கற்பூர சித்திவிநாயகர் வியாபாரிமூலை

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • கற்பூர சித்திவிநாயகர் வியாபாரிமூலை

கற்பூர சித்திவிநாயகர் வியாபாரிமூலை வியாபாரிமூலை

20/08/2026

சிறந்த ஒரு ஆன்மீக பேச்சாளர் குமரேசன்🙌🏻

சித்திவிநாயகர் ஆலய 2ஆம் நாள் உற்சவம்🙏🏻🙏🏻🙏🏻
19/08/2026

சித்திவிநாயகர் ஆலய 2ஆம் நாள் உற்சவம்🙏🏻🙏🏻🙏🏻

18/08/2026
கற்பூரம் விளைவித்து அற்புதம் புரிந்த கற்பூர சித்திவிநாயகப்பெருமானுக்கு சர்வமங்கள  வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் கூட்டம் ...
18/08/2026

கற்பூரம் விளைவித்து அற்புதம் புரிந்த கற்பூர சித்திவிநாயகப்பெருமானுக்கு
சர்வமங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் கூட்டம் முன்னிலையில் கொடியேற்றம் 🙏🙏🙏

வியாபாரிமூலை கற்பூர ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்பராபவ வருஷ மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2026🙏 கற்பூர சித்திவிநாயகர் வியாபாரிமூலை
08/08/2026

வியாபாரிமூலை கற்பூர ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
பராபவ வருஷ மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2026
🙏 கற்பூர சித்திவிநாயகர் வியாபாரிமூலை

விட்டிடுவாயோ? வீரபத்திரா வீழ்ந்துநாம்போகக் - கை  #மகா_கும்பாபிஷேகம்_இன்னுமிருப்பது_11_நாட்கள்_மட்டுமே!உணர்வறு ஜடங்களாகி ...
20/01/2026

விட்டிடுவாயோ? வீரபத்திரா வீழ்ந்துநாம்போகக் - கை
#மகா_கும்பாபிஷேகம்_இன்னுமிருப்பது_11_நாட்கள்_மட்டுமே!

உணர்வறு ஜடங்களாகி ஊனமாய் உழன்று வாழ்வில்
திணறியே செய்வதறியாச் சிறுமையாய்க் குறுகி
அன்பு,அறம்,பக்தி,பணிவு,பயம் என்றிவைகள்
இன்றியே இயமனிலும் கொடிய நெஞ்சாய்
இயந்திரம் என்றேயாகி இரும்பினை நிகர்த்து வாழும்
கயவராய் வாழ்ந்து மடிவதோ இவ்வாழ்க்கை?

காசு ஒன்றே கருத்தாயாகி கருணையறு மனத்தாராகி
பேசுவதும் குறைவாயாகி வேசமது பலவுமாகி
தேசமது நினையாராகி மோசடிகள் பலவுமாகி
நாசமெலாம் நன்குசெய்யும் நயவஞ்சகக் கள்வராக
மானிடர்கள் மாறுதர்க்கோ மனிதகுலம் வாழும் பூமி?
"இந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கித்
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும்" என்றே
மாணிக்க வாசகரும் மொழிந்ததும் பொய்யா யாமோ?
மானிடந் தழைக்கவும் அருளவும் மாட்டாயோ?
பேணிடும் மரபு, பழைமை எல்லாம் காலம்
ஏறிடும் நவீனந்தன்னில் இழந்துநாம் போனாற் பின்னால்,
கருவிகள் உண்டாம் காசும் உண்டாம்
பெருகிடும் வசதி உண்டாம். என்ன?
பேண்தகு வாழ்வு இல்லை உயிரோட்டமில்லை
மானுடமில்லை மலர்வுகள் இல்லை
பிறப்பு இறப்பே தொழிலாயன்றிப் பிறிதேதுமில்லை
உழலுமிவ் நிலைமையாற் பயனும் என்?
என்னே எதிர்காலம்?

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று
வாழுதல் நன்றாம்! அன்றி
ஆலயம் புகாமல் ஆடம்பரங்களால்
மேலைத் தேசத்து மோகத்து மூழ்கியே வாழ்
நாட்களைத் தொலைக்கிறார்!
இப்புவி மாந்தர்.

வீரபத்திரா!
ஈரமது நெஞ்சுடையாய்!
இரங்கிடாய்! இறங்கிடாய்!
சீரெனவே நிமிர்த்திடாய்!
காணிகளோ கபளீகரம்; கர்மபயம் சிறிதுமில்லை!
பேணிட்ட மரபையெல்லாம் மீறிட்ட ஆணவம்!
மாசுக்கள் நின்றன் மண்மேல்;
தானிட்ட சட்டமென ஆடுகின்ற நவீன தக்கர்!
ஏனிந்த நிலைமை ஐய, எழுந்திடாயோ எமக்காய்? "நவீன வீர" வீரபத்திரராய்!
எப்பிழை நேர்ந்தது எம்மில்? ஏன் இந்நிலை?
கற்றவர் சூழக், காசுளார் சூழக்
காத்திரமான கருத்துளாரும் சூழ
நாற்றிசை பரந்து நல் வியாபாரப்
பேருறு மூலைமண் பெரும்பிழை இழைத்ததோ?
மாழுறு நிலைக்குத் தாழுறப் பாராப்
பேருருவாளா பேசு!
விட்டிடுவாயோ வீரபத்திரா வீழ்ந்துநாம் போகக் - கை!

மிக்க மகிழ்ச்சி 🙏🏼
வியாபாரிமூலை இந்து வாலிபர் சங்கம்
வியாபாரிமூலை கலைமணி விளையாட்டுக்கழகம்.
வியாபாரிமூலை ஸ்ரீ பத்திரகாளிசமேத ஆதிசிவ வீரபத்திரர் தேவஸ்தானம்
Kumaresan Kumares

 #கன்னலே_காண்பாய்_உள்ளம்  #குளிரக்_கும்பா_பிஷேகம்  #எத்தடை_வரினும்_அதனை  #எதிர்த்து_உடைக்கின்ற_ஆற்றல் #பத்தருக்கு_அருள_வ...
14/01/2026

#கன்னலே_காண்பாய்_உள்ளம்
#குளிரக்_கும்பா_பிஷேகம்

#எத்தடை_வரினும்_அதனை
#எதிர்த்து_உடைக்கின்ற_ஆற்றல்
#பத்தருக்கு_அருள_வேண்டும்!

செல்நெறி பிழைத்த தக்கன்
சிரமதை அறுத்த வீரன்
நல்லன பெருக என்றே
நம்முன் அமர்ந்த தீரன்
தொல்லைகள் நீக்கி இங்கு
தோல்விகள் மாற்றி நமக்கு
எல்லையி லின்பம் நல்கும்
இனியகும் பாபிஷே கமே!

ஊழியின் வடிவு மான
உயர்சிவ வடிவ மாகும்
பாழுறு வாழ்வு தன்னைப்
பரகதி அதனிற் சேர்க்கும்
ஆழவே ரூன்றி ஆடும்
ஆணவ மொடுக்கும் மூர்த்தம்
நாளுமே நாம்தொழ நின்றவீ
ரபத்திரக் கோல மீதே!

நம்பினார் ஏற்றங் கண்டார்
நாளுமுன் கோயில் சூழ
இம்மையிற் பெருகும் மகிழ்ச்சி
இன்னும் மறுமையும் பலனும்
நம்பிரா னிவரே என்று
நாமவர் கமலம் பற்றித்
தெம்புடன் எழுவோம் என்றும்
தேறுமிவ் வுலக வாழ்வு!

அன்பருக் கெளிய னாவார்
அகோரவீ ரபத்திரர் இங்கு
நின்னருட் பணிகள் கொள்வார்
நிலையினை உயரச் செய்யும்
கன்னலே காண்பாய் உள்ளம்
குளிரக் கும்பா பிஷேகம்
மன்னுயிர் வாழ்வை எல்லாம்
மகிழுறச் செய்வாய் மகிழ்ந்து!

பத்திர காளி அன்னை
பக்கமி ருக்க அருளும்
அத்தனே எம்மை ஆளும்
ஆதியாம் சிவவீ ரபத்திரா!
எத்தடை வரினும் அதனை
எதிர்த்துடைக் கின்ற ஆற்றல்
பத்தருக் கருள வேண்டும்
பாரி லவருய ரவேண்டும்!

Address

Viyaparimoolai
Jaffna

Opening Hours

Monday 16:30 - 17:30
Tuesday 16:30 - 17:00
Wednesday 16:30 - 17:00
Thursday 16:30 - 17:00
Friday 11:30 - 12:30
16:30 - 19:00
Saturday 16:30 - 17:30
Sunday 16:30 - 17:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when கற்பூர சித்திவிநாயகர் வியாபாரிமூலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category