அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நானாட்டான்

  • Home
  • Sri Lanka
  • Mannar
  • அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நானாட்டான்

அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நானாட்டான் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நானாட்டான், Hindu temple, Mannar.

தீர்த்தோற்சவம்
11/09/2022

தீர்த்தோற்சவம்

காவடி பகுதி -2 PC© 👉 Raksan Mathan
11/09/2022

காவடி

பகுதி -2

PC© 👉 Raksan Mathan

ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் மகோற்சவத்தின் நேற்றைய தினம் இடம்பெற்ற தீர்த்தத்தின் போது பக்த அடியார்களின் ஆள் காவ...
11/09/2022

ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் மகோற்சவத்தின் நேற்றைய தினம் இடம்பெற்ற தீர்த்தத்தின் போது பக்த அடியார்களின் ஆள் காவடி மற்றும் பால்செம்பு என்பன எடுத்து வரப்பட்டது அதன்போது காலத்தை காலத்தை நிறுத்திய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

பகுதி-1

PC © 👉 Raksan Mathan

10/09/2022

நானாட்டான் ஶ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் மகோற்சவத்தின் இறுதிநாளான இன்று தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது அதன்போது பக்த அடியார்களினால் காவடி எடுத்துவரப்பட்டது அதன்போது எடுக்கப்பட்ட சிறிய காணொளி

2022 ஆம் ஆண்டிற்கான மகோற்சவத்தில் இன்றைய தினம் தேர்பவனி இடம்பெற்றது இதில் பல பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர் காலை 10.15 ம...
09/09/2022

2022 ஆம் ஆண்டிற்கான மகோற்சவத்தில் இன்றைய தினம் தேர்பவனி இடம்பெற்றது இதில் பல பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர் காலை 10.15 மணி அளவில் தேர்பவனி ஆரம்பமாகி வீதி உலா வந்து 12 மணியளவில் மீண்டும் கோவிலை வந்தடைந்தது
இதன்போது பல பக்த அடியார்கள் தமது பக்தியை வெளிப்படுத்தும் முகமாக காவடி, தீச்சட்டி மற்றும் அங்கப்பிரதட்சணம் என்பனவற்றின் ஊடாக தமது நேர்த்திக் கடன்களை செலுத்தினார்கள்
பிற்பகல் ஒன்று முப்பது மணி அளவில் அம்பாளுக்கு பச்சை சாத்தப்பட்டது.

2022 ஆம் ஆண்டிற்கான மகோற்சவத்தில் இன்று தேர்பவனி ஆரம்பமாக உள்ளது. அனைவரும் வாரீர் அன்னை அருள் பெறுவீர் 🛕
09/09/2022

2022 ஆம் ஆண்டிற்கான மகோற்சவத்தில் இன்று தேர்பவனி ஆரம்பமாக உள்ளது. அனைவரும் வாரீர் அன்னை அருள் பெறுவீர் 🛕

04/09/2022

🛕

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பார் அவ் அன்னதானமானது எமது ஆலயத்தில் பதினோரு நாட்களும் வழங்கப்படும் அவ்வாராக இன்று எடுக...
03/09/2022

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பார் அவ் அன்னதானமானது எமது ஆலயத்தில் பதினோரு நாட்களும் வழங்கப்படும் அவ்வாராக இன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

31/08/2022

அருள்மிகு ஶ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 2022ம் ஆண்டிற்கான மகோற்சவமானது இன்று காலை 11.30 கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பம் ஆகியது

அமரர் . Dr. ச.சக்திபாலன் MBBS ( Sri Jeuwarthanapura ) , MONCID ) , அமரர் திரு.ச.சக்திபாலன் ( MBBS ) அவர்களின் இறப்புச் ச...
06/10/2021

அமரர் . Dr. ச.சக்திபாலன் MBBS ( Sri Jeuwarthanapura ) , MONCID ) , அமரர் திரு.ச.சக்திபாலன் ( MBBS ) அவர்களின் இறப்புச் செய்தியானது எமது ஆலய சபையினரையும் . ஆலயத்திற்குட்பட்ட பொதுமக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆற்றியிருக்கின்றது , இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக எமது ஆலயத்தின் ஆலய பரிபாலன சபையின் மிகமுக்கிய பொறுப்பான போசகர் பொறுப்பையேற்றதுடன் தனது கடினமாக கடமைக்கு மத்தியிலும் போசகருக்குரிய சேவையினை திறம்பட செய்து வந்ததுடன் எமது பகுதி மக்களுக்கு எந்நேரமும் மருத்துவ சேவையினை வழங்குவதில் தயங் கியதும் இல்லை . கடந்த சில வருடங்களாக ஆலயத்தில் நடைபெற்று வருகின்ற அனைத்து திருப்பணி வேலைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபத்திக்கொண்டவர்.
செல்வமுத்துமாரியம்மன் இந்து முன்பள்ளியின் வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்து வந்தவர் எதிர்காலத்தில் இவ் ஆலயத்தின் வளர்ச்சிப்போக்கு பற்றியும் எம்முடன் ஆலோசித்கொண்டிருந்த காலப்பகுதியில் இன்று 06.10.2021 அதிகாலை இவரின் இறப்பு செய்தி எம்மையும் எமது மக்களையும் துன்பத்தில் ஆற்றியுள்ளது.

இவரின் பிரிவால் துயர்படும் மனைவி , பிள்ளைகள், உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எல்லாம் வல்ல ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மனை பிராத்திக்கின்றோம் .

இவரின் பிரிவில் பங்குகொள்ளும்.
ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பொதுமக்கள் , நானாட்டான்.

குறிப்பு :- இறுதி ஈமக்கிரிகைகள் அன்னாரின் வதிவிடமாகிய நானாட்டானில் மதியம் 12 மணியளவில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
-குடும்பத்தினர்-

கொரோனாவால் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தடைபட்டது நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவத் திருவிழாதற்போது ...
11/08/2021

கொரோனாவால் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தடைபட்டது நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவத் திருவிழா

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோ பெருந் தொற்று காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் இறப்பு விகிதமும் அதிகரித்து காணப்படுவதால்
இந்த வருடம் (2021)அம்பிகைக்கான மகோற்சவ திருவிழாவை
பிற்போடுவது என்று ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உபயகாரர்கள் கூடி நேற்றைய தினம் (10)இந்த முடிவை எடுத்துள்ளார்கள்

நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பத்து நாட்களை கொண்ட வருடாந்த மகோற்சவமானது கொடியேற்றம் வசந்தோற்சவம் தேர்த்திருவிழா வேட்டைத்திருவிழா பொதுமக்கள் உபாயம் கற்பூரத் திருவிழா சப்பறத்திருவிழா தீமிதிப்பு என்று பத்து நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்

இந்த வருடமும் மஹோட்சவத்திற்கான அனைத்து முன்னாயத்த வேலைகளும் நிறைவு பெற்று இன்றைய தினம்(11) கொடியேற்றம் நடைபெற இருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றும் மரணமும் அதிகரித்து காணப்படுவதுடன் மன்னார் மாவட்டத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்களுடன் திருவிழாவை நடத்துவதற்கு சுகாதாரத்துறை அனுமதி வழங்கியிருந்தாலும்
திருவிழாவை நடத்துவதற்குரிய குருக்கள் மற்றும் வாத்திய கலைஞர்கள் உட்பட பல அடியவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவேண்டிய உள்ளதால் ஏதேனும் அனர்த்தங்கள் நிகழ்வதற்கு எமது மக்கள் காரணமாக இருந்துவிடக் கூடாது என்ற காரணத்தினால்
சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி மாவட்டத்தையும் மக்களையும் கொரோனா தொற்றியிருந்தது பாதுகாக்கும் உயரிய நோக்கத்தில் நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் இந்த வருட மகோற்சவ பெருவிழா நடத்துவதில்லை என்று ஆலய நிர்வாகத்தினரும் உபயகாரர்களும் முடிவெடுத்திருக்கிறார்கள்

மன்னார் நானாட்டான் பிரதேசததில்
வீற்றிருந்து அருள்பாலிக்கும் நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயம் மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஆலயமாகவும் பழமை மிகு ஆலயமாகவும் காணப்படுகின்றது இந்த ஆலயம் இலங்கையில் ஏற்பட்ட ஆடி கலவரம் காரணமாக 1985 ஆம் ஆண்டு ஆண்டு இதனுடைய மகோற்சவ திருவிழா முதலாவதாக தடைப்பட்டிருந்தது

இலங்கையில் இனக்கலவரம் உச்சம் பெற்றிருந்த 1985ஆம் ஆண்டு தடைபட்டிருந்த இந்த ஆலயத்தின் மகோற்சவ திருவிழா 36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தடைப்பட்டுள்ளது.
என்பதனை மனவருத்ததுடன் அறியத்தறுகின்றோம்

04/12/2020

அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நானாட்டான்

Address

Mannar

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நானாட்டான் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category