Thenkailai Aatheenam

Thenkailai Aatheenam அன்பே சிவம்

11/03/2021

NEWS தென்கயிலை சிவன் மலையில் சிவனிரவு March 11, 2021March 11, 2021 by Siva Oli தென்கயிலை சிவன் மலையில் சிவனிரவுஇன்று ( 11-03-2021 ) வியாழக்கிழமை த.....

09/03/2021

sivam

08/09/2020

ஓம் நமசிவாய.

07 09 2020 திங்கட்கிழமை தென்கயிலை ஆதீனம் சிவன் மலையில் மூன்று லிங்கங்கள் உயிர்ச்சக்தியூட்டப்பட்டு அமர்த்தப்பட்டன.

நாதலிங்கேச்சரர் பெருமானை லண்டனில் வசிக்கும் முகுந்தன் குடும்பமும் , அகத்தியநாதர் பெருமானை மட்டக்களப்பு சந்திவெளி அகத்தியர் அறப்பணி மன்றமும், நடராசலிங்கேச்சரர் பெருமானை வவுனியா இறையடி குகதாசன் குடும்பத்தினரும் நன்கொடையாக வழங்கினார்கள்.

தென்கயிலை ஆதீன முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளார், இளையபட்டம் திருமூலர் தம்பிரான் அடிகளார், தென்கயிலை ஆதீன செந்தமிழாகம தலைமை அருட்சுனைஞரும் அகில இலங்கை சைவத்தமிழ் அறக்கட்டளை செந்தமிழாகம தலைமை அருட்சுனைஞருமான உயிரொளி சிவம் பிரதாபனார், தென்கயிலை ஆதீன செந்தமிழாகம அருட்சுனைஞரும் தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பின் செந்தமிழாகம அருட்சுனைஞருமான தயாளன் ஐயா ஆகியோர் மேற்படி நிகழ்வை சிறப்புற இயற்றி வைத்தனர்.

தென்கயிலை ஆதீனம் சிவன் மலையில் தங்கள் பெயரால் லிங்கப்பெருமான் அமர்த்துவதற்கு விருப்பம் உள்ளவர்கள்..
தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
தென்கயிலை சிவா.
அலைபேசி: 0033 6 13 15 93 49 ( WhatsApp)
மின்னஞ்சல்:
[email protected]

அன்பே சிவம்.

03/09/2020

ஓம் நமசிவாய
இன்று 01 09 2020 செவ்வாய்க்கிழமை தெனுகயிலை ஆதீனம் சிவன் மலையில் மூன்று லிங்கங்கள் உயிர்ச்சக்தியூடுடப்பட்டு அமர்த்தப்பட்டன.

தென்கயிலை ஆதீனம் முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளார் ,இளையபட்டம் திருமூலர் தம்பிரான் , தென்கயிலை ஆதீன தலைமைச் செந்தமிழாகம அருட்சுனைஞரும் அகில இலங்கை சைவத்தமிழ் அறக்கட்டளையின் செந்தமிழாகம அருட்சுனைஞருமான உயிரொளி சிவம் பிரதாபனார், தென்கயிலை ஆதீன செந்தமிழாகம அருட்சுனைஞரும் தமிழர் பண்பாட்டு வழிபாட்டு அமைப்பின் செந்தமிழாகம அருட்சுனைஞருமான தயாளன் ஐயா மற்றும் செந்தமிழாகம அருட்சுனைஞர்கள் இப்பூசையை முன் நின்று நடத்தியது சிறப்பு நிகழ்வாகும்.

யேர்மனியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை குடும்பத்தின் நனகொடையில், கிருஷ்ணலிங்கேச்சரர், நந்தீச்சரர்,ஐஸ்வர்ய லிங்கேச்சரர் ஆகிய மூன்று லிங்கங்கள் சிவன் மலையில் உயிர்ச்சக்தியூட்டப்பட்டு அமர்த்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் பத்து லிங்கங்கள் முறையே அமர்த்தப்படவுள்ளன என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்பே சிவம்

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thenkailai Aatheenam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category