30/07/2026
குருத்துவ பணி வாழ்வில் புதிய
ஆண்டில் காலடி பதிக்கும் எம் பங்கின் பங்குத்தந்தை அருட்பணி : பிரசாந்தன் அடிகளார்.
"அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு, எனவே, அறுவடையின் ஆண்டவர் தமது அறுவடைக்கு ஆட்களை அனுப்பும்படி அவரிடம் வேண்டுங்கள்." (மத்தேயு 9:37-38)
என்ற இறைவார்த்தையின்படி, மன்னார் மண்ணில் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தை உழுது, களைகளைப் பறித்து, நல்விதை தூவி, ஆன்மீகப் பயிர்களைக் காத்து வரும் உங்களின் உழைப்பு விலைமதிப்பற்றது.
சவால்கள் நிறைந்த இப்பூவுலகப் பயணத்தில், உலகக் கவலைகளையும் மனித பலவீனங்களையும் தாண்டி, நற்செய்தியின் நறுமணத்தை எங்கும் பரப்பிவரும் உங்களின் குருத்துவப் பயணம் பலருக்கு ஒரு நல் வழிகாட்டியாகும்.
அருட்தந்தையார்களே!
உங்கள் ஒவ்வொருவரையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது திரு இருதயத்தின் அன்பால் பொழிந்து ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.
சிலுவைச் சுமக்கும் பயணத்தில் ஏமாற்றங்களும், களைப்புகளும் வந்தாலும், உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர் என்ற நம்பிக்கையோடு"ஆண்டவரே, நீர் எங்கு சென்றாலும் பின் தொடர்வேன்" என்ற உறுதியோடு உங்கள் பணிகளை தொடருங்கள்.
பலவீனப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையிழந்த மக்களுக்கு ஒளியாகவும், ஏழை எளியோரின் குரலாகவும் உங்கள் கரங்கள் எப்போதும் விளங்க வேண்டும்.
நாளும் பீடத்தில் பலியாகும் அந்த உயர்ந்த தியாகம், உங்கள் சொந்த வாழ்விலும் பிறருக்காக எரிக்கப்படும் நறுமணத் தைலமாக மாறட்டும்.
அன்னை மரியாவின் மாசற்ற திருஇதயமும், புனித யோசேப்பின் நிழலும் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்தட்டும். உங்கள் திருப்பணிகள் அனைத்தும் நூறு மடங்காகப் பலன் பெறவும், உங்கள் உடல் மற்றும் உள்ள நலனுக்காகவும் தொடர்ந்து செபிக்கின்றோம்
இனிய குருத்து தின நல்வாழ்த்துகள்🫂💐🙌☦️🎂