Our Lady of Refuge Co-Cathedral, Jaffna

Our Lady of Refuge Co-Cathedral, Jaffna Established on September 8th 1622 during the era of Portuguese.

எம் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை அவர்கள் தன்  பங்கின் பாதுகாவலியாம் அடைக்கல அன்னையின் ஆசீர...
01/07/2026

எம் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை அவர்கள் தன் பங்கின் பாதுகாவலியாம் அடைக்கல அன்னையின் ஆசீரை பெற்றதோடு எம் பங்குத்தந்தை அருளானந்தம் யாவிஸ் அடிகளாருடனும் கலந்துரையாடி சென்றார்.

புதிய ஆயரே எம் மறைமாவட்டத்தில் உம் பணி சிறக்க வாழ்த்துகிறோம்யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்...
29/06/2026

புதிய ஆயரே எம் மறைமாவட்டத்தில் உம் பணி சிறக்க வாழ்த்துகிறோம்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி நியமனம் பெற்றுள்ளார்.

1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்பணியாற்றியுள்ளதுடன் உரோமில் இறையியல் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும் ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி, கலைமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆடி மாதம் 13ஆம் திகதி அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் திகதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன் 2024ஆம் ஆண்டு ஆவணி 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமனம் பெற்று பணியாற்றிவருகின்றார்.

தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஓய்வு காரணமாக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக பணியாற்றி வந்த இவர் யாழ். மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நேற்றய தினம் திருஉடல் திருஇரத்த பெருவிழாவின் முக்கிய அங்கமாக நற்கருணை பவனி இடம்பெற்றது.நற்கருணை பவனியானது எம் ஆலயத்தை வந...
08/06/2026

நேற்றய தினம் திருஉடல் திருஇரத்த பெருவிழாவின் முக்கிய அங்கமாக நற்கருணை பவனி இடம்பெற்றது.நற்கருணை பவனியானது எம் ஆலயத்தை வந்தடைந்து வழிபாடுகள் இடம்பெற்று ஆசீர்வாதம் இடம்பெற்றது.

எம் பங்கில் இடம்பெற்ற அன்பிய விழா.இதில் சிறப்பு நிகழ்வாக எம் பங்கில் இருக்கும் 8வலயங்களிலும் அன்பியம் தனித்தனியாக ஆரம்பி...
02/06/2026

எம் பங்கில் இடம்பெற்ற அன்பிய விழா.இதில் சிறப்பு நிகழ்வாக எம் பங்கில் இருக்கும் 8வலயங்களிலும் அன்பியம் தனித்தனியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வணக்க மாதத்தின் இறுதி நாள் திருப்பலியும் அன்னையின் ஆசீர்வாதமும்.
01/06/2026

வணக்க மாதத்தின் இறுதி நாள் திருப்பலியும் அன்னையின் ஆசீர்வாதமும்.

எமது பங்குத்தந்தையின்  பிறந்தநாள் திருப்பலி
25/05/2026

எமது பங்குத்தந்தையின் பிறந்தநாள் திருப்பலி

இன்றைய நாளிலே தனது பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து இறைவனுக்கு நன்றி கூறும் எம் பங்குத்தந்தையை எம் பங்கு மக்கள் சார்பாக வாழ...
25/05/2026

இன்றைய நாளிலே தனது பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து இறைவனுக்கு நன்றி கூறும் எம் பங்குத்தந்தையை எம் பங்கு மக்கள் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம். அவர் பணிவாழ்வு சிறக்கவும் தம் பணிவாழ்வில் வரும் சவால்களை துணிவுடன் எதிர்கொள்ளவும் அடைக்கல தாயின் பரிந்துரையை இறைஞ்சுகின்றோம்.

எமது பங்குத்தந்தையின் பிரியாவிடை நிகழ்வும் புதிய பங்குத்தந்தையின் வரவேற்பு நிகழ்வும்.
16/05/2026

எமது பங்குத்தந்தையின் பிரியாவிடை நிகழ்வும் புதிய பங்குத்தந்தையின் வரவேற்பு நிகழ்வும்.

இன்றைய நன்நாளிலே  தனது 78வது பிறந்ததினத்திலே மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறும் எமது பேரன்பிற்குரிய எம் ஆயர் பேரருட் தந்த...
13/05/2026

இன்றைய நன்நாளிலே தனது 78வது பிறந்ததினத்திலே மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறும் எமது பேரன்பிற்குரிய எம் ஆயர் பேரருட் தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை அன்போடு வாழ்த்துகின்றோம்.
இவரை இவ்வளவு நாளும் காத்த தயைக்கு இறைவனுக்கு நன்றி கூறி இறையாசீர் இவருடன் தொடர்ந்திருக்க அடைக்கல தாயின் பரிந்துரையை வேண்டுகின்றோம்.

எம்   ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபட...
24/04/2026

எம் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 19 ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருட்தந்தை ஜெராட் சவிரிமுத்து அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 14 சிறார்கள் முதல்நன்மை அருட் சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady of Refuge Co-Cathedral, Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share