St jemes church Nachchikkuda

St jemes church Nachchikkuda Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St jemes church Nachchikkuda, Church of Christ, Kilinochchi.

26/07/2021

புனித யாகப்பரின் வரலாறு

புனித யாக்கோபு - திருத்தூதர் விழாதிருத்தூதரான புனித யாக்கோபு, திரு அவை பாரம் பரியத்திலே பெரிய யாகப்பராகவும், சந்தியாகப்ப...
24/07/2021

புனித யாக்கோபு - திருத்தூதர் விழா

திருத்தூதரான புனித யாக்கோபு, திரு அவை பாரம் பரியத்திலே பெரிய யாகப்பராகவும், சந்தியாகப்பராகவும் அறியப்படுகிறார். இயேசுவின் உறவினர் என்று சொல்லப்படும் இவர் இயேசுவால் அழைக்கட்ட பின்பு இயேசுவோடு பயணித்த சீடர்களில், இவரும் ஒருவராக திகழ்கிறார். யாக்கோபு இயேசுவோடு மிகவும் முக்கியமான தருணங்களில் உடனிருந்திருக்கிறார். பலவீனங்கள் பல அவரிடம் இருந்தாலும் இறைவனுக்கு சான்று பகர்ந்து இறையன்பின் பாலமாகினார். பலவீனத்துடன் படிப்பறிவும் இல்லாமல் போனாலும் பரமனின் அருள் பெற்று சவால்களையெல்லாம் தாண்டி பக்குவமாய் இறைப்பணி செய்து இன்னுயிர் ஈந்து திருத்தூதர்களில் முதல்மறை சாட்சி ஆனார். நாமும் இப்புனிதரின் வழிநடந்து, அவரைப் போல இறைவனில் பற்றுருதி கொள்வோம். அழைத்தவரின் அன்பில் இணைந்து அவரின் சாட்சிகளாவோம். இன்னுயிர் ஈவது மட்டும்மல்ல நமது வாழ்வை இறைவனுக்குதந்த முறையில் வாழ்வது கூட சாட்சிய வாழ்வே. வலிகள், சவால்களை தாண்டி இறைக் கரம் பற்றி அவர் பின்செல்வோம்; இருகரம் தந்து உன்னையும் உயர்த்திடுவார் ஒரு நாள்.

05/04/2021

🛐🛐🛐🛐🛐🛐🛐

*05.04.2021*

*இன்றைய மறையுரை

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.'
திருத்தூதர் பணிகள் 2:28

இறை இயேசுவில் இனிய உறவுகளே!

உயிர்ப்பின் நிறைவை சிறப்பாகக் கொண்டாடி பாஸ்கா காலத்தில் மகிழ்ச்சியோடு பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்துகின்றேன்.

நாளை நடக்க இருப்பதை இன்றே கடவுளால் உணர்த்தப்பட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்ற புனித தோமினிக் மற்றும் புனித பிரான்சிஸ் இவர்களோடு காட்சிகளால் பேசும் திறன் பெற்ற கடவுளின் நண்பராக வாழ்ந்த புனித வின்சென்ட் பெரரின் நினைவே நன்றியோடு அன்னையும் திருஅவை கொண்டாடும் இந்நாளில் நாம் உயிர்ப்பின் மகிழ்ச்சியை பிறரோடு பகிர்ந்து கொள்ள அழைக்கப் படுகின்றோம்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு பாதாளத்தின் மீதும் வெற்றிக் கொள்ள முடியும் எத்தகைய துன்பங்கள் நம்மை சூழ்ந்து இருந்தாலும் மீண்டு எழுந்து வர முடியும் என்னும் நம்பிக்கை தருவதாக அமைகின்றது.

அன்பார்ந்தவர்களே !

மகிழ்ச்சியான உள்ளம் மனதில் ஏற்படும் நெருடல் களையும் கவலைகளையும் உடலில் ஏற்படும் நோய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தது என்று சொல்லுவார்கள்.

எங்கே மகிழ்ச்சி இருக்கிறதோ அங்கே அன்பு இருக்கும்.

எங்கே மகிழ்ச்சி இருக்கிறதோ அங்கு அமைதி இருக்கும்.

எங்கே மகிழ்ச்சி இருக்கிறதோ அங்கே நம்பிக்கை இருக்கும்.

இந்த மகிழ்ச்சியை, நிறைவை, அன்பை, நம்பிக்கையை வெற்று கல்லறையில் எருசலேம் நகரப் பெண்கள் கண்டுகொண்டார்கள்.

முதல் நற்செய்தி பணியாளர்களாக பெற்றுக் கொண்ட நம்பிக்கையை மகிழ்ச்சியை சீடர்களிடம் பகிர்ந்திட இயேசுவைத் தேடி சென்ற பெண்கள் ஓடிவருகிறார்கள்.

பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியை, நம்பிக்கையை பேதுரு தலைமைச் சங்கத்தின் அறிக்கை விடுகிறார்.

இயேசு உயிர்த்தார் என்னும் மகிழ்ச்சியே நம்பிக்கையோடு பெற்றுக் கொண்ட நாம் பெற்ற மகிழ்ச்சியை பிறரிடம் பகிர்ந்து அழைக்கப் படுகின்றோம்.

நாசரேத்தூர் இயேசுவின் பெயரால் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்த திருத்தூதர்கள் போன்று உயர்த்த ஆண்டவரின் பெயரால் உண்மையான அன்போடும் நட்போடும் பகிர்தலோடும் வாழ அழைக்கப் படுகிறோம்.

இயேசுவை சீடர்களுக்கு ஓடிச் சென்று அறிவித்த பெண்களைப் போன்று செல்லும் இடமெல்லாம் நற்செய்தியின் பணியாளர்களாக வாழ அழைக்கப் படுகிறோம்..

திரும்பும் திசை எல்லாம் இறைவனைக் கண்டிட,
பார்க்கும் மனிதர்கள் இறைவனை வெளிப்படுத்திட, செய்யும் செயல்கள் யாவும் இறை பிரசன்னத்தை இவ்வுலகிற்கு வழங்கிட... வாழ்த்துக்களையும் ஜெபங்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன் ஆமென்.

🛐🛐🛐🛐🛐🛐🛐

31/12/2020
30/11/2020

டிசம்பர் 1 நற்செய்தி வாசகம்

29/11/2020

நவம்பர்30 நற்செய்தி வாசகம்

28/11/2020

நவம்பர்29 நற்செய்தி வாசகம்

27/11/2020

நவம்பர்28 நற்செய்தி வாசகம்

26/11/2020

நவம்பர்27நற்செய்தி வாசகம்

25/11/2020

நவம்பர்26நற்செய்தி வாசகம்

23/11/2020

நவம்பர்24நற்செய்தி வாசகம்

Address

Kilinochchi
44000

Alerts

Be the first to know and let us send you an email when St jemes church Nachchikkuda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share