12/02/2025
சங்கை பொருந்திய #ஷஃபான்_பிறை_15 தெளிவு பெற வேண்டிய சில விடயங்கள்□ எனும் நூலில் இருந்து..
Beautiful Religion - islam
YouTube
https://youtube.com/channel/UCiRYpc1CCeZrx6uLriCTt2w
WhatsApp
https://chat.whatsapp.com/EpyH2olJYKm1gJLE9QDwC0
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
#ஷஃபான்_பிறை_15_ஆம்_தினத்தின்_இரவில்_குர்ஆன்_அருளப்படவில்லை_என்பது_சம்பந்தமான_தெளிவு
முதலாவதாக (( ُّفِيْهَا يُفْرَقُ كُل أَمْرْ حَكِيْم)) என்ற வசனமானது ஷஃபான் பிறை 15 ஆம் இரவு பற்றிப் பேசவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆன் இவ்விரவிலே தான் அருளப்பட்டதென மக்களுக்கு மத்தியில் பரவிவரும் இக்கருத்து பிழையான ஒரு கருத்தாகும். அழ்ழாஹ் மலக்குமார்களுக்கு இவ்வருடத்திலிருந்து அடுத்த வருடம் வரை அடியார்களுக்கு நிர்ணயித்துள்ள மெளத், ஹயாத், பிறப்பு, ரிஸ்குகள் மேலும் அது போன்ற நிகழ்வுகளின் விபரங்களை அறிவித்துக் கொடுக்கும் இரவானது புனித ,,லைலதுல் கத்ர்,, இரவாகும் என்பதே சரியானதாகும்.
குர்ஆன் முதல் வானத்திலே ,,பைதுல் இஸ்ஸா,, எனும் இடத்திலே ஷஃபான் பிறை 15 ஆம் இரவில் இறங்கியதாக யாரும் உறுதி கொள்ளலாகாது. மாறாக குர்ஆன் முதல் வானத்திலே இருக்கும் ((بيت العزة)),, பைதுல் இஸ்ஸா,, எனும் இடத்திற்கு அருளப்பட்டது புனிதமிகு ,,லைலது கத்ர்,, இரவில் நடைபெற்றதாகவே
((إِنَّا أَنْزَلْنَاهُ فِيْ لَيْلَةِ القَدْر))
விளக்கம்: ,,நிச்சயமா நாங்கள் குர்ஆனை ,,லைலதுல் கத்ர்,, உடைய இரவிலே இறக்கிவைத்தோம்,,
(அத்தியாயம் : அல் கத்ர்,வசனம் : 01)
எனும் குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது.
மேலும் இவ்வசனம் பின்வரும் வசனத்தை தெளிவுபடுத்துகிறது.
அழ்ழாஹு தஆலா கூறியுள்ளான்.
((إِنَّا أَنْزَلْنَاهُ فِيْ لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِيْنَ فِيْهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيْم))
விளக்கம்: ((,,றமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் இரவிலே முதல் வானிலுல்ல ,,பைதுல் இஸ்ஸா,, வுக்கு குர்ஆனை ஒட்டுமொத்தமாக இறக்கிவைக்கும்படி அழ்ழாஹ் கட்டளையிட்டான். நிச்சயமாக அழ்ழாஹ் குர்ஆனை இறக்கிவைத்தான். அதிலே மார்க்க சட்டங்களும், உபதேசங்களும், வாக்குறுதிகளும், எச்சரிக்கைகளும் உள்ளன,,))
(அத்தியாயம்: அத்துஹான்,வசனம்:03))
குறிப்பு: மேற்கூறப்பட்ட வசனத்தில் இடம்பெற்றுள்ள ((ليلة مباركة)) ,,லைலதுன் முபாரகதுன்,, என்பதன் மூலம் நாடப்படுவது ((ليلة القدر)) ,,லைலதுல் கத்ர்,, ஆகும்.
((فيها يفرق كل أمر حكيم ))
என்ற வசனத்தின் கருத்தானது இவ்வருடத்திலிருந்து அடுத்த வருடம் வரை அழ்ழாஹ் தனது அடியார்களுக்கு நிர்ணயித்துள்ள மெளத், ஹயாத், பிறப்பு, ரிஸ்குகள் மேலும் அது போன்ற நிகழ்வுகளின் விபரங்களை லைலதுல் கத்ருடைய இரவில் அவன் மலக்குமார்களுக்கு அறிவித்துக் கொடுத்துள்ளான் என்பதாகும்.
#ஷஃபான்_பிறை_15_ஆம்_இரவில்_தொழக்கூடிய_தொழுகையின்_எண்ணிக்கை_எங்கும்_குறிப்பிட்டுக்_கூறப்படவில்ல_அது_சம்பந்தமான_தெளிவு
இவ்விரவிலே பிரத்தியேகமான அமைப்பில் 100 ரக்அத்கள் அல்லது 50 ரக் அத்கள் அல்லது 12 ரக்அத்கள் தொழுவதற்கு மார்க்கத்தில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் கிடையாது. மேலும் இது அழ்ழாஹ்வின் தூதர் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் வாயிலாக பதிவிடப்படவுமில்லை. இவ்விரவிலே நன்மையை நாடக்கூடிய ஒரு முஸ்லிம் தான் விரும்பிய அளவு ரக்அத்களை தொழுது கொள்ளலாம். இத்தனை ரக்அத்கள்தான் தொழப்பட வேண்டுமென எண்ணிக்கை குறிப்பிட்டுக் கூறப்படவில்லை. ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் அப்துழ்ழாஹ் அல் - ஹுமாரி رضي الله عنه அவர்கள்
((حسن البيان في ليلة النصف من شعبان))
,, ஹுஸ்னுல் பயான் பீ லைலதின் நிஸ்பி மின் ஷஃபான்,, எனும் கிரந்தத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ,, ஸஹீஹான அமைப்பிலோ அல்லது பலவீனமான அமைப்பிலோ இந்த இரவில் தொழப்படும் தொழுகையின் எண்ணிக்கை தொடர்பாக எந்த குறிப்பும் காணப்படவில்லை. மாறாக இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளே காணப்படுகின்றன.,,
#பிரார்த்தனை_அழ்ழாஹ்வின்_ஏற்பாட்டைத்_தட்டி_விடாது_மேலும்_அழ்ழாஹ்வுடைய_நாட்டம்_ஆரம்பமற்றது_ #அது_மாற்றமடையாதது_என்பது_பற்றிய_தெளிவு
அழ்ழாஹ்வுடைய நாட்டம் எனும் தன்மை அடியார்களின் செயல்கள், சொற்கள் அனைத்தையும் அடையவளைத்துக் கொள்ளக்கூடியது. இவ்வுலகிலே அழ்ழாஹ்வின் நாட்டமின்றி மேலும் அவன் அறியாமல் அவன் படைக்காமல் அவனின் ஏற்பாடின்றி எதுவும் நடைபெறமாட்டாது. அழ்ழாஹ்வின் நாட்டத்தின் பிரகாரமே அடியார்களின் நாட்டம் கூட உண்டாகுகிறது. இது தொடர்பாக பின்வருமாறு அழ்ழாஹு
தஆலா கூறியுள்ளான்
(وَمَاتَشَاءُوْنَ إِلَّا أَنْ يَشَاءَ اللّٰهُ رَبُّ العَالَمِيْنَ))
விளக்கம் : "படைப்பனைத்தையும் படைத்து ஆட்சி செய்யும் அழ்ழாஹ்வின் நாட்டமின்றி யாராலும் எதையும் நாடவே முடியாது."
இதுவே முஸ்லிம்களின் நம்பிக்கை கோட்பாடாகும். நல்ல விடயங்கள், கெட்ட விடயங்கள், வணக்கங்கள், பாவங்கள், அழ்ழாவை ஈமான் கொள்வது, அவனை மறுப்பது யாவும் அழ்ழாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன. ஏனெனில் அழ்ழாஹ்வைத் தவிர எதனையும் படைக்கக்கூடியவன் யாரும் கிடையாது. அழ்ழாஹ்வின் நாட்டத்திற்கு ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அதில் மாற்றங்களோ, நிலைமாறுதல்களோ ஏற்படமாட்டாது. இவ்வாறுதான் அழ்ழாஹ்வுடைய அறிவு, வல்லமை போன்ற தன்மைகளும் மாற்றம் பெறமாட்டாது. மாற்றம் பெறுதல் என்பது படைப்புக்களின் தன்மையாகும். எனவே அழ்ழாஹ்வுடைய யதார்த்தத்திலோ, தன்மைகளிலோ மாற்றம் ஏற்படுவதில்லை. அவ்வாறு அழ்ழாஹ்வுடைய தன்மைகளில் மாற்றம் ஏற்படுவது புத்தி ஏற்றுக்கொள்ளாத, சாத்தியமற்ற ஒன்றாகும்.