24/06/2026
நன்றியுரை
----------------------
பராபவ வருட ஆனி உத்திர மகோற்சவத்தை நிறைவேற்றிட திருவருள்புரிந்த கணபதீஸ்வரப் பெருமான் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமிக்கு முதற்கண் மனம் வாக்கு காயங்களால் எமக்கு இத் தெய்வ பணியை ஆற்ற வாய்ப்புத் தந்தமைக்கு எமது சிரம்தாழ்த்திப் பணிகின்றோம்.
மகோற்சவங்களையும் முன்வந்து நிறைவேற்றிய உபயக்காரர்களுக்கு முதற்கண் எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த முறை மகோற்சவம் சிறப்பாக நடைபெற தமது ஒத்துழைப்பை வழங்கி, தெய்வப் பணிக்கு தாமாக முன்வந்து தொண்டாற்றியோர் அனைவருக்கும் நன்றிகள்
மகோற்சவத்தை முறைப்படி நிறைவேற்றிய பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் சிவாகம சாகரம் மாரீசக்குருக்கள் அவர்களுக்கும் மற்றும் அவரது பாரியார் ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
ஆலய நித்திய குரு பிரம்மஸ்ரீ கோகுலன் சர்மா அவர்களுக்கும் எமது நன்றிகள்.
மண்டப உதவியாளர் பிரம்மஸ்ரீ உமாசங்கர் சர்மா மற்றும் பிரம்மஸ்ரீ கஜவிந்தன் சர்மா அவர்களுக்கும் அயல் கிராம ஆலய குருமாருக்கும் எமது நன்றிகள்.
சுவாமி பிரசாதம் முதலானவற்றையும் நாளாந்த உணவு தயாரிப்பு பணிகளையும் ஆற்றிய பிரம்மஸ்ரீ அழகேஸ்வர சர்மா அவர்களுக்கும் எமது நன்றிகள்.
ஆலய விழாக்காலத்தில் மங்கல இசை வழங்கிய வடிவேலு வரதன் மற்றும் கண்ணன் குழுவினருக்கும்
ஒலிபெருக்கி ஒளி உதவி சேவையாற்றிய சுவிக்சன் நிறுவனத்தினருக்கும் சுவாமி அலங்கார பூமாலை தொண்டாற்றிய செல்வநாயகம் ஆகியோர்களுக்கும் ,
நேரடி ஒளிபரப்பு செய்து தூர தேசத்தில் இருக்கும் மக்களுக்கு திருவிழாவை கொண்டு சேர்த்த RMM டிவி நிறுவனத்தாருக்கும் எமது நன்றிகள்.
பலவேலை பணியாளர்களாகிய ஸ்ரீ மற்றும் நகுலன் ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
உபயதாரர்களின் பங்களிப்பாக நடைபெற்ற அன்னதானம் வழங்கலை குறைவுபடாமல் செயல்படுத்திய அன்னதான குழுவிற்கும் தேவையான வாகனங்கள் சப்பர சகடைகள் உதவிய அயற்கிராம ஆலய பரிபாலசபையினருக்கும் எமது நன்றிகள்.
இவ்வண்ணம்,
ஆலய தர்மகர்த்தா
சிவன் தேவஸ்தானம்