ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
எனது இரட்சிப்பின் சாட்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதையிட்டு ஆண்டவருக்குள் பெரு மகிழ்வடைகின்றேன்.
1991.11.07 திகதி கடும் வியாதிப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டேன். அப்போது எனது நிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. வைத்தியர்கள் தம் திறமைகள் எல்லாவற்றையும் பிரையோகித்து சர்க்கரை வியாதியஸ்தன் என்று எனது பதிநோராவது வயதில பட்டம் கொடுத்து மாத்திரைகள் ஏர
ாளம் கொடுத்தார்கள் எனக்கு பலன் செய்யவில்லை, பின்னர் இன்சுலினை ஊசிமூலம் தோலுக்கு கீழே செலுத்தினார்கள் அப்போதும் எனது நிலையில் மாற்றம் ஏற்படவில்லை, தொடர்ந்து 90 பாகையாக ஐஎம் ஆக செலுத்தினார்கள் பலனில்லை, இறுதியாக இன்சுலினை இரத்தத்தோடு கலக்கும் படி குருதி நாடியில் செலுத்தினார்கள் அதுகும் பலனளிக்காத போது இறுதியில் என்னைக் காப்பாற்ற முடியாது என்ற நிலைமையில் கைவிட்டனர். ஐவத்தியர்கள் பெற்றோருக்கு கூறினர் எங்களால் முடியுமான அளவு முயற்சி செய்து விட்டோம் இனிமேல் கடவுள்தான் ஏதாவது செய்யவேண்டும் என்று கூறிச்சென்றபோது, தாதியர் கூறினார்கள் அம்மா ஏன் இதை இங்கே வைத்திருக்கிறீர்கள் வீட்டே கொண்டுபோய் கடைசியாய் இனிப்பு ஏதும் கேட்டா கொடுத்து அனுப்பிவிடுங்கள் என்று தாயின் தவிப்பை மேலும கூட்டினார்கள் (நான் மரித்த சடலம் போல் தான் காணப்பபட்டேன்) அப்போது அம்மா நம்பினா நாங்கள் பக்தியுள்ள ஓர் இந்து வைராக்கிய குடும்பமாய் இருப்பதனாலும், அப்பா ஆலய தர்மகர்த்தாவுமாக இருந்து பல அற்பணிப்போடு ஈடுபட்டதினால் அவர்கள் காப்பாற்றுவாக்கள் என்று முளுமையுமாய் நம்பியிருந்தார்கள். நடந்தது என்ன? என்னுடைய நிலை மோசமாகிக்கொண்டே போனது.
அப்போது என்னை நேசித்த தேவ சகோதரன் நான் கோமா நிலையிலிருந்த போதும், மயக்கம் தெளிகின்ற செற்ப நேரத்திலுங்கூட இயேசுவின் அன்பைக்குறி;த்து சென்னபோது, நான் அவர் சொல்லித்தந்த இயேசுவின் இரத்தம் ஜெயம் என்பதை கூறிக்கொண்டு மீண்டும் மயங்கிவிடுவேன்; எனது தாயும் சகோதரியும் உபவாசம் என்றால் என்ன என்று தெரியாது இருந்தபோதும் சாப்பிடாது விரதமிருப்பவது போல இருந்து இயேவே நீர் உண்மையான கடவுள் என்றால் என் மகனை விடுவியும் என்று கேட்கும் படியாக அதன் படி அவர்கள் ஜெபித்த போது ஆண்டவர் புதுமையாக விடுவித்தார்.
இன்று எனக்காக 17 வது வருட நினைவஞ்சலி கொண்டாட வேண்டியவன். ஆனால் கடவுள் என்னை நேசித்தபடியால் இன்றும் உயிரோடு இருந்து தேவனுடைய நாமம் மகிமைக்காக சாட்சியாக நடத்துகின்ற நல்ல நோக்கத்திற்காக இயேசு கிறிஸ்துவிற்கு நன்றி கூறுகின்றேன்.
எனது ஊர் கோண்டாவில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் கொலண்ணாவ எண்;ணைக்குதம் தகர்கப்பபட்ட போது கோண்டாவிலுக்கு செல் வீசப்பட்டது அன்று என் தாய் கடைக்கு போகும் படி கூறிய போது நான் வளமைக்கு மாறாக போகமறுத்தபோதும் அம்மா சொன்னா நீ விறகு வேண்டிக்கொண்டு வராவிட்டால் சாப்பாடு சமைக்கமாட்டேன் எனவே சாப்பாடு இல்லை என்ற போது நான் சென்று வாங்கி வரும்வழியில் இரண்டு பெண்சகோதரிகள் வளமைக்கு மாறாக ஆண் துவிச்சக்கர வண்டியில் வந்து தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள் செல் இந்த இடத்தில் விளுந்து வெடிக்கப்போகுது என்று அவர்கள் இறங்கிய முறையை பார்த்த நான் பயந்துபோய் எப்படி சயிக்கிளிலிருந்து இறங்கினேநே தெரியாது முகங்குப்புற விளவென்று குனிந்த போது செல் வெடித்து எனது களுத்தினருகே ஒரு செல் துண்டு சீறிக்கொண்டு சென்று இப்பிலிப்பில் மரத்தை வெட்டிச் சாய்த்தது. ஆண்டவர் என்னை இரண்டாவது முறையாக தமது தேவ தூதர்களை பெண்களைப்போன்று அனுப்பி என் உயிரைக் கொடுத்தார் என்று பின்னர் அறிந்து ஆண்டவருக்கு நன்றி கூறினேன்.
1995ம் ஆண்டு எமக்கு பாரிய இடப்பெயர்வு ஒன்று ஏற்பட்டது அப்போது நான் எனது பெரிய குடும்பத்தோடு கால் நடையாக கிளாலி நோக்கி சாவகச்சேரியிலிருந்து சென்று கொண்டிருந்த போது இடை வழியில் கிபிர் விமானம் குண்டு போடும் படி எமக்கு நேரே பிளாஸ் செய்தது அப்படி நடந்தால் நிச்சயமாய் அவ்விடத்தில் குண்டு விழும். நான் இயேசுவே என்று முகங்குப்புற விளுந்து விட்டேன் நான் நினைத்தேன் நாம் எல்லோரும் மரித்தோம் என்று நீண்ட நேரம் படுத்திருந்தேன் அது வெடிக்கும் என்று ஆனால் குண்டு அங்கு விளவில்லை! தேவன் காப்பாற்றினார்.
ஆனால் மரணம் என்னை தொடர்ந்துகொண்டே இருந்தது, எப்படிஎன்றால் நான் படுத்தது பாம்பு புற்றின் மேல் ஆனாலும் விஷப்பாம்பு வெளியே வந்தது என்னை தீண்டவில்லை!
நூம் கிளாலியில் பயணத்திற்கான ஒழுங்குகள் எல்லாம் செய்து இரவு மரத்தின் கீழ் படுத்திருந்த போது இரவிரவாக எறிகணைகள் சரமாரியாக வீசப்பட்டுக்கொண்டே இருந்தது. நூம் பயணம் ஆரம்பித்தபோது கடற்சமர் நடைபெற்றதினால் எமக்கு முன் செற்றவர்கள் மரித்தனர் அவர்களின் உடைமைகள் கடலில் மிதந்து கொண்டு இருந்ததினால் நாம் எமது பயணத்தை இடை நிறுத்தி மீண்டும் கரைசேர்ந்து காலை திரும்பி வரும் போது தெரு ஓரங்களில் அனேகர் அடக்கம் பண்ணுவார் இல்லாமல் மிருகங்கள் போல் பலபெறுமதியான பொருட்களேடு தெரு ஓரங்களில் மரித்து சடலங்களாய் நாய் இளுக்கும் நிலையில் கிடந்தார்கள் அன்றும் என்னை கடவுள் காத்துக்கொண்டார்.
இவற்றை எல்லாம் நினைத்துப்பார்த்து என்னில் தேவன் ஏதோ பெரிய திட்டம் வைத்திருக்கின்றார் என்பதை உணர்ந்தவனாய் ஆண்டவரின் அழைப்யும் பெற்றுக் கொணடு எனது உயிரியல் உயர்கல்வியை துறந்து வேதாகம கல்லூரிக்குச் சென்று கற்றுக்கொள்ளும் வேளையில் அங்கு எனக்கு ஏற்பட்ட அசௌகரியத்தின் காரணமாக இயேசுவும் வேண்டாம் ஊழியமும் வேண்டாம் என்று அதைரியத்தோடு திரும்பி எனது யாழ்ப்பாண நகரம் வருவதற்கு வழியில்லாததினால் திருகோணமலைக்குச் சென்று கப்பல் பதிவுகாக அனேக நாட்களாய் காத்திருந்த போது ஒருநாள் திடீரென்று சிறிய சுனாமி போன்று கடல் கொந்தளித்து புயல் வீசி கடற் தன்னீர்; ஊருக்குள் வந்தது, அவற்றை புதினம் பார்க்க வெளியே சென்ற போது திடீர்என்று கீழே குனி என்கின்ற எச்சரிப்பு சத்தத்தைக் கேட்டவனாய் குனிந்தேன் என்ன ஆச்சரீயம் எங்கிருந்தோ கடையின் கூரைத்தகரம் வெகு வேகமாய் பறந்து வந்து எனக்கு பின் நின்ற மாட்டினை வெட்டியது அந்த ஸ்தலத்திலேயே மரித்தது. அப்போது நான் மறுபடியும் என்னை கடவுளிற்காய் ஒப்புக் கொடுத்தேன். ஆன்று முதல் தேவன் என்னை ஆசீர்வதிக்கத்தொடங்கினார்.
ஆன்றைய அற்பணிப்போடு இன்றுவரை உறுதியாய் தரித்திருந்து ஆண்டவரின் இராட்சியத்தை பூமியில் நிலை நாட்டும் பணியாட்களில் என்னையும் தேவன் பயண்படுத்தி வருகின்றார். ஆவரிற்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்து என்னைதாழ்த்தி தேவாதி தேவனை உயர்த்தி மகிழ்கின்றேன்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.