தவ்ஹீத் ஜமாஅத் அம்பைகிளை

தவ்ஹீத் ஜமாஅத் அம்பைகிளை amalnlkalin sirapu

ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகளை முதலில் தடை செய்: -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!ஒன்றிய பாஜக அரசு பிஎப்ஐ உள்ளிட்ட  சில...
29/09/2022

ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகளை முதலில் தடை செய்: -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

ஒன்றிய பாஜக அரசு பிஎப்ஐ உள்ளிட்ட சில அமைப்புகளை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் பொது அமைதி மற்றும் மத மோதல்களை அவ்வியக்கங்கள் உருவாக்குவதாகவும் உள்துறை அமைச்சகம் காரணம் கூறியுள்ளது.

மேற்படி காரணங்களால் இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு அதிக தகுதியுள்ள அமைப்பு ஆர்.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பு தான்.

இளைஞர்கள் மத்தியில் ஷாகா பயிற்சி என்ற பெயரில் இந்தியா முழுக்க தீவிரவாத சிந்தனையை பரப்பி வருகிறார்கள்.

மக்களிடையே மத வெறுப்பு சிந்தனையை ஊட்டி இந்தியாவை துண்டாடும் வேலையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

காந்தியின் கொலையிலும் அதன் பிறகு நாட்டில் நடைபெற்ற வன்முறையில் உள்ள தொடர்பினால் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஏற்கனவே தடை செய்யப்பட்டது. அதன் பிறகு காலப்போக்கில் ஆர்எஸ்எஸ் மீதான தடை நீக்கப்பட்டது.

எனினும் வன்முறைப் பாதையை விட்டு அந்த அமைப்பு விலகவில்லை.

இந்திய அளவில் பல குண்டு வெடிப்புகளில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பங்காற்றியுள்ளது என்று ஆர்எஸ்எஸில் 1990 முதல் அங்கம் வகித்த யஷ்வந்த் ஷிண்டே சமீபத்தில் மஹாராஷ்ட்ரா நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமே அளித்துள்ளார்.

2000 ம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, 2008 ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களை ஆர்.எஸ்.எஸ் நடத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவையாவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான்.

அது மட்டுமின்றி இன்றளவும் பல மாநிலங்களில் ஊர்வலம் எனும் பெயரில் மத மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இவ்வளவு பயங்கரவாத பின்புலம் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இதுவரை ஏன் தடை விதிக்கப்படவில்லை.?

துப்பாக்கிகளை வைத்து பயிற்சி அளிப்பது, கத்தி, வாள் போன்றவற்றைக் கொண்டு வெளிப்படையாகவே ஆயுதப் பயிற்சிகளில் சங்பரிவார் அமைப்புகள் ஈடுபடுகின்றனர்.

இவை அனைத்திற்குமான புகைப்படக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காணக்கிடக்கின்றன.

இத்தகைய சங்பரிவார அமைப்புகளுக்கு ஏன் தடையில்லை.

இந்திய அரசியல் சாசனத்தை அகற்றி
இந்து ராஷ்ட்ராவின் அரசியல் சாசனத்தை வடிவமைக்க வேண்டும் என்று சங்பரிவாரத்தினர் குரல் கொடுத்தார்களே?

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய இந்த அமைப்பு மீது தடை விதிக்கப்படாதது ஏன்?

நாட்டை வன்முறைப் பாதையை நோக்கி அழைத்து செல்லும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளை சுதந்திரமாக உலவ விட்டு விட்டு சிறுபான்மை அமைப்புகளை மட்டும் குறி வைப்பது சிறுபான்மை சமூகத்தை நசுக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

எனவே நாட்டின் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகளை முதலில் தடை செய்ய வேண்டும்.

இப்படிக்கு,
ஆர். அப்துல் கரீம்.
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

01/06/2021
பாசிசத்தின் கோரப்பிடியில்  வாரணாசி நீதிமன்றம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டணம்ஒளரங்கசீப் காசிவிசுவநாதர் கோயிலை இட...
09/04/2021

பாசிசத்தின் கோரப்பிடியில் வாரணாசி நீதிமன்றம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டணம்

ஒளரங்கசீப் காசிவிசுவநாதர் கோயிலை இடித்துவிட்டுதான் ஞானவாபி மசூதியை கட்டியதாகவும் அந்த மசூதி இந்துக்களுக்கே சொந்தம் என்று போடப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்த வாரணாசி நீதிமன்றம் மசூதியை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதியை போல இன்னுமொரு அநீதியை இந்திய சமூகம் ஏற்காது என்பதுடன் சட்டத்திற்கு புறம்பான மேற்கண்ட உத்தரவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

07/04/2021

இறைவனின் திருப்பெயரால்..

தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

கடந்த 14.03.2021 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 12.04.2021 திங்கள்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு
75502 77335
99520 56444
99520 35444

இப்படிக்கு
மாநிலத் தலைமையகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

06/02/2021
03/02/2021

காவி பயங்கரவாதி கல்யாண ராமனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்:அம்பாசமுத்திரம் கல்யாணி திரையரங்கம் முன்பு
நேரம்:4.30க்கு

இன்ஷாஅல்லாஹ்

26/01/2021

தலைநகரில் அமைதியாக போராடும் விவசாயிகள் மீது வன்முறையை ஏவியுள்ள மத்திய அரசை கண்டித்து #தவ்ஹீத்_ஜமாஅத் அறிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

*இந்திய குடியரசு தினத்தன்று விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்துள்ள மத்திய பாஜக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.*

மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் விரோத வேளான் திருத்த சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 62 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசுடன் 10க்கும் மேற்பட்ட கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து அடுத்த கட்ட போராட்டமாக குடியரசு தினமான ஜனவரி 26 இன்று தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்தனர். அதன்படி இன்று டெல்லியின் முக்கிய சாலைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் கைகளில் தேசிய கொடியை பிடித்தவாறு குடும்பத்துடன் பேரணியை தொடங்கினர்.

நாட்டு மக்கள் அனைவரும் குடியரசு தினத்தை கொண்டாடி வரும் வேளையில் மத்திய பாஜக அரசு திட்டமிட்டு பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது தடியடி நடத்தியும், வழிகளை மறித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கண்மூடித்தனமான அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளது. இதில் விவசாயி இறந்ததாக செய்தி வருவது வருத்தமளிப்பதாக உள்ளது.

மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மூன்று வேளாண் திருத்த சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாசு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

அமைதி போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்க நினைப்பது ஒரு போதும் தீர்வாகாது என்பதை ஆளும் பாசிச பாஜக அரசு உணர வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறும் வரை போராட்டங்கள் ஓயாது என்பதையும் பாசிச பாஜக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Address

Ambasamudram
Tirunelveli East
627401

Telephone

+918122786217

Website

Alerts

Be the first to know and let us send you an email when தவ்ஹீத் ஜமாஅத் அம்பைகிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share