28/08/2024
அதிகாலையில் கர்த்தரோடு
அதிகாலையில் தேவனை தேடுவது ஏன் நமது வாழ்க்கையில் முக்கிய படுத்தப்பட்டுள்ளது
அதிகாலை ஜெபம்
அதிகாலை ஸ்தோத்திர ஜெபம்
அதிகாலை வேத தியானம்
இவை மூன்றும் அதிகாலையில் ஏன் நம்முடைய வாழ்க்கையில் அவசியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தை நாம் பொறுமையோடு ஓடும்படிக்கு தேவன் நியமித்த பாதையை அல்லது ஓட்டத்தை ஓட்டத்தை ஓட வேண்டும் என்றால் தேவனுடைய வழிகளில் கட்டாயமாய் நாம் நடக்க வேண்டும்
1 கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
சங்கீதம் 128:1
4 இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
சங்கீதம் 128:4
ஆண்டவர் எங்களிடத்திலே எதிர்பார்க்கிற காரியம் எது? என்னை சிநேகிக்கிற வரை நான் சிநேகிப்பேன் என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்;: அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
நீதிமொழிகள் 8:17
அதிகாலையில் என்னை தேடுகிறவன் கண்டடைவான் அதிகாலை என்பது நாம் கர்த்தரை கண்டடைய தக்க சமயமாக தேவன் தன்னுடைய வார்த்தையின் மூலமாய் தெரியப்படுத்துகிறார் அதிகாலை ஜெபமோ அதிகாலை ஸ்தோத்திர ஜெபமோ அதிகாலையில் வேத தியானமும் நம்முடைய வாழ்க்கையில் அவசியமாய் முக்கிய படுத்தப்பட்டுள்ளது காலைதோறும் அவருடைய கிருபைகள் புதிதாய் இருக்கின்றபடியால் அனைவருடைய ஸ்தோத்திரத்தினாலே நமது வாழ்க்கையில் கிருபை பெறுகின்ற படியா ஸ்தோத்திரம் பண்ணுதல் மற்றவர்களுக்காக ஸ்தோத்திரம் பண்ணுதல் எங்களுடைய எங்களுடைய வாழ்க்கையிலும் மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் அவ் கிருபை பெறுகிறதா இருக்கிறது கர்த்தருக்கு பயந்து அவர் கிருபைக்கு காத்திருக்கிற அனுபவம் மிகவும் அவசியம்
தேவ பயமுள்ளவன் அவருடைய கிருபைக்கு காத்திருப்பான் கர்த்தருக்கு பயந்து
----------------------------------
அதிகாலையில் தேவனை ஸ்தோத்தரிப்பது என்பது தேவனுடைய பயத்தை நிரூபிக்கிறது தேவனுடைய பயம் நம்மிடத்தில் இருக்கிறது என்பதை அந்த செயல் நிரூபித்து காண்பிக்கிறது
லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள், கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
சங்கீதம் 13:20
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கிவிடுவிக்கவும்,
சங்கீதம் 33:18
ஏனென்றால் மரணமும் பாதாளமும் கர்த்தரை துதியாது நரக ஆக்கினைக்கு தகுதியானவர்கள் ஒருபோதும் கர்த்தரை துதிக்க மாட்டார்கள் கர்த்தருக்கு பயப்படும் பயம் என்பது நமது உள்ளத்தில் வைத்ததான ஒரு கிருபையை சார்ந்த கர்த்தருடைய தேவனுடைய ஆவியானவர் அவர் நமக்குள் இருந்து கர்த்தரை தேடும்படி நமக்கு உதவி செய்கிறார் எனக்குண்டான ஆவியினாலே அதிகாலமே கர்த்தரை தேடுகிறேன் அதிகாலையில் தேவனை தேடுவது என்பது தேவ பயத்தை சார்ந்தது கர்த்தரை சார்ந்து நாம் ஜீவிப்பதற்கு அது ஒரு அடையாளமாக இருக்கிறது
நமது ஆத்துமா தேவன் செய்த ஒரு உபகாரங்களையும் மறந்துவிடாமல் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து அந்த ஆத்துமா சங்கீத 103 இதை நாம் கூட்ட முடிவிலே அறிக்கை செய்வோம் ஆனால் இவைகள் எப்பொழுதும் எந்த இடங்களிலும் பிரதிபலிக்க செய்ய நாம் தவறிவிடுகிறோம்
எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
1 கொரிந்தியர் 10:4 தோத்திரம் செய்வதே தகும்
இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் வனாந்தரப் பயணத்தில் சுமந்து சென்ற கன்மலை ஆகிய, இஸ்ரவேல் தேசத்தைக் கொண்டுவந்த தேவாதி தேவனை மறந்துவிட்டதற்காக மோசே அவர்களைக் கடிந்துகொண்டார் (உபாகமம் 1:31-33. கானானுக்குள் நுழைந்த இஸ்ரவேலர்களின் தலைமுறை இறுதியில் கர்த்தரை மறந்தது. அவர்கள். "தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைக் கைவிட்டார்கள், அவர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த மக்களின் தெய்வங்களுக்கு நடுவில் இருந்து மற்ற தெய்வங்களைப் பின்தொடர்ந்து, அவர்களுக்குப் பணிந்தார்கள்" (நியாயாதிபதிகள் 2:12. ) அவர்கள் கர்த்தரை நினைவுகூரத் தவறியதால், அவர் அவர்களைக் கொள்ளைக்காரர்கள் (அந்நிய ஜாதியாரிடத்தில் அவர்களை)
மற்றும் எதிரிகளின் கைகளில் ஒப்படைத்தார் (நியாயாதிபதிகள் 2:14). மற்றும் துன்பம்
தேவனை துதித்து தேவனை மகிமைப்படுத்தி வாழ அவர்கள் நினைக்காமல் அவரை மறந்ததினாலே அவர்கள் அனுபவித்த இடுக்கங்களை நெருக்கங்களையும் துன்பங்களையும் நாம் அறிவோம்
நமக்கோ வேத வார்த்தைக்கமைய ஸ்தோத்திரம் செய்வதே நமக்குத் தகும் தேவன் என்று அவரை அறிந்து அவரை மகிமைப்படுத்தவும் ஸ்தோத்தரிக்கவும் கர்த்தர் நம்மை அவருக்காக நியமித்திருக்கிறார் நாம் நமக்குத் தகுந்ததை செய்யாவிட்டால் தகாதவைகளுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவோம்
"தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது, தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
ரோமர் 1:19,21,25,28
தகாத காரியங்களுக்கு இடமில்லாமல் நாம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்
தேவனால் அனுமதிக்கப்பட்ட சித்த மாத்திரம் நம்முடைய ஜீவியத்தில் நிறைவேற்றி நாம் நித்தமும் கர்த்தரை துதித்து அவருடைய துதியை நாம் சொல்லி வருகிறவர்களாக காணப்படும் படியாக இருக்க வேண்டும் தேவன் நம்மை தெரிந்து எடுத்த நோக்கத்தை புரிந்து கொண்டு
" இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன் இவர்களின் என் துதியை சொல்லி வருவார்கள் "
இந்த வார்த்தை அமைய பிரியமானவர்களே இவைகளை நாம் புரிந்து கொண்டு தேவன் முதல் மனிதனைப் படைக்கும் பொழுது அவனைக் குறித்து வைத்த நோக்கத்தை நாம் வேத சத்தியத்தின் மூலமாக புரிந்து கொள்ள வேண்டும் மனிதன் அவரையே சேவிக்க வேண்டும் என்பது தேவ நோக்கம் தோட்டத்தை பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் இவைகளை மூல பாஷை மூலமாய் பார்க்கும் பொழுது முந்தின மனிதர் ஒரு அடிமையைப் போல் எஜமானை சேவிக்க வேண்டும் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது எங்களை ரோமரில் சொல்லப்பட்ட பிரகாரம் 12 ஆம் அதிகாரத்தில் ஜீவ பலியாய் ஒப்புக்கொடுப்பதே நாம் செய்யத் தக்க புத்தி உள்ள ஆராதனை ஆதி மனிதனுடைய படைப்பில் மனிதர் ஆராதிக்கவும் அன்பு கூறவும் அவனை ஏதேனில் வைத்தார்
தேவன் நம்மை படைத்த நோக்கமே அவர் ஆராதிக்கவும் அவருடைய அன்பு கூறவும் என்பதை நாம் மறக்கக்கூடாது. அப்படிப்பட்டவர்களாய் நாம் இருக்கும் பொழுது தேவன் நமக்காக அதில் அதில் காலத்தில்
நேத்தியாய் செம்மையாய் செய்கிறார் என்பதை நாம் மறந்து போகக்கூடாது
அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.
எரேமியா 5:24
அவரைத் துதித்து அவர் செய்த உபகாரங்களுக்காக நன்றி சொல்லி வாழ்கின்ற வாழ்க்கை தேவ பயத்துக்கு சமனானது
துதித்தலே இன்பமானது துதிகளை ஏறெடுக்கும் மனிதனுடைய இருதயம் உணர்வு உள்ளதாய் எப்பொழுதும் காணப்படுகின்றது துதிக்கிற மனிதன் தன்னுடைய இருதயத்தை இருளடையாமல் பாதுகாக்கின்றான் முழங்காலில் நின்று கைகளை உயர்த்தி தேவனை மகிமைப்படுத்தும் பொழுது அத் துதிகள் மத்தியிலே கர்த்தர் வாசம் பண்ணுகிறார் துதித்தல் நம்முடைய வாழ்க்கையின் மிகவும் அவசியம் என்பதை உணர வேண்டும்
--------------------------
வார்த்தையின் தியானம்
அதிகாலமே சென்று தங்களுக்கு வேண்டிய மன்னாவை அவர்கள் சேகரித்துக் கொள்ள வேண்டும் அதிகாலமே இந்த மன்னாவை சேகரித்தல் என்பது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் அவருடைய நியமங்களுக்கும் நாம் கீழ்ப்படிகின்ற காரியமாய் அமைகின்றது. ஆமென் இந்த செயலின் மூலமாய் கர்த்தரே அவர்களை சோதித்து அறிகிறார் இந்த மன்னா கர்த்தருடைய மகிமை வெளிப்படும் பொழுது அவைகள் வனாந்தரத்தில் வருஷிக்கப் பண்ணப்படுகிறது தேவனுடைய மகிமை வெளிப்படும் பொழுது இந்த மண்ணாவும் அவைகளோடு வனாந்தரத்தில் வர்ஷிகா பண்ணப்பட்டதாக நாம் வேதத்தில் காண்கின்றோம் தேவனுடைய மகிமையே காணும்படி நாம் தேவனை விசுவாசிக்க வேண்டும் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது "விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்" அதிகாலையில் நாம் தேவனுடைய வார்த்தையை தியானிப்பதும், வார்த்தையின் மூலமாய் வெளிப்பாட்டை பெற்றுக் கொள்வதும், தேவனுடைய வார்த்தையாகிய வேத புத்தகத்தை நாம் ஆசித்து நேசித்து வாசித்து யோசித்து நமது வாழ்க்கையோடு இணைபிரியாத ஒன்றாக இணைத்து வாழ்வது எவ்வளவு வல்லமை நிறைந்த வாழ்வாக நமக்கு அமைகிறது வாழ்க்கையில் ஒரு ஜெயகருமான வாழ்வாக வெற்றியின் காரியமாய் அமைகின்றது. "இதுவே நம்மிடத்தில் இருந்து எடுபடாத நல்ல பங்கா நமது ஜீவியத்தில் அமைகிறது" அன்று மாத்தாள்ளுடைய வீட்டில் அதிக வேலைகள் காணப்பட்டது அவள் ஆண்டவரை பராமரிக்க வேண்டும் என்ற சிந்தையோடும் பல யோசனை நிறைந்தவளாய் மிகக் கவலையோடு அவள் பல வேலைகளை செய்து வந்தால், ஆண்டவர் கூறினார் தேவையானது ஒன்றே
ஆனாலும் மரியாளோ!!, எல்லாவற்றையும் விட்டு இயேசுவின் பாதத்தில் அமர்ந்தால் அவள் தன்னிடத்தில் இருந்து எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள் என்று நம்முடைய ஆண்டவரும் ரட்சகர்மாகிய இயேசு அன்று குறித்து கூறினார்
அதுபோல நமது வாழ்வில் ஆயிரம் வேலைகள் தனது வீட்டில் காணப்பட்டாலும் மாத்தாள் போல கலங்காமல் இயேசு வரும் பொழுது அவருடைய பாதத்தில் அமர்ந்திருந்து அவருடைய ஆலோசனைக்காக நாமும் காத்திருந்தாள் நம்மையும் ஆண்டவர் ஆகிய இயேசு கிறிஸ்து பார்த்து நல்ல பங்காகிய அவருடைய பாதத்தை நாம் தெரிந்து கொண்டோம் என்று சொல்வார் அல்லவா நமது வாழ்க்கையில் தேவையானது ஒன்றே உங்களுடைய வாழ்க்கையில் அநேக விஷயங்கள் அநேக தேவைகள் அநேக பிரச்சினைகளுக்கு நாங்கள் முகம் கொடுத்தாலும் அதிகாலையில் கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்து அவருடைய வார்த்தையை வாசித்து தியானம் பண்ணும் பொழுது அவருடைய மெல்லிய சத்தம் எங்கள் வாழ்க்கையை பிரகாசிக்க பண்ணும் அல்லவா தியானிப்பதும் வார்த்தையை வாசிப்பதும் அவருடைய சத்தத்துக்கு செவி கொடுப்பதும் நம்முடைய ஜீவியத்தில் மிகவும் முக்கியமானது ஒன்று என்பதை நாம் மறக்கக்கூடாது
"இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்."
உபாகமம் 28:1,2 உண்மையாய் அவருடைய சத்தத்துக்கு நாம் செவி கொடுக்கும் பொழுது அவர் நம்மை ஆசீர்வதிப்பேன் என்று ஆண்டவர் வாக்கு கொடுத்திருக்கிறார் 4 அவர் பிரதியுத்தரமாக:" மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 4:4
கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று வேதம் சொல்லுகிறபடியால் இந்த ஆவிக்குரிய ஜீவியத்திற்கு தேவையான பிழைப்புக்குரிய வார்த்தைகள் கர்த்தருடைய வாயிலிருந்து புறப்பட்டு நமக்கு ஆகாரமாய் வெளிப்பட வேண்டும் அதாவது ஆவியானவரின் வெளிப்பாட்டின் மூலமாய் கிடைக்கும் ஆலோசனை வழிநடத்தல் தேவ நோக்கத்தை பற்றி நாம் புரிந்து கொண்டு ஒரு தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்தல் அவருடைய அறிவினால் அவரை அறிகிற அறிவு நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கின்ற தேவனுடைய வார்த்தையே அவருடைய மெல்லிய சத்தமாகும் இச்சத்தத்தை புரிந்து கொள்ள நம்மை தகுதி உள்ளவர்களாய் நாம் அதிகாலமே மாற்ற வேண்டும் தேவனுடைய சத்தத்தை கேட்பதற்குரிய செவி நம்மில் நாமே உருவாக்காவிட்டால் அவருடைய சத்தத்தை சித்தத்தை நாம் அறிந்து கொள்ள முடியாது நமது ஆவியோடு ஆவியானவரின் வெளிப்பாட்டில் மூலமாய் தேவனுடைய வார்த்தை ஆகிய எழுத்து வடிவில் இருக்கும் வார்த்தை வெளிப்பாட்டாய் மாறும் பொழுது அவைகளே அவருடைய சத்தமாகும் சத்தம் கேட்டு சித்தம் செய்ய வேண்டும் என்றால் ஆவியானவருடைய மெல்லிய சத்தம் நமது வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டியிருக்கிறது அதற்குரிய செவிகள் நமது வாழ்க்கையில் மிகவும் அவசியமானது ஒன்று. இன்று காது இருந்தும் கேளாதவர்கள் போல் அனேகர் ஜீவிக்கிறார்கள் ஆவியானவரின் ஒரு அவ்விசுவாசம் தேவனுடைய சத்தத்தை கேட்க முடியாது விசுவாசம் அற்றவர்கள் அதிகாலையில் கர்த்தருடைய வார்த்தையை தியானிக்க மாட்டார்கள் அதிகாலையில் கர்த்தருடைய வார்த்தையை தியானிப்பது நம்முடைய விசுவாச ஜீவியத்திற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை நாம் நன்றாய் புரிந்து கொள்ள வேண்டும் அதிகாலை வேதத்தை வாசிக்கிறவன் அவன் தேவனுக்கு பயந்தவன் மாத்திரமல்ல தேவனே நம்பி சார்ந்து ஜீவிப்பவன்னாவான் ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் வேத வசனங்களுக்கு வேத வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்கிறவனாய் இருந்தால் அவன் தன்னுடைய விசுவாச ஜீவியத்தில் பெலப்பட்டவன் விசுவாச ஜீவியத்திற்கு உட்பட்டவன் வேதத்திற்கு தன்னுடைய வாழ்க்கையில் முக்கிய இடத்தை கொடுக்கிற மனிதனாக விளங்குவார் அவனுடைய வாழ்க்கையில் வேதம் முக்கிய படுத்தப்பட்டு இருக்கும் என்பது உண்மையே அவனுடைய அவனுடைய விசுவாச ஜீவியமானது தேவ வார்த்தையோடு பின்னிப் பிணைந்து இருக்கும் நம்முடைய விசுவாசமானது தேவனுடைய வார்த்தையின் மூலமாய் வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் விசுவாசமோ தேவனுடைய வார்த்தையின் மூலமாய் வருகிறது
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலேவரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
ரோமர் 10:17
நமது விசுவாசத்திற்கு கர்த்தருடைய வார்த்தை மிகவும் அவசியம்
நமது விசுவாசம் கர்த்தருடைய வார்த்தையும் ஒன்றே அத்தோடு
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
எபிரேயர் 11:6
விசுவாசம் இல்லாமல் அவருக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்று நாம் கர்த்தருடைய வார்த்தையை சத்தத்தை கவனமாய் கேட்கும் பொழுது அவர் தம்முடைய வார்த்தைகளை அனுப்பி நம்மை குணமாக்குகிறார்
கர்த்தருடைய வார்த்தையின் வல்லமைக்குள்ளே சரீர சுகம்
அடங்கியிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் அன்றைக்கு தேவனுடைய மகிமை வந்த பொழுது வார்த்தையாகிய மன்னா வனாந்தரம் முழுவதும் பரவியிருந்தது
அந்த மன்னாவைப் புசித்தவர்கள் உடைய சரீரம் காண்டாமிருகத்துக் கொத்த பலன் அவர்களுக்கு காணப்பட்டது
உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,
உபாகமம் 8:16
இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.
உபாகமம் 8:4
கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன், உங்கள்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.
உபாகமம் 29:5
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார், காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.
எண்ணாகமம் 23:22
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்,; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு, அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள்.
எண்ணாகமம் 24:8
அவ்வளவு பெலசாலிகளாய் அவர்கள் காணப்பட்டார்கள் ஆனால் மன்னாவை பொசிக்காதவர்களோ வழிகளில் மனம் அடைந்து போனார்கள் பாதைகள் எதிராக கடினமாக வரும் பொழுது பெலன் இல்லாதவர்கள் சோர்ந்து போனார்கள் புசிக்க தவறியவர்கள் முறுமுறுத்தார்கள் புசித்தவர்களுக்கு காண்டாமிருகத்துக் கொத்த பலன் காணப்பட்டது மன்னாவை புசிக்க தவறியவர்கள் நடந்த கெடியை பாருங்கள்.... சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள், வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.
எண்ணாகமம் 21:4
அவர்கள் வனாந்தரத்தில் முறுமுறுத்தார்கள் தேவனுக்கு விரோதமான பாவமாய் அது காணப்பட்டது
ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை,; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள்.
எண்ணாகமம் 21:5
அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை அனுப்பினார், அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள் அநேக ஜனங்கள் செத்தார்கள்.
எண்ணாகமம் 21:6
முறுமுறுப்பின் ஆவி நமது வாழ்க்கையில் கிரியை செய்யும் பொழுது தேவப்பிரசன்னத்தை இழந்து அவருடைய மகிமை நம்மை விட்டு அற்றுப் போடுவதற்கு ஏதுவாக நம்முடன் நிலைகள் மாறும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் சாபம் கிரியை செய்ய ஆரம்பித்து விடுகிறது சர்ப்பம் பிரவேசித்து விடுகிறது
அவருடைய மகிமையான சமூகத்தை நாம் இழந்தவர்களாய் போய்விடுகிறோம் அப்பொழுது நமது பாதுகாப்பின் வேலி அற்றவர்களாய் நமது வாழ்க்கையில் சத்துரு பிரவேசித்து புகுந்து விளையாடுவதற்கு ஏதுவாய் நாமே நமது பாதுகாப்பை இழந்து விடுகிறோம் அதிகாலையில் எழுந்து மன்னாவை புசிக்க மறக்கும் பொழுது யானை தனது தலையில் மண்ணை வாரி கொள்வது போல் நாம் நமது தலையில் மண்ணை வாரிக் போட்டு விடுவோம் இவைகளே தேவனுடைய மகிமையால் நிறைந்து நாம் ஜீவிக்கும் ஜீவியம் ஆகும்
அவர்கள் அந்த மன்னாவை சேகரிக்காவிட்டால் இப்படி அதிகாலையில் கர்த்தருடைய வார்த்தையை நாம் தியானிக்கவும் வாசிக்கவும் மறக்கும் பொழுது எங்களுடைய வாழ்க்கை தொடர்ச்சியாக முறுமுறுப்பு அதிகமாக இருக்கும்
நாளைய தினம் கர்த்தருடைய மகிமையை காண்பீர்கள்
அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
யாத்திராகமம் 16:2
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன். ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.
யாத்திராகமம் 16:4
விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள். கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார். நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.
யாத்திராகமம் 16:7
10 ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திருப்பிப்பார்த்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
யாத்திராகமம் 16:10
கர்த்தருடைய மகிமையினால் நாம் திருப்தியாக்கப்படாவிட்டால் நமது வாழ்க்கையில் அதிகமாக முறுமுறுப்பு பெருகும் அதிகாலமே சென்று அவருடைய வார்த்தையில் சத்தத்தை கேட்டு நாம் தேவனுடைய வாய் வார்த்தையினால் பிழைக்கும் பொழுது நம்முடைய ஜீவியம் மகிமை நிறைந்ததாய் மாறுகின்றது அப்படி அதிகாலமே கர்த்தருடைய சமூகத்துக்கு செல்லாமல் நமது மாம்சம் விரும்பினபடி உறக்கத்திற்கு இடம் கொடுத்து தேவ சமூகத்துக்கு அன்னியராய் இருப்போமானால் அதிகமாக முறுமுறுப்பு நிறைந்த மனிதராய் ஒருவருக்கொருவர் விரோதமாய் எழும்பி தேவனுடைய விரோதத்தை சம்பாதிக்கிறவர்களாக நாம் மாறி விடுவோம் தேவனுடைய கிருபையை இழந்து விடுவோம் கசப்பு வைராக்கிய நமது வாழ்க்கையில் கிரியை செய்ய ஆரம்பித்து விடும் புறம் கூறுபவர்களாய் அவதூறு பண்புள்ளாய் தேவ பகைஞ்ஞராய் நம்முடைய ஜீவியம் ஒரு நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். நாளுக்கு நாள் தேவனை அறிகிற அறிவு நம்மிடம் வாழ்க்கையில் பெருக வேண்டும் இந்த மனதை உடையவர்களாய் நாம் இந்த பூமியில் வாழ வேண்டும் என்று தேவன் நிர்ணயம் இருக்கிறது என்பதை நாம் நினைத்து கர்த்தருடைய வார்த்தைக்கு நித்தமும் செவி கொடுத்து
அவருடைய சத்தத்தை கவனமாய் கேட்டு அவருடைய பார்வைக்கு செம்மையானவைகளை செய்து அவர்கள் நியமம் யாவை கைகொண்டு நாம் வாழும் பொழுது ஆண்டவர் நமக்கு பரிகாரி ஆகிய கர்த்தராய் நமக்கு வருவது எவ்வளவு சத்தியம் ச
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள், நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன், நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்.
ஓசியா 4:6
வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
நீதிமொழிகள் 28:9
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது: செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
நீதிமொழிகள் 15:8
துன்மார்க்கருடைய பலி தேவனுக்கு அருவருப்பானது நம்மை நாமே ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.
பலி செலுத்துவது என்பதும் கர்த்தரை சேவிப்பது என்பது நம்முடைய ஜீவியத்திலே ஒன்றான காரியம் தேவனுக்கு செலுத்தப்படும் பலிகள் யாவும் தேவ நியமத்திற்கு பிரமாணத்துக்கு ஏற்ற பிரகாரம் அமைய வேண்டும். அதுபோல நான் பலியாக ஜீவிக்கிற ஜீவியம் தேவன் நியமத்துக்கும் அவருடைய வார்த்தைக்கும் ஏற்றதாக அமைந்திருக்க இருக்க வேண்டும்
நாம் அவருடைய சமூகத்தில் செய்யும் ஜெபங்களா இருக்கலாம், நாம் அவரை துதித்தலா இருக்கலாம், நமது ஜீவியத்தில் தேவ வார்த்தைக்கு ஏற்ற பிரகாரம் அமைய வேண்டும் என்பது ஜதார்த்தமே
தேவனை ஸ்தோத்தரித்தல் ஜெபித்தல் வேதத்தை தியானித்தல் இவை மூன்றும்
அதிகாலையில் நாம் தேவனை கனப்படுத்தும்படி நமது ஜீவியத்தில் காணப்பட வேண்டிய உண்மையான கிறிஸ்தவ ஜீவியமாய் இவை அமைய வேண்டியிருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
பாஸ்டர் சம்பத் ஜெயக்குமார் HPA church kahawatta Sri Lanka