Vivekananda Welfare Centre

Vivekananda Welfare Centre உருவாகு! உருவாக்கு!!!

We Vivekananda welfare centre a charitable organization providing extended services for education and providing assistances to needy people.

15/06/2026

💖💖💖 விலைமதிப்பற்ற எண்ணங்களும், அளவிட முடியாத அன்பும் நிறைந்த தருணங்களும் , அதனோடு கட்டியெழுபப்படும் விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் மேற்தள கட்டிட வேலைப்பாடுகள்🤝🤝🤝

🤝💖🤝இறுக்கமான மனநிலையையும், இயந்திரத்தனமான செயல்முறையையும் விட்டு சற்று விலகி, நம் இளைய தலைமுறையினருக்கான கல்வி செயற்பாட்...
14/06/2026

🤝💖🤝இறுக்கமான மனநிலையையும், இயந்திரத்தனமான செயல்முறையையும் விட்டு சற்று விலகி, நம் இளைய தலைமுறையினருக்கான கல்வி செயற்பாட்டுக்காக கட்டப்படுகின்ற விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் மேற்தள கட்டுமான பணியில் இரண்டாவது நாளாகவும், நல்லெண்ணங்களுடன் , என்றும் போல் தம் அயராத உழைப்பை வழங்குகின்ற நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். 🙌🙌🙌

இதயபூர்வமாகக் காரியங்களைச் செய்பவனுக்கு இறைவனும் உதவி புரிகின்றான். உன்னால் இயன்றவரையில் நற்செயல்களைச் செய்.

- சுவாமி விவேகானந்தர்

முன்பள்ளி வயதுடைய (3-5) பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருத்தல் போலவே விளையாடுவதற்கு இடமளிப்பதன் மூலம் , தசைகள் மற்றும் எலும்...
12/06/2026

முன்பள்ளி வயதுடைய (3-5) பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருத்தல் போலவே விளையாடுவதற்கு இடமளிப்பதன் மூலம் , தசைகள் மற்றும் எலும்புகள் வளர்ச்சி அடைந்து அதன் மூலம் உடல் வலிமை பெறும் . அவ்வாறே மூளையின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் நிகழும் . உடல் வலிமை மற்றும் மூளையின் தொழிற்பாடும் அதிகரித்து, நன்கு கல்வி கற்றல் மற்றும் தீர்மானங்கள் எடுத்தல் போன்ற வாழ்க்கை திறன்கள் மேம்படும்.

12/06/2026

பிள்ளைகளை உட்கார்ந்த நிலையிலே இருக்க விடாமல் ,குறைந்தது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது சுறுசுறுப்பாக வைத்திருப்பது அவசியம் ஆகும். பிள்ளைகள் ஒரே இடத்தில் ஒரே மாதிரியாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருப்பது அவர்கள் உடல் மற்றும் உள ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல ..

🤝🤝🤝உயரிய காரியங்களை செய்கின்ற போது நல்லுள்ளம் உள்ளவர்களின் எண்ணங்கள் எப்போதும் எம்மோடு கை சேரும் மற்றும் இராமாயணத்தில், ...
11/06/2026

🤝🤝🤝
உயரிய காரியங்களை செய்கின்ற போது நல்லுள்ளம் உள்ளவர்களின் எண்ணங்கள் எப்போதும் எம்மோடு கை சேரும் மற்றும் இராமாயணத்தில், இலங்கைக்குச் செல்வதற்காக வானரப் படை கடலில் பாலம் அமைத்தபோது, ஒரு சிறு அணில் மணலைக் கொண்டு உதவியது. அதுபோல விவேகானந்த பாலர் அறிவாலயத்தின் மேற்தள கட்டுமான பணியின் போது எம்மோடு கை சேர்க்கும் விவேகானந்த நலன்புரி நிலைய உறுப்பினர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் உயரிய வாழ்த்துக்கள்...!
🙌🙌🙌

நீங்களும் , உங்கள் குடும்பமும் எங்களுக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு மனமார்ந்த நன்றிகளுடன் ஆசிகளும் உரித்தாகட்டும்.
💖💖💖💖💖

*மகத்தான செயல்களைச் செய்வதற்காக இறைவனால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதை நம்புங்கள். அவற்றை நாம் செய்தே தீருவோம் -
சுவாமி விவேகானந்தர்*

பிள்ளை நாளொன்றில் விழித்திருக்கும் எல்லா நேரங்களிலும் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, குறைந்தது நாளொன்றுக்கு மூன்று மணித்திய...
11/06/2026

பிள்ளை நாளொன்றில் விழித்திருக்கும் எல்லா நேரங்களிலும் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, குறைந்தது நாளொன்றுக்கு மூன்று மணித்தியாலங்களேனும் சுறுசுறுப்புடன் செயல்படுதல் வேண்டும்.

ஜூன் 11ஆம் தேதி கொண்டாடப்படுகின்ற
சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு 3 - 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் உடல், உள , சமூக மற்றும் அறிவு விருத்தி செயற்பாட்டில் பெற்றோர்களின் வகிபாகம் தொடர்பில் 2026.06.11 ஆம் திகதி எமது பாலர் பாடசாலையின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

```Protect play , protect childhood .```

11/06/2026

முன்பள்ளிகளில் பிள்ளைகளின் கற்றலுக்கு உதவும் முகமாக, பிள்ளையின் வயதுக்கும் , விருத்தி பருவத்திற்கும் பொருத்தமானவையாக திட்டமிடப்பட்ட கற்றல் உபாய வழிகளை பின்பற்ற வேண்டும்.

ஆன்மீகத் தலைவர்களிடம் இருந்து பெறப்படும் ஆசீர்வாதம் வாழ்வின் தடைகளை நீக்கும் அவர்கள் அகமகிழ்ந்து நம்மை வாழ்த்தும் போது அ...
04/06/2026

ஆன்மீகத் தலைவர்களிடம் இருந்து பெறப்படும் ஆசீர்வாதம் வாழ்வின் தடைகளை நீக்கும் அவர்கள் அகமகிழ்ந்து நம்மை வாழ்த்தும் போது அந்த வாழ்த்து நம்மை முழுமையாக வந்து சேரும். நல்ல வார்த்தைகள் நம்மை வாழ வைக்கும். இவர்களின் ஆசிர்வாதம் நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரும் .
அத்தோடு, அவர்களின் நீண்டகால அனுபவத்திலிருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல், அன்பு மற்றும் நல்லெண்ணங்கள் நம் எல்லோரிடத்திலும் சென்றடைய வேண்டும் .
இன்னும் , ஆன்மீகத் தலைவர்களின் ஆசிகள் நம் சிறார்களிடத்தில் சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்திலும் விவேகானந்த நலன்புரி நிலையமானது சிறுவர்களின் நிகழ்வுகளில் ஆன்மீகத் தலைவர்களை இணைத்துக் கொள்கின்றது...!

உருவாகு...! உருவாக்கு...!

04/06/2026

நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் என்றென்றும் எல்லா பேறும் பெற்றவர்களாக இருப்பீர்களாக. உங்கள் அன்பிற்குப் பாத்திரமான அனைவர் மீதும் எல்லாம்வல்ல இறைவனின் அருள் நிழல் எப்போதும் படிவதாக.

- சுவாமி விவேகானந்தர்

இறை நாமத்தின் ஆற்றலில் முழு நம்பிக்கையும் அதை ஜபிக்க ஆவலும் ஒருவனுக்குத் தோன்றுமானால், அவனுக்கு ஆராய்ச்சியோ மற்ற எந்தச் ...
04/06/2026

இறை நாமத்தின் ஆற்றலில் முழு நம்பிக்கையும் அதை ஜபிக்க ஆவலும் ஒருவனுக்குத் தோன்றுமானால், அவனுக்கு ஆராய்ச்சியோ மற்ற எந்தச் சாதனங்களுமோ தேவை இல்லை. அவனது சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்து விடுகின்றன; மனம் தூய்மையாகிவிடுகிறது. இறை நாமத்தின் ஆற்றலினா லேயே அவன் அவரைத் தரிசிக்கிறான்.🪷🕉️🌟

- பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர்.

Address

140/7, Sixtyfeet Road, Dalupotha
Negombo
11500

Telephone

+94773449663

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda Welfare Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Vivekananda Welfare Centre:

Share