பொன்னாலையம்பதி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • பொன்னாலையம்பதி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயம்

பொன்னாலையம்பதி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயம் பரிபாலன சபையினால் அங்கீகரிக்கப்பட்ட முகப்புத்தக பக்கம்

08/06/2023

வரலாற்றுச்சிறப்பும் திருவருட்சிறப்பும் வாய்ந்த பொன்னாலை ஶ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் மஹாகும்பாபிஷேகம் நிகழும் சோபகிருது வருடம் ஆனித்திங்கள் 22ம் நாள் 07/07/2023 வெள்ளிக்கிழமை நிகழத்திருவருள் பாலித்துள்ளது.

அனைவரும் வருக! நாராயணன் அருள் பெறுக

🙏🙏🙏

21/05/2023
19/06/2022

பொன்னாலை
ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்
மகா கும்பாபிஷேக திருப்பணி - 2022

காத்தல் கடவுளாகிய ஸ்ரீமந் நாராயணன் ஈழமணித் திருநாட்டிலே ஆமை வடிவிலே தோன்றிய பழம்பெரும் விஷ்ணு ஆலயம் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயம் ஆகும்.

பல வரலாற்றுச் சிறப்புகளையும் அற்புதங்களையும் தன்னகத்தே கொண்ட இவ்வாலயம் காலத்திற்கு காலம் மன்னர்களாலும் அடியார்களாலும் திருப்பணி செய்யப்பட்ட சிறப்புக்குரியது. பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் அருள் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பெரும் திருப்பணி நாட்டின் இக்கட்டான நிலையிலும் நடைபெற்று வருகின்றமையும் பெருமாளின் அற்புதமே ஆகும். அந்த வகையிலே பெருமாளின் பெருமைகளை பக்திபூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் ஆலயம் திருப்பணி செய்யப்பட்டு வருகின்றது. உள்நாட்டு கட்டடக் கலைஞர்கள் மற்றும் இந்திய சிற்பக் கலைஞர்களால் இத் திருப்பணி வேலைகள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இறுதி கட்டத்தினை அண்மித்துள்ள திருப்பணி வேலைகளை பூரணப்படுத்துவதற்கு அதற்கு மேலதிகமாக ரூபா 200 இலட்சம் தேவையாகவுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான திருப்பணி வேலைகள் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இப் பெருந் திருப்பணிகளில் பங்கு பற்றிய அனைத்து அடியார்களுக்கும் எல்லாம் வல்ல ஸ்ரீ மந் நாராயணன் அருள்புரிவாராக.

எஞ்சியுள்ள திருப்பணி வேலைகளையும் முழுமையாக பூரணப்படுத்தி வரலாற்று சிறப்பு வாய்ந்த பொன்னா லையம் பதியின் மகா கும்பாபிஷேகத்திலும் பங்கு பற்றி எல்லாம் வல்ல ஸ்ரீ மந் நாராயணனின் திருவருளைப் பெறுவோமாக.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் பஜனை ஊர்வலம் | Ceylon temple
04/02/2022

பொன்னாலை வரதராஜப் பெருமாள் பஜனை ஊர்வலம் | Ceylon temple

Speech about lord krishna

17/01/2022
30/08/2021
30/08/2021

தர்மத்தை நிலைநாட்ட யுகம் தோறும் அவதரிப்பேன் என்று கூறிய கிருஷ்ண பரமாத்மா அவதரித்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இன்று ஆகும்.

இன்றைய விசேட தினத்தில் ரதோற்சவம் காணுகின்ற திருவருட் சிறப்பு வாய்ந்த ஆலயம் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயம் ஆகும்.

நாட்டின் கொரோணா பெருந்தொற்று காரணமாக இம்முறை தனது திருவிழாவினை தியாகம் செய்த அற்புத கடவுள் வரதராஜபெருமாள் .

உலக மக்கள் அனைவருக்கும் ஆசி வேண்டி இன்றைய தினம் விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் பெருமாள் அழகிய மஞ்சத்தில் உள்வீதி உலா வந்து திருவருள் புரிந்தார்.

- பரிபாலன சபை-

Address

Ponnalai West , Chulipuram
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொன்னாலையம்பதி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category