Jamiul Ashar Jummah Masjid Thalgaspitiya

Jamiul Ashar Jummah Masjid Thalgaspitiya Assalamu Alaikkum warahmathullahi wabarakathuhu Alhamdulillah a Great Service From our Mosque

இஸ்லாம் கூறும் வாரிசுரிமை/சொத்துப் பங்கீடு குறித்த சட்டங்கள் சுருக்கமாக இங்கே விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. இயலுமான அன்பர்க...
22/02/2024

இஸ்லாம் கூறும் வாரிசுரிமை/சொத்துப் பங்கீடு குறித்த சட்டங்கள் சுருக்கமாக இங்கே விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. இயலுமான அன்பர்கள் இதனை பெணராக வடிவமைத்து தங்கள் மஸ்ஜிதுகளில் மக்கள் பார்வைக்கு விடுங்கள். மங்கி வரும் பாகப் பிரிவினை பற்றிய கலையை உயிர்ப்பிப்பதன் ஊடாகவே சீதனம் உள்ளிட்ட பல்வேறு சமூக கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும், இன்ஷா அல்லாஹ்!

Alhamdulillah... ஒவ்வொரு முதலாளிகளும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல குணம்.அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின...
01/05/2023

Alhamdulillah... ஒவ்வொரு முதலாளிகளும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல குணம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்" என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.
நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத்தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். "அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னேன்.
மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த எதைப் பற்றியும் "இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?" என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் "நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?" என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதாக எனக்குத் தெரியவில்லை.

ஸஹீஹ் முஸ்லிம் : 4626.
அத்தியாயம் : 43. நபிமார்களின் சிறப்புகள்

3 Times Umma Dan. 4th Dan Vappa.அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ...
19/11/2022

3 Times Umma Dan. 4th Dan Vappa.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். அவர் "பிறகு யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். அவர் "பிறகு யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். அவர் (நான்காவது முறையாக) "பிறகு யார்?" என்று கேட்டதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் தந்தை" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?" என்றே இடம்பெற்றுள்ளது. "மக்களில் (மிகவும் தகுதியானவர் யார்?)" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

ஸஹீஹ் முஸ்லிம் : 4979.
அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

Assalamu Alaikum Varahmathullahi Vabarakathuhu....كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُم...
17/11/2022

Assalamu Alaikum Varahmathullahi Vabarakathuhu....

كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

(அல்குர்ஆன் : 3:185)

وَ مَنْ يَّعْمَلْ سُوْٓءًا اَوْ يَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ يَسْتَغْفِرِ اللّٰهَ يَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِيْمًا‏எவரேனும...
09/11/2022

وَ مَنْ يَّعْمَلْ سُوْٓءًا اَوْ يَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ يَسْتَغْفِرِ اللّٰهَ يَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِيْمًا‏

எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.

(அல்குர்ஆன் : 4:110)

31/12/2021
*💕 இஸ்லாத்தில் பெண்கள் தலை முடியை வெட்டலாமா?💕*• இஸ்லாத்தில் ஒரு பெண் தலை முடியை வெட்ட எந்த தடையும் கிடையாது! ஆனாலும் அதற...
23/09/2021

*💕 இஸ்லாத்தில் பெண்கள் தலை முடியை வெட்டலாமா?💕*

• இஸ்லாத்தில் ஒரு பெண் தலை முடியை வெட்ட எந்த தடையும் கிடையாது! ஆனாலும் அதற்கு சில ஒழுகங்களை நாம் பேன வேண்டும்!

• இன்றும் அனேக மக்கள் பெண்கள் தலை முடி வெட்டுவதை பாவ செயலாகவே பார்க்கிறார்கள்!

• இன்னும் சிலர் பெண்கள் தலை முடி வெட்ட கூடாது என்பதற்க்கு பெண்கள் தலை முடி வெட்டினால் கபூரில் இவ்வளவு வேதனை அல்லாஹ் கொடுப்பான் நரகத்தில் இவ்வளவு வேதனை கிடைக்கும் என்று எல்லாம் கட்டுக்கதை கூறுகிறார்கள் ஆனால் இவ்வாறு கூறுவது குற்றமான செயல் ஆகும்!

*• நபி (ஸல்) அவர்கள் மனைவிமார்கள் கூட தங்கள் தலை முடிகளை வெட்டி உள்ளார்கள்! இமாம் நவாவி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒரு பெண் முடி வெட்டலாம் என்று கூறி உள்ளார்கள்!*

(நூல் : அல் ஹயாத் : 320)

*💟 ஒரு பெண் முடி வெட்ட அனுமதிக்கப்பட்ட காரணங்கள் :*

1) ஒரு பெண் தன்னுடைய கணவனை கவர தன்னுடைய தலை முடியை சிறிது குறைத்து கொள்ளலாம்!

2) நீண்ட முடியை பராமரிப்பது சிரமமாக உள்ளது என்றால் சிறிது தலை முடியை குறைத்து கொள்ளலாம்!

3) ஏதேனும் நோய் காரணமாக ஒரு பெண் முடியை வெட்டலாம்!

• இந்த செயல்களுக்கு மட்டும் இஸ்லாத்தில் ஒரு பெண் முடியை வெட்ட அனுமதி உண்டு!

*💟 பெண்கள் எந்த காரணங்களுக்கு முடி வெட்ட கூடாது :*

1) அந்நிய ஆண்கள் முன் ஒரு பெண் தன்னை அழகாக காட்ட தலை முடியை வெட்ட கூடாது இது ஜினா (விபச்சாரம்) ஆகும்!

2) பெண்கள் தலை முடியை வெட்டுவது காஃபிர்களின் வழிமுறையை சார்ந்து இருக்க கூடாது அவர்களை போன்று வெட்ட கூடாது!

3) முடியை மிகவும் குறைவாக வெட்டுவது அல்லது முன்னால் மட்டும் வெட்டுவது அல்லது முடியை குறைந்து கொண்டு இரண்டு பக்கம் மட்டும் முடியை நீண்டதாக விடுவது இவை எல்லாமே தெளிவான ஹராம் ஆகும்! இவ்வாறு எல்லாம் ஒரு பெண் முடி வெட்ட கூடாது!

4) ஆண்களை போன்றும் ஒரு பெண் தன்னுடைய தலை முடியை வெட்ட கூடாது!

5) தலை முடியை வெட்டுவது ஓரு பெண்ணாக தான் இருக்க வேண்டும் அந்நிய ஆண்கள் வெட்ட கூடாது!

6) ஒரு பெண் தன்னுடைய முடியை வெட்ட திருமணம் ஆகி இருந்தால் கணவன் அனுமதி பெற வேண்டும் திருமணம் ஆக வில்லை என்றால் பொறுப்புதாரிகள் அனுமதி பெற வேண்டும்!

*மார்க்கத்தில் சரியான வழியில் நடடக்க அல்லாஹ் அருள் செய்வானாக 💞*

Address

Kurunegala
60036

Opening Hours

Monday 04:30 - 20:30
Tuesday 04:30 - 20:30
Wednesday 04:30 - 20:30
Thursday 04:30 - 20:30
Friday 04:30 - 20:30
Saturday 04:30 - 20:30
Sunday 04:30 - 20:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiul Ashar Jummah Masjid Thalgaspitiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share