04/02/2026
மாவடிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினரால் புதிதாக அமைக்கபப்பட்ட கடைத் தொகுதியில் 78வது சுதந்திர தின நிகழ்வு
கோறளைப்பற்று மற்றும் மத்தி தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றுக்குழுவின் ஏற்பாட்டில் பிரஜா சக்தி, கிளீன் ஸ்ரீ லங்கா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மாவடிச்சேனை பள்ளிவாயல் கடைத்தொகுதி வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹீர் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், சுதந்திர தினத்தின் மகத்துவம் மற்றும் ஒற்றுமையுடன் நாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி அவர்களின் விஷேட உரையும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சமீம் அவர்களின் நன்றியுரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.ஹலால்தீன்,
கோறளை0பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹீர்,பிரதி பணிப்பாளர் எம்.மர்சூக், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ராசீக், சட்டத்தரணி ஐ..முபீன், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகர் எம்.பி.ரீ.ஹான், கோறளைப்பற்று மேற்கு, கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மதத்தலைவர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.லெத்தீப், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச நிறைவேற்றுக்குழு உறுப்பினர், சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ.சீ.நியாஸ்தீன் (ஹாஜியார்), மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பாறுக், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரஜா சக்தி தவிசாளர்கள், கிளீன் ஸ்ரீ லங்கா இணைப்பாளர்கள், மாவடிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் நிருவாகிகள், பொலிஸ் நிலைய சந்தி ஆட்டோ சங்க உறுப்பினர்கள், Drug Free Kalkudah உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடினர்.