Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee

Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee Founder of Al Haj Abdul Jawath Alim Waliyyullah Trust (AJAWT),
Incorporated by act parliament No 46

Founder of Al Haj Abdul Jawath Alim Waliyyullah Trust incorporated by act parliament No 46 of 2009.

“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே!தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆ...
22/08/2026

“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

இக் கொள்கை “குப்ர்” என்று கூறும் உலமா சபைத் தலைவரும், அதன் உறுப்பினர்களும் அதே கொள்கையைப் பகிரங்கமாகப் பேசியும், எழுதியும் வந்தவர்களான இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ ஆகியோரை அவர்கள் வெளியிட்ட “ஏகத்துவத்தில் ஊடுருவல்” என்ற “பத்வா” நூல் 22ம் பக்கம் “விடை” என்ற தலைப்பின் இரண்டாம் பந்தியில் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.

(நான்கு மத்ஹபுகளின் மேதைகளாம் இமாம்கள் அபூ ஹனீபா, மாலிக், ஷாபிஈ, அஹ்மத் பின் ஹன்பல் (றஹ்) ஆகியோரும், இவர்களைப் பின்பற்றியவர்களும், இஸ்லாமிய சித்தாந்த மேதைகளுமான மாதுரீதீ, அஷ்அரீ (றஹ்), அபூ மன்சூர் அல் பக்தாதீ, அந்நவவீ, இப்னு அறபீ, ஙஸ்ஸாலீ, அஷ்ஷஃறானீ அஸ்ஸுயூதீ (றஹ்) போன்ற ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்றெல்லாம் கூறப்படும் சகல ஞானங்களிலும் ஆழ்ந்த அறிவு பெற்று விளங்கிய மா மேதைகளின் தெளிவான போதனைகளின் அடிப்படையிலேயே எமது விடை அமைந்திருக்கும்) என்று எழுதியுள்ளார்கள்.

அதாவது இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் இப்னு அறபீ, இமாம் ஷஃறானீ ஆகிய மூன்று பேர்களையும் குறிப்பிட்டு இவர்கள் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்றெல்லாம் கூறப்படும் சகல ஞானங்களிலும், ஆழ்ந்த அறிவு பெற்று விளங்கிய மா மேதைகள் என்று எழுதியுள்ளார்கள்.

குறித்த மூவரும் பெரும் மகான்கள் என்று எழுதிய உலமா சபை முப்தீகள் இம் மூவரும் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தை தமது நூல்களில் எழுதியவர்கள் என்பதை அறியாமலா மேற்கண்டவாறு அவர்களைப் புகழ்ந்துள்ளார்கள்? இப்படியும் ஓர் அறியாமையா?

இந்த அறிவிலிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக, இம் மூவரும் “வஹ்ததுல் வுஜூத்” இறையியலின் “கிங்” அரசர்கள் என்பதை உணர்த்துவதற்காக இவர்கள் மூவரும் கூறிய தத்துவத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

முடிவில் இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் தங்களின் ஞானப் பெட்டகம் “இஹ்யாஉ உலூமித்தீன்” என்ற நூலில் எழுதியுள்ள “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை சுருக்கி எழுதுகிறேன். இவர்களை யாரென்று சொல்வார்களோ?

'إِذْ لَيْسَ فِى الْوُجُوْدِ تَحْقِيْقًا إِلَّا اللهُ وَأَفْعَالُهُ '
)إحياء علوم الدين، كتاب آداب السّماع والوَجْدِ(

குறித்த இந்தப் பாடத்தில் முன், பின் தொடரை வாசித்து கூறப்படும் சுருக்கத்தை அறிந்து கொள்ளவும்.

إِذْ لَيْسَ فِى الْوُجُوْدِ شَيْءٌ سِوَى اللهِ تَعَالَى وَأَفْعَالِهِ،
(إحياء علوم الدين، كتاب شرح عجائب القلب)

குறித்த இந்தப் பாடத்தில் முன், பின் தொடரை வாசித்து சுருக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

فَالرُّتْبَةُ الأُوْلَى من التوحيد هي أن يقول الإنسان بِلِسَانِه {لا إله إلا الله} وقلبُه غافلٌ عنه أو منكرٌ له كتوحيد المنافقين،

والثانيةُ أن يُصدِّقَ بمعنَى اللَّفْظِ قلبُه كما صدَّق به عمومُ المسلمين وهو اعتقاد العوامّ،

والثالثةُ أن يُشَاهِدَ ذلك بطَريق الْكَشْفِ بواسطةِ نورِ الحقِّ، وهو مقامُ المُقرَّبين، وذلك بأن يرى أشياءَ كثيرةً، ولكن يراها على كثرتِها صادرةً عن الواحد القهّار،

والرابعة أن لا يَرَى في الوجود إلا واحدًا، وهي مُشاهدةُ الصِّدِّيقينَ، وتُسمِّيه الصوفيةُ الفناءَ في التوحيد، لأنَّه من حيثُ لا يرَى إلَّا واحداً فلا يرَى نفسَه أيضًا، وإذا لم يرَ نفسَه لكونه مستغرقًا بالتوحيد كان فانيًا عن نفسِه في توحيده بمعنى أنه فني عن رؤية نفسه والخلق،
(إحياء علوم الدين، كتاب التوحيد والتَّوكُّل)

فَإِنَّ مَنْ عَرَفَ نَفْسَهُ وَعَرَفَ رَبَّهُ عَرَفَ قَطْعًا (أَنَّهُ لَا وُجُوْدَ لَهُ مِنْ ذَاتِهِ، وَإِنَّمَا وُجُوْدُ ذَاتِهِ وَدَوَامُ وُجُوْدِهِ وَكَمَالُ وُجُوْدِهِ مِنَ اللهِ وَإِلَى اللهِ وَبِاللهِ، فهو المخترع الموجد له وهو المبقي له وهو المكمل لوجوده بخلق صفات الكمال وخلق الأسباب الموصلة إليه ذو خلق الهداية إلى استعمال الأسباب،وَإِلَّا فَالْعَبْدُ مِنْ حَيْثُ ذَاته لا وجودَ له من ذاتِه، بلْ هُوَ مَحْوٌ مَحْضٌ وَعَدَمٌ صِرْفٌ، (إحياء علوم الدين، كتاب المحبّة والشَّوْقِ وَالْأُنْسِ وَالرِّضَا)

وَلَيْسَ فِى الْوُجُوْدِ إِلَّا ذَاتُهُ وَأَفْعَالُهُ،
(إحياء علوم الدين، كتاب المحبّة والشَّوْقِ وَالْأُنْسِ وَالرِّضَا)

وأن الأرواح النّبَوِيَّةَ القُدسيَّة مُقْتَبَسَةٌ مِنَ الْأَرْوَاحِ الْعُلْوِيَّةِ اِقْتِبَاسَ السِّرَاجِ مِنَ النُّوْرِ؛ وَأَنَّ الْعُلْوِيَّاتِ بَعْضَهَا مُقْتَبَسَةٌ مِنَ الْبَعْضِ، وَأَنَّ تَرْتِيْبَهَا تَرْتِيْبُ مَقَامَاتٍ، ثم ترقي جملتها إلى نور الأنوار ومعدنها ومنبعها الأول؛

وأن ذلك هو الله تعالى وحده لا شريك له، وأن سائر الأنوار مستعارة، وَإِنَّمَا الْحَقِيْقِيُّ نُوْرُهُ فَقَطْ؛ وَأَنَّ الْكُلَّ نُوْرُهُ، بَلْ هُوَ الْكُلُّ، بَلْ لَا هُوِيَّةَ لِغَيْرِهِ إِلَّا بِالْمَجَازِ، (مشكاة الأنوار، صفحة 28، للإمام الغزالي)

இது வரை இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக எழுதிய குறிப்புக்களை எழுதினேன். இப்போது தமது “பத்வா”வில் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களைப் புகழ்ந்து எழுதிய முல்லாக்கள் தலை குனிவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இமாம் ஙஸ்ஸாலீ அவர்களைப் புகழ்ந்த முல்லாக்களும், முப்தீகளும் இதன் பிறகு அவர்களையும் “முர்தத்” என்று “பத்வா” வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.

முஸ்லிம்கள் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களை “முர்தத்” என்று நம்பியதால்தான் முஸ்லிம் அரசாங்கப் பாடசாலைகளில் காலைக் கூட்டங்களின் போது படித்து வந்த ஙஸ்ஸாலீ இமாம் அவர்களைக் கொண்டு “வஸீலா” தேடும் பாடல்களை நிறுத்திவிட்டார்கள் போலும். இதோ அப்பாடல்கள்.

نَوِّرْ إلهَ السَّمَا قَلْبَ الْغَرِيْبِ كَمَا
نَـوَّرْتَ قَلْبَ إِمَامِ الـنَّاسِ غَزَّالِيْ
يَا رَبِّ أَعْطِ لَنَا عِلْمًا وَفَهْمًا كَمَا
أَعْطَيْتَ يَا رَبَّـنَا لِلـشَّـيْخِ غَزَّالِيْ
يَـا رَبِّ يَـسِّـرْ لَنَا كُلَّ الْأَمُوْرِ كَمَا
يَسَّرْتَ يَا رَبَّنَـا لِـلْهَادِيْ غَـزَّالِيْ
يَا رَبِّ بَـلِّـغْ لَـنَـا كُلَّ الْمُرَادِ كَمَا
بَلَّغْتَ يـَا رَبَّنَا مَـقْـصُوْدَ غَـزَّالِيْ
يَا رَبِّ اِقْبَلْ دُعَانَا يَا مُـجِيْبُ كَمَا
قَبِلْتَ يَا رَبَّـنَـا لِـلْـعَـالِ غَـزَّالِيْ

இப்னு அறபீ நாயகம் தொடர்பான விபரம் தொடரும்.

என்னைக் கவர்ந்த வரிகள்!أَوَّلُ مَنْ كَفَرَ - إِبْلِيْسُ لَعْنَةُ اللهِ عَلَيْهِأَوَّلُ مَنْ قَتَلَ - قَابِيْلُأَوَّلُ مَ...
15/08/2026

என்னைக் கவர்ந்த வரிகள்!

أَوَّلُ مَنْ كَفَرَ - إِبْلِيْسُ لَعْنَةُ اللهِ عَلَيْهِ
أَوَّلُ مَنْ قَتَلَ - قَابِيْلُ
أَوَّلُ مَنْ كَتَبَ - إِدْرِيْسُ عَلَيْهِ السَّلَامُ
أَوَّلُ مَنْ صَامَ - نُوْحٌ عَلَيْهِ السَّلَامُ
أَوَّلُ مَنْ خَطَبَ - إِبْرَاهِيْمُ عَلَيْهِ السَّلَامُ
أَوَّلُ مَنْ هَاجَرَ - لُوْطٌ عَلَيْهِ السَّلَامُ

خادم الطائفة الصوفيّة،
الشيخ عبد الرؤوف المصباحي البهجي،

முஸ்லிம் சகோதரா!  أيّها الأخ المسلم! إذا رأيت أباك المُتوفَّى فى المنام فَانْتَبِهْ، إن كان ساكتا فهو يحتاج إلى دعائك، و...
10/08/2026

முஸ்லிம் சகோதரா!

أيّها الأخ المسلم! إذا رأيت أباك المُتوفَّى فى المنام فَانْتَبِهْ،
إن كان ساكتا فهو يحتاج إلى دعائك، وإن كان مُبتسِما فهو فى منزلةٍ طيّبةٍ، وبُشرى لك،
أمّا إن كان حزينا أو يبكي فَرُبَّما يَحتاجُ إلى صدقةٍ أو قضاء دينٍ وإن أَعْطَاكَ شيئا فهو رزقٌ قادمٌ إليك،

உனது மரணித்த தந்தையை நீ கனவில் கண்டால் சற்று எச்சரிக்கையாக இருந்து கொள்.

அவர் மௌனியாக இருக்கும் நிலையில் நீ கண்டால் அவர் உனது “துஆ” பிரார்த்தனையை எதிர்பார்க்கிறார் என்று புரிந்து கொள். அவர் புன்னகைத்தவராக - மகிழ்ச்சியுடையவராக இருக்க நீ கண்டால் அவர் நல்ல பதவியில் இருக்கின்றார் என்று புரிந்து மகிழ்ச்சி அடைந்து கொள். இது உனக்கு ஒரு நற் செய்தியாகவும் இருக்கும். அவர் கவலையுள்ளவராக இருக்க நீ கண்டால் அல்லது அழுது கொண்டிருக்க நீ கண்டால் அவர் பெயரால் - அவருக்காக தான தருமம் செய். அல்லது அவரின் கடனைக் கொடுத்துவிடு. அவர் ஏதாவது உனக்குத் தருபவராக நீ கண்டால் அது உனக்கு ஒரு நற்பாக்கியமாகும் என்று விளங்கிக் கொள்.

قَالَ النبيُّ صلى الله عليه وسلّم: خَيْرُ الرُّؤْيَا أَنْ يَرَى الْعَبْدُ رَبَّهُ فِى مَنَامِهِ، أَوْ يَرَى نَبِيَّهُ أَوْ أَبَوَيْهِ إِنْ كَانَا مُسْلِمَيْنِ،

“கனவுகளில் சிறந்த கனவு அடியான் தனது கனவில் தனது இறைவனைக் காண்பதாகும். அல்லது தனது நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் காண்பதாகும். அல்லது தனது பெற்றோர் முஸ்லிம்களாயிருந்தால் அவர்களைக் காண்பதாகும்” என்று நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.

நபீ அவர்களுக்கு உருவம் உண்டு. ஆகையால் அவர்களைக் கனவில் காணலாம். பெற்றோருக்கும் உருவம் உண்டு. ஆகையால் அவர்களையும் காணலாம். உருவமில்லாத இறைவனை எவ்வாறு காண்பது?

இக்கேள்விக்கான பதிலை எனது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். அல்லது எனது பேச்சுள்ள ஒலி நாடாவைக் கேட்பவர் தெரிந்து கொள்ளலாம். அல்லது என்னை நேரில் சந்திப்பவர் அறிந்து கொள்ளலாம். முப்தீகளாயிருந்தாலும், முல்லாக்களாயிருந்தாலும் சரியே!

AJAR

திரு நகர் ஏர்வாடியில் கொலுவீற்றிருக்கும் மகான், குத்புல்லாஹ், ஷஹீதுல்லாஹ் இப்றாஹீம் வலிய்யுல்லாஹ் நாயகமே!السلام عليكم يا...
04/08/2026

திரு நகர் ஏர்வாடியில் கொலுவீற்றிருக்கும் மகான், குத்புல்லாஹ், ஷஹீதுல்லாஹ் இப்றாஹீம் வலிய்யுல்லாஹ் நாயகமே!

السلام عليكم يا قطب الله ويا شهيد الله إبراهيم الشّهيد اليربادي رضي الله عنه،

தற்போது நான் இலங்கைத் திரு நாட்டில் வசிக்கிறேன். 1966ம் ஆண்டும், 67ம் ஆண்டும் நான் இந்தியாவில் இருந்த காலத்தில் என்னால் முடிந்தவரை ஏர்வாடி வந்து உங்களைப் பல முறை “சியாறத்” செய்துமுள்ளேன். உங்களிடம் பல உதவிகள் கேட்டு அவற்றைப் பெற்றுமிருக்கிறேன். இதன் பிறகும் உங்களைப் பல முறை தரிசிக்க வந்துமுள்ளேன்.

நான் இலங்கைத் திரு நாட்டில் வாழ்ந்தாலும் கூட உங்களை ஒரே நாளில் பல முறை நினைத்து என்னால் முடிந்த ஓதல்களை ஓதி அவற்றின் ثَوَابْ நன்மையை உங்களின் ஆன்மாவுக்கு அன்பளிப்புச் செய்து கொண்டே இருக்கிறேன்.

நீங்கள் என்னுடைய எதிர்காலம் சிறப்பாகவும், “பறகத்” உள்ளதாகவும் அமைய எனக்காக “துஆ” செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களின் காதிம்,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.

ஏர்வாடியில் வாழும் எனதன்பிற்குரிய முரீதீன்களே! என்னிடம் “பைஅத்” ஞான ஒப்பந்தம் செய்து கொண்ட அன்பிற்குரியவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்!

அல்லாஹ்வின் அருளால் நான் நலமாக உள்ளேன். நீங்கள் நலமாக வாழ “துஆ” செய்கிறேன்.

என்னிடமிருந்த உங்களின் முகவரியும், தொலைபேசி எண்களும் காணாமற் போய்விட்டன. இதனால் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியாமற் போய்விட்டது.

எனவே, குறித்த இரண்டையும் எனக்கு அனுப்பி வைக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

அஷ்ஷெய்கு மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.
04.08.2026

ஜனாஸா பற்றிய அறிவித்தல். ஜயப்புர கிராமம், நம்பர் 80 இல் வசித்து வந்த A. முஹ்யித்தீன் பாவா (ஓடாவியார்-முபீன் பள்ளி முன்) ...
02/08/2026

ஜனாஸா பற்றிய அறிவித்தல்.

ஜயப்புர கிராமம், நம்பர் 80 இல் வசித்து வந்த A. முஹ்யித்தீன் பாவா (ஓடாவியார்-முபீன் பள்ளி முன்) அவர்கள் காலமானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். அன்னார் மௌலவீ பளீல் நஜாஹீ காதிரீ (சுங்காவில்) அன்னவர்களின் அன்புத் தந்தையாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9 மணி அளவில் சுங்காவில் முஹ்யித்தீன் ஜுமுஆப் பள்ளிவாயல் மையவாடியில் இடம்பெறும்.

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسّع مدخله واجعل الفردوس الاعلى منزله ومثواه يا ربّ العالمين،

பின்வரும் அறபுச் சொற்களில் ஒவ்வொன்றும் திருக்குர்ஆனில் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?01. “அல்லாஹ்” என்ற சொல் திருக்கு...
26/07/2026

பின்வரும் அறபுச் சொற்களில் ஒவ்வொன்றும் திருக்குர்ஆனில் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?

01. “அல்லாஹ்” என்ற சொல் திருக்குர்ஆனில் 2699 இடங்களில் வந்துள்ளது.

02. “இல்ம்” அறிவு என்ற சொல் திருக்குர்ஆனில் 750 இடங்களில் வந்துள்ளது.

03. “ஸலாத்” தொழுகை என்ற சொல் திருக்குர்ஆனில் 700 இடங்களில் வந்துள்ளது.

04. “மயீஷத்” அல்லது “ஹயாத்” என்ற சொல் திருக்குர்ஆனில் 145 இடங்களில் வந்துள்ளது.

05. நபீ “முஹம்மத்” அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் இப் பெயர் திருக்குர்ஆனில் 04 இடங்களில் வந்துள்ளது.

06. “ஷெய்தான்” என்ற சொல் திருக்குர்ஆனில் 88 இடங்களில் வந்துள்ளது.

07. “சகாத்” என்ற சொல் திருக்குர்ஆனில் 32 இடங்களில் வந்துள்ளது.

08. “மவ்த்” மரணம் என்ற சொல் திருக்குர்ஆனில் 145 இடங்களில் வந்துள்ளது.

09. “மஹப்பத்” என்ற சொல் திருக்குர்ஆனில் 83 இடங்களில் வந்துள்ளது.

10. “ஜஹன்னம்” நரகம் என்ற சொல் திருக்குர்ஆனில் 77 இடங்களில் வந்துள்ளது.

11. “அல்குர்ஆன்” என்ற சொல் திருக்குர்ஆனில் 70 இடங்களில் வந்துள்ளது.

மேற்கண்ட கணக்கெடுப்பு நான் ஆய்வு செய்து அறிந்ததல்ல. ஓர் அறபீயால் எழுதப்பட்டது. பிழை இருந்தால் எனது கைபேசி இலக்கத்திற்கு அறியத் தரவும்.

காதிமுத் தாயிபதிஸ் ஸூபிய்யா,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.
26.07.2026

“அத்தரீகத்” اَلطَّرِيْقَةُ (ஒருமை), “அத்தறாயிக்” اَلطَّرَائِقُ (பன்மை)தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ...
25/07/2026

“அத்தரீகத்” اَلطَّرِيْقَةُ (ஒருமை), “அத்தறாயிக்” اَلطَّرَائِقُ (பன்மை)

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

“அத்தரீகத்” என்ற சொல்லுக்குப் பல சொல்லர்த்தங்கள் இருந்தாலும் வழி, பாதை என்ற அர்த்தங்களுக்கே அதிகமாகப் பயன்படுத்தப்படும்.

இறைவழி நடப்பவர்கள் தமது ஞான குருவின் வழிக்கு அவரின் பெயருடன் தொடர்பான ஒரு பெயரை வைத்துக் கொள்வார்கள்.

“முஹ்யித்தீன் அப்துல் காதிர்” என்ற ஞான மகான் தங்களின் “தரீகா”வுக்கு “காதிர்” என்ற சொல்லுடன் தொடர்புள்ள “காதிரிய்யா” என்ற பெயரைச் சூட்டினார்கள். அவர்களிடம் “பைஅத்” ஞான ஒப்பந்தம் செய்த ஒருவர் தன்னை “காதிரிய்யா தரீகா”வைச் சேர்ந்தவர் என்று கூறுவார்.

இவ் அடிப்படையில் மகான் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ அவர்களின் “தரீகா” “ஷாதுலிய்யா தரீகா” என்றும், மகான் அஹ்மத் கபீர் அர்ரிபாஈ அவர்களின் “தரீகா” “ரிபாஇய்யா தரீகா” என்றும், மகான் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அவர்களின் “தரீகா” “சிஷ்திய்யா தரீகா” என்றும் சொல்லப்படும்.

எந்த மகானாயினும் எவரிடமிருந்து “தரீகா” வழி நடப்பதற்கு அனுமதி பெற்றாரோ அவர்தான் இவரின் குருவாக இருப்பார்.

இவ்வாறு சங்கிலித் தொடராக நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் வழியால் அல்லாஹ்வின் பக்கம் சேரும்.

அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரீல் வழியாக, அவரிடமிருந்து நபீ வழியாக சங்கிலித் தொடராக வந்ததினால்தான் இத் தொடருக்கு سِلْسِلَةٌ “ஸில்ஸிலா” சங்கிலித் தொடர் என்று பெயர் வைத்தார்கள்.

இதை இன்னும் தெளிவாகச் சொல்வதாயின் ஓர் உதாரணம் மூலம் தெளிவு படுத்துகிறேன்.

எனது ஞான குரு அதி மரியாதைக்குரிய அஷ்ஷெய்கு அல் ஆலிமுல் பாழில் அப்துல் காதிர் ஸூபீ ஹழ்றத் றஹிமஹுல்லாஹ் அவர்களாவர்.

இவர்கள் “ஸில்ஸிலா” என்ற சங்கிலித் தொடரில் 40வது குரு ஆவார்கள். அதாவது அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரீல், இவரிடமிருந்து பெருமானார் வழியில் நாற்பதாவது குரு ஆவார்கள். இவர்கள் எனக்கு முதலாவது குரு.

எனது குருவுக்கு “பைஅத்” வழங்கியவர்கள் முஹம்மது அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள். “ஸில்ஸிலா” சங்கிலித் தொடரில் 39வது ஷெய்கு ஆவார்கள்.

நான் எனது குரு ஸூபீ ஹழ்றத் அவர்களிடம் “பைஅத்” பெற்றதோடு மட்டும் நின்றிருந்தால் நான் அவர்களின் “முரீது” சிஷ்யன் மட்டும்தான். நான் எவருக்கும் “பைஅத்” வழங்க முடியாது.

ஆயினும் எனது ஷெய்கு அவர்களிடம் என்னைக் குருவாக்குங்கள் என்று சொல்லாமலேயே என்னை “ஷெய்கு” அவர்கள் குருவாக ஆக்கினார்கள். அதன் பின் நானும் “பைஅத்” வழங்கத் தொடங்கினேன். நான் “பைஅத்” வழங்கியவர்களுக்கு நான் 41வது “ஷெய்கு” ஆவேன்.

எனது ஷெய்கு நாயகமான ஸூபீ ஹழ்றத் அவர்களிடம் நான் “பைஅத்” ஞான தீட்சை பெறுமுன், அதாவது எனது 14ம் வயதில் காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் என் நினைவின் படி 1958ம் ஆண்டு ஸஊதி அரேபியாவிலிருந்து “ஷாதுலிய்யா தரீகா”வின் “ஷெய்கு” நாயகம் டொக்டர் முஹம்மத் பாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இலங்கைத் திரு நாட்டிற்கு வருகை தந்தார்கள்.

கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்த பின் காலிக்கு விஜயம் செய்தார்கள். காலிக் கோட்டையில் அமைந்துள்ள “பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா” அறபுக் கல்லூரியின் கீழ் மாடியில் கல்லூரியின் அதிபர் மர்ஹூம் அப்துல் ஹமீத் ஹழ்றத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் அறையில் சில நாட்கள் தங்கியிருந்தார்கள்.

அக்கால கட்டத்தில் அவர்கள் பலருக்கு “பைஅத்” ஞான தீட்சை வழங்கினார்கள். அவ்வேளை கல்லூரியில் சுமார் 50 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் மகான் ஷெய்கு பாஸீ அவர்களிடம் “பைஅத்” செய்ய விரும்பியதால் கௌரவ அதிபர் மர்ஹூம் அப்துல் ஹமீத் அவர்களின் முயற்சியால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் “பைஅத்” பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு ஞான தீட்சை வழங்கப்பட்டது. நானும் மாணவர்களில் ஒருவனாயிருந்ததால் எனக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது. அல்ஹம்து லில்லாஹ்!

நான் ஒரு ஷெய்கிடம் “பைஅத்” செய்தது இதுவே முதல் தடவையாகும். அந்நேரம் எனது வயது 15 அல்லது 16 இருக்குமென்று நினைக்கிறேன்.

டொக்டர் ஷெய்கு பாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் நான் “பைஅத்” செய்து கொண்டதே எனது முதல் “பைஅத்” ஆகும்.

நான் 25 வயதை அடைந்து திருமணம் செய்த பின் மகான் ஸூபீ ஹழ்றத் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் “பைஅத்” ஞான தீட்சை பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மகான் ஸூபீ ஹழ்றத் அவர்கள் காத்தான்குடியில் தங்கியிருந்த காலத்தில் காத்தான்குடியை அடுத்துள்ள பாலமுனைக் கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருப்பார்கள். அந்நேரம் அவர்களிடமும் “பைஅத்” செய்து கொண்டேன். என்னுடன் பாலமுனையைச் சேர்ந்த ஓர் ஆசிரியரும் (பெயர் நினைவில் இல்லை), காத்தான்குடியைச் சேர்ந்த மீரான் ஸாஹிபு ஆசிரியர் என்பவரும் “பைஅத்” செய்து கொண்டார்கள்.

நான் “பைஅத்” செய்து கொண்ட மூன்று குரு மகான்களில் டொக்டர் பாஸீ நாயகம் அவர்களின் “ஷாதுலிய்யா தரீகா” வழியில் என்னால் நடக்க முடியாமற் போயிற்று. இதனால் அவர்களால் தரப்பட்ட “அவ்றாத்”களை ஓத முதடியாமல் போனதுடன் அவர்கள் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமலும் போய்விட்டது. எனினும் ஷாதுலிய்யா தரீகாவுக்கு ஆதரவாகவும், ஷாதுலிய்யா தரீகா கூறும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறேன்.

இமாம் ஷாதுலீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஆய்வு செய்பவனாகவும் இருந்து வந்தேன்.

அவர்கள் கூறிய இறைஞான தத்துவத்தை “தரீகா”வைச் சேர்ந்தவர்களுக்கு விளக்கி வைப்பவனாகவும் இருந்து வந்தேன். அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். இதோ அவர்கள் கூறிய தத்துவம்.

قال الشّيخ أبو الحسن الشاذلي رضي الله عنه: قَدْ مَحَقَ الْحَقُّ تَعَالَى جَمِيْعَ الْأَغْيَارِ بِقَوْلِهِ هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ، فَقِيْلَ لَهُ فَأَيْنَ الْخَلْقُ؟ فَقَالَ مَوْجُوْدُوْنَ وَلَكِنْ حُكْمُهُمْ مَعَ الْحَقِّ تَعَالَى كَالْأَنَابِيْبِ الَّتِيْ فِى كُوَّةِ الشَّمْسِ تَرَاهَا صَاعِدَةً هَابِطَةً ، فَإِذَا قَبَضْتَ عَلَيْهَا لَا تَرَاهَا، فَهِيَ مَوْجُوْدَةٌ فِى الشُّهُوْدِ مَفْقُوْدَةٌ فِى الْوُجُوْدِ،

இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். (அல்லாஹ் தனது முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற சொல் கொண்டு அனைத்து “ஙைர்” வேற்றுமையையும் அழித்துவிட்டான்) என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற ஒருவர் அவ்வாறாயின் படைப்பு - சிருட்டி இல்லையா? என்று அவர்களிடம் கேட்டார். அதற்கவர்கள் சிருட்டிகள் உள்ளார்கள். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வுடன் சேர்த்துப் பார்க்கும் போது ஓர் உதாரணம் சொல்லலாம்.

அதாவது ஓர் ஓலைக் குடிசையின் கூரையில் ஓர் துவாரம் உள்ளது என்று வைத்துக் கொள். அத்துவாரம் வழியாக சூரிய ஒளி ஒரு “பைப்” குளாய் வடிவத்தில் உள்ளே இறங்குகின்றதென்றும் வைத்துக் கொள். அந்தக் குளாய் வடிவிலுள்ள சூரிய வெளிச்சத்தில் அணுக்கள் போன்ற தூசிகள் - துகள்கள் மேலே ஏறுவது போன்றும், கீழே இறங்குவது போன்றும் பார்ப்பவனின் கண்களுக்குத் தென்படுகின்றன என்றும் வைத்துக் கொள். நீ அதைக் கையால் பிடித்தால் அது கைக்குள் வராமலிருப்பதை நீ காண்பாய். எனவே, கண்ணுக்குத் தெரிந்த தூசிகள் - துகள்கள் பார்வையில் மட்டும் இருப்பதாக நீ அறிவாய். ஆனால் எதார்த்த்தில் அப்படியொன்றுமில்லை என்பதை தெரிந்து கொள்வாய்.

இவ் உதாரணத்தில் சொல்லப்பட்ட தூசிகள் போன்றதே நீ கண்ணால் பார்க்கும் படைப்புகளாகும். படைப்புக்கள் என்பன பார்வையில் மட்டும் உள்ளவையேயன்றி எதார்த்தத்தில் இல்லாதவையோகும்.

மேற்கண்ட ஷாதுலீ நாயகம் கூறிய இவ் உதாரணத்தை நீ சிந்தனைக்கு எடுத்து சிந்தனை செய்து பார். கண்ணால் கண்டதை கையால் பிடிப்பதற்கு அது இல்லாமற் போய்விட்டது. இவ்வாறுதான் படைப்புக்களின் நிலையுமாகும்.

இமாம் ஷாதுலீ நாயகம் படைப்பு இல்லை என்று அதை மறுக்கவில்லை. ஆனால் அது கண் பார்வைக்கு மட்டும் தெரிகின்றதேயன்றி சடமுள்ள ஒரு பொருளாக அது கையில் கிடைப்பதில்லை. இதன் மூலம் படைப்பு என்பது உள்ளதென்பதும், ஆனால் அது கைக்கு உணரப்படாத பொருளாக இல்லை என்பதும் தெளிவாகிறது. (தொடரும்)

“அஸ்ஸூபிய்யுல் மஷ்ஹூர்” பிரசித்தி பெற்ற இஸ்லாமிய ஸூபீ ஷுஐப் அபூ மத்யன் அல் மக்ரிபீ றழியல்லாஹு அன்ஹு.தொகுப்பு: மௌலவீ அல்ஹ...
25/07/2026

“அஸ்ஸூபிய்யுல் மஷ்ஹூர்” பிரசித்தி பெற்ற இஸ்லாமிய ஸூபீ ஷுஐப் அபூ மத்யன் அல் மக்ரிபீ றழியல்லாஹு அன்ஹு.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

பிறந்த நாடு: ஸ்பெய்ன்.

தோற்றம்: ஹிஜ்ரீ 594.

சமாதி: திலம்ஸான்.

يَقُوْلُ الشَّيْخُ أَبُوْ مَدْيَنْ: طَرِيْقَتُنَا هَذِهِ أَخَذْنَاهَا عَنْ أَبِيْ يَعْزَى بِسَنَدٍ عَنِ الْجُنَيْدِ، عَنْ سَرِيِّ السَّقَطِيِّ، عَنْ حَبِيْبِ الْعَجَمِيِّ، عَنِ الْحَسَنِ الْبَصَرِيِّ، عَنْ عَلِيٍّ بْنِ أَبِيْ طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُمْ، عَنِ النَّّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ جِبْرِيْلَ عَلَيْهِ السَّلَامُ، عَنْ رَبِّ الْعَالَمِيْنَ جَلَّ جَلَالُهُ،

அஷ்ஷெய்கு அபூ மத்யன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்.

நாங்கள் எங்களின் “தரீகா”வை “அபூ யஃஸா” என்பவர் மூலம் எடுத்துக் கொண்டோம். இவர் ஜுனைத் அல் பக்தாதீ மூலம் எடுத்துக் கொண்டார். இவர் ஸரிய்யுஸ் ஸகதீ மூலமும், இவர் ஹபீபுல் அஜமீ மூலமும், இவர் ஹஸனுல் பஸரீ மூலமும், இவர் அலீ இப்னு அபீ தாலிப் மூலமும், இவர் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மூலமும், இவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் மூலமும், இவர் அல்லாஹ்வின் மூலமும் எடுத்துக் கொண்டார்.

மேற்கண்ட மகான்கள் இதை எழுதும் என்னையும், இதை வாசிக்கும் உங்களையும் போன்ற சாதாரண மனிதர்கள் அல்லர். இவர்கள் “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்ற பெரும் மகான்களாவர். ஸஹாபாக்கள், தாபியீன்கள் போன்ற மகான்களுமாவர். இவர்களின் பெயர்கள் கேட்டாலேயே “தறஹ்ஹும்” றஹிமஹுல்லாஹ் என்றோ, “தறழ்ழீ” றழியல்லாஹு அன்ஹு என்றோ பிரார்த்தனை செய்யப்பட வேண்டியவர்களாவர்.

இவர்கள் ஸலபுஸ்ஸாலிஹீன்களும், தாபிஊன்களும், தபஉத் தாபிஈன்களுமாவர். இவர்கள் மீது நல்லெண்ணம் வைக்கப்பட வேண்டியவர்களாவர். ஆயினும் “வஹ்ஹாபீ”கள் என்போர் இந்த மகான்களை “அதப்” எனும் ஒழுக்கம், மரியாதையின்றி தூக்கியெறிந்து பேசுகின்றார்கள். ஒரு பைசாவுக்கும் பெறுமதியற்றவர்களாக தூக்கியெறிந்து பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அல்லாஹ் என்னையும், இன்னோரைத் தலை மேல் சுமந்து பேசுவோரையும் பாதுகாப்பானாக!

இந்தக் கட்டுலைரயில் நான் எழுதிக் கொண்டிருக்கின்ற “அபூ மத்யன் ஷுஐப் அல் மக்ரிபீ” றஹிமஹுல்லாஹ் அவர்கள் நபீ பெருமானார் அவர்களின் “அன்ஸாரீ” குடும்பத்தைச் சேர்ந்த பெரும் மகான் ஆவார்கள்.

இவர்கள் “அல் உந்துலுஸ்” ஸ்பெய்னில் பிறந்தார்கள். இவர்கள் அபூ மத்யன் என்றும், பூ மத்யன் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள். “திலம்ஸான்” என்ற ஊரில் அடக்கம் பெற்றார்கள். شَيْخُ الشُّيُوْخِ “ஷெய்குமார்களின் ஷெய்கு” என்று பட்டம் வழங்கப்பட்டார்கள். இவர்கள் مُعَلِّمُ الْمُعَلِّمُيْنَ ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்கள். இவ்வாறு இவர்களுக்குப் பட்டம் சூட்டியவர் “அஷ்ஷெய்குல் அக்பர்” என்று பிரசித்தி பெற்ற இப்னு அறபீ ஆவார்கள்.

மகான் அபூ மத்யன் அவர்கள் ஹிஜ்ரீ 509ல் பிறந்து ஹிஜ்ரீ 594ல் இறையடி சேர்ந்தார்கள். (1115 - 1198)

இவர்கள் “பகீஹ்” சட்ட மேதையும், ஸூபீயும், ஸ்பெய்ன் கவிஞருமாவார்கள். மேலும் மொறோக்கோ, ஸ்பெய்ன் நாடுகளில் ஸூபிஸக் கல்லூரிகளையும் ஆரம்பித்து வைத்தார்கள்.

இஷ்பீலிய்யா, பாஸ் முதலான நாடுகளில் கல்வி கற்றார்கள். தங்களின் அதிக காலத்தை “பஜாயா” என்ற ஊரில் கழித்தார்கள். அங்கு அவர்களின் ஆதரவாளர்கள் அவர்களைச் சந்திப்பதற்காக படை எடுத்தார்கள். அங்கு அவர்களின் ஆதரவாளர்கள் பெருகினர்.

“பஜாயா” நகரில் இருந்த காலத்தில் “எல்லாம் அவனே” என்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் கூறும் தத்துவத்தை பகிரங்கமாகப் பேசிய போது அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத, ஞான மகான் மீது பொறாமையுள்ள சிலர் அக்காலத்தில் வாழ்ந்த அரசனிடம் அவர்களைப் பற்றிப் பொய்யான தகவல்களைக் கூறி அவர்களைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டார்கள்.

பஜாயாவில் பொறாமைக் காரர்களின் எதிர்ப்பும், நயவஞ்சகர்களின் துன்பமும் எல்லை கடந்ததால் மகான் அவர்கள் அங்கிருந்து பொலீஸ் பாதுகாப்போடு “திலம்ஸான்” என்ற இடத்திற்குப் பயணமானார்கள். அல்லாஹ்வின் பாதுகாப்போடு “திலம்ஸான்” நகரை அடைந்து அங்கேயே சில நாட்கள் சுகவீனமாயிருந்து மரணித்தார்கள்.

மகான் அபூ மத்யன் அவர்களின் வரலாறு மிக நீண்டது. நான் எழுதிக் கொண்டிருக்கும் “உலகில் தோன்றிய அக்தாபுகள்” என்ற நூலில் இவர்களின் வரலாறு கிடைக்கப்பெறும். இன்ஷா அல்லாஹ்!

மகான் அபூ மத்யன் ஸ்பெய்ன் நாட்டில் பிரசித்தி பெற்ற ஞானக் கவிஞராகத் திகழ்ந்தார்கள். எல்லாம் அவனே என்ற இறைஞான தத்துவத்தை கவிதையில் மிகச் சுருக்கமாக எழுதியவர்களில் இவர்களும் ஒருவராவார்கள்.

இதோ “எல்லாம் அவனே” என்ற தத்துவம் நிறைந்த அவர்களின் பாடல் அறபு மொழியில்...

وَمِنْ أَلْطَفِ إِشَارَاتِ وَحْدَةِ الْوُجُوْدِ قَوْلُ الْقُطْبِ أَبِى مَدْيَنْ التِّلَمْسَانِيْ رحمه الله تعالى،

اللهَ قُلْ وَذَرِ الْوُجُوْدَ وَمَا حَوَى - إِنْ كُنْتَ مُرْتَادًا بُلُوْغَ كمالٍ
فَالْكُلُّ دُوْنَ اللهِ إِنْ حَقَّقْتَهُ - عَدَمٌ عَلَى التَّفْصِيْلِ وَالْإِجْمَالِ
وَاعْلَمْ بِأَنَّكَ وَالْعَوَالِمَ كُلَّهَا - لَوْلَاهُ فِيْ مَحْوٍ وَفِي اضْمِحْلَالِ
مَنْ لَا وُجُوْدَ لِذَاتِهِ مِنْ ذَاتِهِ - فَوُجُوْدُهُ لَوْلَاهُ عَيْنُ مُحَالٍ
فَالْعَارِفُوْنَ بِرَبِّهِمْ لَمْ يَشْهَدُوْا - شَيْئًا سِوَى الْمُتَكَبِّرِ الْمُتَعَالِ
وَرَأَوْا سِوَاهُ عَلَى الْحَقِيْقَةِ هَالِكًا- فِي الْحَالِ وَالْمَاضِيْ وَالْإِسْتِقْبَالِ
----------
توحيد الواحد محالٌ
توحيد الكثرة ممكنٌ

பின்வரும் ஓதல் முன்னோர்களான நல்லடியார்கள் தினமும் ஓதி வந்த “ஈமான் ஸலாமத்”தாகும் “துஆ” பிரார்த்தனையாகும். இது இற்றைக்கு ச...
14/07/2026

பின்வரும் ஓதல் முன்னோர்களான நல்லடியார்கள் தினமும் ஓதி வந்த “ஈமான் ஸலாமத்”தாகும் “துஆ” பிரார்த்தனையாகும்.

இது இற்றைக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் முன்னோர்களான நல்லடியார்கள் ஐங்காலத் தொழுகையின் பின்னும் ஓதி வந்த “ஈமான் ஸலாமத்”திற்கான “துஆ”வாகும்.

இக்காலத்தில் வாழும் முதியவர்களுக்கும், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த முதியவர்களுக்கும் “ஈமான்” நம்பிக்கை விடயத்தில் வித்தியாசமுண்டு. 50 வருடங்களுக்கு முன் வாழ்ந்த முதியவர்களின் “ஈமான்” நம்பிக்கை எந்தவொரு ஷெய்தானாலும், வஹ்ஹாபீயாலும் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இன்று வாழும் முஸ்லிம்களின் “ஈமான்” குறிப்பாக இளைஞர்களின் “ஈமான்” நம்பிக்கை ஆட்டம் காணக் கூடியதாக உள்ளது.

50 வருடங்களுக்கு முன் வாழ்ந்த முஸ்லிம்கள் - குறிப்பாக முதியவர்கள் அல்லாஹ்வில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்று வாழும் முஸ்லிம்கள் - குறிப்பாக முதியவர்களும், இளைஞர்களும் “ஈமான்” நம்பிக்கை மிகவும் குறைந்தவர்களாகவே உள்ளனர்.

முன்னோர்கள் தொழுகை முடிந்த பின் “ஸுப்ஹானல்லாஹ்” என்று 33 தரமும், “அல்ஹம்து லில்லாஹ்” என்று 33 தரமும், “அல்லாஹு அக்பர்” என்று 34 தரமும் ஓதிவிட்டு “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று 10 முறை “திக்ர்” செய்த பின் “துஆ” ஓதுவார்கள். பின்னர்

لَا إلهَ إِلَّا اللهُ الْمَوْجُوْدُ بِكُلِّ زَمَانْ،
لَا إلهَ إِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانْ،
لَا إلهَ إِلَّا اللهُ الْمَعْرُوْفُ بِكُلِّ إِحْسَانْ،
لَا إلهَ إِلَّا اللهُ الْمَذْكُوْرُ بِكُلِّ لِسَانْ،
لَا إلهَ إِلَّا اللهُ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنْ،
لَا إلهَ إِلَّا اللهُ اَلْأَمَانْ اَلْأَمَانْ مِنْ زَوَالِ الْإِيْمَانْ، وَمِنْ شَرِّ الشَّيْطَانْ، وَمِنْ ظُلْمِ السُّلْطَانْ، اَللهم يَا قَدِيْمَ الْإِحْسَانْ، يَا عَزِيْزْ، يَا غَفُوْرْ، يَا غَفَّارْ، بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنْ،
என்று முடிப்பார்கள்.

அறபு வசனங்களின் பொருள்:

1. அல்லாஹ்வுக்கு வேறான எந்தவொரு “இலாஹ்” தெய்வமும் இல்லை. அவனே எல்லாக் காலத்திலும் உள்ளவன்.

2. அல்லாஹ்வுக்கு வேறான எந்தவொரு “இலாஹ்” தெய்வமும் இல்லை. அவனே எல்லா இடங்களிலும் வணங்கப்பட்டவனாவான் - வணங்கப்படுபவனாவான்.

3. அல்லாஹ்வுக்கு வேறான எந்தவொரு “இலாஹ்” தெய்வமும் இல்லை. அனைத்து உபகாரங்கள் மூலமும் அறியப்பட்டவன் அவனேதான்.

4. அல்லாஹ்வுக்கு வேறான எந்தவொரு “இலாஹ்” தெய்வமும் இல்லை. அனைத்து நாவுகளாலும் மொழியப்பட்டவன் அவனேதான்.

5. அல்லாஹ்வுக்கு வேறான எந்தவொரு “இலாஹ்” தெய்வமும் இல்லை. அவன் ஒவ்வொரு நாளும் வேலையில் உள்ளான்.

6. அல்லாஹ்வுக்கு வேறான எந்தவொரு “இலாஹ்” தெய்வமும் இல்லை. நம்பிக்கை நீங்கிவிடாமலும், ஷெய்தானின் தீமை தொடாமலும், அரசனின் அநீதியால் பாதிப்பு ஏற்படாமலும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (மொழியாக்கம் முடிந்தது)

இவ்வழக்கம் முன்னோர்களான முதியவர்களிடம் இருந்து வந்த காலத்தில் உலமாஉகள் - மார்க்க அறிஞர்கள் பலர் இருந்தும் கூட அவர்களில் எவரும் இவ்வாறு செய்தல் மார்க்கத்திற்கு முரணானதென்றோ, வழிகேடான “பித்அத்” என்றோ சொன்னதுமில்லை. தடை செய்ததுமில்லை. மாறாக அவர்களும் சேர்ந்து இவ்வழக்கத்தை உயிர்ப்பித்தார்கள்.

ஆனால் எப்போது ஸஊதி அறேபியா சென்று அங்கு கல்வி கற்கும் வழக்கம் ஆரம்பமானதோ அக்காலத்திலிருந்து இவ்வழக்கம் “பித்அத்” வழிகேடு என்று உலமாஉகளால் சொல்லப்படலாயிற்று. இத்தகைய நல்ல நடைமுறைகள் “பித்அத்” என்றும், வழிகேடென்றும் சொல்லப்படலாயிற்று. எப்போது ஸஊதி அரேபியா சென்று மார்க்க அறிவு கற்றுக் கொள்ளும் வழக்கம் ஆரம்பமானதோ அக்காலத்திலிருந்து வஹ்ஹாபிஸ வழிகேடு தலை தூக்க ஆரம்பமாகி இன்று வஹ்ஹாபிஸமே மார்க்கம் என்று சொல்லுமளவு வழி கேடு பரவத் தொடங்கிவிட்டது. இன்று ஒரு வீட்டுக்கு ஒரு வஹ்ஹாபீ என்ற அளவு வஹ்ஹாபிஸம் பரவிவிட்டது. மல சலம் கழித்து சுத்தம் செய்யத் தெரியாதவன் கூட கண்டதையெல்லாம் “பித்அத்” என்றும், வழிகேடு என்றும் சொல்லுமளவு வஹ்ஹாபிஸம் மலிந்து காணப்படுகிறது. “காசேதான் கடவுளடா” என்று யாரோ ஒருவன் சொன்னது போல் அந்தக் கடவுள் இந்த வழிகேட்டை இலங்கை முழுவதும் பரப்பிவிட்டு தற்போது நடமாடக் கூட முடியாத நிலையில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது.

வஹ்ஹாபிஸம் என்ற வழிகேடு “ஈமான்” விசுவாசம் - நம்பிக்கை என்ற போர்வையில் ஆட்சி புரிகிறது. இதற்கான காரணம் அரசியல்வாதிகளிற் பலர் “ஆலிம்ஷா”க்கள் வேஷம் போட்டதும், “ஆலிம்ஷா”க்களிற் பலர் வஹ்ஹாபீகளிடம் கை நீட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதுமாகும்.

“ஈமான் ஸலாமத்” தாகும் “துஆ” என்று மேலே நான் எழுதிய ஆறு அம்சங்கள் கொண்ட “துஆ” தருகின்ற தத்துவங்கள் விபரமாக எழுதப்பட வேண்டியவையாகும். “ஈமான்” என்ற நம்பிக்கையை இரும்புத் தூணாக்கும் அற்புதமான மருந்தாகும். இன்ஷா அல்லாஹ் தொடரும்.

காதிமுத் தாயிபதிஸ் ஸூபிய்யா,
14.07.2026

“பத்வா” வியாபாரிகளின் கவனத்திற்கு! “பத்வா” வழங்கிய முல்லாக்கள் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையின் தலை சிறந்த தலைவர் இமாம் அ...
12/07/2026

“பத்வா” வியாபாரிகளின் கவனத்திற்கு!

“பத்வா” வழங்கிய முல்லாக்கள் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையின் தலை சிறந்த தலைவர் இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் எச்சரிக்கையைப் புரிந்து கொள்ளாத அறிவிலிகளேயாவர். நாங்கள் “ஸுன்னீ”கள் என்று மேடைகளில் முழங்கும் இவர்கள் ஸுன்னீகளின் தலைவர் அல் அஷ்அரீ அவர்களின் ஆலோசனையைப் புறக்கணித்தது ஏன்? இவர்கள் இதற்கு பொது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் சொல்வார்களா? அல்லது செவிடர்கள் போன்றும், குருடர்கள் போன்றும் நடிப்பார்களா?

இமாம் அவர்களின் எச்சரிக்கை!
نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسـي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم، (اليواقيت، ج أوّل، ص 21 )
சுருக்கம்:
அபூ தாஹிர் கஸ்வீனீ என்ற இமாம் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” எனும் நூலில், அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் பிரசித்தி பெற்ற தோழர்களில் ஒருவரான அஹ்மத் இப்னு சாகிர் அஸ்ஸர்கஸீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளதாக எழுதியுள்ளார்கள்.

“அபுல் ஹஸன் அல் அஷ்அரீ இமாம் அவர்கள் பக்தாதில் உள்ள எனது வீட்டுக்கு வந்த போது அவர்களுக்கு மரண வருத்தம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் எனது தோழர்கள் அனைவரையும் இங்கு அழைத்துத் தாருங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். அதேபோல் நான் அழைத்துக் கொடுத்தேன். அப்போது அவர்கள் அங்கு வந்திருந்த தங்களின் தோழர்களிடம், “நீங்கள் சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள். நான் “கிப்லா”வுடைய பொது மக்களில் எவரையும் “காபிர்” என்று சொல்லமாட்டேன். அதாவது “கிப்லா” உடையவர்கள் என்பது முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்களில் எவரையும் “காபிர்” என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் வணங்கப்படுகின்றவன் ஒருவன் என்றே சுட்டிக் காட்டுகிறார்கள். இஸ்லாம் என்பது இவர்கள் அனைவரையும் உள்வாங்கிக் கொள்ளும்” என்று கூறினார்கள்.

இவர்களின் சுருக்கமான கருத்து என்னவெனில் ஒருவன் முஸ்லிமாயிருப்பது ஒன்றே அவன் காபிர் என்று சொல்ல முடியாததற்கான ஆதாரமாகும்.

ஒரு முஸ்லிம் கல்லையோ, சிலையையோ அல்லது வேறெந்த ஒரு படைப்பையோ வணங்காமல் இருக்கும் வரை அவன் முஸ்லிம்தான். அவனை எவரும் “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்வது கூடாது. இதுவே இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்களின் “பத்வா” ஆகும்.

கொள்கையின் தலைவர் அவர்களே மேற்கண்டவாறு சொல்லியிருக்கும் நிலையில் ஒரு முஸ்லிமை “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ “பத்வா” கொடுப்பது பெருங்குற்றமாகும். கொள்கையின் தலைவர் அவர்களின் சட்டத்துக்கு முரணானதாகும். இது தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

ஒருவன் முஸ்லிமாயிருக்கும் நிலையில் அதாவது மத மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு காரியத்தைச் செய்யாமல் இருக்கும் வரை அவனைக் “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ முத்திரை குத்துவது பெருங் குற்றமாகும். அத்தகைய ஒருவனின் செயலிலோ, சொல்லிலோ சந்தேகம் ஏற்பட்டால் அவனிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவன் கூறும் விளக்கம் மத மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாயின் அவனைக் “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்வதற்கு இடமுண்டு. அவ்வாறு இல்லையாயின் அவனை முஸ்லிம் என்றே முடிவு செய்ய வேண்டும்.

எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் உலமா சபை “முர்தத்” என்று “பத்வா” வழங்கியது எனது பேச்சை ஒலி நாடா மூலம் கேட்டது கொண்டேயன்றி என்னை நேரில் விசாரித்தது கொண்டல்ல. ஒரு கருத்தைக் கூறியவரிடம் நேரில் ஒரு தரமேனும் விளக்கம் கேட்காமல் அவருக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்குவது “ஷரீஆ”வின் சட்டத்துக்கு முற்றிலும் முரணானதாகும். முல்லாக்கள் “பத்வா” வழங்கிய பின் இலங்கை முஸ்லிம்களின் முழுத் தொகையில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் குறைந்து விட்டனர். காத்தான்குடி முஸ்லிம்களில் ஏழாயிரம் பேர் குறைந்து விட்டனர்.

இலங்கைத் திரு நாட்டில் முஸ்லிம்களின் தொகையைக் குறைப்பதற்காக யூத இனவாதிகளுடன் உலமா சபையின் உறுப்பினர்களிற் சிலர் ஒப்பந்தம் செய்துள்ளனர் என்று பொது மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

எதிர்வரும் தேர்தல்களில் உலமா சபையின் “பத்வா”வினால் மதம் மாற்றப்பட்ட உண்மை முஸ்லிம்கள் மதம் மாற்றப்படாத உலமா சபைக்கு ஆதரவான தேர்தல் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார்கள் என்று பொது மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

“தரீகா”க்களைப் பின்பற்றுகின்ற “தரீகா” ஆதரவாளர்களே!
இமாம்களைப் பின்பற்றுகின்ற அவர்களின் ஆதரவாளர்களே!
ஷெய்குமார்களால் எழுதப்பட்ட “றாதிபு”களின் ஆதரவாளர்களே!
நமது இலங்கைத் திரு நாட்டில் வாழ்கின்ற மேற்கண்ட அமைப்புக்களின் ஆதரவாளர்களே!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள “மன்ஹஜ்” என்ற பிரசுரத்தின் சுருக்கம் என்னவெனில் மேற்கண்ட அமைப்புக்களைப் பின்பற்றுவது வழிகேடு என்பதாகும். இவர்களின் கருத்துக்கள் இன்று வாழும் மேற்கண்ட அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட “தரீகா”க்களைப் பின்பற்றுவதும், மத்ஹபுகளைப் பின்பற்றுவதும், “றாதிபு – ஹழ்றா” போன்ற முன்னோர்களான வலீமார்களால் உருவாக்கப்பட்ட நல்லமல்கள் செய்வதும் வழிகேடு என்று கூறுகிறது. இது உலமா சபையின் “மன்ஹஜ்” கூறும் வழிகேடாகும்.

இவர்களின் இந்த வழிகேட்டை விட ஒரு படி மேலே சென்று “அல்மன்ஹஜுஸ் ஸஹீஹ்” என்று வஹ்ஹாபீகளில் முத்திப் பழுத்தவர்களால் எழுதப்பட்ட “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” பல படிகள் மேலே சென்று வழிகேட்டைப் பரப்புகிறது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையில் வஹ்ஹாபீகள் யாருமில்லை என்று அதன் தலைவர் ரிஸ்வீ முப்தீ பிரச்சாரம் செய்து வருகிறார். அதேநேரம் வஹ்ஹாபிஸக் கருத்துக்களுக்கு வித்திட்ட இப்னு அப்தில் வஹ்ஹாப், இப்னு தைமிய்யா போன்ற வழிகேடர்களின் பெயர்களைச் செவியேற்றால் அவர்களுக்காக “றஹ்மதுல்லாஹி அலைஹி – அலைஹிம்” என்று சாதகமாக “துஆ” கேட்டதற்கு சாட்சி தேடத் தேவையில்லை. நான் அதற்கான முதல் சாட்சியாவேன்.

இவ்வாறு கூறி வஹ்ஹாபிஸத்தை வலுப்படுத்தும் ரிஸ்வீ யார்? வஹ்ஹாபீயா? ஸுன்னீயா? இவர் இவ்வாறு வஹ்ஹாபிஸத்தை வலுப்படுத்தும் நிலையில் “தரீகா”க்களைப் பின்பற்றும் படித்த தரீகாவாதிகள், தரீகாக்களின் கலீபாக்கள், தரீகாக்களின் தூண்கள் போன்ற பிரசித்தி பெற்றவர்கள் “டபள் கேம்” ஆடுவது ஏன்?

ஸூபிஸம் பேசிய எனக்கும், அதைச் சரி கண்ட பல இலட்சம் மக்களுக்கும், எந்த ஒரு விசாரணையும், விளக்கமும் இல்லாமல் “முர்தத் பத்வா” வழங்கிய முல்லாக்கள் பெருங் குற்றம் செய்த பாவிகளாவார்கள். இது மட்டுமல்ல துரோகிகளுமாவார்கள். இவர்கள் பல இலட்சம் முஸ்லிம்களை “காபிர்”களாக்கிய குற்றவாளிகளுமாவார்கள்.

உலமா சபையின் அநீதியான “பத்வா”வை 45 வருடங்களுக்கும் மேலாக உலமா சபை - குறிப்பாக ரிஸ்வீ முப்தீ அமுல் செய்து கொண்டிருக்கும் நிலையில் உலமா சபையிலுள்ள அதன் அங்கத்தவர்களான ஏனைய உலமாஉகள் நீதிக்கு தலை சாய்க்காமல் அநீதிக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பதன் விளைவு அவர்களின் “ஸக்றாத்” மரண வருத்தத்தின் போது அவர்களுக்குத் தெரிய வரும். அவர்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

ஜனநாயக நாடான இலங்கை நாட்டில் 45 வருடங்களாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஸூபிஸ சமூகத்தின் மத உரிமையை மீறி அட்டூழியம் செய்து கொண்டிருப்பதும், கௌரவ ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமலிருப்பதும் பெரும் அநீதியாகும். முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றுமே தெரியாதவர்கள் போல் மௌனிகளாயிருப்பது அநீதிக்கு உதவி செய்ததாகவே ஆகும். அநீதியாளர்களுக்கு அல்லாஹ் தனது நீதியை வெளிப்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம். அரச நீதி அன்று கேட்கும். தெய்வ நீதி நின்று கேட்கும்.

காதிமுத் தாயிபதிஸ் ஸூபிய்யா,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.
12.07.2026

Address

Kattankudi

Alerts

Be the first to know and let us send you an email when Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee:

Shortcuts

Share