பன்னையம்பதி வீரகத்தி விநாயகர் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Point Pedro
  • பன்னையம்பதி வீரகத்தி விநாயகர் ஆலயம்
Directions

பன்னையம்பதி வீரகத்தி விநாயகர் ஆலயம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பன்னையம்பதி வீரகத்தி விநாயகர் ஆலயம், Religious Center, Pannayampathy, Puloly north, Point Pedro.

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்க...
06/11/2022

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.

முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

கடல் நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

வெளியேறும் வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

மொட்டை போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

மூன்று வயதில் ஓர் மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

ஆன்மீக ரீதிக்கே மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

28/10/2022
என்ன ப்ரோ ஒரே விழாக்கோலமா இருக்கு? என்ன விசேஷம்?விநாயகர் சதுர்த்தி. அதான்.விநாயகருக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?...
10/09/2022

என்ன ப்ரோ ஒரே விழாக்கோலமா இருக்கு? என்ன விசேஷம்?

விநாயகர் சதுர்த்தி. அதான்.

விநாயகருக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க எதுக்கு வடநாட்டு கடவுளுக்கு விழா எடுக்குறீங்க?

டேய் இங்க வா..

என்ன ப்ரோ?

பொங்கலன்று விநாயகருக்கு படையலிடும் தமிழர்களின் பண்பாடு பற்றி தெரியுமாடா?

தெரியாது.

திரு அருட் பிரகாச வள்ளலார் வழிபட்ட விநாயகரைத் தெரியுமாடா?

தெரியாது.

முருகப்பெருமானின் பரம பக்தரான அருணகிரிநாதர் பாடிய விநாயகர் பற்றி தெரியுமாடா?

தெரியாது.

முத்தமிழ் மூதாட்டியான ஔவையார் விநாயகரிடம் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழை யாசகமாகக் கேட்டது தெரியுமாடா?

தெரியாது.

கம்பன் எழுதிய விநாயகரைத் தெரியுமாடா?

தெரியாது

நாயன்மார்கள் எழுதிய விநாயகரைத் தெரியுமாடா?

தெரியாது.

சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் கூறும் விநாயகரைத் தெரியுமாடா?

தெரியாது.

வீரபுரத்து விநாயகரைத் தெரியுமாடா?

தெரியாது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைத் தெரியுமாடா?

தெரியாது.

ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகரைத் தெரியுமாடா?

தெரியாது.

வேற என்னதான்டா உனக்குத் தெரியும்?

விநாயகர் வடநாட்டுக் கடவுள்!

உனக்கு எப்படிடா தெரியும்?

வாதாபியிலிருந்து பரஞ்சோதி ஏழாம் நூற்றாண்டில்தான் விநாயகரை தமிழகத்துக்குக் கொண்டுவந்தார்.

இந்த தகவல் உனக்கு எங்க கெடச்சு?

கூகுள் சொல்லிச்சு.

ஓ.. அப்ப அந்த கூகுள்கிட்ட ஆலகிராமம் பிள்ளையார் சிற்பம் எந்த காலத்தைச் சேர்ந்ததுனு கேட்டுட்டு வாடா.

இருங்க ப்ரோ..

ம்...

ஐந்தாம் நூற்றாண்டுனு சொல்லுது ப்ரோ.

இப்ப வாதாபியிலிருந்து விநாயகர் வந்ததாக நீ சொன்ன கதையின் காலம் என்ன?

அது ஏழாம் நூற்றாண்டு ப்ரோ!

இப்ப சொல்லு வாதாபியிலிருந்து வந்த கடவுளா விநாயகர்?

இல்ல ப்ரோ!

எங்கடா இவ்வளவு வேகமா ஓடுற?

விநாயகர் சதுர்த்தி கொண்டாட ப்ரோ🏃

😴, மெதுவா போடா. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் டா.!

🙏🌹🌸🌺🌷🌻🌼🙏
08/09/2022

🙏🌹🌸🌺🌷🌻🌼🙏

வரலாற்று பிரசித்தி பெற்ற வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் 2022.24/09/2022 - கொடி...
07/09/2022

வரலாற்று பிரசித்தி பெற்ற வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் 2022.

24/09/2022 - கொடியேற்றம்
25/09/2022 - உள்வீதி உலா
26/09/2022 - உள்வீதி உலா
27/09/2022 - உள்வீதி உலா
28/09/2022 - உள்வீதி உலா
29/09/2022 - உள்வீதி உலா
30/09/2022 - வெளிவீதி உலா
01/10/2022 - குருக்கட்டு விநாயகர் தரிசனம்
02/10/2022 - வெண்ணெய் உற்சவம்
03/10/2022 - துகில் திருவிழா
04/10/2022 - பாம்புத்திருவிழா
05/10/2022 - கம்சன் திருவிழா
06/10/2022 - வேட்டை உற்சவம்
07/10/2022 - சப்பறத்திருவிழா
08/10/2022 - தேர்த்திருவிழா
09/10/2022 - சமுத்திரத்தீர்த்தம்
10/10/2022 - கேணித்தீர்த்தம்

செல்வச் சந்நிதி ஆலய வரலாறு! யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் க...
25/08/2022

செல்வச் சந்நிதி ஆலய வரலாறு!

யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இக்கோயில் ஆற்றங்கரையான், சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என்று பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது.

வரலாறு👇👇👇👇👇👇👇👇👇👇👇

வித்தியாசமான அமைப்பைக் கொண்ட இவ்வாலயம் வரலாற்றுப் புகழ் மிக்கது. முன்பு வீரபாகுத் தேவர்[1] சூரபத்மனிடம் தூது சென்ற போது தனது காலடியைக் கல்லோடை என்ற இடத்தில் பதித்துச் சென்றதாகவும் பின்பு திரும்பும் வேளை சந்திக்கால பூஜை செய்யவேண்டியிருந்ததால் வல்லி ஆற்றங்கரையில் பூவரச மரநிழலில் வேல் ஒன்றை வைத்து சந்திக்கால பூஜை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த இடத்தில் சித்தர்கள், முனிவர்கள், யோகிகள் தவம் செய்து முத்தியடைந்தார்களாம். செல்வச்சந்நிதி ஆலயத்தின் தல விருட்சமாக பூவரச மரம் அமைந்துள்ளது. முருகப்பெருமானும் கதிர்காமருக்கு முதலில் காட்சி கொடுத்தது பூவரச மரத்தின் கீழேயே என்று கூறப்படுகிறது. 65 ஆலமர இலையில் முருகனுக்கு அமுது படைத்து பின்பு பக்த கோடிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும் முறை இன்றும் இருக்கின்றது.

12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் குலோத்துங்கன் என்ற சோழ அரசனின் ஆட்சியில் கருணாகரத் தொண்டமான் என்ற சிற்றரசனால் வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டமானாறு கட்டப்பட்டது. தொண்டமானால் வெட்டப்பட்ட தொண்டமானாறு வல்லி நதியுடன் இணைந்த பகுதியாகும். இந்த வல்லி நதியின் தொடுவாயிலையே கருணாகரத் தொண்டமான் வெட்டி ஆழப்படுத்தி கடலுடன் இணைத்ததால் அது தொண்டமானாறு என்று அழைக்கப்படுகிறது.

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயராலும் அதன் பின்பு ஒல்லாந்தராலும் அழிக்கப்பட்ட ஆலயம் ஒல்லாந்தர்கால பிற்பகுதியில் மருதர் கதிர்காமர் என்ற பக்தரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்நிதி முருகன் தன்மீது அளவு கடந்த பக்தி கொண்டு தன்னை வழிபடும் மருதர் கதிர்காமர் என்பவரிடம் தனக்கு பூஜை செய்யும் உரிமையைக் கொடுக்க விரும்பினார்.

தொண்டமனாறு ஆற்றங்கரையிலே மீன் பிடித்து தனது காலத்தைக் கடத்தி வந்தார் மருதர் கதிர்காமர் இவர் வழமைபோல் அன்றும் ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு குரல் 'கதிர்காமா இக்கரைக்கு வா" என்றது. ஆச்சரியத்துடன் கரைக்குச் சென்ற கதிர்காமரிடம் சந்நிதிமுருகன் ஒரு சிறுவனாகக் காட்சி கொடுத்தார். அந்தச் சிறுவன் கதிர்காமரை நோக்கி 'இந்த தொண்டைமான் ஆற்றங்கரையிலே இருக்கின்ற பூவரச மரத்தடியில் எனக்கு ஒரு ஆலயம் அமைத்த வழிபடுக" என்று பணித்தான். உடனே கதிர்காமர் நானோ கடற்தொழில் செய்பவன். எனக்கு பூஜை முறைகள் தெரியாது என்று பணிவுடன் கூற, சிறுவன் கதிர்காமாரை கண்ணை மூடுமாறு பணித்து கதிர்காமம் அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் பூஜை முறைகளை காண்பித்து, வழிபாட்டுக்கு ஒரு வேல் ஒன்றையும் வழங்கியதாக நூல்கள் கூறுகின்றன. அன்று தொடக்கம் முருக ஆசாரசீலராகிய கதிர்காமர் தொண்டைமனாற்றங்கரையிலே செழிப்புற்று வளர்ந்துள்ள பூவரச மரத்தடியில் வேலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். பூஜை முடிந்தபின்பு திருநீற்றை கொடுக்கும் முறை தெரியாமல் கதிர்காமர் தடுமாறியபோது, கதிர்காமா நீ திருநீற்றை எடு நான் போடுகிறேன், என்று அசரீரி வாக்கு கேட்டதாகக் கூறப்படுகின்றது. அன்று முதல் தட்டில் இருந்து திருநீற்றை எடுப்பது கதிர்காமராகவும் அதைப்போடுபவர் சந்நிதி முருகனாகவும் பக்தர்கள் கருதி அவரின் காலில் விழுந்து வணங்கி திருநீற்றைப் பெறுகின்றார்கள். காலில் விழுந்து திருநீற்றைப் பெறும்பொழுது தலையிலும் திருநீறு இடப்படும். இக்காட்சியைக் கண்டு பக்தர்கள் பெரிதும் பரவசம் அடைவார்கள்.

பூஜை முடிந்ததும் சந்நிதி முருகப்பெருமானும், கதிர்காமரும் ஆலய முன்பாக உள்ள திண்ணையில் இருந்து இன்றும் கதைப்பதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறு பூஜை செய்து வந்த தொண்டமனாறு கதிர்காமர் மனதில் ஒரு வருத்தம் தென்பட்டது. சந்நிதி முருகனுக்கு நைவேத்தியம் படைக்க தெரியாதே என்று, அப்படியிருக்கையில் ஒரு நாள் முதியவர் ஒருவர் கதிர்காமரை நோக்கி, நான் களைப்பாக இருக்கின்றேன். எனக்கு ஒரு ஆலம் இலையில் கொஞ்சம் பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்கறியும் வைத்துத் தந்தால் போதும் என்றார். பூரிப்பு அடைந்த கதிர்காமர் விரைவாக பொங்கல் பொங்கி, பயற்றங்காய் குழம்பையும் ஊற்றி ஆலம் இலையில் கொடுக்க, முதியவர் அற்புதமான பொங்கல் என்று பெருமிதமடைந்து கொண்டே அங்கே அறுபத்துமூன்று பேர் இருக்கிறார்கள் அவர்களும் உனக்கும் சேர்த்து அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது தரவேண்டும் என்று சொல்லி முருகனாக காட்சி கொடுத்தார். கதிர்காமர் சந்நிதியை நோக்கி ஓடினார். 'வேல்" வழமைக்கு மாறாக பிரகாசித்துக் கொண்டிருந்தது. சந்நிதி முருகன் ஆலம் இலையில் வைக்கப்பட்ட பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்காய் குழம்பும் உண்டதாக வரவாறு சான்றுபகர்கிறது. இதனால் தான் இன்றும் செல்லச்சந்நிதியில் பூஜை நேரங்களின் போது அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது படைக்கும் மரபு காணப்படுகிறது.

இந்த ஆலயத்துக்கான தேர்வடம் கூட கடலிலேயே வந்து சேர்ந்த அற்புதம் இன்று அடியார்களின் மனதிலே ஆழப்பதிந்த ஒரு அதிசயம். தமது நல்ல காரியங்களைக் கூட இங்கேயே தொடங்குகின்றனர். இவ்வளவு பெருமை பொருந்திய செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு இந்த மஷோற்சவத்தின் போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடுவர். இலங்கையில் அநேக அன்னதான மடங்களைக் கொண்ட ஆலயம் சந்நிதி முருகன் ஆலயம்தான் இதனால் தான் சந்நிதி முருகனை, அன்னதானக் கந்தன் என்றும் அழைப்பார்கள். சந்நிதியான் ஆச்சிரமம் ஒவ்வொரு வருடமும் அன்னதானப் பணியைச் சிறப்பாகச் செய்கின்றது. கடந்த காலங்களில ஏற்பட்ட போர்சூழலால் அநேகமான அன்னதான மடங்கள் சேதமடைந்துள்ளன.

அமைப்பு👇👇👇👇👇👇👇👇👇👇👇

சந்நிதியின் தோற்றம், அமைப்பு, வழிபாட்டு முறை எல்லாம் சற்று வித்தியாசமானவை. இங்கு வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இல்லை. ஆலய முற்றில் நந்தியும் சுற்றிவரவுள்ள அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் சந்நிதிக்கு மெருகூட்டுவதாக உள்ளன. ஆலயத்தின் எத்திசையிலிருந்து பார்த்தாலும் முருகனையும் அங்கு காட்டப்படும் தீபாராதனையையும் தான் பார்க்க முடியும். இங்கு முருகனின் கையிலுள்ள வேலை வைத்து வழிபடும் முறை தொன்றுதொட்டு காலமாக வழக்கத்திலுள்ளது. இவ்வாலயத்தில் முருகப்பெருமான் வேல்வடிவத்திலே மூலமூர்த்தியாக காட்சி கொடுக்கின்றார். திருவிழாக் காலங்களிலும் வேல் உருவிலேயே எழுந்தருளி காட்சி கொடுக்கின்றார். இவ்வேலில் சிகண்டி முனிவர் தன்னைத்தாக்க வந்த யானைக்கு வெற்றிலையை கிள்ளி விசிய போது அது வேலாக மாறி யானையைத் தாக்கியதை எடுத்துக் காட்டுமுகமாக வெற்றிலையின் நுனி பதிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம்.

கதிர்காமத்தைப் போல் வாய்கட்டி பூஜை செய்யும் முறையே இவ்வாலயத்திலும் காணப்படுகின்றது.

திருவிழா👇👇👇👇👇👇👇👇👇👇👇

அன்னதானக்கந்தன் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு ஆவணி மாதத்தில் வரும் பூரணையில் தீர்த்த உற்சவம் ஆண்டு தோறும் நடைபெறும். கோவில் கிணற்றுக்கு அருகே வள்ளிக்கொடி முளைக்கும் பொழுது கொடியேறி திருவிழா ஆரம்பமாகி பதினைந்து நாட்கள் நடைபெறும். தேர்த்திருவிழாவின் போது சந்நிதி முருகனுக்கு முன்பாக காவடி, கரகாட்டம், பாற்காவடி, கற்பூரச்சட்டி, தூக்குக் காவடி என்றும், தேரின் பின்னால் அங்கப்பிரதட்சணை செய்யும் அடியார்கள், இவற்றின் பின்னால் வரும் பஜனைக் குழுக்கள், உருக்கொண்டு தன்னை மறந்து ஆடும் பக்தர்களின் காட்சிகள் இவை எல்லாம் மனதை உருக வைத்துவிடும்.

பூஜைகள்👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

இக்கோவிலில் பூஜைகளும் கிரியைகளும் வேதாகம முறைப்படி நடப்பதில்லை. பூஜைகள் தனித்துவமான சைவ ஆசாரமுறையில் நடைபெறுகின்றன. பூஜையின் போது மந்திரங்கள் சொல்லப்படுவதில்லை. முருகனுக்கு நிவேதனமாக 65 ஆலம் இலைகளில் பச்சைஅரிசிப்பொங்கல் பயற்றங்கறியுடன் படைப்பார்கள். திருவிழாக்காலங்களில் பூக்காரரின் தொண்டு மகத்தானது. இப்பூக்காரர்கள் மருதர் கதிர்காமரின் பரம்பரையில் வந்த தெண்டர்களே. ஊற்சவத்தின் போது சுவாமியை மலர்மாலைகளால் அலங்காரம் செய்வதும் இத்தொண்டர்களே. இவர்கள் இத்திருவிழாக்காலங்களில் விரதமிருந்து ஆசாரசீலராக சந்நிதியானுக்கு சகல தொண்டுகளும் செய்வார்கள். ஆலயத்தில் கொடுக்கப்படும் உணவுகளை விட வேறெந்த உணவுகளையும் திருவிழாக்காலங்களில் உண்ணமாட்டார்கள்.

ஆலயமணி👇👇👇👇👇👇👇👇👇👇

செல்வச் சந்நிதி ஆலயமணியின் கோபுரம் 54 அடி உயரமுள்ளது. சந்நிதியானின் ஆலய கண்டாமணிதான் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் அதிக உயர் கோபுரத்தில் அமைந்ததாக் கூறப்படுகின்றது. இதைச்செய்து கொடுத்தவர் மானிப்பாய் அதிகார் செல்லமுத்துவின் மகனான சோமசுந்தரம். இந்த மணியின் நாதஓசை தொண்டமானாறு சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து மானிப்பாய்க்கு கேட்குமாம். யுத்த சூழலால் 1986 ஆம் ஆண்டு கோபுரத்தில் எறிகணைபட்டு கோபுரமும் மணியும் சேதமடைந்தன. மீண்டும் சிலகாலம் சென்ற பின்பு வெளிநாடுகளில் உள்ள அன்பர்களின் விடா முயற்சியால் லண்டனில் மாமணி செய்யப்பட்டு 2002 ஆம் ஆண்டு ஆவணி மாதம் சந்நிதியான் ஆலயத்தில் மீண்டும் பொருத்தப்பட்டது. இந்த புதிய மாமணியின் எடை 1250 கிலோ கிராம் என்று கூறப்படுகின்றது.

சித்திரத்தேர்👇👇👇👇👇👇👇👇👇

பல சிறப்புக்களைக் கொண்ட செல்வச் சந்நிதி முருகனின் அழகிய பெரிய தோற்றத்தைக் கொண்ட சித்திரத் தேர் 1986 ஆம் ஆண்டு போரில் அழிவுற்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

நன்றி :- Vk Darvin

இராஜ வீதியோரம் அரச மரங்களிடையே திகழும்  கோப்பாய் கிருஷ்ணன் கோயில் என்ற கோப்பாய் சக்கரத்தாழ்வார் கோயில் பிரபலமானது.நூறாண்...
21/08/2022

இராஜ வீதியோரம் அரச மரங்களிடையே திகழும் கோப்பாய் கிருஷ்ணன் கோயில் என்ற கோப்பாய் சக்கரத்தாழ்வார் கோயில் பிரபலமானது.

நூறாண்டு காலம் பழைமையான இக்கோவிலில் ஆரம்பம் தொட்டே ஆகமம் சாராத பாரம்பரியமான வழிபாடுகள் பக்தியோடு அனுசரிக்கப்படுகின்றன.

ஐயா வைகுண்டர் போன்றவர்களின் வழிபாட்டு முறைமையை ஒத்துக்காணப்படும் இத்தல பூசை முறை சிறப்பானது. தனித்துவமானது.

வாய் கட்டி மௌனமாக செய்யும் பூசை ஏற்கும் சந்நிதி முருகன் போல வடகோவை கண்ணன் தனக்கே உரிய பாரம்பரிய வழிபாடுகளை ஏற்று மகிழ்கிறான். அருள்கிறான்.

பொன்னாலை வரதராஜப்பெருமாள் பெருங்கோயில் ஈழத்து விஷ்ணுவாலயங்களில் முதன்மையானது.கூர்மாவதார க்ஷேத்திரமான இது இந்திரன் வழிபட்...
21/08/2022

பொன்னாலை வரதராஜப்பெருமாள் பெருங்கோயில் ஈழத்து விஷ்ணுவாலயங்களில் முதன்மையானது.

கூர்மாவதார க்ஷேத்திரமான இது இந்திரன் வழிபட்ட தலம்.

சதுரங்கம், ஸ்வர்ணாலயம் என்றெல்லாம் போற்றப்படும் பேராலயம்.

ஒரு காலத்தில் இத்தலம் ஸப்த பிரகாரங்களோடு (ஏழு திருவீதிகளுடன்) விளங்கியதாம். பின்னர் போர்த்துக்கேயர் அத்தலத்தை அழித்தனராம்.

வரதராஜனாக பேரருளாளனாக திகழும் இத்தல பெருமாளுக்கு ஓராண்டில் இரண்டு மஹோத்ஸவங்கள் நிகழ்கின்றன.

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி ஒன்றும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி ஒன்றுமாக இரண்டு முறை கொடியேற்றத்தோடும் தேர்த்திருவிழாவுடன் பெருவிழா நடக்கிறது.

இதனால் இது திருவரங்கத்திற்கு இணையாக ஸ்ரீ வைகுண்டமாக யாழ்ப்பாணத்தில் திகழ்கிறதெனலாம்.

வைகுண்ட வ்ரஜை நதி காவேரியாக ஓடுவது போல இங்கும் வங்க கடலாக பொன்னாலயத்தை தழுவுகிறது. பிரணவாகாரமாக புண்ணியகோடி விமானம் உயர்ந்து நிற்கிறது. வாசுதேவனே வரதராஜனாக திகழ்கிறான்.

தவிர இத்தல குருமார்கள் மிக சிரத்தையோடு திருமாலை அர்ச்சித்து மகிழ்கிறார்கள். தற்போது பிரதான குருவாக திகழும் வேதாகம அறிஞரான சோமாஸ்கந்தக்குருக்களும் அவரது புதல்வர்களும் வரதனுக்கு வேத சிவாகமோக்தமாகச் செய்யும் ஆராதனை மிக சிறப்பானது.

ஸ்ரீராமர், கிருஷ்ணர், தசாவதார மூர்த்திகள், ஆஞ்சநேயர், தன்வந்திரி, கருடாழ்வார், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்கிரீவர், மஹா லக்ஷ்மி, ஆண்டாள், ஆழ்வார்கள், குருவாயூரப்பன், ரங்கநாதர் என விஷ்ணு மூர்த்தங்களுக்கெல்லாம் இங்கு தனித்தனிச்சந்நதிகள் உள்ளன.

பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப்
பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பெதிர் காலக்கழிவுமானானை ஏழிசையின் சுவை தன்னை சிறப்புடைமறையோர் நாங்கை நன்னடுவுள்
செம்பொன்செய் கோவிலினுள்ளே மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.

- திருமங்கையாழ்வார்

செம்பொன் செய் கோயிலான் பொன்னாலை ஹேமரங்கப் பெருமாள் அருள் பெருகட்டும்.

பெருமாள் பள்ளி கொண்டருளும் ரங்கங்களில் மத்ய ரங்கம், ஆதி ரங்கம், ஸ்ரீ ரங்கம் என்பன சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அவ்வகையில் இது பொன்னரங்கம் (ஹேமரங்கம்) என கொண்டாடப்படத்தக்கதாகும்.
.... ச்ராவண்யாம் க்ருஷ்ணபக்ஷேதுசாஸ்டம்யாம் ச விசேஷத:

யோந ரோஜந்மமத்யேது ஸ்வர்ணாகார நிவாஸிநம்
பச்யேச பக்தியுக்தஸ்ஸ அச்யுதம் லோக ரக்ஷகம்

தஸ்ய பாபாநிநஸ்யந்தி வஹ்நிநாதூலராசிவத்
புத்ரபௌத்ராதிபிர்யுக்தோ தீர்க்கமாயுஷ்யந்து யச்சதி

இஹைவ ஸகலாந்போகாந் புக்த்வா விஷ்ணோ: க்ருபாத்ருஷா
அந்தே வைகுண்ட மாஸாது
விஷ்ணுநா ஸஹ மோததே

தக்ஷிண கைலாஸ மஹாத்மியம் -
ஸ்வர்ணாலய வைபவ அத்யாயம்

ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் அட்டமியாகிய (ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்ற ஸ்ரீ ஜெயந்தி ) சிறப்பான நல்ல நாளில் எவர் பொன்னாலைப்பதியில் எழுந்தருளியுள்ள வரதராஜரான - லோக ரக்ஷகர்- ஆகிய அச்சுதரான பெருமாளை இப்பிறவியில் அன்பு/ பக்தியுடன் தரிசிக்கிறானோ அவனது பாவங்கள் தீயிலிட்ட பஞ்சு மூட்டை போல அழிந்து விடும்.

அவன் புத்ர பௌத்திரர்களோடு எல்லாவித இன்பங்களையும் இவ்வுலக வாழ்வில் பெற்று முடிவில் ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்து, அங்கே இன்பமே உருவான ஸ்ரீமந் நாராயணனோடு களிப்புற்று வாழ்வான்.
--
தியாக. மயூரகிரி சிவாச்சார்யார்

யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆலயம் தனித்துவச் சிறப்புடையது. பழைமை மிக்கது. வரலாற்றுப் பெருமை கொண்டது.--இத...
21/08/2022

யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆலயம் தனித்துவச் சிறப்புடையது. பழைமை மிக்கது. வரலாற்றுப் பெருமை கொண்டது.
--
இத்தல வழிபாட்டிற்கு வரும் அனைத்து அடியவர்களும் திருமண் என்ற நாமத்தை நெற்றியில் அணிந்து கொள்கிறார்கள். தமிழகத்து ஸ்ரீரங்கம் முதலிய விஷ்ணுவாலயங்களில் கூட வைஷ்ணவர்கள் மட்டுமே திருமண் அணிய, இங்கு அனைவரும் திருமண்ணைத் திலகம் போல அணிகிறார்கள். இப்பகுதியில் இயற்கையாக திருமண் கிடைக்கிறது.
--
இதே வேளை ஸ்தலத்தில் ஜமதக்னி ரிஷி மரபு வைதிக சைவ அந்தணர்களே வழி வழியாக பூஜை செய்வதோடு திருநீற்றுப்பிரசாதமும் வழங்குகிறார்கள். மேலும் இங்கு திருமுறையோடு திவ்ய பிரபந்தம் ஓதப்படுகிறது.
--
மூலஸ்தானத்தில் சுதர்சன சக்கர வடிவாக இறைவன் காட்சி தருகிறான். திருத்தேராகட்டும் ஏனைய வாகனங்களாகட்டும் (கருடன், அனுமன் உள்ளிட்ட) சக்கர வடிவ மாயனே எழுந்தருள்கிறான்.
--
இளவள்ளி என்ற பெண்ணின் சாபம் தீர மத்ஸய (மீன்) வடிவம் கொண்டு அவளது மடியில் விழுந்து குழந்தையாய் தவழ்ந்தவன் வல்லிபுர கண்ணன் என்கிறது தக்ஷண கைலாச மஹாத்மியம்.
--
இந்த நிகழ்வு நடந்ததாக கருதப்படும் புரட்டாதி பௌர்ணமியை சமுத்திர தீர்த்த நாளாக கொண்டு இவ்வாலய மஹோத்ஸவம் நடக்கிறது. இந்த சமுத்திர தீர்த்த விழா யாழ்ப்பாணத்தில் அதிகளவான அடியவர்கள் கூடும் முக்கிய விழாவாக கருதப்படுகிறது.
--
கோடி சூர்ய பிரகாசனாக சக்கர மூர்த்தியாக இறைவன் எழுந்தருளியிருப்பதால் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் வழிபாட்டுக்கான கூடுகிறார்கள்.
--
விநாயகர், ஆஞ்சநேயருக்கு ஆலய வழிபாட்டில் முதன்மை உள்ளது. திருவிழாக் காலத்திலும் சக்கர வடிவ இறைவனோடு மஹா லக்ஷ்மியும் விநாயகரும் ஹநுமனும் எழுந்தருள்கிறார்கள்.
--
இத்தலத்தை நான் வல்லவாழ் என்ற திவ்ய தேசத்தோடு ஒப்பிட்டு சிந்திப்பதுண்டு. பெயரளவில் மட்டுமல்ல பலப்பல ஒற்றுமைகள் இவ்விரு தலத்திற்கும் உண்டு.
--
உச்சியில் சங்க சக்ர திருநாம சின்னங்களோடு கூடிய உயர்ந்த ராஜ கோபுரம், அகன்ற மூன்று திருச்சுற்றுக்கள், நாற்றிசை வாயில்கள் என்று திகழும் வல்லிபுரம் வாழ் வரதனை மாயவன் என்றே உள்ளம் உருக வணங்குகிறார்கள்.
--
தொல் அருள் நல்வினையால்
சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்
தொல் அருள் மண்ணும் விண்ணும்
தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலன்
ஏத்தும் திரு வல்ல வாழ்
நல்லருள் நம் பெருமான்
நாராயணன் நாமங்களே

(திருவாய்மொழி)
--
மயூரகிரி சிவாச்சார்யார்

Address

Pannayampathy, Puloly North
Point Pedro

Website

Alerts

Be the first to know and let us send you an email when பன்னையம்பதி வீரகத்தி விநாயகர் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share