Araly Church - CACM

Araly Church - CACM Church of the American Ceylon Mission Since 2006 the CACM has been separate from the JDCSI. CACM maintains its long-standing partnership with Global Ministries.

The Church of the American Ceylon Mission (CACM) was established in 2007 and was immediately recognized by the mother church in the USA who have appointed 3 of our members as trustees of the American Ceylon Mission. We have 48 Pastors, 48 Congregations – 18 in the peninsula, 19 in the Wanni, 8 in the Eastern province, 1 in the plantation area an d2 in Colombo. The Church of the American Ceylon Mis

sion has its roots in the work of early missionaries in the Jaffna peninsula of Sri Lanka from 1813 onwards. These were missionaries sent by the American Board of Commissioners for Foreign Missions (ABCFM), the predecessor body of UCC mission that celebrates 200 years of global mission, and a predecessor body of today’s Global Ministries. The early congregational church of the Jaffna peninsula joined the church union movement in 1947 and became the Jaffna Diocese of the Church of South India.

14/10/2024
*எகிப்துக்கு ராஜா யார்?*ஏசா 52:4 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் அசீரியன், எகிப்தில் ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித...
31/05/2024

*எகிப்துக்கு ராஜா யார்?*

ஏசா 52:4 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் அசீரியன், எகிப்தில் ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தான். அவன் எகிப்தை ஜெயித்தான். (ஒருவேளை இவன் இரண்டாம் ராமசேஸ் (Rameses II) ஆக இருக்கலாம்.)

இவனுடைய குமாரன்தான் மேநெப்தா. (Meneptah) இஸ்ரவேல் புத்திரர் எகிப்தை விட்டு வெளியேறிய போது இவன் எகிப்தின் பார்வோனாக இருந்திருக்கக்கூடும்!

எகிப்தின் புதிய ராஜா யோசேப்பை அறியாதவன். இஸ்ரவேல் ஜனம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டுப் போவதற்கு சுமார் 144 வருஷங்களுக்கு முன்பாகவே யோசேப்பு மரிக்கிறார். மோசே பிறப்பதற்கு சுமார் 64 வருஷங்களுக்கு முன்பாக யோசேப்பு மரித்தார்.

கடந்த காலங்களில் எகிப்தின் பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான். மோசே பிறந்தபோது, இஸ்ரவேலரின் அடிமைத்தனப்பிரமாணம் அமுலில் இருந்தது. (யாத் 1:8-22; யாத் 21-9).

பார்வோனின் குமாரத்தி மோசேயை எடுத்து வளர்த்தாள். மோசே வனாந்தரத்திலிருந்து மறுபடியும் எகிப்துக்கு வந்து
இஸ்ரவேலை விடுதலைபண்ணி அழைத்துச்சென்றபோது, பார்வோனின் குமாரன் மேநெப்தா எகிப்தின் ராஜாவாக இருந்திருக்கக் கூடும்!

எகிப்தின் புதிய ராஜா இஸ்ரவேலரைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்று நினைக்கிறான். இஸ்ரவேலுக்கு எதிராக எகிப்தியர் பண்ணிய உபாயம்
அவர்களுக்கே கேடாக அமைந்தது.

இஸ்ரவேலை விடுதலை செய்து, வழிநடத்திய மோசேயை பார்வோனின் அரண்மனையிலுள்ளவர்கள் வளர்த்தார்கள். கல்வி கற்றுக் கொடுத்தார்கள். நல்ல தலைவனாக ஆயத்தம் பண்ணினார்கள். எல்லாம், தேவனுடைய ஏற்பாடு..
(ஏசா 19:11,13, சங் 78.12-13)

எகிப்தின் புதிய ராஜாவும் அவனுடைய அதிகாரிகளும் இஸ்ரவேலர்கள்மேல்
விசாரணைக்காரரை வைத்தார்கள். இதற்கான எபிரெய வார்த்தை "சாரே - மிசீய்ம்” (sarey-miciym) என்பதாகும். அதற்கு வேலைகள் அல்லது கப்பம் கட்டுதலுக்குத் தலைவன்
"chiefs of tribute or works” எனப்பொருள்!

இந்த விசாரணைக்காரர்கள் இஸ்ரவேல் ஜனத்தாருக்கு
வேலைகளைப் பிரித்துக் கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து கப்பம் வசூலித்துத் தருவார்கள்.

எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். உபத்திரவம் ஜனங்களையும், தேசத்தையும், சபையையும் பலப்படுத்தும். உபத்திரவப்படும் ஜனங்கள் உபத்திரவத்தை எதிர்த்து நிற்பதற்குப்
பழகிக்கொள்வார்கள். உபத்திரவப்படுத்துபவர்களை அகற்றுவதற்கு வலிமை பெறுவார்கள்.

பாருங்கள்,
*தேவனுடைய சபை, உபத்திரவத்தினால் எப்பொழுதும் வளர்ச்சிதான் பெற்றிருக்கிறது.* (அப் 2.13,41; அப் 4:1-37; அப் 5:1-42; அப் 7:54-8:3; அப் 9:21),

(குறிப்பு: எபிரெயருடைய புராணத்தின் பிரகாரம், பார்வோன் ஒரு தராசைச் சொப்பனத்தில் காண்கிறான். தராசின் ஒருபகுதியில் எகிப்து தேசமும், மறுபகுதியில் ஒரு ஆட்டுக்குட்டியும் இருக்கிறது. எகிப்து தேசத்தை விட, ஆட்டுக்குட்டியின் எடை அதிகமாக இருக்கிறது. எகிப்திய மந்திரவாதிகள் இதற்கு வியாக்கியானம் கொடுத்தார்கள். எகிப்து தேசத்தில் இஸ்ரவேலருக்குள்ளே ஒரு குழந்தை பிறக்கும். அது எகிப்தியர் அனைவரையும் அழித்துப்போடும் என்று மந்திரவாதிகள் அந்த அர்த்தம் கூறினார்கள்.)

எகிப்தில் பிறந்து, எகிப்தின் இளவரசியால், எகிப்தின் அரண்மனையில், யாரும் எதிர்பாராத ஒரு, ஆவிக்குரிய அரசனாக மோசே வந்தார். எகிப்தின் அரசனே பயந்த, மோசே, இப்போத எகிப்தின் மோசே அல்ல, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அனுப்பிய மோசே! அடிமையாகப் பிறந்து, அரசனைப்போல வளர்ந்து, ஆண்டவரால் அழைக்கப்பட்டு, அனுப்பப்பட்ட மோசேதான், இப்போது எகிப்தையே ஆட்டிப்படைக்கும் ராஜா!

"பாபிலோன் தானியேலுக்குக் கட்டுப்பட்டது!*
*எகிப்து யோசேப்புக்கும், மோசேக்கும் கட்டுப்பட்டது!"
*மொத்த உலகமும் நமக்குக் கட்டுப்பட்டதாய் இருக்கவேண்டும்!*
*நாம் தேவனுக்கு அடிமைகளாய், இவ்வுலகத்துக்கு அடிமைப்படாதவர்களாய் இருக்கவேண்டும்!

*பொய்!*1 சாமுவேல் 31ஆம் அதிகாரத்தில் சவுல் தற்கொலை பண்ணிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, தன் பட்டயத்தை நாட்டி அதன் ம...
30/05/2024

*பொய்!*

1 சாமுவேல் 31ஆம் அதிகாரத்தில் சவுல் தற்கொலை பண்ணிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, தன் பட்டயத்தை நாட்டி அதன் மேல் விழுந்ததாகவும், அவன் செத்ததை கண்டதும், அவனுடைய ஆயுததாரியும் தற்கொலை பண்ணிக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால்,
2 சாமுவேல் 1 ஆம் அதிகாரத்தில் ஒரு அமலேக்கியன் வந்து சவுலை கொன்றாக கூறுகிறான்.

*கேள்வி என்னவெனில்,*

சவுல் தற்கொலை பண்ணினார் என்றால், அமலேக்கியன் வந்து தாவீதின் இடத்தில் சொன்னது பொய்யா.?

அமலேக்கியன் உண்மையை உரைத்தான் என்றால் ,சவுல் விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையில் தான் சாக விரும்பாமல் தன் ஆயுததாரியிடம் தன்னை கொல்லும்படியாக கூறினார். அப்படியிருக்க, விருத்தசேதனம் இல்லாத ஒரு அமலேக்கியன் இடம் தன்னை கொன்றுவிடும்படியாக எப்படி சவுல் கூறியிருக்க முடியும்?

பதில்:
பரிசுத்த வேதாகமம் எந்த ஒரு சம்பவத்தைச் சொன்னாலும், இரண்டு தரம் சொல்லி, உறுதிப்படுத்துகிறது. சின்னசின்ன வித்தியாசங்கள் இருக்குமே தவிர, சம்பவங்களின் உறுதித்தன்மை சரியாக இருக்கும்!

1சாமு 31:3-5 ல் இந்த சம்பவத்தை சொல்லி இருக்கிற வேதம், மீண்டும்,1நாளா 10:3-5 ல்,

சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரருக்கு மிகவும் பயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.
அப்படியே சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் வீட்டு மனுஷர் அனைவரும் கூடச் செத்துப்போனார்கள்.
(1 நாளாகமம் 10:3-6).

*இந்த இரண்டுமே சவுல் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் கூறுகிறது...*

அமலேக்கியன் கதைக்கும்,
உண்மையான சம்பவத்திற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.

அமலேக்கியன், தானே சவுலைக் கொன்று போட்டதாகக் கூறினான். அப்படி சொன்னால், தாவீது, நிறைய வெகுமானம் கொடுப்பார் என எதிர்பார்த்த, இவனுடைய ஆசை இவனுடைய
உயிருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது. (2சாமு 4:10).

காரணம், கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட சவுல் மேல், தாவீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ஆகவே, தாவீது சவுலின் மரணத்தைக் கேட்டபோது கோபம் கொண்டார். கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட, சவுல் மேல் கை போட்ட அந்த மனிதனை தாவீது உயிரோடு விடவில்லை... அமலேக்கியன் பொய் அவனைக் கொன்றது. சவுலின் பொய் வாழ்க்கை, சவுலைக் கொன்றது. தேவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்த சவுல், மொத்தத்தில் தன்னை தானே கொன்று விட்டார்...
______

30/05/2024

வெற்றுக்கையனாய் சிலுவையை நம்பிப் புறப்பட்டேன்.

என்னோடு நெருங்கிப் பழகின எல்லோரும் என் மன மாறுதலைக் கவனித்து என்னையும் என் புதுமார்க்கத்தையும் பழித்தார்கள். நான் பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது என் வேதாகமத்தைக்கூடக் கொண்டுபோவேன். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியபின் ஒரு அறைக்குள் என்னை அடைத்துக்கொண்டு சத்தமாய் வாசித்து ஜெபம்பண்ணுவேன். ஒருநாள் புதுக்கோட்டைக் அருகான காட்டுக்குப்போய்ச் சத்தமாய்ச் ஜெபித்து வீட்டுக்குத் திரும்பினேன். இது என் தாய்க்குத் தெரிந்தது. அவர்கள் என் கிறிஸ்தவ புஸ்தகங்களையெல்லாம் எடுத்து ஒளித்து விட்டு, எனக்கு விஷம் வைத்து என்னைக் கொல்வதாயும் பயமுறுத்தினார்கள்.

அப்பால் நான் ஞானஸ்நானம்பெற வாஞ்சித்துச் சென்னைப்பட்டணம் புறப்பட்டுப்போனேன். என் தாய் என்னைத் தேடிவந்து திரும்ப ஊருக்கு அழைத்துப்போனார்கள். வீட்டுக்கு வந்தபின் நான் வெளியேபோக எனக்கு இடங்கொடாமல் என் பந்துக்கள் எனக்குக் காவலாயிருந்தார்கள். அடிகளும் தூஷணமும் அடிக்கடி எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தது. ஆயினும் நான் ஞானஸ்நானம்பெற அதிகமாய் வாஞ்சித்ததினால் ஒரிரவு நடுச்சாமத்தில் நிலாவெளிச்சத்தில் நான் என் வீட்டை விட்டுப்புறப்பட்டு தஞ்சாவூருக்கு வந்து, ரெயிலேறிச் சென்னை போய்ச் சேர்ந்தேன். கடவுளைத் தவிர நான் போனது ஒருவருக்குந் தெரியாது. வெற்றுக்கையனாய்க் கிறிஸ்துவின் சிலுவையை நம்பிப் புறப்பட்டேன்.

தந்தை பால் கடம்பவனம்

Happy Easter
31/03/2024

Happy Easter

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..
24/12/2023

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..

*நான்கு நற்செய்தி நூல்கள் பற்றிய நான்கு விளக்கங்கள்!*1) *நான்கு நற்செய்தி நூல்கள், நான்கு வகையான கூட்டத்திடம்* சென்றடைய ...
10/09/2023

*நான்கு நற்செய்தி நூல்கள் பற்றிய நான்கு விளக்கங்கள்!*

1) *நான்கு நற்செய்தி நூல்கள், நான்கு வகையான கூட்டத்திடம்* சென்றடைய வேண்டுமென்பதே தூய ஆவியானவரின் எண்ணமாயிருந்தது.

மத்தேயு நற்செய்தி நூல் யூதச்சார்பு மிக்கது என யாவரும் ஒப்புக்கொள்வர். பழைய ஏற்பாட்டு
மேற்கோள்கள், விரிவான போதனைகள், நம்முடைய கர்த்தரின் குடிவழி மரபு மற்றும் யூத இனத் தொனி ஆகியவற்றை மத்தேயு நூலைப் புதியதாகப் படிக்கும்போதே ஒருவர் எளிதில் கவனித்து விடுவார்.

ரோமப் பேரரசின் தலைநகரத்திலிருந்து மாற்கு நற்செய்தி நூல் எழுதப்பட்டது. ரோமர்களையும்; சிந்தனையைக் காட்டிலும் செயலை அதிகமாக விரும்பும் பல கோடி மக்களையும்
மனதிற்கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. எனவே
மாற்கு அற்புத நிகழ்ச்சிகளைக் குறித்து நீண்ட பகுதிகளையும், உவமைகளைக் குறித்துச்
சுருக்கமாகவும் எழுதினார். (அடிமையின் குடிவழிப் பட்டியலைப் பற்றி ரோமர்களுக்கு என்ன அக்கறை எழக்கூடும்? ஆகவே இந்நூலில் குடிவழிப் பட்டியல் இடம் பெறவில்லை.)

கிரேக்க இலக்கியத்தையும் கலையையும் பின்பற்ற விரும்பிய கிரேக்கருக்கும் அதே கருத்துடைய ரோமருக்குமாக லூக்கா தனது நற்செய்தி நூலை எழுதினார் என்பதில் எவ்தித ஐயமுமில்லை. இத்தகையோர் அழகு, மனிதத்துவம், பண்பாடு மற்றும் இலக்கியச் சிறப்பு ஆகியவற்றில்
பெரிதும் ஈடுபாடு கொள்வர். இவை யாவற்றையும் மருத்துவராகிய லூக்கா அள்ளித் தருகிறார்.

யோவான் நற்செய்தியைப் படிப்பவர் யார்? *இது உலகளாவிய நற்செய்தி நூலாகும்.* ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செய்தியை இது ஏந்தி வருகிறது. இது நற்செய்தியை அறிவிக்கும்
நூலாக இருப்பினும் (20:30,31) கிறிஸ்தவச் சிந்தனையாளர்கள் இதில் அதிகப்பற்று கொண்
டுள்ளனர். யோவான் நற்செய்தி நூல் "மூன்றாம் இனத்தாருக்கு” உரியது. யூதர்களும் புறவினத்த
வருமாக இருவகுப்பாரைச் சேராத மூன்றாவது இனம் என்று பெயர் பெற்ற மக்களே கிறிஸ்தவர்கள். இதுவே இந்நூலின் சிறப்பு.

2) *நான்கு நற்செய்திகள் & நான்கு சின்னங்கள்!*

எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய நூல்களில் காணப்படும் நான்கு
அடையாளச் சின்னங்களாகிய சிங்கம், காளை(எருது), மனிதன் மற்றும் கழுகு ஆகியவற்றுடன் நான்கு நற்செய்தி நூல்களையும் ஒப்பிட முடியும். அந்த ஒப்பீடு சரியாகவும் காணப்படுகின்றது. நற்செய்தி நூல்களையும் அடையாளச் சின்னங்களையும் ஒன்றோடொன்று
இணைத்துப் பார்க்கும்போது, அதைக்காணலாம்.

மத்தேயு எழுதிய இராஜரீக நற்செய்திநூலை,
யூதா கோத்திரத்துச் சிங்கத்தோடு ஒப்பிடுவது பொருத்தமானதாகும். அது போல,
காளை பாரத்தைச் சுமக்கும் விலங்காகும். ஆகவே அச்சின்னம் அடிமையின் நற்செய்தி நூலாகிய மாற்குடன் பொருத்தமுடையதாக விளங்குகிறது.
லூக்கா எழுதிய நூலில் மனித குமாரன் என்னும் மனிதநிலை சிறப்பாகக் காட்டப்படுகிறது.
யோவான் நற்செய்தி நூலில் உயர்வான ஆவிக்குரிய தரிசனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே உயரப் பறக்கும் கழுகு அந்நூலுக்குப் பொருத்தமானதாகும்.

பிதாவின் ஒரே பேறான குமாரன், நான்கு முக்கியமான விதங்களில், நான்கு நற்செய்தி நூல்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ளார்! மேலும் *அந்த நான்கு நற்செய்தி நூல்களும், உலகத்தின் நான்கு திசைக்குமான செய்தி* எனக் குறிப்பிடுவாரும் உண்டு! ஆம் *இயேசு உலகின் மீட்பர் அல்லவா?*

*தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். (லூக்கா 2:10)ஆமென்!*

__

3) ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்த சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.
எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.
(எபிரெயர் 9:16-17) என்ற வசனங்களின் படி, இயேசுவின் மரணம், புதிய உடன்படிக்கையை தாங்கி நிற்கிறது...

4) இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.
(உபாகமம் 19:15) இந்த வசனத்தின் படி, ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய சாட்சி இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அல்லாமல், ஒன்றைக் கூட்டி, நான்கு சாட்சியாக தேவ ஆவியானவர் நான்கு சுவிசேஷங்களில், இயேசு பரிசுத்தர், நீதிமான், தேவகுமாரன், மனுஷகுமாரன் என வைத்திருப்பது, ஆண்டவராகிய இயேசுவுக்கு பிதாவானவர் ஏற்படுத்தின மகிமை ஆகும்.

- இனி இயேசுவே இரட்சகர் என்று யாருக்கெல்லாம் நற்செய்தி சென்று சேர்ந்ததோ அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை! ஆமென்!
_____.

Address

Araly North Vaddukoddai
Jaffna Town
400000

Opening Hours

07:00 - 10:30

Alerts

Be the first to know and let us send you an email when Araly Church - CACM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Araly Church - CACM:

Share