Mavadippalli Board of Trustees

Directions

Mavadippalli Board of Trustees இது மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமாகும்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2026.10.09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பிரசங்கம் நிகழ்த்துபவர்.----------------------------...
08/10/2026

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2026.10.09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பிரசங்கம் நிகழ்த்துபவர்.
-------------------------------------------------------------------------

05/10/2026

விசேட பயான் நிகழ்வு சம்பந்தமான அறிவித்தல்
---------------------------------------------------------------------

மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2026.10.07 ஆம் திகதி புதன்கிழமை ஆண்கள், பெண்கள் மற்றும் வாலிபர்களுக்கான விசேட பயான் நிகழ்வு பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் விசேட பயான் நிகழ்வினை தற்காலத்தில் நாடறிந்த பிரபல மார்க் சொற்பொழிவாளர் ASHEIHK AL HAAFIL ZAHIR ALEEM (HASHIMI) அவர்கள் நடாத்த இருக்கின்றார்கள்.

ஆகவே மேற்படி விசேட பயான் நிகழ்வில் மாவடிப்பள்ளி வாழ் ஆண்கள், பெண்கள் மற்றும் வாலிபர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நற்பயன் பெருமாறு வேண்டிக் கொள்ளப்படுகீன்றீர்கள்.

இப்படிக்கு
ஊடக பிரிவு.
நிர்வாகம்.
நம்பிக்கையாளர் சபை.

30/09/2026

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2026.10.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பிரசங்கம் நிகழ்த்துபவர்.
-------------------------------------------------------------------------

24/09/2026
அத்தம நிகழ்ச்சி திட்ட சிரமதான நிகழ்வு--------------------------------------------------------------------------நாடளாவிய ...
20/09/2026

அத்தம நிகழ்ச்சி திட்ட சிரமதான நிகழ்வு
--------------------------------------------------------------------------

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற CLEAN SRI LANKA வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக *அத்தம* நிகழ்ச்சித் திட்டம் கடந்த 2026.09.19 ஆம் திகதி சனிக்கிழமை மாவடிப்பள்ளி முகையிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் ( பழைய ஜூம்ஆ பள்ளிவாசல்) காலை 8.00மணி தொடக்கம் அன்றைய நாளுக்கான சிரமதான நிகழ்வு நடைபெற்றது.

குறித்த சிரமதான நிகழ்வில் மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் CDC உறுப்பினர்கள், ஊர் நலன்விரும்பிகள், உலமாக்கள், மஹல்லா வாசிகள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் தப்லீக் ஜமாஅத்தில் வந்த மத்ரஸா மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இச்சிரமதான நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நம்பிக்கையாளர் சபை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜஸாக்கல்லாகு ஹைரா.

நிர்வாகம்
நம்பிக்கையாளர் சபை
ஊடக பிரிவு.

மாணவர் இஜ்திமா பற்றிய அறிவித்தல்.தரம் 09, 10, 11,  A/Lமற்றும் உயர்கல்வி(COURSE) மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இஜ்தி...
16/09/2026

மாணவர் இஜ்திமா பற்றிய அறிவித்தல்.

தரம் 09, 10, 11, A/L
மற்றும் உயர்கல்வி(COURSE) மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இஜ்திமா
-------------------------------------------------------------------
மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் 2026.09.16ஆம் திகதி அதாவது இன்று புதன்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் தரம் 09,, 10, 11, A/L மாணவர்கள் , உயர்கல்வி (Course ), பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கான விசேட இஜ்திமா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மேற்படி இஜ்திமாவில் மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகீன்றீர்கள்.

இப்படிக்கு
நிர்வாகம்
நம்பிக்கையாளர் சபை.

தேசிய மீலாத் நபி சிறப்பு நிகழ்வு ------------------------------------------------------------மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர்...
14/09/2026

தேசிய மீலாத் நபி சிறப்பு நிகழ்வு
------------------------------------------------------------
மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபை தலைவர் MIM சைபுதீன் SIR ( ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் தலைமையில் கடந்த 2026.09.13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் மாவடிப்பள்ளி முகையிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் ( பழைய ஜூம்ஆ பள்ளிவாசல்) நபி (ஸல்) அவர்களின் சிறப்புக்களை மக்கள் மயப்படுத்தல் எனும் தொணிப்பொருளின் கீழ் நபி(ஸல்) அவர்கள் பிறந்த மற்றும் ஜனன மாதமான 2026 ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் வகையிலும் மாவடிப்பள்ளி அல்-
மத்ரஸதுல் புர்கானிய்யா ஆரம்ப அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இம் மத்ரஸாவின் முதல்வர் கன்னியத்துக்குரியமெளலவி ALA SAFEEN ( அஸ்ஸாபிடி) அவர்களை கெளரவிக்கும் முகமாக சிறப்பு பரிசில்கள் வழங்கியதோடு இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் என்பது விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வுக்கு பல வகையிலும் தமது உடலாலும் பொருளாலும் செல்வத்தாலும் பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் மற்றும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் மஹல்லா வாசிகள் அனைவருக்கும் நம்பிக்கையாளர் சபை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஸாக்கல்லாகு ஹைரா .

நிர்வாகம்.
நம்பிக்கையாளர் சபை.
ஊடக பிரிவு.

Address

Mavadippalli
Sammanthurai
32250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mavadippalli Board of Trustees posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share