்கும் பூமாலை கட்டி உதவிபுரிந்த மணோன்மனி அம்மா அவர்கள் காலமாகி விட்டார் .அவரின் ஆத்மசாந்தக்காக பிரார்த்திக்கின்றோம்🙏

Address

அருள்மிகு ஞானபைரவ சுவாமி திருக்கோயில்
Trincomali
31000

Telephone

+94777135687

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஞானபைரவ சுவாமி திருக்கோயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அருள்மிகு ஞானபைரவ சுவாமி திருக்கோயில்:

Share