Mullaitivu Velmurugan thevasthanam

Mullaitivu Velmurugan thevasthanam aum. muruka religious temple

07/01/2026

#திருமண_பொருத்தம்

திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை வாழ்க்கை துணையின் ஏழாம் பாவகம் வலுவாக இருக்கிறதா ஏழாம் பாவக அதிபதி கெட்டு போகாமல் வலுவாக உள்ளதா இரண்டாம் பாவம் வலுவாக உள்ளதா இரண்டாம் பாவக அதிபதி கெட்டு விடாமல் உள்ளதா அல்லது நீசம் அடையாமல் உள்ளதா என்று பார்க்க வேண்டும்

பொதுவாக ஏழாம் பாவகம் நீசம் அடைந்தாவே மன வாழ்க்கை போராட்டமாகவே அமைந்து விடும் வாழ்க்கையில் நல்ல வாழ்க்கை துணை அமைவதில் பிரச்சனை நல்ல நண்பர்கள் அமைவதில பிரச்சனை எல்லாம் ஏட்டிக்குப் போட்டியாகவே இருக்கும்

ஏழாம் பாவகம் மற்றும் இரண்டாம் பாவகம் கெட்டு விடாமல் இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்

அதேபோல் ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் அடையாமல் இருக்க வேண்டும் அதேபோல் சனி ராகு கேது களின் பார்வையோ அல்லது சேர்க்கை யோ இல்லாமல் இருப்பது நல்லது அதேபோல் சுக்கிரன் 6, 8, 12 ல் மறையாமல் இருப்பது நல்லது கணவன் மனைவி இல்லற வாழ்க்கை இனிக்கும்

பெண் ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருக்க வேண்டும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நிலையை அறிந்தது போல் பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் நிலையை அறிந்து திருமண பொருத்தம் இணைக்க வேண்டும் செவ்வாய் நீசம் அடையாமல் இருக்க வேண்டும் ராகு கேது சனி களின் பார்வையோ அல்லது சேர்க்கை யோ இல்லாமல் இருப்பது நல்லது

அதேபோல் செவ்வாய் சுக்கிரன் இணைவு இருக்கும் ஜாதகத்தில் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் நிலை வலுவாக உள்ளதா என்று நன்றாக கவனிக்க வேண்டும்

ஏழாம் பாவக அதிபதி நீசம் அடைந்து பதினொன்றாம் பாவக அதிபதி வலுத்து இருகிறதா என்று கவனிக்க வேண்டும் அப்படி இருந்தால் இரண்டாவது திருமணம் நடக்கவும் வாய்ப்பு உள்ளது

அதே போன்று தற்போது தசாபுத்தி 6, 8, 12 ம் பாவக அதிபதி தசாபுத்தி இல்லாமல் இருப்பது நல்லது மாரகாதிபதி தசா இல்லாமல் இருப்பதும் நல்லது

பொதுவாக நட்சத்திர பொருத்தம் மட்டும் வைத்து திருமணத்தை முடிவு செய்ய கூடாது

பொதுவாக நட்சத்திர பொருத்தம் மட்டும் வைத்து திருமணத்தை முடித்துவிட்டு பின்பு மன வாழ்க்கை வேதனையாகவே முடிந்து விடுகிறது சிலருக்கு பிரிவும் ஏற்படுகிறது

சிலர் திருமண பொருத்தத்தை நன்றாக பார்க்காமல் நல்ல குடும்ப நல்ல வசதியான குடும்பம் வீடு வாசல் சொத்து பணம் இருக்கு அதனால பொருத்தம் பார்க்காமல் வரன் முடித்து விட்டு பிறகு வருந்துவது வீண். மாப்பிள்ளை அரசு பணியில் இருக்காரு கைநிறய சம்பளம் வாங்குறாரு அப்படினு ஆசை பட்டு பிறகு சிலருக்கு மன வாழ்க்கை போராட்டமாகவே அமைந்து விடும்

அதனால் திருமண பொருத்தத்தை நன்றாக பார்த்து வரன் முடிப்பது நன்று.

16/12/2023

Address

Mullaitivu

Telephone

+94774153103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mullaitivu Velmurugan thevasthanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mullaitivu Velmurugan thevasthanam:

Share

Category