Shirdi maharaja

Shirdi maharaja ஸ்ரீ சமர்த்த சற்குரு சீரடி சாயி நாத மஹராஜ் கீ ஜெய்

ஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவனுக்கு இன்று ஆறாம் திருவிழா...தத்தாதிரேயர் அபிஷேக பூஜையும், சுவான வாகன சேவையும்...ஈடில்லா வாழ்வ...
22/09/2023

ஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவனுக்கு இன்று ஆறாம் திருவிழா...

தத்தாதிரேயர் அபிஷேக பூஜையும், சுவான வாகன சேவையும்...

ஈடில்லா வாழ்வருளும் ஈழத்து சீரடி சாயி நாதரின் சோபக்ருது வருட திவ்ய ப்ரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் தத்தாதிரேயர் அபிஷேக பூஜையும், சுவான வாகன சேவையும் இடம்பெறும்.

சதுர் கோண சுவர்ண விமான வசந்த சாயி மரகத மண்டபத்திலே சாயி நாதர் தத்தாதிரேயர் சகிதமாக விஷேட வசந்த மண்டப பூஜை ஏற்று சுவான வாகனமேறி சேவை சாதிப்பார்...

நானிலம் போற்றும் நாயகனுக்கு இன்று நான்காம் திருவிழா...ஹம்சவாஹன சேவையும், கர்ப்பரக்ஷாம்பிகா தேவி ருதுசாந்தி சோபன உற்சவமும...
20/09/2023

நானிலம் போற்றும் நாயகனுக்கு இன்று நான்காம் திருவிழா...

ஹம்சவாஹன சேவையும், கர்ப்பரக்ஷாம்பிகா தேவி ருதுசாந்தி சோபன உற்சவமும்.

மரகதக் கிரீடம் அணியும் மன்னவனின் சோபக்ருது வருட திவ்ய சாயி ப்ரம்மோற்சவத்திலே நான்காம் நாளான இன்று ஹம்சவாஹன சேவையும், கர்ப்பரக்ஷாம்பிகா தேவி ருதுசாந்தி சோபன உற்சவமும் இடம்பெறும்.

மாலை அம்பிகைக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெறும். தொடர்ந்து தேவியின் ருதுசாந்தி உற்சவம் இடம்பெறும்.

சதுர் கோண சுவர்ண விமான வசந்த சாயி மரகத மண்டபத்திலே எம் பெருமானுக்கு விஷேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்று சாயிநாதர் ஹம்ச வாகனமேறி சேவை சாதிப்பார்.....

மும் மூர்த்தி ரூபனுக்கு இன்று மூன்றாம் திருவிழாபத்மாசனசேவையும் சயன உற்சவமும்.சோபக்ருது  வருட திவ்ய சாயி ப்ரம்மோற்சவத்தில...
19/09/2023

மும் மூர்த்தி ரூபனுக்கு இன்று மூன்றாம் திருவிழா

பத்மாசனசேவையும் சயன உற்சவமும்.

சோபக்ருது வருட திவ்ய சாயி ப்ரம்மோற்சவத்திலே இன்றைய நாளில் சாயி நாதருடைய மஹா யந்திர பூஜை இடம்பெறும்.

சதுர் கோண சுவர்ண விமான வசந்த சாயி மரகத மண்டபத்திலே சாயிநாதர் பிரபஞ்சம் எனும் பீடத்திலே அம்பரபீதாம்பரம் உடுத்தி பதக்கம், மஹாபதக்கம், கஜபதக்கம், காசுமாலை, போன்ற திவ்ய ஆபரணங்கள் அணிந்து மல்லிகை ஜாதி செண்பகம் சோக சதபத்ர புன்னாக கல்கார பிச்சி தாமரை முதலிய பூக்களினாலே தொடுக்கப்பட்ட மாலை அணிந்து சயன கோலத்திலே சகல ஷோடஷ உபசார பூஜை ஏற்று பத்மாசன பீடத்தில் ஆரோஹணித்து வீதியுலா வருவார்...

இகபர சௌபாக்கியம் தரும் இறைவனுக்கு இரண்டாம் திருவிழா.... நவசக்தி கணபதி பூஜையும், சுவர்ண மயூர சேவையும்...ராஜ மஹா சமர்த்த ச...
18/09/2023

இகபர சௌபாக்கியம் தரும் இறைவனுக்கு இரண்டாம் திருவிழா....

நவசக்தி கணபதி பூஜையும், சுவர்ண மயூர சேவையும்...

ராஜ மஹா சமர்த்த சற்குரு சாயி நாத பெருமானின் இரண்டாம் திருவிழாவில் பரிவார மூர்த்தியாக அருள்புரியும் நவசக்தி கணபதி என்று நாமம் தாங்கி அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானுக்கு விஷேட அபிஷேக பூஜைகள் இடம்பெறும்.

சதுர் கோண சுவர்ண விமான வசந்த சாயி மரகத மண்டபத்திலே நவசக்தி கணபதிக்கும், சீரடி சாயி நாதருக்கும் அர்க்ய பாத்ய ஆசமன்ய சகல ஷோடஷ உபசாரபூஜைகள் இடம்பெற்று சுவர்ண மயூர வாஹனத்திலே ஆரோஹணித்து வீதியுலா வருவார்.

ஓம் சாய் ராம் ❣️சர்வம் சாயிமயம்🚩ஈழத்து சாயிக்ஷேத்திரங்களுள் பிரதானமானதும், துவாரகமயியைக் கொண்ட ஈழத்து சீரடியுமான நல்லூர்...
17/09/2023

ஓம் சாய் ராம் ❣️
சர்வம் சாயிமயம்🚩

ஈழத்து சாயிக்ஷேத்திரங்களுள் பிரதானமானதும், துவாரகமயியைக் கொண்ட ஈழத்து சீரடியுமான நல்லூர் நாவலர்வீதி மடத்தார்பதி உறையும் சீரடி சாயி மந்திரில் உறையும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்ரீமான் சீரடி சாயி நாத பரமேஸ்வரப் பெருமானின் சோபக்ருது வருடத்துக்கான அதியுத்தமோத்தம, பரமானந்கோலாகல, மஹாபுண்ணிய மஹோற்சவத்துக்கான சித்ர சாயி த்வஜாரோஹணமானது நவசக்தி கணபதி, தத்தாதிரேயர், கர்ப்பரக்ஷாம்பிகாதேவி, சுவர்ணாகர்ஷன பைரவர் ஆகிய மூர்த்திகள் சகிதம் சீரடி சாயி நாதர் ஒற்றைச் செஞ்சாற்றுப்படியில், எழுந்தருள ஸுபமுஹூர்த்தமான இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வானுயர் த்வஜஸ்தம்பத்தில் அதிகம்பீரமாக ஆரோஹணித்து வைக்கப்படும். 🚩

ஜெய் சாய் ராம் ❣️

ஈழத்து  சீரடி சாயி நாதரின் சோபக்ருது வருஷ ப்ரம்மோற்சவத்தின் முதல் நாள் சுவர்ணாகர்ஷன  பைரவர் உற்சவம் இன்று  மாலை இடம் பெற...
16/09/2023

ஈழத்து சீரடி சாயி நாதரின் சோபக்ருது வருஷ ப்ரம்மோற்சவத்தின் முதல் நாள் சுவர்ணாகர்ஷன பைரவர் உற்சவம் இன்று மாலை இடம் பெறும்.

ஸ்ரீ ராம நவமி வைபவத்திற்கான கோபுர கொடியேற்றம்.சீலமுறச் சைவமும் தமிழும் வாழி...சிறப்புடனே சாயி தர்மம் வாழி...கோலமுடன் கோவ...
24/03/2023

ஸ்ரீ ராம நவமி வைபவத்திற்கான கோபுர கொடியேற்றம்.

சீலமுறச் சைவமும் தமிழும் வாழி...
சிறப்புடனே சாயி தர்மம் வாழி...
கோலமுடன் கோவும் வாழி வாழி...
கொட்டும் மழை மும்மாரி பொழிந்து வாழி...
ஞாலமெலாம் பசிப்பிணி ஒழிந்து வாழி...
ஞானியர் சிவ ஆகமும் வாழி...
மாதவர் போற்றும் மடத்தார் பதியுறையும்
சீரடி சாயி உன் துணையே வாழி...
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

ஈழத்து சீரடி சாயி நாதரின் மஹோற்சவத்தின் பதினாறாம் நாள் இடம்பெற்ற தம்பதி சமேத அரச வேம்பு விருக்ஷ திருக்கல்யாணம்
27/10/2022

ஈழத்து சீரடி சாயி நாதரின் மஹோற்சவத்தின் பதினாறாம் நாள் இடம்பெற்ற தம்பதி சமேத அரச வேம்பு விருக்ஷ திருக்கல்யாணம்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்🪔🪔🪔
24/10/2022

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்🪔🪔🪔

ஈழத்து சீரடி சாயி நாதரின் லெண்டித்தோட்ட உற்சவத் திருக்காக்ஷி
22/10/2022

ஈழத்து சீரடி சாயி நாதரின் லெண்டித்தோட்ட உற்சவத் திருக்காக்ஷி

ஈழத்து சீரடி சாயி நாதர் சமுத்திர தீர்த்தோற்சவத் திருக் காக்ஷி
21/10/2022

ஈழத்து சீரடி சாயி நாதர் சமுத்திர தீர்த்தோற்சவத் திருக் காக்ஷி

ஈழத்து சீரடி சாயி நாதஸ்வாமி  தேவஸ்தான நகர்வலம்மூலாலயத்திலே வீற்றிருக்கும் சீரடி சாயி நாதப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் இடம...
20/10/2022

ஈழத்து சீரடி சாயி நாதஸ்வாமி தேவஸ்தான நகர்வலம்

மூலாலயத்திலே வீற்றிருக்கும் சீரடி சாயி நாதப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் இடம்பெறும்.

ஈழத்து சீரடி சாயி நாதர்
வஸந்த சாயி மரகத ஸபா மண்டப நாயகர்
கோடிசூர்ய ப்ரகாசன், பால லீல வினோதஸ்ய நிம்ப விருக்ஷ மூலாதி வாசினன், இலக்ஷ்மி பாய் மாங்கல்ய ரக்ஷாகரன், அகிலாண்டகோடி ப்ரம்மாண்ட நாயகன் , அநேககோடி ப்ரம்மாண்ட ஜனனன், நரனுக்கு அருளும் அரன்
அநாதி மலமுத்தன்
சீரடி சாயி நாதர் தனது திவ்ய ப்ரம்மோற்சவத்தின் இறுதி உற்சவமான கிராமபவனியும், மஹா பிராயச்சித்த அபிஷேகமும்.

பெருமான் செம்பட்டுடுத்தி அனேகாதி ஆபரணங்கள் தரித்து ஜாதி செண்பக மல்லிகை சோக சதபத்ர புன்னாக கல்கார பிச்சி முல்லை போன்ற பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை அனவரத த்யாக கற்பூர வஸந்த கோலாகலாதீஸ்வராக சதுர்கோண சுவர்ண விமான வசந்த சாயி மரகத சபா மண்டபத்திலே விஷேட பூஜை ஏற்று திருத்தண்டிகையிலே ஆரோகணித்து கிராமபவனி வருவார்.

ஆலயத்தை வந்தடைந்ததும் சாயி நாதருக்கு மஹா பிராயச்சித்த அபிஷேகம் இடம்பெறும்.

Address

Nallur Jaffna
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shirdi maharaja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category