கல்முனை பெரிய பள்ளி

கல்முனை பெரிய பள்ளி கல்முனை மாநகர மக்களின் பாரம்பரிய அடையாளச் சின்னம்.

■ ஜனாஸா அறிவித்தல்▪︎கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ஒராபீபாஷா வீதியில் வசித்து வந்த சபுர்தீன் மற்றும் அவரின் மனைவி தஸ்மி மற...
27/11/2025

■ ஜனாஸா அறிவித்தல்▪︎

கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ஒராபீபாஷா வீதியில் வசித்து வந்த சபுர்தீன் மற்றும் அவரின் மனைவி தஸ்மி மற்றும் அவர்களது பேத்தி அஸ்ஷாலா மெஹ்பிஸ் அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் அவர்கள் பயணித்த கார் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் வபீக்கா, இஸ்மாத் பானு, அப்னான், ஹாதியா ஆகியோரின் அன்பு பெற்றோரும் ஹில்மி (Foreign City), ஜரீன் ஆகியோரின் அன்பு மாமா மாமியும், காலம் சென்ற அலிக்கான், தாஹிர், அமுதா,தன்சூல் மற்றும் கரீமா பீவி, ருவைதா, நஜீம்(SI) ஆகியோரின் சகோதரியும் மச்சானுமாவார்.

வபாத்தான குழந்தையின் பெற்றோர் ஜெறீன், இஸ்மத் பானு மற்றும் சகோதரன் ஜினான் ஆவார்.

ஜனாசா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ், இன்று சாய்ந்தமருதில் இடம்பெறும்.

🤲
அழ்ழாஹும்ம
அஃபிர்லஹு வர்ஹம்கு.

அல்லாஹு தஆலா அவரின் பாவங்களை மன்னித்து அன்னாரின் மறுமை வாழ்வை ஒளிபெறச்செய்து அவரது கபூரறையை சுவனத்தின் பூஞ்சோலையாக்கி உயர்ந்த ஜன்னதுல் பிர்தவுஸை வழங்க வேண்டும் என பிரார்த்திப்போம்.

ஆமின்,
ஆமின், யா றப்.

■ ஜனாசா அறிவித்தல்▪︎கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் (AMH) முன்னாள் வைத்திய அத்தியட்சகரும் (MS), கல்முனை பிராந்...
14/11/2025

■ ஜனாசா அறிவித்தல்▪︎

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் (AMH) முன்னாள் வைத்திய அத்தியட்சகரும் (MS), கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனையின் முன்னாள் ஸ்தாபகப் பணிப்பாளருமான (RDHS) டாக்டர். ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் கலீல் (சென்றல் பாமசி), ஹக்கிம் (Engineer, RDA), முபாரக் (ஒய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்) மற்றும் மர்ஹூம் தமீம் ஹாஜியார் (சென்றல் ஹாட்வெயார்) ஆகியோர்களின் மூத்த சகோதரரும் ஆவார்.

ஜனாசா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ், நாளை லுஹர் தொழுகையின் பின்னர் கொழும்பு ஜாவத்தை பள்ளிவாசல் மைய்யவாடியில் இடம்பெறும்.

🤲
அழ்ழாஹும்ம
அஃபிர்லஹு வர்ஹம்கு.

வல்ல அல்லாஹு தஆலா அவரின் பாவங்களை மன்னித்து அன்னாரின் மறுமை வாழ்வை ஒளிபெறச்செய்து அவரது கபூரறையை சுவனத்தின் பூஞ்சோலையாக்கி உயர்ந்த ஜன்னதுல் பிர்தவுஸை வழங்க வேண்டும் என பிரார்த்திப்போம்.

ஆமின்,
ஆமின், யா றப்.

நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் AM.ஜௌபர் (SSP) அவர்கள் தெரிவு செய்யப்பட...
19/08/2025

நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் AM.ஜௌபர் (SSP) அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

புதிய தலைவருக்கும் நிருவாக சபைக்கும் கல்முனை பெரிய பள்ளி, கல்முனை கடற்கரை பள்ளி மற்றும் கல்முனை பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

■ ஜனாசா அறிவித்தல▪︎கல்முனை பழைய தபாலக வீதியில் வசித்துவந்த சேகு முகைதீன் பௌமின்  அவர்கள் காலமானார்.இன்னாலில்லாாஹி வஇன்னா...
25/06/2025

■ ஜனாசா அறிவித்தல▪︎

கல்முனை பழைய தபாலக வீதியில் வசித்துவந்த சேகு முகைதீன் பௌமின் அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாாஹி
வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் நஸீஹா பேகம் (சபானா) ஆசிரியை அவர்களின் கணவரும் சமி அர்ஹம், ஹம்னா செயினப் ஆகியோரின் அன்புத் தந்தையும் மர்ஹூம் சேகு முகைதீன் ஹாஜியானி குழந்தை உம்மா ஆகியோரின் மகனும், நதீறா, மர்ஹூம் நஜிமுதீன், நௌபர் (Anton), றிஸ்மின், வைத்தியர் நபீர், றொஷானா மற்றும் றிபான் ஆகியோரின் சகோதரரும், அப்துர் றஹீம் (பேபி சிற்றி) மற்றும் முகம்மத் பர்சான் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

ஜனாசா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ், இன்று காலை 7.00 மணிக்கு நூறானியா பள்ளிவாசல் மைய்யவாடியில் இடம்பெறும்.

🤲
அழ்ழாஹும்ம
அஃபிர்லஹு வர்ஹம்கு.

அல்லாஹு தஆலா அவரின் பாவங்களை மன்னித்து அன்னாரின் மறுமை வாழ்வை ஒளிபெறச்செய்து அவரது கபூரறையை சுவனத்தின் பூஞ்சோலையாக்கி உயர்ந்த ஜன்னதுல் பிர்தவுஸை வழங்க வேண்டும் என பிரார்த்திப்போம்.

ஆமின்,
ஆமின், யா றப்.

ஈதுல் அழ்ஹாஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.
06/06/2025

ஈதுல் அழ்ஹா
ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

■ 10.00 மணிக்குப் பின்னர்நடமாடும் மாணவர்கள் கைது; அமுலுக்கு வரும் புதிய நடைமுறை▪︎ - பாறுக் ஷிஹான்.மருதமுனை பிரதேச மக்களு...
28/05/2025

■ 10.00 மணிக்குப் பின்னர்
நடமாடும் மாணவர்கள் கைது;
அமுலுக்கு வரும் புதிய நடைமுறை▪︎

- பாறுக் ஷிஹான்.

மருதமுனை பிரதேச மக்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம் எனும் பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று விநியோகிக்கப் பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வாழும் மக்களுக்கான குறித்த அறிவித்தல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம் அண்மையில் கூட கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருதமுனையின் தற்போதைய நிலை, மாணவர்கள் நலன், இளைஞர்களின் போக்கு, மருதமுனையின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மருதமுனை பிரதேச மக்களுக்கான அறிவித்தல்.
👇

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த காலங்களில் நமது ஊரின் செயற்பாடுகள் பள்ளிவாசல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருந்ததனை தாங்கள் அறிவீர்கள். குடும்பப் பிரச்சினைகளும் மக்களுக்கிடையிலான பிணக்களும் குடும்பமட்டத்திலும் பள்ளிவால்கள் மட்டத்திலும் பெரும்பாலும் தீர்த்துக்கொள்ளப்பட்டன.

இதன் பின்பே பிரச்சினைகள் பொலிஸ் நிலையங்களுக்கும் காதி நீதிமன்றங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

ஆனால், தற்போது இச்செயற்பாடுகளின் நிலை மாறி, சிறு பிரச்சினைகள் கூட குடும்பம் பள்ளிவாசல்களைக் கடந்து அதற்கு அடுத்த மட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இவ்விடயங்கள் பொலிஸ் நிலையம், இணக்கசபை, நீதிமன்றம் எனப்பல வருட காலங்களுக்கு நீண்டு செல்வதனையும் அதிகமான பணமும் நேரமும் விரயமாவதனையும் இலகுவாக தீர்க்கக் கூடிய சிறு பகைகள் பெரிதாக வளர்ந்து நிற்பதனையும் தாங்கள் அறிவீர்கள்.

ஊர்ச் செயற்பாடுகளையும் நமது ஊர் இளைஞர்களின் நடவடிக்கைகளையும் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரும் நோக்குடன் மருதமுனையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் ஒன்றிணைந்து மருதமுனை அனைத்து பள்ளிவாயல்கள் அமையம் எனும் பெயரில் ஒரு பொது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மட்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர் கடந்த 18.05.2025 ஆம் திகதி மஸ்ஜிதுர் றஹ்மத் பள்ளிவாசலில் கல்முனை பிரதேச உதவிப்பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, கல்முனைப் பிரதேச காதி நீதிபதி, மருதமுனை பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர்கள் மற்றும் பள்ளிவாசல் தலைவர் செயலாளர்கள் பங்குபற்றலுடன் கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டு கீழ்வரும் ஆரம்ப முடிவுகள் எட்டப்பட்டுள்ளன என்பதனை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

1. அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் அலுவலகம் ஒன்றினைத் திறத்தல்

2. மாணவர்கள் இரவு 10.00 மணிக்குப் பின்னர் அவசர அவசிய காரணங்களின்றி வெளியில் நடமாடுவதைத் தடுத்தல். இவ்வாறு தகுந்த காரணங்களின்றி இரவு 10.00 மணிக்குப் பின்னர் வீதிகளில் நடமாடும் மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்படுவார்கள். பின்னர் அம்மாணவர்கள் வதியும் பள்ளிவாசல்களின் நற்சான்றுக் கடிதத்துடன் பெற்றோர்கள் பொலிஸ் நிலையம் சென்றே இவர்களை அழைத்து வருதல் வேண்டும். இவ்விடயம் 24.05.2025ம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வரப்படும்.

3. அவசியமின்றி இரவு 11.00 மணிக்குப் பின்னர் மருதமுனைப் பிரதேசத்தில் திறந்திருக்கின்ற கடைகளினை எதிர்காலத்தில் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருதல்.

4. சாரதி அனுமதிப்பத்திரமின்றியும் தலைக் கவசமின்றியும் இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பிய வண்ணம் மோட்டார் சைக்கிள்களில் இரண்டுக்கு மேற்பட்டோர் உலா வருவது தொடர்பாக எதிர்காலத்தில் பொருத்தமான செயற்றிட்டமொன்றினை வகுத்துச் செயற்படுத்துதல்.

5. இலகுவாக தீர்வு காணக்ககூடிய சிறு பிணக்குள், குடும்ப மட்டத்தில் அல்லது பள்ளிவாசல்கள் மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தல். இவ்வாறு தீர்வு எட்டப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையத்தினால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கக் குழுவினூடாக தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல்.

இக்குழு வாரமொரு முறை கூடி இயலுமான வரை பள்ளிவாசல்கள் மட்டத்தில் இப்பிரச்சினைகளுக்கு தீரவு காண முயலும். இதன் பின்பே பிரச்சினைகள் ஏனைய மட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அதேபோல், பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்படுகின்ற சிறு பிரச்சினைகளும் ஆரம்பத் தீர்வுக்காக இந்நல்லிணக்கக் குழுவிற்கு கொண்டு செல்லப்படுவதற்கு பொலிஸ் நிலையத்தினால் ஆலோசனைகள் வழங்கப்படும்.

6. குடும்பங்களுக்குள் ஏற்படுகின்ற சிறு குடும்பப் பிரச்சினைகள், குடும்ப மட்டத்திலும் அப்பிரதேச பள்ளிவாசல்கள் மட்டத்திலும் தீரத்துக்கொள்ளப்படல் வேண்டும். இங்கு தீர்வு பெறப்படாத பிரச்சினைகள் மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல் அமையத்தினால் அமைக்கப்பட்டுள்ள குடும்ப நல்லிணக்க குழுவினால் தீர்வு எட்டப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இங்கும் தீர்வு எட்டப்படாத பிரச்சினைகளே காதி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆலோசனை வழங்கப்படும்.

அதேபோல், நேரடியாக காதிநீதிமன்றம் செல்கின்ற பிரச்சினைகளும் காதி நீதிபதியினால் இறுதி சமரச முயற்சிக்காக மருதமுனை அனைத்துப் பள்ளிவாயல்கள் அமையத்தியத்தின் கீழியங்கி வருகின்ற குடும்ப நல்லிணக்கக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்பே இறுதித்தீரமானம் எடுக்கப்பட வேண்டுமென உடன்பாடு காணப்பட்டுள்ளது.

7. வெளியூர்களிலிருந்து மருதமுனைப் பிரதேசத்திற்கு வந்து வீடு வாடகைக்கு பெற்று வசிப்பவர்கள். அவர்கள் வசித்து வந்த பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களிலிருந்து நற்சான்றுப்பத்திரமொன்றினைப் பெற்றுவந்து வீடு வாடகைக்க பெறப்போகின்ற பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் சமர்ப்பித்தல் வேண்டும்.

இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக பள்ளிவாசல்கள் பொலிஸ் நிலையத்திற்கும் கிராம சேவகர்களுக்கும் அறிவித்தல் வேண்டும். (தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்காக இவ்விடயத்தில் வீடு வாடகைக்கு வழங்குபவர்கள் மிகக்கவனத்துடன் இருக்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்படுகின்றது)

முழுமையாக ஊரினதும் நமது ஊரில் வாழும் இளைஞர்களினதும் மாணவர்களினதும் எதிர்கால நலன்கருதி எட்டப்பட்டுள்ள இவ்வாரம்ப முயற்சிக்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு மதிப்பிற்குரிய பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் மற்றும் இளைஞர்கள், மாணவர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம்.
மருதமுனை.

21/03/2025

நோன்பு மாதத்தின் கடைசி பத்தில்,
யா அல்லாஹ், எனக்கு நரக விடுதலை தா என்று புனித கஃபாவின் தங்கக் கதவை பிடித்துக்கொண்டு கேட்டாலும்..

வல்ல அல்லாஹ் எமக்கு விடுதலை கொடுக்கமாட்டான்.

நாங்கள் உரிய முறையில் சக்காத் கொடுத்தால் தவிர...

மௌலவி mohamed mursh*th

■ என் வாழ்வில் நான் எதிர்பார்த்திராத வேளைகளில் கிடைத்த இரண்டு மாபெரும் இறை பாக்கியங்கள்▪︎அதில் ஒன்று...நவம்பர் 06, 2025 ...
05/03/2025

■ என் வாழ்வில் நான் எதிர்பார்த்திராத வேளைகளில் கிடைத்த இரண்டு மாபெரும் இறை பாக்கியங்கள்▪︎

அதில் ஒன்று...

நவம்பர் 06, 2025 சுபஹ் தொழுது விட்டு இருக்கும் போது ஒரு தொலைபேசி அழைப்பு, எனது நண்பர் மல்வானை டொக்டர் அப்துல் பதாஹ்.

"சனூஸ் இம்முறை ஹஜ் செய்ய வாய்ப்பு ஒன்று இருக்கு விருப்பமா? ஆறு நாட்களில் ஆயத்தமாக வேண்டும்" என்றார்.

நான் என்ன கேள்வி இது, உடனே ஓம் என்றேன். 45 நாட்கள் மக்காவிலும் மதீனாவிலும் இரு பாக்கியங்கள் ஹாஜிகளிக்கு வைத்தியமும் செய்து ஹஜ்ஜையும் நிறைவேற்றும் பாக்கியங்கள். முதல் குழுவில் ஹஜ் சென்று இறுதி குழுவில் வந்தோம் நானும் மனைவியும். அல்ஹம்துலில்லாஹ்.

நான் ஹஜ்ஜுக்குப் போகவேண்டும் என்று பணம் சேர்க்கவில்லை, ஆனால் கஷ்டப்படுவோருக்கு உதவி செய்வேன். வல்லோன் என்னை இலேசாக ஹஜ் செய்ய வைத்தான்.

இன்னொன்று ...

பெப்ரவரி 26, 2025 இரவு ஒரு தொலைபேசி அழைப்பு, பெரும்பாலானோரின் விருப்பத்துக்கமைய உங்களை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல் தலைவராக்க இருக்கிறோம். அதனை நீங்கள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று.

நான் அடிக்கடி கூறும் ஒரு சிந்தனைதான்.

"உன் தேவை
உணரப்படும் இடத்தில்
உன் சேவையைக் கொடு,
உன் சேவை
உணரப்படும் இடத்தில்
உன் தேவையை விட்டுக் கொடு” என்று

இதன் அடிப்படையில் ஏற்றுக் கொண்டது தான், இந்த தலைமைத்துவம்.

அல்-ஹம்துலில்லாஹ்!

யா அல்லாஹ்!
இந்த புனித பணியை உனக்குப் பொருத்தமானதாக ஆக்கிவிடு யாரப்பே.
அப்பணியை எனக்கு இலகுவாக்கித் தந்துவிடு யாரப்பே!!
உனக்கு மாத்திரம் எப்போதும் பயப்படக் கூடியவனாய் ஆக்கிவிடு யாரப்பே!!!

ஆமீன் ஆமீன் ஆமீன்.

▪︎டாக்டர். சனூஸ் காரியப்பர்,
தலைவர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயல்.

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் சிபாரிசுக்கமைய சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்காக நியமிக்கப்பட்டுள்ள 42 Special Trust...
21/02/2025

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் சிபாரிசுக்கமைய சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்காக நியமிக்கப்பட்டுள்ள 42
Special Trustees பெயர் விபரம் 👇👇👇

01. Mr. M.H.K. Zanuz
02. Mr. M.S.M. Mubarack
03. Mr. Meera Shaibu
04. Mr. A.M. Misbha
05. Mr. Safeek
06. Mr. Jabbar
07. Mr. M.I.A. Azeez
08. Mr. M.I. Mujahid Hilal
09. Mr. M.Y. Saleem
10. Mr. H.M. Naleem
11. Mr. A.L.M. Musthafa
12 Mr. M.S. Ummar Farook
13. Mr. Najimudeen
14. Mr. Abubacker Farkhan
15. Mr. N.M. Rismir
16. Mr. A.B. Mujeen
17. Mr. Sulfikar
18. Mr. A.H.M. Haroon
19. Mr. A.M. Sameem
20. Mr. M.I.M. Najeem
21. Mr. S. Athambawa
22. Mr. M.B.M. Naleem
23. Mr. A.L.M. Ismail
24. Mr. M.A.C.L. Najeem
25. Mr. M.I. Zaheer Hussain
26 Mr. M.S. Faslur Rehuman Muqathasy
27. Mr.Y. Ahamed lebbe
28. Mr. A.R. Mohamed Mansoor
29. Mr. U.L.M. Faizar
30. Mr. A.H. Asraff Kariapper
31. Mr. M.M.M. Munas
32. Mr. M.I. Riyal
33. Mr.M. L.M. Rifas
34. Mr. Aezar Meerashahip
35. Mr. S. Fasmeer
36. Mr. U.L. Rizvi
37. Mr. A.M. Thasleen
38. Mr. M.R. Raheem
39. Mr. A. Abdul Najeem
40. Mr. A.R.M. Farkhan
41. Mr.A. Jesmeer
42. Mr. A.L.Issadeen Mohamed

■ புதிய விஷேட நம்பிக்கையாளர்களுக்கான  நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு▪︎--------------------------------------------------...
30/08/2024

■ புதிய விஷேட நம்பிக்கையாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு▪︎
----------------------------------------------------------------
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் ஆகிய இவ்விரு பள்ளிவாசல்களுக்குமான புதிய விஷேட நம்பிக்கையாளர்களுக்கான நியமனக்கடிதம் முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் M.H.M. முக்தார் ஹுசையின் முன்னிலையில் கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் J. லியாகத் அலி அவர்களினால் வழங்கிவைக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது.

இதன் போது கல்முனை அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ் மெளலவி P.M.A. ஜலீல் பாகவி, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஹாஜ் S.L. அப்துல் ஹலீம், கல்முனை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் A.M. ஹனீபா, சிரேஷ்ட மன நல ஆலோசகர் N.M. நெளஸாத், இப்றா அரிசி ஆலையின் உரிமையாளர் தொழிலதிபர் அல்ஹாஜ் S.L.M. அமீர் (நயீர்), வர்த்தகர் அல்ஹாஜ் A.M.A. லத்தீப் ஆகியோர் நியமனப் பத்திரங்களை பெற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து குறித்த புதிய விஷேட நம்பிக்கையாளர்கள் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபில் மஹல்லாவாசிகளுடனான கலந்துரையாடல் மற்றும் விஷேட துஆ பிராத்தனையிலும் ஈடுபட்டனர்.

தற்கால நிருவாகிகள் படம் காட்டத் தேவையில்லை.-----------------------------------------------------கல்முனை முஹ்யித்தீன் ஜும...
16/08/2024

தற்கால நிருவாகிகள்
படம் காட்டத் தேவையில்லை.
-----------------------------------------------------
கல்முனை முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளிவாசல் எல்லோரையும் தொடராக ஏற்றுக்கொள்வதில்லை!

உரியவர்கள் மீதமிருக்க போலிகள் கரையொதுங்குவார்கள். இதுதான் வரலாறு! அதற்கிடையில் யாரும் அவசரப்படாதீர்கள்.

நிருவாக சபையில் நியமிக்கப்பட்ட சிலரில் கொஞ்சப்பேருக்கு விமர்சனம் இருக்காம். சிலர் கடுமையாக படம் காட்றாகளாம் என்றெல்லாம் அவகட குறைகளை பட்டியல்போட்டு விமர்சிச்சு, நானும் அனியாயத்துக்கு துணைபோறேனாம் என்று சொல்லி நண்பர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு தொடர்ந்து நச்சரிக்கின்றார்கள்.

நிருவாகிகள் என்பவர்கள் தற்காலிகமாக சேவை செய்ய வந்தவர்களே தவிர வக்பு சொத்துக்களின் உரிமையாளர்களில்லை.

ஒருத்தருக்கும் பள்ளிவாசலை யாரும் எழுதிக்கொடுக்கவும் இல்லை.

புதியவர்களின் ஆயுட்காலம் வெறும் 3 வருடம்தானே. அதுவரை புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுப்போமே.

3 வருடம் முடிவதற்கு முன்னர்கூட தகுதியானவர்கள் மிஞ்சியிருக்க பள்ளிவாசலை தங்களது சொந்த தேவைக்காக பயன்படுத்த யாராவது நினைத்தால், வீணாக படம் காட்டினால், புனிதமான முஹ்யித்தீன் பள்ளி அவர்களை தானாக ஒதுக்கிவிடும்.

இதுதான் கடந்தகால வரலாறு.

Muhammadh Azhahim M. Haniffa.

Address

Main Street
Kalmunai

Opening Hours

Monday 04:00 - 23:00
Tuesday 04:00 - 23:00
Wednesday 04:00 - 23:00
Thursday 04:00 - 23:00
Friday 04:00 - 23:00
Saturday 04:00 - 23:00
Sunday 04:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்முனை பெரிய பள்ளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category