02/04/2026
நிர்வாகி (Admin) தேவை - அறிவிப்பு
குருமண்வெளி ஸ்ரீ சித்தி விநாயகர் முத்துமாரியம்மன் ஆலய முகநூல் பக்கத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்ல தன்னார்வமுள்ள நிர்வாகிகள் தேவைப்படுகிறார்கள்.
⭐உங்களது பொறுப்புகள்:
-ஆலயத்தின் திருவிழாக்கள் மற்றும் விசேட தின பூஜைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பதிவிடுதல்.
-ஆலய நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை (Videos) பதிவேற்றம் செய்தல்.
-குருமண்வெளி ஊர் சார்ந்த சமூக விடயங்களை ஊர் மக்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்.
🛑கவனிக்க வேண்டியவை:
-இது ஒரு ஆன்மீக மற்றும் சமூகப் பணி என்பதால், தனிப்பட்ட விளம்பரங்கள் அல்லது தனி நபர் சார்ந்த பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
-ஆலயத்தின் கண்ணியத்தை பேணிப்பாதுகாக்கும் வகையில் பதிவுகள் அமைதல் வேண்டும்.
குறிப்பு: தற்போது குருமண்வெளியில் வசிப்பவர்கள் நன்று.
விருப்பம் உள்ளவர்கள் எமது முகநூல் பக்கத்தின் Inbox ஊடாக தொடர்பு கொள்ளவும்.
நன்றி!