ஸ்ரீ அருளானந்த கணநாதர் ஆலயம் - கெங்கல்ல

  • Home
  • Sri Lanka
  • Kandy
  • ஸ்ரீ அருளானந்த கணநாதர் ஆலயம் - கெங்கல்ல

ஸ்ரீ அருளானந்த கணநாதர் ஆலயம் - கெங்கல்ல Kengalla Temple

31/08/2026
23/08/2026
நன்றி திரு வெங்கட் சீனிவாசன்🙏🌺🙏*ஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்……!**விநாயகரின் அவதாரங்கள்*  அவதாரம் என்...
19/08/2026

நன்றி திரு வெங்கட் சீனிவாசன்🙏🌺🙏
*ஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்……!*

*விநாயகரின் அவதாரங்கள்*

அவதாரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது விஷ்ணு அவதாரங்கள் மட்டுமே.

ஆனால் முழுமுதற் கடவுளாக வணங்கும் விநாயகரும் அவதாரங்கள் எடுத்துள்ளார். ஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்……!

*வக்ரதுண்ட விநாயகர்:*

வக்ரதுண்டா என்றால் வளைந்த தும்பிக்கை என்று அர்த்தமாகும். இந்த அவதாரத்திற்கு அவர் சிங்கத்தின் மீது வீற்றிருப்பார். காசியை துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டுவந்தான்.

அவனை அழிக்க சக்திதேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். அதனால் மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரைத் தோற்றுவித்தாள். சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய வக்ரதுண்டர் துராசுரனை அழித்து அருள்புரிந்தார்.

*சிந்தாமணி கணபதி:*

அபிஜித் என்ற அசுரனுக்கும் குணவதிக்கும் இறையருளால் பிறந்த கணன் என்பவன், கபிலரை துன்புறுத்தி அவரிடம் இருந்து சிந்தாமணியைக் கவர்ந்தான்.

இதனால் வருந்திய கபிலர் விநாயகரை மனமுருகி வழிபட்டார். அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட பிள்ளையார், கணனை அழித்து சிந்தாமணியை மீட்டுக் கொடுத்தார்.

*கஜானனர்:*

பார்வதி பரமேஸ்வரரிடம் அவதாரம் செய்து கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகரை கஜானனர் எனப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன. சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.

*விக்ன விநாயகர்:*

வரேண்யன் புஷ்பவதி என்ற தம்பதியரிடம் தோன்றி விக்னங்களை அகற்றியவர் விக்ன விநாயகர். இவர், காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர்.

*மயு ரேச கணபதி:*

சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடித்து வழிபட்ட பார்வதிதேவியிடம் அவதரித்து, பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர். பிறகு அவனையே வாகனமாகக் கொண்டவர் இந்த விநாயகர்.

*பாலசந்திரர்:*

தேவர்களை அடக்கி ஆண்ட அநலன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். அதனால் உண்டான வெம்மை நீங்க, மிக குளிர்ச்சியான சந்திரனை நெற்றியில் அணிந்து பாலசந்திரர் என்று பெயர் பெற்றார்.

*தூமகேது:*

புகை வடிவான அசுரன் ஒருவனை அழிப்பதற்காக அவதரித்தவர் தூமகேது விநாயகர். மாதவன், ஸுமுதா என்ற அரச தம்பதியருக்குப் பிள்ளையாகத் தோன்றி, தூம கேதுவை வதைத்தார் இந்த பிள்ளையார்.

*கணேசர்:*

பலி என்னும் அரக்கனைக் கொல்ல கணங்களுக்குத் தலைவனாக வந்து வெற்றி கண்டதால் கணேசர் என்ற திருப்பெயர் பெற்றார் பிள்ளையார்.

*கணபதி:*

பார்வதி பரமேஸ்வரர் யானையின் சித்திரத்தைப் பார்த்துக் களிக்கும்போது அவதரித்தவர் கணபதி. கஜமுகாசுரனை வென்றவர்.

*மகோற்கடர்:*

காச்யப முனிவரின் பிரார்த்தனையால், அதிதியிடம் பிறந்தவர் மகோற்கடர். காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.

*துண்டி கணபதி:*

துராஸதன் என்ற அரக்கனை அழிக்க, உமையவளின் திருவருளால் அவதரித்தவர் துண்டி கணபதி.

*வல்லப கணபதி:*

மரீசி முனிவரின் மகள் வல்லபையை மணந்து வல்லப கணபதி என்று பெயர் பெற்றார்.

Address

Ihalawela Road, Kengalla
Kandy
20186

Telephone

+94711438438

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ அருளானந்த கணநாதர் ஆலயம் - கெங்கல்ல posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category