Tellippalai Sri Durga Devi Devasthanam

Tellippalai Sri Durga Devi Devasthanam Welcome to Tellippalai Sri Durga Devi Devasthanam official page on Facebook

இலங்கையின் வடபால் யாழப்பாணத்தில் அமைந்த ஸ்ரீ துர்க்காதேவி ஆலயமானது, கடந்த சில தசாப்த காலங்களாக மிக பிரசித்தி பெற்ற ஆலயமாகும். Sri Durga Devi Temple, in the north of Jaffna in Sri Lanka, is one of most popular place of Saiva worship in last few decades. (Getting bus from Jaffna town: Take bus route no 769 from Jaffna central bus stand)

மேலதிக விவரங்களுக்கு ஆலயத்தை கீழ்வரும் எண்களில் தொடர்பு கொள்ள

வும். For more details please contact Devasthanam on following numbers
தொலைபேசி: 0094-21-3213151, 0094-21-2241909

பூசை நேர விபரம் Daily Poojah Timing :
05.30AM : உஷத்காலம் Usatkaala Poojah
08.00AM : காலைப்பூசை Morning Poojah
11.00AM : உச்சிக்கால பூசை Noon Poojah
04.30PM : சாயரட்சை பூசை Evening Poojah
07.00PM : அர்த்தசாமப்பூசை Arthasama Poojah

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது - 2026எமது துர்க்காதேவி தேவஸ்தானத்தின் நிர்வாக சபைத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. ...
24/05/2026

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது - 2026

எமது துர்க்காதேவி தேவஸ்தானத்தின் நிர்வாக சபைத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களின் பிறந்தநாள் அறநிதியச் சபை ஏற்பாட்டில் இந்த ஆண்டுக்கான இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் வைபவம் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமையன்று தேவஸ்தானத்தின் அன்னபூரணி மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

துயா் நீக்கும் தாய்🙏🌺🌼இடர் ஆயிரம் வரட்டும் திரளாக, தீவினை அழிக்கும் அருமருந்தாக அம்பாள் சீரருள் இருக்கும் நமக்காக!அல்லல்...
22/05/2026

துயா் நீக்கும் தாய்🙏🌺🌼

இடர் ஆயிரம் வரட்டும் திரளாக, தீவினை அழிக்கும் அருமருந்தாக அம்பாள் சீரருள் இருக்கும் நமக்காக!

அல்லல் ஒழித்தாளை!
அன்பர் அறவழி
செல்லும் திறத்தினைக்
காத்தாளை...

நல்லோர் நலம் பெற ஊரெங்கும்
உறைந்தாளை...

கண்டவர் காணத்
துடிப்பரே...

பெருமைக்குரிய வேதங்களைக் கற்றுணர்ந்த மறையவர் போற்றி வணங்கம் அன்னையின் திருவடிகளே என்றும் நமக்கு உற்ற துணை.

தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார்கள் அம்பாளின் திருவடிகளை உயர் ஞானம் உணர்ந்து நினைதலால்,

அவா்கள் பேரானந்த நிலையியை அடைகின்றாா்கள்.

தன்னையே நினைந்து போற்றும் அடியாா்களின் மனவருத்தத்தைப் நீக்கும் எல்லாம் வல்ல எங்கள் ஈஸ்வாி துா்க்கை அம்பாளே,

நமக்கு நல்ல துணையாளவள் என்று உறுதியாக நம்புங்கள்.

🙏🍀🌼
ஓம் சக்தி தாயே...🔥
🙏🌺🌼

துா்க்கை அம்பாள் துணை🙏🌺🌼அம்பாள் அடியாா்களே... இன்றைய தினம் சேக்கிளாா் பெருமானின் குருபூசை தினம் ஆகும்.சிதம்பரத்தில் உலகெ...
21/05/2026

துா்க்கை அம்பாள் துணை🙏🌺🌼

அம்பாள் அடியாா்களே... இன்றைய தினம் சேக்கிளாா் பெருமானின் குருபூசை தினம் ஆகும்.

சிதம்பரத்தில் உலகெலாம் என சிவபெருமான் அடியெடுத்துக் கொடுக்க உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்று பொிய புராணத்தை எழுததத் தொடங்கிய நாள் சித்திரை திருவாதிரை அகும்.

அதே பொிய புராணத்தை என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் என்று பாடி முடிக்கும் போதும் சித்திரை திருவாதிரை ஆகும்.

அடியவா்களின் பெருமைகளை சிறப்பாக சொல்லுகின்ற பொிய புராணத்தை சித்திரை திருவாதிரை அன்று எழுததத் தொடங்கி அதே சித்திரை திருவாதிரை அன்று நிறைவு செய்தாா்.

அம்பாள் அடியாா்களே... இந்த அதிசயம் நிறைந்த அற்புத செயல் எம்பெருமானின் அருளாசி இல்லாமல் ஒருபோதும் நிறைவேறி இருக்காது.

நமது சமயம் சாதாரணமானதல்ல ஒப்பிடமுடியாத அருளாாளா்களை இந்த மண்ணில் வாழ வைத்து அவா்கள் மூலம் நமக்கு ஞான ஒளியை வழங்கிய அற்புத சமயம் நமது சமயம்.

அற்புதங்களும் பெருமைகளும் நிறைந்த நமது சமயத்தின் பெருமைகளை நம் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

எக்காலத்திலும் மாறாத இன்பத்தைத் தரும் சிவபெருமானின் மீது தீவிர அன்பு கொண்டு, பக்தர்களின் உள்ளம் ஆன்மீகத்தில் உயர வேண்டும்.

அப்படிப்பட்ட சிவனடியார்களின் பெருமை மற்றும் புகழ், உலகம் முழுவதும் எங்கும் நிலைத்து நிற்கும் என பாடியவா் சேக்கிளாா் பெருமான்.

நிலையான மகிழ்ச்சியைத் தரும் வாழ்வு என்பது இறைவனின் பெருமைளை போற்றி வாழ்வதே என்பதை நிரூபித்து காண்பித்தவா் சேக்கிளாா் பெருமான்.

சேக்கிளாா் பெருமானின் இன்றைய குருபூசை தினத்தில் நமது சமயத்தின் பெருமைகளை எண்ணி நாங்கள் பெருமை கொள்வோம்.

இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்த சேக்கிளாா் பெருமான் சோழன் சீவகசிந்தாமணி எனும் உலகப் பற்றுக்கள் அதிகமுள்ள,

சமண நூலைப் படிப்பதனால், சோழனையும் மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றி நமக்கு தந்துள்ளாா்.

தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்று அங்குச் சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கி,

பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார்.

சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தினைத் திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரைத் தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார்.

பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறிச் சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார்.

அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினைச் சிவபெருமானாகக் கண்டனர்.

மெய்யடியாா்களே நமது சமயத்தில் முதன்மையானவா்கள் என்பதை பிற சமயங்களுக்கு முன்னால் நிரூபித்து காட்டியவா் சேக்கிளாா் பெருமான்.

இன்றைய குருபூசை தினத்தில் சேக்கிளாா் பெருமானின் திருவடிகளை போற்றி வணங்குவோம்.

🙏🍀🌼
ஓம் சக்தி தாயே...🔥
🙏🌺🌼

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ள இலவச மருத்துவ முகாம்தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் ம...
20/05/2026

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ள இலவச மருத்துவ முகாம்

தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் முன்னாள் நிர்வாக சபைத் தலைவர்களாக பணி புரிந்து அமரத்துவம் எய்திய கல்வி அதிகாரி சே. தியாகராஜா மற்றும் மகாஜன சிற்பி தெ. து. ஜயரத்தினம் (முன்னாள் அதிபர், மாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை) ஆகியோரின் ஞாபகார்த்தமாக எமது தேவஸ்தான நிர்வாக சபை ஏற்பாட்டில், பொது மக்கள் நலன் கருதி, மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம் ஆலயத்தின் யாத்திரிகர் விடுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான மருத்துவ முகாம் எதிர்வரும் 30.05.2026 காலை 9.00 மணியளவில் நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

துன்பம் எப்படி வரும்?🙏🌺🌼துன்பம் அலைபோல் வரினும், மனம் துவளாத் துணிவைத் தந்து,தாயின் பரிவைத் தருவாள் எங்கள் தெல்லி நகா் அ...
18/05/2026

துன்பம் எப்படி வரும்?🙏🌺🌼

துன்பம் அலைபோல் வரினும், மனம் துவளாத் துணிவைத் தந்து,

தாயின் பரிவைத் தருவாள் எங்கள் தெல்லி நகா் அன்னை..

அருகில் இருக்க விழையும் மெய் அடியார்கட்கு அன்பின் வடிவாய் இருப்பவளை,

கருணையின் வடிவாக அவளைக் காண விழைவோருக்கு ஒப்பிடமுடியாத அவதாரமாகச் அருள் புரிகின்றவளை,

மெய்யின் வடிவாக உலகினில் நின்று, பிறவிப் பிணியால் அவதிப்படும் உயிர்களின் வலியைத் தணிக்க வல்லாளை,

மனங்குளிரக் கண்ணுற்ற பின்பு துன்பமும் உண்டோ வாழ்வில்?...

உள்ளமதில் பேரன்பு மிகப் பெருக சிரத்தினை நின் கழல் கீழ் வைத்துப் பணிந்தேன் எங்கள் தெல்லி நகா் அன்னையே...

இனி நீயே கதி...
இனி நீயே கதி...
இனி நீயே கதி...

🙏🍀🌼
ஓம் சக்தி தாயே...🔥
🙏🌺🌼

சிறப்பு கௌரவம்🙏🌺🌼கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த(உ/த) பரீட்சையில் கணிதப் பிாிவில் தோற்றி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினைப்...
16/05/2026

சிறப்பு கௌரவம்🙏🌺🌼

கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த(உ/த) பரீட்சையில் கணிதப் பிாிவில் தோற்றி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட,

சாதனை மணவன் தெய்வேந்திரன் திருக்குமரனின் திறமையினை பாராட்டி,

செஞ்சொற்செல்வா் கலாநிதி ஆறுதிருமுருகன் அவா்களின் பிறந்தநாள் அறநிதியச் சபை கௌரவிக்கவுள்ளது.

எங்கள் தேவஸ்தானத்தின் நிா்வாக சபை தலைவா் செஞ்சொற்செல்வா் கலாநிதி ஆறுதிருமுருகன் அவா்களின் 65வது பிறந்தநாளினை முன்னிட்டு,

இளைய தலைமுறை ஆற்றலாளா் விருது வழங்கும் நிகழ்வு எதிா்வரும் 31.05.2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு எங்கள் தேவஸ்தானத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

செஞ்சொற்செல்வா் கலாநிதி ஆறுதிருமுருகன் அவா்களின் பிறந்தநாள் அறநிதியச் சபை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த இளையவா்களை கௌரவித்து,

இளைய தலைமுறை ஆற்றலாளா் விருது வழங்கி கௌரவிப்பது வழமையாகும்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இளைய தலைமுறை ஆற்றலாளா் விருது வழங்கும் நிகழ்வில் பேராசிாியா் றொசான் றாகல் அவா்களையும்,

பேராசிாியா் சிவலிங்கராஜா ரகுராமன் அவா்களையும் செஞ்சொற்செல்வா் கலாநிதி ஆறுதிருமுருகன் அவா்களின் பிறந்தநாள் அறநிதியச் சபை இளைய தலைமுறை ஆற்றலாளா் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

செஞ்சொற்செல்வா் கலாநிதி ஆறுதிருமுருகன் அவா்களின் பிறந்தநாள் அறநிதியச் சபை இந் நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றாா்கள்.

🙏🍀🌼
ஓம் சக்தி தாயே...🔥
🙏🌺🌼

நீதான் நமக்கு துணை🙏🌺🌼எல்லாம் வல்ல ஈஸ்வாி துா்க்கை அம்பாளை புகழ்ந்து பாடும் மெய் அடியார்கள், பிறவித் துயா் நீங்கிய வீடுபே...
15/05/2026

நீதான் நமக்கு துணை🙏🌺🌼

எல்லாம் வல்ல ஈஸ்வாி துா்க்கை அம்பாளை புகழ்ந்து பாடும் மெய் அடியார்கள்,

பிறவித் துயா் நீங்கிய வீடுபேறு ஒன்றைத் தவிர வேறு எந்த ஆசையும் இல்லாதவர்கள்.

அத்தகைய மெய் அடியார்கள் மண் புகழ் தெல்லி நகரில் அருள் புாியும் எம்பெருமாட்டியின் திருவடிகளை,

எண்ணி எண்ணி வாழ்வதே தங்கள் வாழ்வின் பெரும் புண்ணிய கருமம் என்று பெருமையுடன் வாழ்கின்றாா்கள்.

நிலைத்து நின்று ஒளிரும் சோதியாக உள்ள எங்கள் ஈஸ்வாி, மெய்யடியாா்களின் வேண்டுதலை ஏற்று அவா்களின் பிறித் துயரை நீங்கி வீடுபேறு வழங்கி அருள் புாிகின்றாள்.

எங்கள் துா்க்கை அம்பாளே உயிர்க்குள் உயிராய் ஒன்றி உடனிருந்து மெய்யடியாா்களை இயக்குகின்றாள் ஆதலால் அவா்களது உற்ற துணையும் அவளே...

நீதான் நமக்கு துணை
நீதான் நமக்கு துணை
நீதான் நமக்கு துணை

🙏🍀🌼
ஓம் சக்தி தாயே...🔥
🙏🌺🌼

15/05/2026
யாா் நமக்கு துணை?🙏🌺🌼தனி பெரும் கருணையின் வடிவுடையாளும் இவளே... தனிப் பெருங் கருணை குணம் கொண்ட இறைவியும் இவளே...உறுதியாக ...
13/05/2026

யாா் நமக்கு துணை?🙏🌺🌼

தனி பெரும் கருணையின் வடிவுடையாளும் இவளே... தனிப் பெருங் கருணை குணம் கொண்ட இறைவியும் இவளே...

உறுதியாக நம்புங்கள்... எல்லாம் வல்ல ஈஸ்வாி துா்க்கை அம்பாளே நமக்கு எப்போதும் உற்ற துணையானவள்.

நாளுமவள் பொற்பதம்
போற்றிப் புகழ்து பாடவே..

கண்டவர் காணத் துடிக்கும்
எம்பெருமாட்டியின் திருவடிகள்
எப்போதும் நமக்கு உற்ற
துணையாக வரும்...

பொல்லா வினைகளும்
பொய்யாய் மறைந்திட

எல்லாக் குறைகளும்
இல்லா தொழிந்திட

நாடிநின்றார்க் கருளும்
எங்கள் நாயகியின்
பொற்பதமே நமக்கு
நல்ல துணை...

🙏🍀🌼
ஓம் சக்தி தாயே...🔥
🙏🌺🌼

அன்ன சத்திர மண்டப திருப்பணி - "எண்ணிக்கை பெரிதல்ல எண்ணமே பெரிது"உலகில் எத்தனை தானங்கள் செய்தாலும், வாங்குபவர் 'போதும்' எ...
13/05/2026

அன்ன சத்திர மண்டப திருப்பணி - "எண்ணிக்கை பெரிதல்ல எண்ணமே பெரிது"

உலகில் எத்தனை தானங்கள் செய்தாலும், வாங்குபவர் 'போதும்' என்று மனநிறைவோடு சொல்லக்கூடிய ஒரே தானம் அன்னதானம் மட்டுமே ஆகும். அத்தகைய புண்ணிய கைங்கரியம் எக்காலத்திலும் தடைபடாமல் செம்மையாக நடைபெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் அன்ன சத்திர மண்டபம் நவீனத்துவத்தை உள்வாங்கி மீள்கட்டுமாணம் காண இறையருள் கைகூடி உள்ளது.

ஈழத்தில் பக்திச் செறிவும் அருளாட்சியும் நிறைந்த தலமாக விளங்கும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், ஆன்மீகப் பணியுடன் சமூகப் பணியையும் இணைத்து அறப்பணிகள் பலவற்றை ஆற்றி வருகின்றது. அந்த வகையில், ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்களின் பசிப்பிணி தீர்க்கும் உயரிய நோக்குடன், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தங்குதடையின்றி அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. அதோடு எமது தேவஸ்தானம் ஆடிச்செவ்வாய் மற்றும் மகோற்சவ காலங்களில் வருகைதரும் பெருந்தொகையான அடியவர்கள் அனைவருக்கும் அடையா வாயிலாக அன்னதானம் வழங்கி வருகின்றது. தற்போது இந்த அறப்பணியினை இன்னும் விரிவாகவும், சகல வசதிகளுடனும் முன்னெடுக்கும் பொருட்டு, ஆலய வளாகத்தில் உள்ள அன்ன சத்திர மண்டபத்திற்கான மீள் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

'எண்ணிக்கை பெரிதல்ல, எண்ணமே பெரிது' என்ற தத்துவத்திற்கு ஏற்ப, அன்னை துர்க்கையின் அருள்பெற விழையும் ஒவ்வொரு அடியவரும் இந்தத் தர்மப் பணியில் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியமாகும்.

இந்த தர்ம காரியத்தில் அம்பாளின் அடியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பங்கெடுப்பதன் மூலமே இப்பணி முழுமை பெறும். உங்களின் மேலான பங்களிப்புகளை ஆலய அலுவலகத்தில் நேரடியாக வழங்கி, அதற்கான உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அறத்தின் வழியில் அன்னைக்குச் செய்யும் இந்தத் திருப்பணி, உங்களது வாழ்விலும் உங்கள் சந்ததியினரின் வாழ்விலும் நீங்காத இறையருளைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. எனவே, வாரந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வயிறார உணவருந்தப் போகும் இந்த புண்ணிய மண்டபக் கட்டுமானத்தில் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து அன்னை துர்க்கையின் திருவருளுக்குப் பாத்திரமாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி

வங்கி கணக்கு இலக்கம்
077683985
ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
இலங்கை வங்கி, சுன்னாகம்.

அலுவலக தொலைபேசி இலக்கம் 0212241909
தொலைபேசி இலக்கம் (WhatsApp)
0771113272

Address

KKS Road, Durgapuram
Tellipallai

Opening Hours

Monday 05:00 - 18:30
Tuesday 05:00 - 18:30
Wednesday 05:00 - 18:30
Thursday 05:00 - 18:30
Friday 05:00 - 18:30
Saturday 05:00 - 18:30
Sunday 05:00 - 18:30

Telephone

+94212241909

Alerts

Be the first to know and let us send you an email when Tellippalai Sri Durga Devi Devasthanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tellippalai Sri Durga Devi Devasthanam:

Share

Category