02/06/2026
#எச்சரிக்கை!
உண்மை நிலை என்னவென்று தெளிவாகத் தெரியாமல், ஒரு செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே அதனைப் பரப்புவது சமூகத்தில் பெரும் குழப்பங்களுக்கும், தனிமனிதர்களின் மானம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும். இதனை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
#அல்குர்ஆனின் #எச்சரிக்கை
ஒரு செய்தியைக் கேள்விப்படும்போது, அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது என்று அல்குர்ஆன் கட்டளையிடுகிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ
1-"நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதை நீங்கள் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையெனில்) அறியாமையினால் ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம்; பின்னர் நீங்கள் செய்தவற்றுக்காகக் கைசேதப்படுபவர்களாக (வருத்தப்படுபவர்களாக) ஆகிவிடுவீர்கள்."
( ஸூரத்துல் ஹுஜுராத்: 6)
2. #நபிகளார் ( #ஸல்) #அவர்களின் எச்சரிக்கை
கேட்டதையெல்லாம் அப்படியே பரப்புவது ஒரு மனிதனைப் பொய்யனாக ஆக்குவதற்குப் போதுமானது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
"ஒரு மனிதன் தான் கேட்டவற்றையெல்லாம் (பிறருக்குப்) பேசுவதே ( #பரப்புவதே) அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்."
(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்: 5
தீர விசாரிக்காமல் செய்திகளைப் பரப்புவதின் விபரீதங்கள்
சமூகப் பிளவை ஏற்படுத்தி தவறான செய்திகள் குடும்பங்களுக்குள்ளும், சமூக அமைப்புகளுக்குள்ளும் தேவையற்ற பகையையும் பிரிவினையையும் உண்டாக்குகின்றன.
அப்பாவிகள் பாதிக்கப்படல்: உண்மை தெரியாமல் ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பும்போது, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தீராத மன உளைச்சலும் அவமானமும் ஏற்படுகிறது.
நாம் பரப்பும் ஒரு பொய் செய்தி, பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடையும் போது, அத்தனை பேருடைய பாவச் சுமையும் அதைப் பரப்பியவரையே சாரும்.
நனக்கு தெளிவாக தெரியாததை ஆதாரத்துடன் அணுகாமல் பேசினால் பரப்பினால் நமது உடல் உறுப்பிடம் அல்லாஹ் விசாரிப்பான் என்பதையும் பயந்து கொள்வோம்.
وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا
எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
(ஸுரா பணீஇஸ்ராயீல்:36)
முக்கியமாக இன்றைய சமூக ஊடக (Social Media) யுகத்தில், ஒரு செய்தியை 'Share' அல்லது 'Forward' செய்வதற்கு முன்னால், அது உண்மையானதுதானா? அதை பரப்புவதால் நன்மை ஏதும் உண்டா? என்பதைச் சிந்திப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
என்பதை உணர்ந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.
✍🏻ஷாபி ஸஃதி
புத்தளம்.
2026/6/2