18/11/2023
#விமர்சனம்_என்ற_பெயரில் தனது சுயநலத்திற்காக மார்க்க அறிஞர்களை தரக்குறைவாக பேசும் தன்பக்க நியாயவாதிகளே, இது உங்களுக்கானது....
என்றென்றும், இஸ்லாத்தையும், இஸ்லாமிய மார்க்கத்தையும், விழுமியங்களையும் தன் மூச்சாக எடுத்து வாழ்வது மட்டுமல்லாமல், எம் சமூகத்திற்கு தூய இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரும் மௌலவிமார்களை, தன்னுடைய சுய கௌரவத்திற்காகவும், சுயநலத்திற்காகவும், மற்றவர் எம்மை விரும்ப வேண்டும், தன் பேச்சுக்களை லைக் பண்ண வேண்டும் என்பதற்காக சாதாரண லைக்ஸ்கும், கொமாண்ஸ்கும், செயாய்ஸ்க்கும், அற்ப உலக இன்பத்திற்கும் மயங்கி, விமர்சனம் என்ற பெயரில் தன்னைத்தானே மிகைப்படுத்தி இழிவுபடுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், எம் சமூகத்தவர் என்ற பெயரில் முகத்திரை போட்டு ஊசலாடிக் கொண்டிருப்பதும், மார்க்கத்தை சரியான முறையில் கற்று நடைமுறைப்படுத்தி வரும் அறிஞர்களை, தன்னிலைக்கு இணைத்து விட முற்படுவது எந்தளவுக்கு நியாயமானது....?
ஆண்,பெண் சமத்துவம் என்ற பெயரில் யஹூதி, நசாராக்களின், சதி வலையில் சிக்கி, அவர்களின் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதை முன்னிட்டு, அதனை மையமாக வைத்து இன்று சில விஷமிகள் தலை விரித்தாடிக் கொண்டிருக்கின்றார்கள்.....
பிற சமூக கலாசார விழுமியங்களில் உள்ளடங்கும் பரதநாட்டியக் கலை பற்றி கீழ் தரமாக பேசியதாக கூறி, அதை பற்றி விமர்சனம் என்ற பெயரில் போதிய மார்க்க அறிவில்லாமல், மார்க அறிஞர்களை கேவலப்படுத்திக் கொண்டும் அங்கலாய்த்துக் கொண்டும் திரிகிறார்கள்.
(அல்லாஹ் இவர்களுக்கு நேரான வழியை காட்டுவானாக!)
எம் சமூகத்தவர்களே!மௌலவி அன்று பேசியவற்றில், உங்களுக்கு பரதநாட்டியம் பற்றி மட்டும் தானா விளங்கியது?
அந்த உரையின் சுருக்கத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள முற்படவில்லையா?
இவ்வளவு பேசும் உங்களுக்கு அவர் பேச வந்த விடயத்தின் சாராம்சம் உங்களுக்கு விளங்கவில்லையா?
அல்லது
உங்கள் சிந்தனையில் மாற்றம் நிகழ வேண்டுமா?
ஒரு உரையின் சாராம்சம் விளங்காதவர்களுக்கு இதைப்பற்றி விமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
"உன் பேச்சை நான் கேட்டிருந்தால் நான் இஸ்லாத்துக்கு வந்திருக்க மாட்டேன், இஸ்லாத்தைப் படித்ததால் தான் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்" என்று பேசக் கூடியவர்களே!
இஸ்லாம் என்றால் சாந்தி சமாதானம் அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள்.
எம் சமூகத்தவருக்காக திரியை தூண்டி விட்டு எரிந்து அழிவதை பார்த்து மகிழக் கூடியவர்களாக இந்த இஸ்லாத்தில் வாழக்கூடியவர்கள்?
இஸ்லாமிய நெறிமுறைகளையும், வழிமுறைகளையும் சரியான முறையில் விளங்கி இருந்தால், சரியான முறையில் மார்க்கம் காட்டித் தந்த முறையில், ஒரு பெண் எப்படி வாழ வேண்டும், எப்படி எம் வாழ்வியல் முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், என்று அதே இஸ்லாம் காட்டித் தந்திருக்கின்றது அதை படிக்கவில்லையா நீங்கள்?
அவர் பேசிய அந்த உரையின் கருப்பொருளை மறைத்து, எப்பொழுதும் பெண்களை இவர் கேவலப்படுத்தி பேசக் கூடியவர், இந்த மௌலவிமார்கள் பேச தொடங்கினாலே, பெண்களை மையப்படுத்தி தான் பேசுகின்றார்கள். அவர்களுடைய ஆடை, அழகு, அலங்காரம், வர்ணம் பூசுதல் பற்றித்தான் பேசுகிறார்கள்.
நாங்கள் அழகாய் இருப்பது தானா உனக்கு வலிக்கிறது? ஆனால் உங்களுக்கு மனைவிமார் தெரிவுசெய்யவும் பொது அழகானவர்களை தானே தெரிவு செய்கிறார்கள் என்று மார் தட்டிப் பேசிக் கொள்ளக்கூடிய பெண்களே....!
அந்த மௌனவிமார்களின் மனைவிமார்களை இதுவரை நீங்கள் கண்டிருக்கின்றீர்களா?
திறமை எனும் பெயரில் இந்த சமூக வலைத்தளங்களில் அவர்கள் தங்களை தான் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்?
அப்படி இருந்தால் இஸ்லாமிய நெறிமுறைகளை பேணிப் பாதுகாக்க கூடிய ஒரு மௌலவியின் மனைவியை நீங்கள் காட்டுங்கள் பார்ப்போம்!
இது பெண் சமூகத்தைக் கேவலப்படுத்துகின்றார்கள் என்று பேசுகின்ற பெண்மணிகளே இது உங்களுக்கு நான் விடுக்கின்ற சவாலாக இருக்கலாம்.
அவர்கள் சொல்வதில் என்ன குறை இருக்கின்றது...?
அழகு என்பதும், அலங்காரம் என்பதும், யாருக்கு காட்டவேண்டும், யாருக்கு முன்னால் மறைக்க வேண்டும்,என்பதை அதே இஸ்லாம் தான் தெளிவுபடுத்தி வைத்திருக்கின்றது 1400 வருடங்களுக்கு முன். அதை நீங்கள் படிக்கவில்லையா...?
பெண்கள், சமுதாயத்தை பற்றி பேசியதற்காக, பெண்களை மார்க்கப்படி வாழ வேண்டும் என்று சொன்னதற்காக இன்று அதே பெண்கள் தாங்கள் செய்தது சரிதான் என்று நியாயப்படுத்துவதற்காக தனக்கு சாதகமாக வைத்து சமூக வலைத்தளங்களில் கூச்சலிடுகின்றனர்.
உங்களுக்கு ஒன்று விளங்கவில்லையா?
நீங்கள் இதை சாட்டுப்போக்காக வைத்து இன்று அந்நிய ஆண்களுக்கு முன் வலைத்தளங்களில் நேரடியாக வந்து பேசுவதும், கூச்சலிடுவதும், மார்க்கம் சொல்லித்தரும் நல்லொழுக்கமுள்ள சமூகம் இப்படிதான் இருக்கும் என்று நீங்கள் படித்து நடைமுறைப்படுத்துகின்றீர்களா?
திரைக்கு மறைவில் இருக்க வேண்டிய பெண்கள், திரைக்கு முன்னால் வந்து மார்க்கம் சொல்லித்தருபவர்களை பிற சமூகத்திற்கு முன்னால் எம் சமூகத்தவர்களை விட்டுக்கொடுத்தும், விளையாட்டு பொருளாகவும் பந்தாடுவது சரியா?
நீங்கள் நினைத்தால் போல் வாழச் சொல்வதல்ல இஸ்லாமும், இஸ்லாமிய மார்க்கமும்.
இப்படத்தான் வாழ வேண்டும் என்ற அழகான வழிமுறைகளை பகுத்து, தொகுத்து தந்துள்ளது.
நபி (ஸல்) கூறினார்கள்
இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.' (முஸ்லிம்)
விமர்சனம் கூற வந்த விஷமிகளே இந்த நரகத்தில் இருந்து உம்மை பாதுக்காக்க முட்பட்டது தவறா?
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
இன்னும்; முஃமினான பெண்களுக்கும்(நபியே!)நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இன்னும், தங்கள் அலங்காரத்தை அதிலிருந்து (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர(மற்றவற்றை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முந்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டு (தலை,கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்,அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரரிகளின் புதல்வர்கள், அல்லது தங்களுடைய பெண் (இனத்தவர்)கள்,அல்லது தங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆண்களில் (பெண்களின் மீது) ஆசை கொள்ளாத பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான உறுப்புகளை பற்றி ஏதும் விளங்காதவர்களான சிறுவர்கள், ஆகிய இவர்களை தவிர (மற்ற எவரிடமும்) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அன்றி தங்களது அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுத்துவதற்காத் தம் கால்களை அடி(த்து நட)க்க வேண்டாம். இன்னும், மூஃமின்களே! நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்வின் பால் நீங்கள் அனைவரும் பாவமீட்சித் தேடி மீளுங்கள்.
(அல்குர்ஆன் : 24:31)
முக்காடுகளைத் தங்கள் மார்பின் மீது போட்டுக் கொள்ளுமாறு வல்ல இறைவன் கூறுகின்றான். கால்களைத் தரையில் அடித்து நடக்க வேண்டாம் என்று கூறுகின்றான். ஆனால் நமது பெண்களோ எந்த டிசைனில் உள்ளாடை அணிந்தால் ஆண்களின் பார்வை தம்மீது படும் என்றும் எவ்வளவு அகலமான சலங்கை அணிந்தால் மற்றவர்களை ஈர்க்க முடியும் என்றும் கால்களைத் தரையில் அடித்துக்கொண்டு நடனம் ஆடுவதை பார்க்கிறோம்.
அல் குர்ஆனுடைய போதனைகளை சொன்னது தவறா?
இதை படிப்பினையாக எடுத்து சமூகத்திற்கு சொல்ல வேண்டிய நீங்கள் இன்று விமர்சனம் என்ற பெயரில் சமூகத்தில் எம்முடையே சமுதாயத்தையே காட்டிக் கொடுத்து எம்முடைய மார்க்கத்தை கொச்சைப்படுத்துகிறீர்களே இது நியாயமா?
மார்க்க அறிவில்லாதவர்களின் நிலை என்ன தெரியுமா?
وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ
நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
(அல்குர்ஆன் : 7:179)
அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் அச்சமும் இருக்குமானால் மறுமையில் அவனை சந்திக்கவுள்ளோம் என்பதையும் நமது கேள்வி கணக்கு அவனிடம் உள்ளது என்பதையும் சிந்தியுங்கள்.
தன் மக்களுக்கு மார்க்கத்தை அறிமுப்படுத்தாமல் விட்டு விட்டால் படைத்த இறைவன் உங்களை விட்டுவிடுவான் என்று எண்ணாதீர்கள். அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைக்காக என்றும் அழியாது நீடித்து நிற்கும் மறு உலக வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவனை அஞ்சுபவர்களுக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்துவான்.
*ذٰ لِكُمْ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ۙ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ*
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்டிருப்பவர் இதன் மூலம் உபதேசிக்கப்படுகிறார். மேலும் எவர் அல்லாஹ்வை அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு வெளியேறும் (சரியான) வழியை அவன் ஆக்கி அருள்வான்.
(அல்-குர்ஆன்: 65:2)
🖋️📝அஷ்ஷெய்க் அல் ஹாபிழ் மெளலவி அஹ்ஸன் இன்ஆமி