கல்முனை கடற்கரை பள்ளி

கல்முனை கடற்கரை பள்ளி இந்த பிராந்தியதில் வாழுகின்ற மக்களி?

26/11/2025

🚨 எச்சரிக்கை▪︎
----------------------------
கல்முனை பிராந்தியத்தில், நவம்பர் 30 ஆம் திகதி வரை வரலாறு காணாத கடும் மழை பெய்யும்.

இந்திய வானிலை ஆய்வறிக்கை.
👇

https://www.facebook.com/share/v/1GSLQz1esC/?mibextid=oFDknk

■ கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா வெள்ளி ஆரம்பம்.!▪︎கல்முனை கடற்கரைப் ...
21/11/2025

■ கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா வெள்ளி ஆரம்பம்.!▪︎

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, ஸெய்யித் அப்துல் காதிர் நாகூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 204 வது கொடியேற்று பெருவிழாவும் 460 வது மனாகிப் மஜ்லிஸும் இவ்வருடமும் நாளை (21) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் விமர்சையாக இடம்பெறவுள்ளதுடன் கொடியேற்ற தினமான நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணி மணிக்கு சந்தனம் பூசுதல் நிகழ்வும், காலை 8:00 மணிக்கு பெண்கள் தலைபாத்திஹா மஜ்லிஸும், பிற்பகல் 3:45 மணிக்கு மௌலித் மஜ்லிசுடன் கொடி ஊர்வலம் நடைபெற்று மாலை 5:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.

இங்கு தினமும் நாளாந்த நிகழ்வுகளாக கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், மீரான் சாஹிப் மௌலித் மஜ்லிஸ், றிபாயி ராத்திப் மஜ்லீஸ், ஜியாரத் மஜ்லிஸ், சன்மார்க்க பயான் மஜ்லிஸ், விசேட இஸ்லாமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகள் சங்கைக்குரிய சாதாத்மார்கள், உலமாக்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம் பெறுவதோடு. இறுதித்தினமான 2025.12.03 புதன்கிழமை லுஹர் தொழுகையின் பின்னர் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கப்பட்டு, அன்றைய தினம் அஸர் தொழுகையுடன் கொடி இறக்கும் நிகழ்வும் இடம்பெறும். மேலும் 2025.12.04 வியாழக்கிழமை அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் கந்தூரி நிகழ்வும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

■ 204 ஆவது கொடியேற்ற விழா▪︎யாத்திரைகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 204வது வருடாந்த கொடியேற்ற விழா - 2025 தொடர்ப...
14/11/2025

■ 204 ஆவது கொடியேற்ற விழா▪︎

யாத்திரைகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 204வது வருடாந்த கொடியேற்ற விழா - 2025 தொடர்பான 2460/07ம் இலக்க அரச வர்த்தமானி 2025.10.28ம் திகதி வெளியிடப் பட்டுள்ளது.

04/11/2025

204 ஆவது கொடியேற்ற விழா.
------------------------------------------------------
சாஹூல் ஹமீது நாயகம் அவர்களின் நினைவாக கல்முனையில் வருடந்தோறும் இடம்பெறும் கொடியேற்ற நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 22, 2025 ஆம் திகதி, 204 ஆவது வருடமாக கல்முனை கடற்கரை பள்ளியில் இடம்பெற இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ்!

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்முதிர்நிலை குறித்து ஆவணப்படுத்தும் வரலாற்று நூல்.-------------------------------------------...
20/07/2025

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்
முதிர்நிலை குறித்து ஆவணப்படுத்தும் வரலாற்று நூல்.
----------------------------------------------------------------------
இனவாதம், பேரினவாதம், குறுந்தேசிய வாதம், பெருந்தேசியவாதம் கடந்த பொதுத் தேசியக் குரலை எழுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு நாம் நகர்த்தப்பட்டுள்ளோம்.

பல்வேறு தொகுதியினராக இருந்தாலும் தூய வெண்மையான சொற்களிலிருந்து நமது அடையாளத்தை ஆழப் பதிக்கின்ற முயற்சி தொடரப்பட வேண்டும்.

அந்த ஆரம்பப் பணிதான் கல்முனைக் கடற்கரைப் பள்ளி வாசல் முதிர் நிலை குறித்து ஆவணப்பத்தும் வரலாற்று நூல் எனக் கருதுகிறேன்.

அவாவுறும் எமது மக்களின் செல்நெறித் தேடலும் திரட்டலும் அற்றுப் போனதால் வடிவமற்ற ஒவ்வொன்றும் தமக்கான வடிவத்தைத் தேடிக் கொண்டே இருக்கும் என்பதான முன்னிருப்பில் நமது சிறகுகளாலேயே நாம் பறக்க முயற்சிப்போம்.

துயர் மண்டிய இழையங்களால் அட்ஷரமின்றி எழுதிக் கிடக்கும் நமது பூர்வீகத்தின் உயிர் மொழிக்கு குற்று வைக்கும் பணி நாடு பூராக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அர்த்தமின்மையின் ￶பிரதிகளால் ஒரு வரலாற்றை நிலை நிறுத்த முடியாது.
நிர்ப்பீடனமில்லாத தொன்மமும் உரை கல்லுமுள்ள ஒரு நல்லிணக்கச் சமூகம் சாட்சிகளற்று வெற்றுக் கடதாசிகளால் தோணி செய்து நட்டாற்றில் விடப்படுகின்ற நிலை இன்னும் நம்மை விட்டு மறையவில்லை.

இந்தப் புள்ளியிலிருந்து நம் முன்னைய வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டுமென்பதைச்
சமயங்களுக்கப்பாலும் சிந்திப்பார்களாக இருந்தால் அதை விடக் கூடிய பெறுமானம் எதுவும் இருக்க முடியாது.

இந்த நிலையில் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா வரலாற்றை ஆவணமாக்கும் முயற்சியின் அங்குரார்ப்பண கலந்துரையாடல் 19.07.2025 சனிக்கிழமை கல்முனை முஹ்யித்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா நிர்வாக சபையினருக்கும் கல்முனை மரபுரிமை ஆய்வு வட்ட உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா வின் வரலாற்றினை தேடலும் தொகுத்தலும் என்ற அடிப்படையில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செழுமையான, காலத்தால் அழியாத திடத்தில் - சிதைகின்ற வரலாற்றைக் கட்டி எழுப்புகின்ற இம் மேலான கூட்டுப் பணிக்கு அனைவரும் பக்க பலமாகவும் பங்காளியாகவும் மாறுவோம்.

▪︎நபீல்.

07/06/2025
■ கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 ஆவது கொடியேற்ற விழா!▪︎----------------------------------------------------------நூருல...
02/12/2024

■ கல்முனை கடற்கரை பள்ளிவாசலின்
203 ஆவது கொடியேற்ற விழா!▪︎
----------------------------------------------------------
நூருல் ஹுதா உமர்

ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்காவில் 203 வது கொடியேற்று விழா இன்று (2) திங்கட்கிழமை ஆரம்பமானது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிர்வாகிகள், ஊர் மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்கா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது.

இன்று கொடி ஏற்றிய தினத்தில் இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மௌலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித ரிபாஈ ராதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்கு தினமான எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இன்று கொடி ஏற்றிய நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள், உலமாக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

203 ஆம் வருட கொடியேற்று விழா ..இன்று டிசம்பர் 02, 2024 அன்று ஆரம்பம்.
01/12/2024

203 ஆம் வருட கொடியேற்று விழா ..
இன்று டிசம்பர் 02, 2024 அன்று ஆரம்பம்.

■ புதிய விஷேட நம்பிக்கையாளர்களுக்கான  நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு▪︎--------------------------------------------------...
30/08/2024

■ புதிய விஷேட நம்பிக்கையாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு▪︎
----------------------------------------------------------------
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் ஆகிய இவ்விரு பள்ளிவாசல்களுக்குமான புதிய விஷேட நம்பிக்கையாளர்களுக்கான நியமனக்கடிதம் முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் M.H.M. முக்தார் ஹுசையின் முன்னிலையில் கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் J. லியாகத் அலி அவர்களினால் வழங்கிவைக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது.

இதன் போது கல்முனை அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ் மெளலவி P.M.A. ஜலீல் பாகவி, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஹாஜ் S.L. அப்துல் ஹலீம், கல்முனை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் A.M. ஹனீபா, சிரேஷ்ட மன நல ஆலோசகர் N.M. நெளஸாத், இப்றா அரிசி ஆலையின் உரிமையாளர் தொழிலதிபர் அல்ஹாஜ் S.L.M. அமீர் (நயீர்), வர்த்தகர் அல்ஹாஜ் A.M.A. லத்தீப் ஆகியோர் நியமனப் பத்திரங்களை பெற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து குறித்த புதிய விஷேட நம்பிக்கையாளர்கள் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபில் மஹல்லாவாசிகளுடனான கலந்துரையாடல் மற்றும் விஷேட துஆ பிராத்தனையிலும் ஈடுபட்டனர்.

தற்கால நிருவாகிகள் படம் காட்டத் தேவையில்லை.-----------------------------------------------------கல்முனை முஹ்யித்தீன் ஜும...
16/08/2024

தற்கால நிருவாகிகள்
படம் காட்டத் தேவையில்லை.
-----------------------------------------------------
கல்முனை முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளிவாசல் எல்லோரையும் தொடராக ஏற்றுக்கொள்வதில்லை!

உரியவர்கள் மீதமிருக்க போலிகள் கரையொதுங்குவார்கள். இதுதான் வரலாறு! அதற்கிடையில் யாரும் அவசரப்படாதீர்கள்.

நிருவாக சபையில் நியமிக்கப்பட்ட சிலரில் கொஞ்சப்பேருக்கு விமர்சனம் இருக்காம். சிலர் கடுமையாக படம் காட்றாகளாம் என்றெல்லாம் அவகட குறைகளை பட்டியல்போட்டு விமர்சிச்சு, நானும் அனியாயத்துக்கு துணைபோறேனாம் என்று சொல்லி நண்பர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு தொடர்ந்து நச்சரிக்கின்றார்கள்.

நிருவாகிகள் என்பவர்கள் தற்காலிகமாக சேவை செய்ய வந்தவர்களே தவிர வக்பு சொத்துக்களின் உரிமையாளர்களில்லை.

ஒருத்தருக்கும் பள்ளிவாசலை யாரும் எழுதிக்கொடுக்கவும் இல்லை.

புதியவர்களின் ஆயுட்காலம் வெறும் 3 வருடம்தானே. அதுவரை புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுப்போமே.

3 வருடம் முடிவதற்கு முன்னர்கூட தகுதியானவர்கள் மிஞ்சியிருக்க பள்ளிவாசலை தங்களது சொந்த தேவைக்காக பயன்படுத்த யாராவது நினைத்தால், வீணாக படம் காட்டினால், புனிதமான முஹ்யித்தீன் பள்ளி அவர்களை தானாக ஒதுக்கிவிடும்.

இதுதான் கடந்தகால வரலாறு.

Muhammadh Azhahim M. Haniffa.

சர்ச்சைக்குரிய பெரிய பள்ளி நிருவாக நியமனம்.------------------------------------------------------------முஸ்லிம் சமய பண்ப...
07/08/2024

சர்ச்சைக்குரிய
பெரிய பள்ளி நிருவாக நியமனம்.
------------------------------------------------------------
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 06, 2024 ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு குறுகிய கால இடைவெளியில் பதில் பணிப்பாளராக M. H. A. M. றிப்லான் அவர்கள் நியமிக்கப்பட்டு, "கல்முனை புதுப்பள்ளி மன்றம்", அறக்கப் பறக்க தலை வெட்டப்பட்ட கோழிகள் போல அவரை நாடி, அதன் மூலம் இந்த நியமன நாடகத்தை அரங்கேற்றி இருப்பது, கல்முனை வாழ் முஸ்லிம் மக்களிடத்தில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதிக சமையல்காரர்கள் சேர்ந்து குழம்பை கெடுப்பது போல, பழைய நிர்வாகத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டை திடீரென தடுத்து நிறுத்தி, ஒட்டுமொத்தமாக பள்ளியின் நிர்வாகத்தை கைப்பற்றி இருப்பது அனைவரும் அறிந்ததே!

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்முனை கடற்கரை பள்ளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category