புத்தளம் இந்து மகா சபை

புத்தளம் இந்து மகா சபை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from புத்தளம் இந்து மகா சபை, Religious organisation, 52, Anuradhapura Road,, Puttalam.

23/07/2026
இன்று புத்தளம் இந்து மகா சபை முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் ஆசிரியரால் வழங்கி வைக்கப்பட்டன.
01/07/2026

இன்று புத்தளம் இந்து மகா சபை முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் ஆசிரியரால் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் பத்தினி அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு எமது சபை மண்டபத்தை நோக்கி பத்தினி அம்மன் வருகை தந்த தருணம்
29/06/2026

புத்தளம் பத்தினி அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு எமது சபை மண்டபத்தை நோக்கி பத்தினி அம்மன் வருகை தந்த தருணம்

புதிய ஆசிரியர்கள் எமது அறநெறிப்பாடசாலையுடன் இணைந்து இளைய சமுகத்தை நல்வழிப்படுத்தும் நற்பணியினை ஆரம்பித்த தருணம் 10.05.20...
26/05/2026

புதிய ஆசிரியர்கள் எமது அறநெறிப்பாடசாலையுடன் இணைந்து இளைய சமுகத்தை நல்வழிப்படுத்தும் நற்பணியினை ஆரம்பித்த தருணம் 10.05.2026.

26/05/2026

புத்தளம் இந்து மகா சபையினால் தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட அறநெறிப் பாடசாலை வகுப்புகள் கோவிட் தொற்று காரணமாக இடையில் தடைப்பட்டிருந்தன. 22.07.2022 இல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதனைத் தொடர்ந்து 21.08.2022 முதல் வகுப்புகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்த நிர்வாகத்திற்கு மனப்பூர்வமான பூரண ஆதரவினை அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியரும் ஏனைய ஆசிரியர்களும் பெற்றோரும் வழங்கியிருந்தனர். அன்றைய மீளாரம்ப நிகழ்வில் பொறுப்பாசிரியரும் புத்தளம் இந்து மத்திய கல்லூரி பிரதியதிபருமான திருமதி தர்ஷினி சிவதர்ஷன், புத்தளம் செய்னப் ஆரம்ப பாடசாலை பிரதி அதிபர் திருமதி லோகேஸ்வரி, செல்வி. விதுஷிகா சந்திரசேகரம், செல்வி தர்ஷனா யோகராஜா ஆகியோர் மாணவர்களை நல்வழிப்படுத்தும் மாண்புமிகு பணியில் பங்கெடுத்திருந்தனர்.
சிறந்த தலைமைத்துவ நெறிப்படுத்தலுடனும் அர்ப்பணிப்பான ஆசிரியர்களின் சேவையுடனும் மாணவர்களின் அக்கறையான கற்றல் ஆர்வத்துடனும் பெற்றோரின் முழுமையான ஒத்துழைப்புடனும் அறநெறிப் பாடசாலை மிகச் சிறப்பாகவும் ஒழுக்கமாகவும் நடைபெற்று வருகிறது. திருமதி. லோகேஸ்வரி, செல்வி தர்ஷனா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக இடைப்பட்ட காலத்தில்விலகியிருந்தார்கள். திருமதி மைதிலி அவர்கள் ஆசிரியராக இணைந்து சிறந்த சேவையாற்றி தனிப்பட்ட காரணங்களுக்காக நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். அதேவேளை திருமதி சாந்தினி, திருமதி சிறீபவானி ஆகியோர் ஆசிரியர்களாகவும் செல்வி துஷிதா அவர்கள் உதவி ஆசிரியராகவும் இணைந்து திருமதி. தர்ஷினி சிவதர்ஷனின் வழிகாட்டலுடன் அரும்பணி ஆற்றிவருகிறார்கள். செல்வி.விதுஷிகா ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக இப்பணியில் இணைந்திருப்பதுடன் எமது முன்பள்ளியினையும் பொறுப்பேற்று திருமதி சாந்தினியையும் இணைத்து சிறப்புற நடாத்திவருகிறார். வழமையான வகுப்புகளுக்கு மேலதிகமாக அறநெறி ஆலோசகர் திரு சு மோகன் அவரகளால் கருத்துக்கதை போதனை வகுப்புகளும் பல்துறை விற்பனரான திரு S T.சீலன் அவர்களால் இசைப்பயிற்சி மற்றும்உளநல ஊக்குவிப்பு ( motivation) வகுப்புகளும் அவ்வப்போது நடாத்தப்பட்டு வருகின்றன.
எமது மாணவர்கள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஆக்கத்திறன் போட்டிகளில் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டியிருந்தார்கள்.
மாணவர்களின் திறமைகளை வளர்க்கின்ற அதேசமயம் அவர்களை ஒழுக்க சீலர்களாகவும் உண்மையான சமுக அக்கறை உள்ளவர்களாகவும் உருவாக்கவேண்டும் என்பதில் புத்தளம் இந்து மகா சபை மிகக் கவனமாக செயற்படுகிறது.
இதுவரை காலமும் தனது குடும்ப சுமை, பதவிச்சுமை ஆகியவற்றுக்கு மத்தியில் அறநெறிப் பாடசாலையினை பொறுப்பேற்று மிக நேர்த்தியாக நெறிப்படுத்தி நடாத்திய பொறுப்பாசிரியர் திருமதி தர்ஷினி சிவதர்ஷன் அவர்கள் ஏற்றுக் கொண்ட தனது பொறுப்புகளில் இருந்து சற்று விலகிக் கொள்ள விரும்பினார். அவரது கோரிக்கையை நன்றியுடன் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் அதற்கான மாற்றுவழிகளை புத்தளம் இந்து மத்திய கல்லூரி அதிபரும் எமது சபையின் உப தலைவருமாகிய திரு. P. R. தம்பித்துரையுடன் இணைந்து ஒழுங்கு செய்து தருமாறு அவரையே வேண்டிக்கொண்டது. எமது கோரிக்கையை ஏற்ற அவர்கள் இருவரதும் ஏற்பாட்டில் புத்தளம் இந்து மகா சபை அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியராக எமது அறநெறிப் பாடசாலை பழைய மாணவியாகிய ஆசிரியர் செல்வி பிரணவி வரதராஜன் அவர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசிரியர்களான திருமதிக.நகுலா, திருமதி ஜ. நந்தினி, செல்வி ச.டிசானி ஆகியோரும் முன்வந்துள்ளனர். இளைய சமுகம் சரி பிழை பற்றிய சரியான புரிதல் சம்பந்தமாக குழப்ப நிலையில் இருக்கும் இக் காலகட்டத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே அறம், பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றைப் போதித்து எதிர்கால சந்ததியை காக்கும் நற்பணியில் நம்மோடு கை கோர்க்கும் ஆசிரியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்த அதிபர் திரு.தம்பித்துரை, பிரதி அதிபர் திருமதி. சிவதர்ஷன் ஆகயோருக்கும் சபையின் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்தும் எமது அறநெறிப் பாடசாலை சீராகவும் சிறப்பாகவும் இயங்க அனைவரது ஒத்துழைப்பினையும் நாடுகிறோம்

நேற்று 1.02.2026 ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தினத்தில் எமது அறநெறிப் பாடசாலையினால் தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டத...
02/02/2026

நேற்று 1.02.2026 ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தினத்தில் எமது அறநெறிப் பாடசாலையினால் தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் சைவசமய சம்பிரதாயப்படி புத்தரிசி பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வணங்கி நன்றிகூறி அனைவரும் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர். இதனை சிறப்பாக ஒழுங்கமைத்த பொறுப்பாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் சபையின் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் உரித்தாகுக. அத்துடன் சபையின் முன்னாள் தலைவரும் புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபருமான திரு மா. நாகராஜா, எமது அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியரும் புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் பிரதி அதிபருமாகிய திருமதி தர்ஷினி சிவதர்சன் ஆகியோரால் குழந்தைகளுக்கு வித்தியாரம்ப நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன. குழந்தைகளில் ஒருவராகிய செல்வன். நிரோஷன் கிறிஷ் அவர்கள் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பிஸ்கட், பால் போன்றவற்றையும் சபை வளர்ச்சிக்காக ரூபாய் 20000/- நன்கொடையினையும் வழங்கியிருந்தார். அவரது குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதுடன் தமது முதற்கல்வியினை கற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் கல்விமான்களாகவும் ஒழுக்கசீலர்களாகவும் திகழ புத்தளம் இந்து மகா சபை மனமார வாழ்த்துகிறது.

19.12.2026 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற புத்தளம் இந்து மகா சபை முன்பள்ளி ஒன்றுகூடல் ( Annual Concert) நிகழ்வின் மேலும் சி...
09/01/2026

19.12.2026 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற புத்தளம் இந்து மகா சபை முன்பள்ளி ஒன்றுகூடல் ( Annual Concert) நிகழ்வின் மேலும் சில முக்கிய காட்சிகள்.

08/01/2026

புத்தளம் இந்து மகா சபை முன்பள்ளியின் 2025ம் ஆண்டிற்கான கல்விச் செயற்பாடுகள் சென்ற 19.12.2025 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வுடன் நிறைவுற்றது. அன்றைய நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் முன்பள்ளியின் நிர்வாக ஆலோசகர் திருமதி. தர்ஷினி சிவதர்சன் ஆகியோருடன் பெற்றோர்,சபையின் நடப்பு நிர்வாக உறுப்பினர்கள், முன்னாள் முன்னிலை அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சிறுவர்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் பல மேடை நிகழ்வுகளை நிகழ்த்தி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். பிரமாதமாக பிள்ளைகளைத் தயார்படுத்திய ஆசிரியர்களுக்கு சபையின் மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக. முன்பள்ளியின் செயற்பாடுகளால் மனம் மகிழ்வுற்ற சபையின் முன்னாள் செயலாளர்களில் ஒருவராகிய திரு. க. தேவேந்திரன் அவர்கள் முன்பள்ளியின் வளர்ச்சிக்காக 2026ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை பணத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கான தனது விருப்பத்தினைத் தெரிவித்தார். சபை நிர்வாகம் நன்றியுடன் அவரது விருப்பினை விரும்பி ஏற்றுக்கொண்டது. பொது மக்களிடமிருந்து சுயவிருப்புடன் கிடைக்கின்ற இது போன்ற ஆதரவு எமக்கு புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கின்றது. எமது முன்பள்ளியினை மேலும் முன்னேற்ற அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பினை நாடுகிறோம். 2026ம் ஆண்டிற்கான கல்விச் செயற்பாடுகள் 9.01.2026 வெள்ளிக்கிழமையன்று ஆரம்பமாகின்றன.

புத்தளம் நகரை அண்மித்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உடனடி உதவிக்காக காத்திருந்த வேளையில் எங்கள் கோரிக்கையினை ஏற்ற...
12/12/2025

புத்தளம் நகரை அண்மித்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உடனடி உதவிக்காக காத்திருந்த வேளையில் எங்கள் கோரிக்கையினை ஏற்று அந்த மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக அகில இலங்கை இந்து மாமன்றத்தினர் ஒரு லட்சம் ரூபாய் நிதியினை எம்மிடம் கையளித்திருந்தார்கள். அந்த நிதியுதவியுடன் எமது சபையும் எம்மோடு புத்தளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் மற்றும் இந்து அமைப்புகள்,கொடையாளர் ஆகியோரும் இணைந்து 11.12.25 வியாழக்கிழமையன்று சேகுவந்தீவு சிறீ முருகன் ஆலய முன்றலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பயனாளிகளை அடையாளும் காணும் பணியை முறையாகச் செய்வதற்காக சேகுவந்தீவு ஆலய நிர்வாக சபை தலைவர் திரு.க. சிந்துஜன், செயலாளர் திருசிறீகாந்த் ஆகியோர் நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்பட்டார்கள். ஒவ்வொன்றும் ரூபாய் 3200/- கொள்வனவு பெறுமதியான பொதிகள் 86 குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. நிகழ்வில் புத்தளம் இந்து மகா சபை சார்பாக அதன் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உபசெயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏனைய அறப் பணிப்பங்காளர்களாகிய இந்து அமைப்புகள் சார்பாகவும் பலர் பங்குபற்றினர். பயனாளிகளின் சுயகௌரவத்திற்கு மதிப்பளிக்கும் நோக்கில் பொதிவழங்கும் நிகழ்வின் நிழற்படங்கள் எதுவும் பகிரப்படவில்லை. ஆயினும் நிர்வாக தேவைகளுக்காகவும் எதிர்கால நடவடிக்கைகளை இலகுவாக்குவதற்காகவும் இவ் அறப்பணி தொடர்பான விடயங்கள், விபரங்கள் யாவும் அலுவலக ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு எமது சமுகம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறோம்.

4.12.25 வியாழக்கிழமையன்று திருக் கார்த்திகை திருநாளை முன்னிட்டு வழிபாடுகளைத் தொடர்ந்து எமது ஆலயமும் சபை வளாகமும் தீபவிளக...
06/12/2025

4.12.25 வியாழக்கிழமையன்று திருக் கார்த்திகை திருநாளை முன்னிட்டு வழிபாடுகளைத் தொடர்ந்து எமது ஆலயமும் சபை வளாகமும் தீபவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்டியளித்தன. இதற்கான ஏற்பாடுகளை திறம்படச் செய்த பூஜை ஒருங்கிணைப்பாளர் திரு. சி. சோமசேகரம், அறநெறிப் பாடசாலை ஆசிரியர் செல்வி சஜினி விதுஷிகா மற்றும் பங்களித்த அறநெறிப் பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் அனைவருக்கும் சபையின் மனமார்ந்த நன்றி.

Address

52, Anuradhapura Road,
Puttalam
61000

Website

Alerts

Be the first to know and let us send you an email when புத்தளம் இந்து மகா சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share