Northwayfm

Northwayfm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Northwayfm, Religious organisation, Nallur, Jaffna.

பொறுமையின் உதாரணமாக மூங்கில் செடியைச் சொல்வார்கள்.மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும்.ஆனால் செடி...
15/08/2022

பொறுமையின் உதாரணமாக மூங்கில் செடியைச் சொல்வார்கள்.

மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும்.ஆனால் செடி வளரவே வளராது.ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும்.செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.

நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை.

ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி? சடசடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம், கடவுள் படைப்பின் மகத்துவம் இது.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என மூங்கில் முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.

அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை!

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப்பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல்,நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது.

மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம்.முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை!

இலங்கைவாழ் மக்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்இலங்கையின் எப்பாகத்திலிருந்தும்  உங்கள் உறவினர்களின் அல்லது உங்கள் இதயத்தில் இ...
11/08/2022

இலங்கைவாழ் மக்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்

இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் உங்கள் உறவினர்களின் அல்லது உங்கள் இதயத்தில் இடம் பிடித்தவர்களின் பிறந்த தின நிகழ்வுகள் மற்றும் திருமண நாட்கள் போன்ற விசேட தினங்களில் இலங்கையிலுள்ள பிரபலமான ஆலயங்களில் (நீங்கள் நேரில் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில்) அர்ச்சனை செய்து ஆசிகளை பெற முடியும்.

அர்ச்சனைப் பொருட்களுடன் உங்கள் பெயர், நட்சத்திரம் வழங்கி அர்ச்சனை செய்யப்படும்.

அர்ச்சனையின் பின்னர் பிரசாதம் மற்றும் கோயில் நூல் என்பன உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பிரசித்தி பெற்ற ஆலய திருவிழாக்களிலும் உங்களுக்கான அர்ச்சனைகளை மேற்கொள்ள முடியும்.

அர்ச்சனைக்கான மொத்த செலவு 1,000 ரூபா மட்டுமே.

உங்கள் தகவல்களை (பெயர், நட்சத்திரம்) +94 74 303 6275 எனும் வாட்ஸ்ஆப் அல்லது வைபரிற்கு அனுப்பி வைத்தால் நாங்கள் தொடர்புகொள்வோம்.

Address

Nallur
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Northwayfm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Northwayfm:

Share