Grand Mosque Puttalam

Grand Mosque Puttalam This is the official page of Puttalam Mohideen Jumma Masjid (Puttalam Grand Mosque), the Premier Institution for societal leadership in Puttalam.

https://m.facebook.com/story.php?story_fbid=1377454031226605&id=100068860644359&mibextid=Nif5oz
13/08/2026

https://m.facebook.com/story.php?story_fbid=1377454031226605&id=100068860644359&mibextid=Nif5oz

தற்போது நாடுபூராகவும் பரீட்சை நிலையங்களில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருப்பதனை கவனத்தில் கொண்டு ஜும்'ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளல் மற்றும் ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக

To: All Mosque Trustees / Person-in-Charge

Subject: Shortening the Jummah Prayer Duration and the Use of Loudspeakers

With reference to the above subject, please be kindly informed that the G.C.E. Advanced Level Examination is currently being conducted at examination centers island-wide.

* Taking into consideration the convenience and welfare of Muslim students appearing for this examination, as well as the exam supervisors and officials, you are kindly requested to shorten the duration of the Friday sermon (Khutbah) on examination days—specifically August 14, 21, 28, and September 04—and conclude the entire Jummah prayer, including the sermon, before 12:45 PM.

Furthermore, for all mosques situated near examination centers, you are kindly urged to minimize the use of external loudspeakers during exam hours. Where possible, please utilize internal loudspeakers only within the mosque premises.

Your wholehearted cooperation in this regard, as well as the support of the Khateebs and Muezzins, is kindly requested.
Your assistance and co-operation in this matter are greatly appreciated.

M.S.M. Nawas
Director
Department of Muslim Religious and Cultural Affairs

08/08/2026

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2026

அன்பான மாணவச் செல்வங்களே,
நம்பிக்கையுடனும், தைரியத்துடனும், மன அமைதியுடனும் பரீட்சையை எதிர்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு கேள்வியையும் கவனமாக வாசித்து, உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு அறிவு, ஞானம் மற்றும் சிறந்த வெற்றியை வழங்குவானாக! ஆமீன்.

🕌 முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித் - பெரிய பள்ளி - புத்தளம்.

BEST WISHES – GRADE 5 SCHOLARSHIP EXAMINATION 2026

Dear Children,

Face your examination with confidence, courage and a calm heart.

Read carefully, do your very best, and place your trust in Allah.

May Allah bless you with knowledge, wisdom and success. Aameen!

🕌 Muhaideen Jumma Masjid (Grand Mosque) – Puttalam

08/08/2026
புத்தளம் பெரியபள்ளியின் Quran Academy for Adults ஊடாக நடத்தப்படும் வளர்ந்தவர்களுக்கான கிராஅத் பயிற்சி நெறி அல்லாஹ்வின் ப...
23/07/2026

புத்தளம் பெரியபள்ளியின் Quran Academy for Adults ஊடாக நடத்தப்படும் வளர்ந்தவர்களுக்கான கிராஅத் பயிற்சி நெறி அல்லாஹ்வின் பேரருளினால் வெற்றிகரமாக நடைபெறுகின்றது, அல்ஹம்துலில்லாஹ்

வயது 28 முதல் 69 வரையான ஓய்வு நிலை அரச ஊழியர் - கடை சிப்பந்தி - சுய தொழில், தொழிலாளி என வித்தியசமான தொழில் துறைகளைச் சேர்ந்த வாலிபர்களும் மூத்துதோர்களும் புனித குர்ஆனை ‘தர்தீல்’ அச்சரம் - ஓசை - ஒழுங்கு - அமைப்பு பிசகாமல் ஓதும் பயிற்சி வகுப்பில் தொடராக கலந்துகொண்டு புனித குர்ஆனை தஜ்வீத் முறைப்படி இனிமையாக ஓதும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இலங்கையின் பிரபல காரி அல்முஜாஸ் அல்ஹாபிழ் எம். ஹக்கீம் முஹம்மத் இர்பான் (காரி) அவர்கள் இப்பயில் நெறியை வடிவமைத்து பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.

கடந்த 22.04.2026 (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட இக் கிராஅத் பயிற்சி நெறி புதன்கிழமைகளில் இஷா தொழுகையின் பின்னர் (8.30 முதல்) நடைபெறுகின்றது.

இப்பயிற்சி நெறியில் இணைந்து புனித குர்ஆனை தர்தீலாக ஓதுவதற்கு விரும்பும் வாலிபர்கள், மூத்துதோர்களும் புத்தளம் பெரியபள்ளி அலுவலகத்தில் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் "இன்ஷா அல்லாஹ்"

Photos: Hisham Hussain

2026.07.14புத்தளம் நகர் மத்தியில் நினைவு தூபிக்கான மண் பரிசோதனைபுனித அல்குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகள் நிறைவை நினைவுக...
14/07/2026

2026.07.14

புத்தளம் நகர் மத்தியில் நினைவு தூபிக்கான மண் பரிசோதனை

புனித அல்குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகள் நிறைவை நினைவுகூறும் முகமாக புத்தளம் நகர் மத்தியில் 1970 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அல்குர்ஆன் நினைவு தூபி (கடந்த மே மாதம்) அகற்றப்பட்டு அதே இடத்தில் உத்தேச புதிய தூபியை நிருமானிக்கும் பணிகள் அரம்பமாகியுள்ளன, அல்ஹம்துலில்லாஹ்.

உத்தேச தூபியானது சுமார் 80 அடி உயரமுள்ளதாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தூபி அமையப்பெறும் நிலம் அத்தூபி(யின் அழுத்தச் சுமை)க்கு ஏற்புடையதா என்பதை பரிசோதிக்கும் மண் பரிசோதனை (Soil Test) இன்று 2026.07.14 ஆம் திகதி காலை முதல் நடைபெற்றது.

இம் மண் பரிசோதனையில் கிடைக்கும் பெறுபேறுகளுக்கு அமைவாக உத்தேச தூபியின் அத்திவாரம் அமைக்க வேண்டிய விதம், தூபிக்காக பயன்படுத்தும் கொன்கிறீட் (சிமெந்து + கம்பி) வகை உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்டிட நிருமானத்தின் தன்மையை தீர்மானிக்கும் அடிப்டையான பரிசோதனையாகும்.

இன்ஷா அல்லாஹ், உத்தேச அல் குர்ஆன் நினைவு தூபியானது குறிப்பாக புத்தளத்துக்கும் பொதுவாக இலங்கைக்கும் அழகு சேர்க்கும் கலைநயமிக்க வரலாற்றுப் படிமமாகத் திகழும் என்பது உறுதி.

இத்திட்டத்திற்கான ஆரம்ப செலவீனங்கள் புத்தளத்தில் இரு பெருநாட்களில் மைதான தொழுகைகளை நடாத்தி வரும் புத்தளம் இஸ்லாமிய கலாச்சார நலன்புரிச்சங்கம் பொறுப்பேற்றுள்ளதோடு பொது மக்களின் உதவிகளை தொடர்ந்தும் எதிர் பார்க்கிறோம்.

22/05/2026

தித்வா அனர்த்த நிவாரண கணக்கு விபரங்களில் ஏற்பட்ட சர்ச்சையான குரல் பதிவு தொடர்பில் சகோதரர் சதாம் திக்ரான் மற்றும் முக்கூட்டு தலைமையின் விஷேட கலந்துரையாடல் 2026.05.21 அன்று இடம்பெற்றதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கை.

பிரதி பொலிஸ் மாஅதிபர் புத்தளம் பெரியபள்ளி விஜயம்வடமேற்கு புத்தளம் மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) பிரியந்த ச...
21/05/2026

பிரதி பொலிஸ் மாஅதிபர் புத்தளம் பெரியபள்ளி விஜயம்

வடமேற்கு புத்தளம் மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) பிரியந்த சந்திரசிரி 2026.05.20 ஆம் திகதி புத்தளம் பெரியபள்ளிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

புத்தளம் மாநகரம் ஒரு வர்த்தக மையம் என்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரமாக கலந்துரையாடியதோடு போதை வஸ்து விற்பனை பாவனை உட்பட சமூக விரோத சட்ட விரோத குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்தார்.

இச்சந்திப்புக்கு புத்தளம் பெரியபள்ளி நிர்வாக சபையின் தலைவர் ஏ.டி.எம். நிஜாம், செயலாளர் ஏ.ஏ. அஸீம் மற்றும் நிர்வாகிகளும், புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கம் (PUTWA) தலைவர் எஸ்.எச்.எம். ஜப்ரிஸ், மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் அமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் பின்னர் பெரியபள்ளியின் உட்புற கட்டுமானங்களையும் கோபுர கடிகாரத்தையும் பார்வையிட்ட பி.பொ.மாஅதிபர் பிரியந்த மகிழ்ச்சியையும் பூரிப்பையும் தெரிவித்தார்.

නියෝජ්‍ය පොලිස්පතිතුමාගේ පුත්තලම මුස්ලිම් මහ පල්ලිය සංචාරය

වයඹ පුත්තලම දිසා නියෝජ්‍ය පොලිස්පති ප්‍රියන්ත චන්ද්‍රසිරි මහතා 2026.05.20 වැනිදා පුුත්තලම මුස්ලිම් මහ පල්ලියට නිල සංචාරයක නිරතවූවා.

පුත්තලම නගරය වාණිජ්‍ය මධ්‍යස්ථානයක් ලෙස එහි ආරක්ෂාව පිළිබඳව විස්තරාත්මකව සාකච්ඡා වූ අතර මත්ද්‍රව්‍ය ජාවාරම හා භාවිතය ඇතුළු සමාජ විරෝධී නීති විරෝධී අපරාධ වැරුදි පාලනය කිරීම අදාලවත් කරුණු දැක්වූවා.

මෙම හමුවට පුත්තලම මුස්ලිම් මහ පල්ලියේ භාරකාර මණ්ඩලයේ සභාපති ඒ.ටී.එම්. නිජාම් ලේකම් ඒ.ඒ. අසීම් සහ නිලධාරින්ද පුත්තලම එක්සත් වාණිජ සුබසාධන සංගමයේ සභාපති එස්.එච්.එම්. ජෆ්රිස් සහ මදුරන්කුලිය වෙළඳ සංගමයේ සභාපති අමාන් ආදිහු සහභාගි වූවා.

සාකච්ඡාවෙන් අනතුරුව නි.පො.ප. ප්‍රියන්ත මහතා මහ පල්ලියේ දේශන පීඨිකාව ඉපැරණි යාන්ත්‍රික ඔරලෝසුව ආදිය නැරඹූවා.

கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு சமைத்த உணவுகள் (2026.05.13) வழங்கி வைக்கப்பட்...
18/05/2026

கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு சமைத்த உணவுகள் (2026.05.13) வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை புத்தளம் பெரிய பள்ளி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் மாநகர சபை மற்றும் புத்தளம் வர்த்தக சங்கம் போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் தொண்டர் அமைப்புக்களின் உதவியுடன் இடம்பெற்றது. இவ்வுதவித்திட்டத்துக்கு நிதி உதவி மற்றும் பொருள் உதவிகளை வழங்கியதோடு சமையல் ஏற்பாடுகள் மற்றும் விநியோகங்களில் ஈடுபட்ட சகலருக்கும் ஜஸாகுமுல்லாஹு கைரா.

கடந்த காலங்களில் புத்தளம் பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து உதவிகளை பெற்று பொது மக்களுக்கு வழங்குவதில் துறைசார்ந்தவர்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் தொண்டர்கள், மஸ்ஜித் நிர்வாகங்கள் உட்பட சகலரும் ஒன்றிணைந்து முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தமையையும் நினைவூட்டுவதோடு சகலருக்கும் அல்லாஹ் தஆலா உடல் ஆரோக்கியத்தை வழங்குவானாக!

13/05/2026

2026.05.13

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று (2026.05.13) இரவைக்கான சமைத்த உணவுகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை புத்தளம் பெரிய பள்ளி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் மாநகர சபை மற்றும் புத்தளம் வர்த்தக சங்கம் போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் தொண்டர் அமைப்புக்களின் உதவியுடன் விஷேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வேலை திட்டத்துக்கு பொது மக்களிடமிருந்து சகல ஒத்துழைப்புக்களையும் எதிர்பாக்கிறோம்.
நன்கொடைகளுக்கு:

Mohideen Jumma Mosque
001-0001152-003
Amana Bank – Puttalam Branch

Address

Mannar Road
Puttalam
61300

Telephone

+94322267451

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grand Mosque Puttalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Grand Mosque Puttalam:

Shortcuts

Share

Category