22/05/2026
குருமாற்ற மகாயாகம் - 2026
ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானம் - ஹட்டன்.
எமது வழக்கத்திலே பாவனையிலிருக்கும் வாக்கிய பஞ்சாங்க அடிப்படையிலே
எதிர்வரும் 26/05/2026 செவ்வாய்கிழமை முற்பகல் 11.08 மணிக்கு நவக்கிரக குருபகவான் மிதுனராசியிலிருந்து கடகராசிக்கு குருப்பெயர்ச்சி ஆகின்றார்.
இதனடிப்படையில், எமது ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்திலே காலை 08.00 முதல் குருப்பெயர்ச்சி மகாயாகம் நடாத்துவதற்கு எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.
இம்மகாயாகத்திலே பங்குபற்ற விரும்பும் அடியவர்கள் எமது தேவஸ்தான காரியாலயத்திலே தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
குறிப்பு :- பங்குபற்றும் அடியவர்களுக்கு யாகத்திலே போடுவதற்கு விசேட பூர்ணாகுதி வழங்கப்படும்.
பக்தர்கள் அனைவரும் தங்களால் இயன்ற யாகத்திற்கு பயன்படுத்த கூடிய குருபகவானுக்கு மிகவும் பிடித்தமான மஞ்சள் நிற பட்டு வஸ்திரம் மற்றும் கொண்டை கடலை என்பன இம்மகா யாகத்திற்கு வழங்கி நவக்கிரக குரு பகவானது இஷ்ட சித்திகளையும், அருட்பார்வையினையும் பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த சனிப்பெயர்ச்சி மகாயாகத்தின் போது எமது ஆலயத்திலே பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானது பரிபூரண ஆசிகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கும் பதிவுகளுக்கும் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான காரியாலயம்
051 222 2676
குரு பார்வை அனைத்து தோஷங்களையும் போக்க வல்லது.
குரு நின்ற இடம் பாழ்.
குரு பார்த்த இடம் கோடி நன்மை.