Mannar Garage

Mannar Garage Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mannar Garage, Catholic Church, Thlvupadu Road, Eluththoor, Mannar, Mannar Town.

20/11/2023
05/04/2023
01/05/2021

உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்

அனைத்து வாகன சாரதிகளுக்குமான சந்தோசமான செய்தி
18/03/2020

அனைத்து வாகன சாரதிகளுக்குமான சந்தோசமான செய்தி

18/03/2020

மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆம் திகதிவரையான காலத்தில் காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல...

08/07/2019

மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம்
(2019ஆம் ஆண்டு 10ஆம் இலக்கம் திருத்த சட்டம்) அமுலுக்கு வருகின்றது.

01. 18 வயதினை அடைய முன்னர் எந்த ஒரு நபருக்கும் இலகு ரக வாகனம் (light vehicle) ஒன்றினை வீதியில் செலுத்த முடியாது. மேலும் 21 வயதினை அடைய முன்னர் எந்த ஒரு நபருக்கும் கன ரக வாகனம் (heavey vehicle) ஒன்றினை வீதியில் செலுத்த முடியாது.

02. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஒன்றினை முதல் தடவையாக செலுத்துவது ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/=இனை விஞ்ஞாத தண்டப்பணத்தை அறவிடக்கூடிய குற்றமாகும். இரண்டாவது தடவையாக அதே குற்றத்தினை செய்யும் போது ரூபா 30,000/= இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.

03.குறிப்பிட்ட அளவை விட அதிக வேகமாக வாகனத்தினை செலுத்துதல்
(அ).குறிப்பிட்ட அளவைவிட 20% அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 3,000/=இற்கு குறையாயதும் ரூபா 5,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.

(ஆ) குறிப்பிட்ட அளவைவிட 20% முதல் 30% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 5,000/=இற்கு குறையாததும் ரூபா 10,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.

(இ) குறிப்பிட்ட அளவைவிட 30% முதல் 50% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 10,000/=இற்கு குறையாததும் ரூபா 15,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.

(ஈ) குறிப்பிட்ட அளவைவிட 50% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 15,000/=இற்கு குறையாததும் ரூபா 25,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். இந்த தண்டப்பணம் அவ்விடத்திலே அறவிடப்படும் தண்டப்பணத்திற்கு (spot fine) இற்கு மேலதிகமாக அறவிடப்படும்.

04.ரயில்வே கடவைக்கு(Railway Cross மேலாக வாகனத்தை முதல் தடவையாக ஓட்டுதல்
ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். அதே குற்றத்தை இரண்டாவது தடவையாக செய்யும் போது ரூபா 30,000/=இற்கு குறையாததும் ரூபா 40,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 6மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் .அதே குற்றத்தை மூன்றாவது முறையாக செய்யும் போது ரூபா 40,000/=இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் .

05.வாகனம் ஒன்றினை செலுத்தும் போது கையடக்க தொலைபேசியோ அல்லது வேறு ஏதும் சாதனங்களையோ பயன்படுத்தினால் அல்லது கையடக்கத்தொலைபைசியில் பேசினால் முதல் தடவையாக செய்யும் போது ரூபா 2, 500/=இற்கு குறையாததும் ரூபா 7,500/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். அதே குற்றத்தை இரண்டாவது தடவையாக செய்யும் போது ரூபா 7,500/=இற்கு குறையாததும் ரூபா 15,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அதே குற்றத்தை மூன்றாவது முறையாக செய்யும் போது ரூபா 15,000/=இற்கு குறையாததும் ரூபா 25,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். இந்த தண்டப்பணம் அவ்விடத்திலே அறவிடப்படும் தண்டப்பணத்திற்கு (spot fine) இற்கு மேலதிகமாக அறவிடப்படும்.

06.குடி போதையில் வாகனம் ஒன்றினை செலுத்தினால் ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அல்லது 3மாதம் சிறைத்தண்டனை நியமிக்கப்படும். அல்லது சிறைதண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகிய இரண்டும் நியமிக்கப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும்.

07.காப்புறுதி சான்றிதல் பத்திரம் இல்லாமல் வாகனத்தை செலுத்தினால் ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அல்லது 1 மாதம் சிறைத்தண்டனை நியமிக்கப்படும். அல்லது சிறைதண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகிய இரண்டும் நியமிக்கப்படும்.

07/07/2017

முச்சக்கரவண்டி பயணம்! புதிய சட்டம் விரைவில்

35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான சட்டம் தற்போது தயாராகி வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் அதிகமாக முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.

பயணிகள் தங்கள் போக்குவரத்திற்கு அதிகமாக முச்சக்கரவண்டிகளையே பயன்படுத்துகின்றார்கள். இலங்கையில் 8 இலட்சத்திற்கும் அதிகமாக முச்சக்கரவண்டிகள் உள்ளது.

தற்போது பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பு கருதி புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த நாட்களில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

21/05/2017

இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள புதிய போக்கு வரத்து சட்டங்கள் – இலங்கை சாரதிகளே கவனியுங்கள்…

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மோட்டார் போக்குவரத்துச் சட்டம் புதிய நடை முறையை அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது இதன் அடிப்படையில் அதிக தண்டப் பணமும் சாரதி அனுமதிப் பத்திரத்தை இடை நிறுத்தி வைப்பதும் அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.

எனவே சாரதிகள் தங்களில் வாகனத்தில் கீழ்க்காணும் உடைமைகள் சான்றுப் பத்திரங்கள் எல்லாம் சரியாக உள்ளதா என்று ஒரு முறைக்கு இருமுறை பரீட்சித்து பயணிக்கவும்.

சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000

வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும் (Vehicle will be taken to court..)

ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும் வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)

அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
3 முறைக்குமேல் அபராதமும் விதித்தால் 2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும் இதற்க்குமேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமக ரத்துசெய்யபடும்

தயவுசெய்து அதிகம் பகிரவும்..!!

mmg
27/08/2016

mmg

மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்திற்கு புதிய உத்தரவு...இலங்கையின் தர நிர்ணய எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதல் அற்ற மோட்டார் தலைக்கவச...
21/08/2016

மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்திற்கு புதிய உத்தரவு...

இலங்கையின் தர நிர்ணய எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதல் அற்ற மோட்டார் தலைக்கவசங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக எதிர்வரும் செம்டம்பர் முதலாம் திகதியிலிருந்து சுற்றிவளைப்புகள் மெற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தலைக்கவசங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளின் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ். 517 தர முத்திரை கட்டாயப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகம் பதிவாகியுள்ளதுடன், அதற்கு காரணம் தரமற்ற தவைலக்கவசம் என தெரியவந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Address

Thlvupadu Road, Eluththoor, Mannar
Mannar Town
41000

Telephone

+94771809772

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannar Garage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share