Hindu youth Association Ettalai

Hindu youth Association Ettalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hindu youth Association Ettalai, Puttalam.

திருமூல நாயனார் ;மூலன் என்ற யாதவன் பசுக்களை மேயப்பவன்.ஒரு நாள் பசுக்களை மேயும் போது பாம்புகடித்ததால் உயிரிழந்தான்.அவன் உ...
11/05/2019

திருமூல நாயனார் ;
மூலன் என்ற யாதவன் பசுக்களை மேயப்பவன்.
ஒரு நாள் பசுக்களை மேயும் போது பாம்பு
கடித்ததால் உயிரிழந்தான்.
அவன் உடலை சுற்றி பசுக்கள் கண்ணீர்
வடித்த வண்ணம் நின்றிருந்தன !
இதை கண்ட சுந்தர நாதர் எனும் சிவயோகி
இரக்கம்கொண்டு தான் கற்ற சித்தியோக
வலிமையால் தன் உடம்பை ஓரிடத்தில்
பத்திரமாக வைத்து தன் ஜீவனை மூலன்
உடம்பில் புகவைத்து திருமூலர் ஆனார்.
மூலன் திருமூலராக எழுந்ததை கண்ட பசுக்கள் மகிழ்ச்சி யடைந்து அவரை பின்தொடா்ந்தன !
சிறு காலத்திற்கு பின் சிவயோகி தன் முந்தைய உடலை தேடினார் .
அதை சிவபெருமான் மறைத்து விட்டார்.
திருவாடுதுறையின் கோவிலில் ஒரு அரசமரத்தின கீழ் திருமூலர் யோகாசனம்
செய்ய ஆரம்பித்து யோகத்தில் ஆழ்ந்தார் !
அவர் மூவாயிரம் பாடல்களை பாடி அது திருமந்திரம் என புகழ் பெற்றது !
திருமூலரின் திருமந்திரம் பத்தாம்
திருமுறையாகும் !

11/05/2019
சிவபெருமானின் அவதாரங்கள் “19”! – இது எவரும் அறியா அரிய தகவல்! சிவபெருமானின் 19 அவதாரங்கள்! – இது எவரும் அறிந்திடாத அரிய ...
25/02/2018

சிவபெருமானின் அவதாரங்கள் “19”! – இது எவரும் அறியா அரிய தகவல்! சிவபெருமானின் 19 அவதாரங்கள்! – இது எவரும் அறிந்திடாத அரிய தகவல்! படித்து பக்தியுறுங்கள் விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை ப ற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவ தாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சொல்லப் போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றா ல் கடவுள் வேண்டுமென்றே பூமியி ல் மனிதனாக அவதரிப்பது. மனிதர் களை காப்பாற்ற தீமையை அழிக்க வே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும். சுவாரஸ்யமான வேறு: ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!! சி வபெருமானை பற்றி பார்க்கையில், வெகு சிலருக் கே அவரின் 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெரு மானின் ஒவ்வொரு அவதாரமும் சிறப்பு முக்கியத்து வத்தை கொண்டுள்ளது. அவரின் இந்த 19 அவதாரங் களுக்கும் குறிப்பிட்ட காரணங்கள் இருந்தது. அதன் உட்சபட்ச நோக்கம் மனித இனத்தின் நலனே. அவதாரம் 1 – பிப்லாட் அவதாரம் தாதிச்சி துறவியின் வீட்டில் பிப்லாட்டாக பிறந்தார் சிவபெருமா ன். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே அத்துறவி அவர் வீட்டை விட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியி ல்லாமல் இருந்ததால் தன் தந்தை வீட்டை விட்டு வெளியேறி னார் என்பதை பிப்லாட் வளரும் போது தெரிந்து கொண்டான். அதனால் சனியை பிப்லாட் சபித்து, தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தான். பின்னர் 16 வயது ஆவ தற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிப ந்தனையோடு சனியை மன்னித்தான். அதனால் பிப்லாட் வடிவி லான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. அவதாரம் 2 – நந்தி அவதாரம் நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்ற மாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். மந்தைகளின் பாதுகாவலனாக சிவபெரு மானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது. நான்கு கைகளை கொண்ட காளை யாக அவர் தீட்டப்பட்டுள்ளா ர். கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டா கை கள் ஒன்றாக சேர்த்திருக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் முருகபெருமானுக்கு விரதம் இருந்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்துவாழைமரக்கன்றைதானமாகக் ...
23/02/2018

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள்

முருகபெருமானுக்கு விரதம் இருந்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து
வாழைமரக்கன்றைதானமாகக் கொடுக்கவும் பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக்கொடுக்கவும்
ஒன்பதுசெவ்வாய்க்கிழமைகளில்
முருகன் கோவிலில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ளஏதாவது ஒருதெய்வத்திற்கு
படைத்து பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதையை நகம்
படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் , முருகன் கோவில் விபூதி சிறிது கலந்துகணவன் மனைவி இருவரும் பருகிய பின் ஒன்றுசேர்ந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயமாக கிடைக்கும்.

23/02/2018

எந்த எண்ணத்துடன் கோலம்
போடவேண்டும்?
அதே மாதிரி வீடுகளில் கோலம்
போடுவார்கள். இது சாஸ்திரங்கள்
நமக்காக உருவாக்கிக் கொடுத்த
வழிமுறை. கோலம் எதற்காகப்
போடுகிறார்கள்? பல
புள்ளிகளை வைத்து இணைத்துப்
பார்க்கிறார்கள்.
கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள்
காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப்
புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக்
கொண்டு கோலமிடும் பொழுது, நாம்
எண்ணுகின்ற உணர்வுகள், கோலப்
பொடியில் கலந்து விடுகின்றது.
வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள்.
சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன்,
கோலப்பொடியைக் கையில் எடுத்தோம்
என்றால், அதிலிருக்கும் காந்த
சக்தி நமது வெறுப்பின்
உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.
நாம் நமது வீட்டில்
கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற
எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம்.
ஆனால், மாமியார் மீது வெறுப்பு,
மாமனார் மீது வெறுப்பு, கணவர்
மீது வெறுப்பு என்று மனதில்
வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால்
எப்படியிருக்கும்?
இந்த உணர்வுடன் கோலமிடத்
தொடங்கினால், என்னாகும்?
அது ஒழுங்காக வராது.
அழித்து அழித்துக் கோலம் போட்டுக்
கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக
இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால்,
தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக்
கொண்டே போவார்கள்.
ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்
காக தன் குடும்பத்தின் மீது, பற்றும்
பாசமும் கொள்ளும் பொழுது,
மகிழ்ச்சியான உணர்வின்
தன்மையை உருவாக்கும் ஆற்றல்
வருகின்றது.
குடும்பத்தில் அனைவரும்
ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஒன்று சேர்ந்து வாழவேண்டும்
என்று எண்ணி
கோலப் பொடியை எடுத்து,
புள்ளிகளை வைத்துக் கோலமிடும்
பொழுது, நம்முடைய நிலைகளும்
ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
ஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத
நிலைகள் கொண்டு, அனைவரையும்
அரவணைக்கும் தன்மை வர
வேண்டுமென்ற எண்ணத்தால்,
நமது குடும்பத்தின் மீது பற்றும்
பாசமும் வரவேண்டும்,
இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும்
என்ற உணர்வுகளை எண்ணித்தான்,
இங்கு கோலமிட வேண்டும்.
ஆக, நம் முன்னோரான சித்தபெருமக்கள்
வகுத்த அறிவியல் தத்துவங்கள்
பொய்யல்ல. நாம் தெளிவாக
இதையெல்லாம் தெரிந்து அந்த
ஞானிகள் காட்டிய அருள் வழியில்
மகிழ்ந்து வாழ்வோம்

Address

Puttalam
623

Telephone

0777697874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hindu youth Association Ettalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share