02/08/2025
“தஸவ்வுப்” எனும் இஸ்லாமிய ஸூபிஸம் பேசிய எனது பேச்சை “ஹுலூல் – இத்திஹாத்” என்று தவறாக விளங்கி அந்த “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்றும், “குப்ர்” என்றும் “பத்வா” வழங்கிவிட்டு அந்த “பத்வா”வின் முன் பக்கம்
காத்தான்குடி றஊப் மௌலவி
போன்றோரின் மார்க்க விரோதக்
கருத்துக்கள் குறித்து
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய
Fபத்வா
(மார்க்கத்தீர்ப்பு)
என்று எழுதியுள்ள முல்லாக்களே! நீங்கள் முல்லாக்கள் அல்ல. நீங்கள் நம்பர் 01 முட்டாள்கள்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்று நீங்கள் பிறப்பதற்கு முன்னிருந்தே நான் பகிரங்க மேடைகளில் பேசியுள்ளேன். ஒரு மேடையில் அல்ல. பல ஊர்களில் பல மேடைகளில் பேசியுள்ளேன்.
இந்த விபரம் தெரிந்தோ, தெரியாமலோ நான் பேசிய ஸூபிஸ தத்துவத்தை “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை என்று நீங்கள் விளங்கி “பத்வா” வழங்கி அதில் எனது பெயரை எழுதியிருப்பது உங்களின் அறியாமையாக இருக்கலாம். அல்லது உங்களின் மனமுரண்டாக இருக்கலாம்.
“பத்வா” வழங்குமுன் என்னை நேரில் கண்டு என்னை விசாரித்திருக்க வேண்டும். இதுவே சரியான நடைமுறை. இவ்வாறு நீங்கள் செய்யாமல் நான் பேசியது “ஹுலூல் – இத்திஹாத்” என்று நீங்களாக கற்பனை செய்து கொண்டு எனக்கும், ஸூபிஸ சமூகத்திற்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கியது உங்களின் முட்டாள் தனமும், உங்களுக்கு என் மீதுள்ள குரோதமும், விரோதமுமேயாகும். இது தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை.
ஒருவனின் சொல்லோ அல்லது செயலோ “பத்வா” வழங்குவோருக்கு “ஷரீஆ”வுக்கு முரணானதாக விளங்கினால், அல்லது சரி என்பதற்கும், பிழை என்பதற்கும் சாத்தியமுள்ளதாகத் தோற்றினால் “பத்வா” கொடுப்பவர்கள் அவசரப்பட்டு “பத்வா” வழங்கிவிடாமல் அச் சொல்லுக்கு அல்லது அச் செயலுக்கு உரியவனை நேரில் கண்டு வினவிய பிறகுதான் சரியென்றால் சரி என்றும், பிழை என்றால் பிழை என்றும் “பத்வா” வழங்க வேண்டும். இதுவே “ஷரீஆ” கூறும் சரியான வழியாகும்.
“பத்வா” வழங்கிய நீங்கள் அதற்கான “ஷரீஆ” கூறும் விதியைப் பேணவில்லை. விதி பேணப்படாமல் வழங்கும் “பத்வா” “பாதில்” வீணான “பத்வா” என்பதே “ஷரீஆ”வின் முடிவாகும். “பத்வா” வழங்குவதே “ஷரீஆ”வாயிருக்கும் நிலையில் அதிலேயே நீங்கள் “ஷரீஆ”வுக்கு முரணாக நடந்து கொண்டுள்ளீர்கள். “ஷரீஆ”வின் சட்டப்படி - விதிப்படியே உங்களின் “பத்வா” பிழையானதாகும்.
ஒருவனின் செயல் பற்றியோ, அவனின் சொல் பற்றியோ விசாரிப்பதற்கு அவனே இல்லையானால் அல்லது விசாரணைக்கு வர அவன் மறுத்தால் - இவ்வாறான கட்டங்களில் மட்டும் உரியவனை விசாரிக்காமல் “பத்வா” வழங்குவதற்கு “ஷரீஆ”வில் இடமுண்டு.
பேசிய நான் உயிரோடு இருக்கும் நிலையிலும், பேசிய நான் என்னை விசாரிக்க முடியாதென்று சொல்லாமல் இருக்கும் நிலையிலும் என்னை விசாரிக்காமல் “பத்வா” கொடுத்தது உங்களின் அறியாமையாகும். அல்லது உங்களின் மன முரண்டாகும். இதுவே முடிவு. இது தவிர நீங்கள் எந்த ஒரு காரணமும் கூற இடமே இல்லை. நரம்பில்லாத நாக்கால் நீங்கள் விரும்பியதைச் சொல்லலாம். ஆனால் நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்வதற்கு நான் முட்டாள் அல்ல.
நீங்கள் கொடுத்த “பத்வா” யாரோ ஒரு “ஹறாங்குட்டி” கொடுத்த “பத்வா” போன்றதாகும். நான் ஒரு கதை சொல்லவா? தத்துவம்தான் உங்களுக்கு விளங்காது. கதையென்றால் விளங்கும்தானே! கவனமாக படியுங்கள்.
ஓர் ஊரில் ஒருவன் இருந்தான். அவனின் பெற்றோருக்கு நெடுங்காலமாக பிள்ளை இல்லை. அவனின் தாய் ஒரு கட்டத்தில் எனக்கு ஒரு பிள்ளை கிடைத்தால் அந்தப் பிள்ளைக்கு “அல்லாஹ் பிச்சை” அதாவது அல்லாஹ் தந்த பிச்சை என்ற பொருளில் அவ்வாறு பெயர் வைப்பேன் என்று உறுதி பூண்டாள். அதே வருடத்தில் அவளுக்கு ஓர் குழந்தை பிறந்தது. அதற்கு “அல்லாஹ் பிச்சை” என்று பெயர் வைத்தாள்.
இவ்வாறு பெயர் வைக்கும் வழக்கம் நமது இலங்கைத் திரு நாட்டிலும் இருந்தது. உர்து மொழி பேசுகின்றவர்கள் வாழும் நாட்டிலும் இருந்துள்ளது.
(அல்லாஹ் பிச்சை என்பதற்கு “உர்து” மொழியிலும், பாரசீக மொழியிலும் “அல்லாஹ் பக்ஷ்” اَلله بَخْشْ என்று சொல்வார்கள். எனது நாலாவது அல்லது ஐந்தாவது தலைமுறை “அல்லாஹ் பக்ஷ்” என்ற பெயருள்ளவரேயாவார்.
எனதூரான காத்தான்குடி எல்லை வீதியில் நான் சிறுவனாயிருந்த காலத்தில் ஒரு வயோதிபர் இருந்தார். நீளமான தாடியுள்ள ஒல்லியானவர். அவரின் பெயரும் அல்லாஹ் பிச்சைதான்)
அல்லாஹ் பிச்சை என்ற பெயரிலுள்ள ஒருவனை அந்த ஊர் உலமா சபையின் செயலாளர் தெருவில் கண்ட நேரம் அவனிடம் உனது பெயர் என்ன என்று கேட்டாராம். அதற்கு அவன் தனது பெயரைச் சொல்ல நினைத்து அல்லாஹ் என்று மட்டும் சொல்லி பின்னாலுள்ள “பக்ஷ்” பிச்சை என்ற சொல்லை சொல்வதற்கிடையில் அவனுக்கு இருமல் ஏற்பட்டதால் அதைச் சொல்வதற்கிடையில் உலமா சபை செயலர் மிதி வண்டியில் ஏறி உலமா சபை அலுவலகத்திற்குச் சென்று அதன் தலைவரிடம் ஒருவன் தன்னை அல்லாஹ் என்று சொல்கிறான் என்று சொன்னானாம்.
இதைக் கேட்ட ஆனாவும் தெரியாத, ஆவன்னாவும் தெரியாத, அலிபும் தெரியாத, Bபேயும் தெரியாத உலமா சபைத் தலைவர் அவனை அழைத்து வரச் சொல்லி அவனிடம் எந்த ஒரு விளக்கமும் கேட்டறியாமல் அவன் தலையைக் கொத்தி அவனைக் கொலை செய்தாராம்.
இது போன்ற ஒரு கதைதான் உலமா சபை ஸூபிஸ தத்துவம் பேசிய எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டு ஏற்றுக் கொண்ட பல்லாயிரம் மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று பொய் “பத்வா” வழங்கிய இலங்கைத் திரு நாட்டின் உலமாஉகளின் நிலையுமாகும்.
கையெழுத்தில்லாத “ஹறாங்குட்டி பத்வா”
ஒரு கடைக்கார முதலாளி தனது கடையில் வேலை செய்கின்ற வேலைக்காரனுக்கு எழுதுகின்ற சாதாரண கடிதத்தில் கூட அவன் கையெழுத்திடுவது நடைமுறை.
இந்த நடைமுறை கூடத் தெரியாத, தலையில் மூளையே இல்லாத மக்குகள் வழங்கிய “பத்வா” வில் ஒருவரின் கையெழுத்தும் இல்லாதிருப்பது இவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குழியலறை, மலசல கூடம் போன்ற கழிவறைகளைச் சுத்தம் செய்வதற்கும் தகுதியற்றவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய அறிவிலிகள் பல்லாயிரம் ஸூபிஸ முஸ்லிம்களை மதம் மாற்றி “பத்வா” கொடுப்பது எவ்வாறு சாத்தியமாகும்?
1979ம் ஆண்டு இவ்வாறு “பத்வா” வழங்கிய அறிவிலிகளில் யாராவது இப்போது உயிருடன் இருந்தால் அவர் எனது கேள்விகளுக்கு நியாயமான பதில் தருவதற்கு முன் வருவாரா?
“பத்வா”வில் கையெழுத்துப் போடாதவர்கள் தமது முதலெழுத்து தெரியாதவர்களோ என்று எமக்கு எண்ணத் தோணுகிறது.
பொய் “பத்வா”வை இன்று வரை அமுல் செய்து கொண்டிருக்கின்ற தம்பி ரிஸ்வீ அவர்களே! நீங்கள் அறியாமை சேறில் புதையுண்டு கிடக்கின்றீர்களா? அல்லது மனமுரண்டாகச் செயல்படுகிறீர்களா? காட்டில் வாழும் காட்டெருமைகளை விட நீங்கள் கேவலமானவரா? கேள்வி கேட்டால் பதில் சொல்லாமலிருக்கிறீர்கள். நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற தவறைச் சுட்டிக்காட்டினால் அதற்கு பதில் சொல்கிறீர்களில்லை. உலமா சபையின் தலைவராயிருக்கும் உங்களுக்கு இது அழகா? இது கௌரவமா? நாட்டு மக்களுக்கு மார்க்கம் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளுக்கான சரியான சட்டத்தை உங்கள் மூலம் அறிந்து கொள்வதற்காக கேள்வி கேட்டு கடிதம் அனுப்பினால் அதற்கு பதில் எழுதுகிறீர்களில்லை. நீங்கள் கேள்விக்குரிய பதில் தர வேண்டும். அல்லது உங்களுக்கு பதில் தரமாட்டோம் என்று அதற்கான காரணத்தையும் காட்டி பதில் அனுப்ப வேண்டும். இதுவே நடைமுறை. நடைமுறை பேணப்பட வேண்டும். இதற்கு உங்களால் முடியாது போனால் பதவியை இராஜினாமா செய்து விட்டு வீடு போய் விட வேண்டும்.
ரிஸ்வீ அவர்களே!
நீங்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர். நான் அகில இலங்கை உலமாஉகளில் ஒருவன். உங்களுக்கு கடிதம் எழுதும் போதும், உங்களைப் பற்றி எழுதும் போதும் கௌரவமாகவும், கண்ணியமாகவுமே எழுத வேண்டும். நான் அவ்வாறு எழுதுவதில்லை. ஏன் தெரியுமா? அல்லது இது கூடப் புரியவில்லையா?
எனக்கும், ஸூபிஸ சமூகத்திற்கும் உங்களின் சபைதான் “முர்தத்” என்று “பத்வா” வழங்கியது. அந்த “பத்வா”வை அமுல் செய்து கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். அப்படியானால் என்னையும், ஸூபிஸ சமூகத்தையும் “முர்தத்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். எங்களை “முர்தத்” என்று சொல்லும் உங்களை அதை விடத் தரம் குறைந்த சொல் கொண்டுதான் நாங்கள் அழைக்க வேண்டும். நீங்கள் எங்களை “முர்தத்” என்று சொல்லும் போது நாங்கள் உங்களை “அதிமேதகு மௌலானா” என்றா அழைப்பது? அவ்வாறு அழைப்பது நியாயமாகுமா?
நீங்கள் உங்களின் தவறை உணர்ந்து நீங்கள் “பத்வா”வை வாபஸ் பெற வேண்டும். அல்லது அதை அமுல்படுத்துவதை பகிரங்கமாக நிறுத்த வேண்டும். இன்றேல் ஸூபிஸ சமூகம் பாதையில் இறங்கி நியாயம் கேட்க வேண்டிவரும்.
முற்றும்.