Grand Jumm'aa Mosque - Oluvil

Grand Jumm'aa Mosque - Oluvil Official page Of Grand Jumm'aa Mosque, Oluvil

Media unit, GJMO

21/08/2026

ாத்தினருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாத்துஹூ

#குடி_ஜமாஅத்தினரின்_பெயர்_பட்டியலை_இற்றைப்படுத்தல்_2026

ஒலுவில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் கால எல்லையானது எதிர்வரும் 09 ஆம் மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.

எனவே புதிய நிருவாகத் தெரிவிற்காக 2026 ஆம் ஆண்டிற்கான குடி ஜமாஅத்தினர் பெயர் பட்டியலைத் தயாரித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அணுப்பவேண்டியுள்ளது.

ஆகவே சகல குடி ஜமாஅத்தினரும் தங்களது பெயர் விபரங்களை பள்ளிவாசலில் காட்சிப்படுத்தப் ப்பட்டிருக்கும் குடி ஜமாஅத்தினர் பெயர் பட்டியலில் எதிர்வரும் 31.08.2026 ஆம் திகதிக்கு முதல் பதிவு செய்யுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வண்ணம்,

நம்பிக்கையாளர் சபை
பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்
ஒலுவில்

 #ஒலுவில்_ஜூம்ஆ_பள்ளிவாசலில் #முதன்முதலில்_காய்த்த  #ஈச்சம்_மரம் இதுதான்சுமார் 30 ருடங்களுக்கு முதல்.  #காரியாலயத்தில்_இ...
31/07/2026

#ஒலுவில்_ஜூம்ஆ_பள்ளிவாசலில்
#முதன்முதலில்_காய்த்த
#ஈச்சம்_மரம் இதுதான்
சுமார் 30 ருடங்களுக்கு முதல்.
#காரியாலயத்தில்_இப்போதும்_இருக்கிறது_இந்தப்புகைப்படம்.

எமது மண்ணில் காய்த்த ஈச்சம் பழங்கள் விற்பனை.மூன்று தசாப்த காலத்திற்கு முன்னர் எமது தாய் பள்ளிவாசலான ஒலுவில் பெரிய ஜும்மா...
31/07/2026

எமது மண்ணில் காய்த்த ஈச்சம் பழங்கள் விற்பனை.

மூன்று தசாப்த காலத்திற்கு முன்னர் எமது தாய் பள்ளிவாசலான ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் காய்த்து கனிந்து நாங்கள் எல்லோரும் அறுவடை செய்து கொண்டாடிய ஈச்சம்பழத்திற்கு பிறகு மீண்டும் மூன்று தசாப்தங்கள் கடந்து இப்பொழுது எமது ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் ஈச்சம் மரங்கள் காய்க்க ஆரம்பித்து தனது முதலாவது அறுவடையை நமக்காக தந்துள்ளது.

இந்த அறுவடையில் கிடைக்கப்பெற்ற பழங்களை எமது ஒலுவில் மக்களிடையே பங்கிட்டு வைக்கும் நோக்குடன் அதனை பள்ளிவாசலுக்கான சிறிய நன்கொடை ஒன்றுடன் நாங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

எமது மண்ணில் எமது பள்ளிவாசலில் காய்த்த இந்த ஈச்சம் பழங்களை பெற்றுக் கொள்ள நீங்களும் விரும்பினால் நாளை காலை 11 மணிமுதல் 12 மணிவரை கட்டணத்தை செலுத்துவதன் மூலம் டோக்கண்களை பெற்றுக் கொள்ள முடியும். டோக்கண்களை பெற்றுக் கொண்ட நபர்களுக்கு ஈச்சம் பழங்களை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்

ஐந்து பழங்கள் கொண்ட பக்கெட் ஒன்றின் நன்கொடை பெறுமதி ரூபா 1000 ஆகும்.

எனவே பெற்றுக் கொள்ள விரும்புவார்கள் ரூபா ஆயிரத்தினை செலுத்தி முதலாவது மாடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் காரியாலயத்தில் உங்கள் டோக்கன்களை பெற்றுக் கொள்ள முந்துங்கள்.

குறைந்த அளவிலான பழங்களே இருப்பதால் முந்துகிற நபர்களுக்கு மாத்திரமே இந்த சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவும்.

எமது மண்ணில் காய்த்து கனிந்த இந்த பழங்களை அல்லாஹ்வின் மாளிகைக்காக உங்களது நன்கொடைகளை செலுத்தி பெற்றுக் கொள்வீர்கள் என அன்போடு எதிர்பார்க்கின்றோம்.

இவண்ணம்
நம்பிக்கையாளர் சபை
பெரிய ஜும்ஆ பள்ளி வாசல்
ஒலுவில்.

20/07/2026

#பள்ளிவாசல்_தென்னந்_தோட்ட_தேங்காய்களை_விற்பனை_செய்வதற்கான_கேள்வி_அறிவித்தல்

ஒலுவில், பெரிய ஜும் ஆ பள்ளிவாசலுக்குச் சொந்தமான தென்னந்தோட்ட தேங்காய்கள் கேள்வி விண்ணப்பங்கள் கோரல் அடிப்படையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

எனவே பெற்றுக் கொள்ள விரும்புவோர், மீளளிக்கப்படாத தொகையாக ரூ. 300 ஐ செலுத்தி, பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் காரியாலயத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து, 2026.07.24 ஆம் திகதிக்கு முன்னர் பள்ளிவாசல் கேள்வி மனுப் பெட்டி (Tender Box) யினுள் இடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம்,
நம்பிக்கையாளர் சபை
பெரிய ஜும் ஆ பள்ளிவாசல்
ஒலுவில்
17.07.2026

 #பள்ளித்தோட்டத்தில்_கடை_அமைக்கும் 02 துண்டு  #நிலங்கள்_வாடகைக்குஅமைவிடம் : *அமீன் ஆப்பக் கடைக்கு  அடுத்ததாக* மேற்குப்பு...
06/07/2026

#பள்ளித்தோட்டத்தில்_கடை_அமைக்கும் 02 துண்டு #நிலங்கள்_வாடகைக்கு

அமைவிடம் : *அமீன் ஆப்பக் கடைக்கு அடுத்ததாக* மேற்குப்புறமாக உள்ள 02 கடையறை அமைக்கும் துண்டுகள்.

ஒலுவில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் 15 அகலம் அடி 50 அடிநீளம் கொண்ட இரு துண்டு நிலங்கள் தனித்தனியாக வாடகைக்கு விடப்படவிருக்கின்றது.

ஒரு துண்டுக்கான மாதாந்த நில வாடகையாக ரூபா.4,500/- செலுத்துவதன் மூலம் இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

தேவையுடையவர்கள் விண்ணப்பங்களை காரியாலத்தில் பெற்று பூர்த்தி செய்து அதனை எதிர்வரும் 12.07.2025 மாலை 5.00 மணிக்கு முன்னர் பள்ளிவாசல் முதலாம் மாடியில் இருக்கும் கேள்விமனுப் பெட்டியில் இடுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

குறிப்பு : ஏற்கனவே கடை அமைக்க வாடகைக்கு பெற்ற ஒருவர் இந்த இரு துண்டுகளையும் திருப்பித் தந்ததால் இவை மீண்டும் மனுக்கோரப்படுகின்றது

இவ்வண்ணம்,
நம்பிக்கையாளர் சபை
பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல்
ஒலுவில்.

பள்ளித்தோட்டத்தில் கடை அமைக்கும் 02 துண்டு நிலங்கள் வாடகைக்கு

Oluvil - Media • 06-07-2026

அமைவிடம் : அமீன் ஆப்பக் கடைக்கு அடுத்ததாக மேற்குப்புறமாக உள்ள 02 கடையறை அமைக்கும் துண்டுகள்.

ஒலுவில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் 15 அகலம் அடி 50 அடிநீளம் கொண்ட இரு துண்டு நிலங்கள் தனித்தனியாக வாடகைக்கு விடப்படவிருக்கின்றது.

ஒரு துண்டுக்கான மாதாந்த நில வாடகையாக ரூபா.4,500/- செலுத்துவதன் மூலம் இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

தேவையுடையவர்கள் விண்ணப்பங்களை காரியாலத்தில் பெற்று பூர்த்தி செய்து அதனை எதிர்வரும் 12.07.2025 மாலை 5.00 மணிக்கு முன்னர் பள்ளிவாசல் முதலாம் மாடியில் இருக்கும் கேள்விமனுப் பெட்டியில் இடுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இவ்வண்ணம்,
நம்பிக்கையாளர் சபை
பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல்
ஒலுவில்.

26/06/2026

🔴 கல்விச் சுற்றுலாவுக்கான அனுமதியற்ற நிலையினை தெளிவுபடுத்தல்

Oluvil - Media • 26-06-2026

தற்போது நிலவும் காலநிலையையும், அரசின் சுற்றறிக்கைகளையும் கருத்தில் கொண்டு, அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட எந்தப் பாடசாலைக்கும் கல்விச் சுற்றுலா செல்வதற்கு தற்போது அனுமதி வழங்கப்படவில்லை என்பதை பெற்றோரின் கவனத்திற்கு அறியத் தருகின்றேன்.

மேலும், தனியார் நிறுவனங்கள் அல்லது வேறு அமைப்புகள் ஊடாக மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்லும் நிலை ஏற்பட்டால், அதற்குப் வலயக் கல்வி அலுவலகமோ, பாடசாலையோ எந்தவிதப் பொறுப்பையும் ஏற்காது என்பதையும் பெற்றோரின் கவனத்திற்கு அறியத் தருகின்றேன்.

இப்படிக்கு,

வலயக் கல்விப் பணிப்பாளர்
வலயக்கல்வி அலுவலகம்,
அக்கரைப்பற்று.

`© Sm31 | OLUVIL NEWS`
---------------------------------
✨ ஒலுவிலூரின் உத்தியோகபூர்வ செய்திச்சேவைக்கு,
*03 வது குழு*👇🏻
https://chat.whatsapp.com/H5WrMTqx0S19Vh4Ugsj7DW?s=cl&p=a&mlu=4

13/06/2026

#விண்ணப்பம்_கோரப்படுகிறது

எமது பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் துணை அமைப்புகளான,

1. பைத்துஸ் ஸக்காத்
2. பைத்துல் மால்
3. கட்டிடடக்குழு
4. மத்தியஸ்த்த சபை

போன்றவற்றுடன் இணைந்து செயல்படுவதற்கு விருப்பமுள்ள நலன் விரும்பிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.

ஆர்வமுள்ளவர்கள் எமது பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் காரியாலயத்தில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்க முடியும்.

பொருத்தமானவர்களாக கருதப்படுபவர்கள் தேவை ஏற்படும் போது இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

இப்படிக்கு,
நம்பிக்கையாளர் சபை,
பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்,
ஒலுவில்.
13.06.2026

27/05/2026

#ஈதுல்_அழ்ஹா #புனிதஹஜ்ஜூப்_பெருநாள் தொழுகை தொடர்பாக,

“ஒலுவில் வாழ் பொது மக்கள் அனைவருக்கும் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்

இன்ஷா அள்ளாஹ் நாளை வியாழக்கிழமை புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை வழமைபோன்று வெளிச்ச வீட்டு கடற்கரைத் திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக இம்முறை ஆண்கள் பெண்களுக்கான புனித ஹஜ்ஜூப் பெருநாள் தின தொழுகை சரியாக காலை 06:20 மணிக்கு இடம்பெறும் எனவே சகலரும் காலை 06:20 முன்னர் சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அத்துடன் சகல சகோதர சகோதரிகளும்; முஸல்லாக்களுடன் வுழூ செய்து கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலும் பெருநாள் தினத்தில் உங்களது ஸதகா தானதர்மங்களையும் மற்றும் வருடாந்த தலைவரியினையும் வழங்கி நமது பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் நற்பணிகளுக்கு பங்களிப்புச் செய்து அள்ளாஹ்வின் அருளை பெற்றுக்கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

பாதையில் செல்வோருக்கு இடையூறு இல்லாமால் வாகனங்களை நிறுத்திவைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மாத்திரம் உங்களது வாகனங்களை நிறுத்தி வீதி ஒழுங்குகளைப் பேணி ஒத்தழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அல்லாஹுத்தஆலா உங்களின் உடல் உள ஆரோக்கியத்திலும் செல்வத்திலும் பறகத் செய்வானாக.

இவ்வண்ணம்

நிருவாகம்
நம்பிக்கையாளர் சபை
பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்
ஒலுவில்
27.05.2026

19/04/2026

#யாசகம்_வழங்குதல்_தொடர்பாக_பொதுமக்களுக்கான #முக்கிய_அறிவித்தல்.

தற்போது #ஒலுவில்_பிரதேசத்தில் மீண்டும் ஒவ்வொரு நாளும் யாசகம் கேட்டு வருபவர்களால் தொடர்ச்சியான அசௌகரிகங்களை பொது மக்கள் எதிர் கொள்வதாக பல முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.

இதுதொடர்பாக ஏற்கனவே எமது பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, ஒலுவிலில் யாசகம் கொடுக்கும் தினமாக #ஞாயிற்றுக்_கிழமையை பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்தி வந்த நிலையில், மீண்டும் இதில் சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, ஞாயிற்றுக் கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் யாசகம் கேட்டு வருபவர்களுக்கு உங்களது ஸதகாவை கொடுத்துவிட்டு, இனி எதிர்வரும் காலங்களில் #ஞாயிற்றுக்_கிழமைகளில்_மாத்திரம் வருமாறு யாசகர்களை அறிவுறுத்தி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்குமாறு பொதுமக்களை அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
#நம்பிக்கையாளர்_சபை,
பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல்,
ஒலுவில்.

 #ஒலுவில்_பெரிய_ஜும்ஆ_பள்ளிவாசலுக்கு #போடியம்_(Podium)_அள்பளிப்பு.ஒலுவில் 01 ஆம் பிரிவைச் சேர்ந்த M/s. Rifai Carpentry W...
23/02/2026

#ஒலுவில்_பெரிய_ஜும்ஆ_பள்ளிவாசலுக்கு
#போடியம்_(Podium)_அள்பளிப்பு.

ஒலுவில் 01 ஆம் பிரிவைச் சேர்ந்த M/s. Rifai Carpentry Work Shop உரிமையாளர், அலியார் றிபாய் அவர்கள், அருள்மிகும் இப்புனித ரமழான் மாதத்தில் எமது ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு மிக அழகான போடியம் ஒன்றினை செய்து, அதனை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவருக்கு நம்பிக்கையாளர் சபை தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

அருளாளன் அல்லாஹ் அவர் செய்த இந்தச் ஸதகாவை ஏற்றுக் கொண்டு, இதை அவருக்கு பெரும் நன்மையாகவும் சேமிப்பாகவும் ஆக்கிவிடுவானாக. மேலும், அவரின் செல்வத்திலும் குடும்பத்திலும் பரக்கத்தை அருளி, அவர் செலவிட்டதற்கு மாற்றாக அதைவிடச் சிறந்ததை வழங்க பிராத்திக்கின்றோம்.

நம்பிக்கையாளர் சபை,
பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்,
ஒலுவில்.

Address

1st Floor, Grand Jumm'aa Mosque Main Street
Oluvil
32360

Telephone

+94672255383

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grand Jumm'aa Mosque - Oluvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Grand Jumm'aa Mosque - Oluvil:

Shortcuts

Share