01/05/2026
சைவ சமய எழுச்சி பெருவிழாவை முன்னிட்டு கயிற்றசிட்டி கந்தசுவாமி ஆலய நற்பணி இளைஞர்களின் ஏற்பாட்டில் பரிபாலன சபையும் இணைந்து இன்று வெள்ளி கிழமை சித்ரா பௌர்ணமி நன்னாளில் மாலை 3.30 மணிக்கு 55 மாணவர்களுடன் அறநெறி வகுப்பு ஆரம்ப நிகழ்வும் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இவ் நிகழ்வில் பிரம்ம ஶ்ரீ முத்துக்குமார கணேச குருக்களும் குருசாமி வித்தியாலய அதிபர் அகிலன் அவர்களும் குருசாமி வித்தியாலய உப அதிபர் சிவமணி அவர்களும் அறநெறி ஆசிரியர் குமாரதாஸ் அவர்களும் ஆலய பரிபாலன சபை செயலாளர் செல்வநாயகம் அவர்களும் ஆலய நற்பணி இளைஞர்களும் பெற்றோர்களும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்”
🌺🌼🐓🦚🙏⚜️🙏🦚🐓🌼🌺