26/08/2022
வைதாரையும் வாழ வைக்கும் சந்நிதியான்...!
சந்நிதி முருகன் மீதான, தோழமையுடன் கூடிய பக்தி வைராக்கியத்துடன் தொடர்புடைய தாக அமைந் துள்ள தொண்டைமானாறு செல்வச் சந்நிதியின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெறுகின்றது.
ஓல்லாந்தர் கால பதிவேட்டின்படி செல்வச் சந்நிதி ஆலயத்தின் ஆரம்ப வரலாறானது, குருகுல பரதவம் சத்தைச் சேர்ந்த மருதர் கதிர்காமருடன் தொடங்கி மிளிர்ந்ததை அறியக்கூடியதாக உள்ளது. ஆற்றங்கரை யிலும் ஆற்றங்கரையை அடுத்துள்ள சூழலிலும் பரத வம்சம் என்று கூறப்படும் குருகுலத் தவரே குடியிருந்து வருகின்றனர். இவர்களின் குல தெய்வமாகிய முருகக் கடவுளே 'வேல்' ரூபத்தில்; கோயில் கொண்டு காட்சி அளிக்கின்றார்.சந்நிதி முருகனைக் கந்தசுவாமியார் என்றும் 'ஆற்றங்கரை யான்” 'ஆற்றங்கரை வேலவன்', 'கல்லோடைக் கந்தன்', ”காவடிக் கந்தன்”, 'அன்னதானக் கந்தன்', ‘சின்னக் கதிர்காமம்’ என்றும் பல்வேறு பெயர்களினால், அழைத்துப் பாடிப் பணிந்து வந்துள்ளனர்.
தீர்த்தோற்சவமும் மௌனத்திருவிழாவும்:
முருகப் பெருமானுக்குரிய வருடாந்த மகோற்சவம், ஆவணி மாதத்தில் வரும் அமாவசையில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகின்றது, கோவில் கிணற்றுக்கு அருகே வள்ளிக்கொடி முளைக்கும் பொழுது கொடியேறி திருவிழா ஆரம்ப மாகி பதினைந்து நாட்கள் அல்லது சிலவேளைகளில் பூரணை நாட்களைக் கருத்தில் எடுத்து பதினாறு நாட்கள் நடைபெறும். இங்கு ஆகம வழிபாடு சார்ந்த கொடித் தம்பம் இல்லாததால், கொடியேற்றும் கிரிகைகள் யாவும் கேடகத்திலேயே இடம் பெறுகின் றன. இச்சடங்கு முடிந்ததும், கண்டாமணி ஒலிக்க மணிக் கோபுரத்தில் கொடி ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து வேற்பெருமான் இக் கேடகத் திலேயே வீதி உலா வருவார். , பதினான்காவது நாள் தேர் உற்சவமும், ஆவணிப் பூரணையில் தீர்த்த உற்சவ மும் நடைபெறும்.
இன்று (26.08.2018)ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் பதினைந்தாம் நாள் தீர்த்த உற்சவத்தின் பொழுது, மூடிய பல்லக்கில் தளப்பத்து ஓலைகள் நான்கு புறத்திலும் பிடிக்கப்பட, வேற்பெருமான் எவ்வித சோடனையுமி;னறி அழைத்துச் செல்லப்பட்டு, ஆலய உள் வீதியில் பிள்ளையார் வாயிலின் முன் அமைந்த தீர்த்தக் குளத்தில் தீர்த்தமாடி முடிந்ததுடன் வள்ளி அம்மன் வாசலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அன்றைய நாள் முழுவதும் வள்ளி அம்மனுடனேயே தங்கியிருந்து பிற்பகல் பல்லக்கில் வைத்து மீண்டும் மூலஸ்தான மண்டபத்தில் கோயில் கொண்ட தெய்வயானை அம்மன் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்படும் பொழுது, கோபமுற்ற தெய்வயானை அம்மன் முருகப் பெருமானை ஏற்கமறுத்த வரலாற்றை விளக்கும் வகையில் மௌனத் திருவிழா என்று அழைக்கப் படும் “ஊடற் திருவிழா” நடை பெறும். இதில் பிரதம பூசகரின்; தூதுடன் அந்த ஊடல் உற்சவம் நிறைவுக்கு வந்து மீண்டும் வேற்பெருமான் தெய்வானை அம்மன் கோயில் கொண்ட மூலஸ்தான மண்டபத் தில் சேர்க்கப் படுவார்.அதனைத் தொடர்ந்து சந்நிதி யின் வருடாந்த மகோற்சவம் நிறைவுக்கு வரும்.
இத்தனை பெருமைகளையும் கொண்ட செல்வச் சந்நிதியின், வழிபாடானது, தனிமனித உறவு கலந்த தோழமையுடனான பக்தி மார்க்கமாகக் காணப்படு வதால், எந்த நேரத்திலும் உரிமையுடன் சென்று தமது தேவைகளை“அதட்டிக்” கேட்கின்ற அல்லது வைது கேட்கின்ற ஒரு வழிபாட்டு உறவு முறை யைச் செல்வச்சந்நிதியில்தான் காணலாம்.
அந்த வகையிலேயே முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் சந்நிதியானின் அருட்கடாட்சம் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கெல்லாம் அருள் பாலிக்கவேண்டும் என்று வேண்டுதல் செய்வோம்.
(ஆதாரம்: "சந்நிதிச் செல்வம்" (2003)-வல்வை.ந.அனந்தராஜ்)