Sri Muththumari Amman kovil. Ambalamana Lower Division, Galaha.

Sri Muththumari Amman kovil. Ambalamana Lower Division, Galaha. Arulmigu Sri Muththumari Amman kovil. (Hindu Temple ). Ambalamana Lower Division, Galaha. Kandy District, Central Province, Srilanka. Contact:0772 328905.

02/02/2019

**பிரதோஷ விரதம்*** பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணான அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்த மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்;

இன்று சிவாலயங்களில் பிரதோஷம் விசேசமாக கொண்டாடப்படுகிறது. மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப்பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை ஆராதித்து வழிபட்டு சிவனருள் பெறுவோமாக!

01/02/2019

*****பிரதோஷம்***** சாதகத்தில் சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.

தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ நாள் என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது விசேஷமானது.

மற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் வணங்கலாம். பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் எதாவது ரகசியத்தைச் சொல்வார்கள்.

சைவத்தைப் பொறுத்தவரையில் பிரதோஷம் என்பது பிரதானமான விரதம். அன்றைக்கு எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷத்தை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அது ஒரு அற்புதமான நாள். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடம்பும் நலம் பெறும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. குறிப்பிட்ட அந்த பிரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு எல்லாம் நீங்கும். அடுத்து, உடல் நிலை, மனநிலை எல்லாம் சீராகும். இதுபோன்ற சிறப்புகள் உண்டு.

பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள் விலகும். பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.

பிரதோஷத்தில் ஏழு வகை உண்டு. சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொன்று உண்டு. ஞாயிறு அன்று ஆதிப் பிரதோஷம். திங்களன்று சோமவாரப் பிரதோஷம், மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம் என்று இருக்கிறது. சனிப் பிரதோஷம்தான் எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்தது. சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அந்த சனிக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகும்...

இந்த ஆண்டு எப்போது புதுப்பானை வைத்து பொங்கல் செய்வது?நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் தை மாதம் 1-ம் தேதி (15.01.2019) ச...
14/01/2019

இந்த ஆண்டு எப்போது புதுப்பானை வைத்து பொங்கல் செய்வது?

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் தை மாதம் 1-ம் தேதி (15.01.2019) செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு மேல் 9.00 மணிக்கு சூரிய சுக்கிர ஓரையில் அல்லது பகல் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் குரு ஓரையில் பொங்கல் வைப்பது உத்தமம்.

தைப்பொங்கல் வரலாறுஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த...
14/01/2019

தைப்பொங்கல் வரலாறு

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்.

நவராத்திரி ஆரம்பம் (கொலு வைக்க காலை 10:30 - 12:00)21-செப்-2017வியாழன்நல்ல நேரம்:10.30 - 11.30 ராகு:1.30 - 3.00    குளிகை...
20/09/2017

நவராத்திரி ஆரம்பம் (கொலு வைக்க காலை 10:30 - 12:00)

21-செப்-2017வியாழன்

நல்ல நேரம்:10.30 - 11.30 ராகு:1.30 - 3.00 குளிகை:9.00 - 10.30 எமகண்டம்:6.00 - 7.30

திதி:துவிதியை திதி நேரம்:பிரதமை கா11.07 நட்சத்திரம்:அஸ்தம் இ12.53 யோகம்:சித்த யோகம் சந்திராஷ்டமம்:சதயம், பூரட்டாதிசூலம்:தெற்கு பரிகாரம்:தைலம்

28/04/2017

***** அளவற்ற நற்பலன்களை தரும் அட்சய திருதியை*****

அளவற்ற நற்பலன்களை தரும் அட்சய திருதியை
முதல் மாதமான சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாள் “அக்‌ஷய திருதியை” என்ற சிறப்பு பெயருடன் சிறப்பு மிக்க நாளாக போற்rறப்படுகிறது.

நமது அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள், திதிகள் எல்லாம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக சில மாதங்களில் வரும் நட்சத்திரங்களும், திதிகளும் தனி சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதியை மகாலட்சுமிக்கு உரிய திருநாள் என்றே சாஸ்திரம் கூறுகிறது. அதிலும், குறிப்பாக தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாள் “அக்‌ஷய திருதியை” என்ற சிறப்பு பெயருடன் சிறப்பு மிக்க நாளாக போற்றப்படுகிறது.

அட்சயம் என்றால் என்றும் தேயாது, குறையாது, வளர்தல் என்ற பொருளை தருகிறது. அதனால் தான் அட்சயதிருதியை நாளில் நாம் செய்யும் நற்காரியங்கள் எல்லாம் பன்மடங்கு பெருகும். அதன் பலன்களும் நமக்கு பெருமளவு கிடைக்கும். வாங்கும் பொருட்களும் அழியாச்செல்வமாய் வீட்டில் தங்கி நிலைத்திருக்கும் என்பது ஆன்றோர் கருத்து. மகாகவி காளிதாசன் எழுதிய உத்திர காலாமிருதம் என்ற நூலில் திதிகளில் மிகவும் சிறப்பு மிக்கது திருதியை திதி என குறிப்பிடுகிறார். எல்லா நலன்களும் அள்ளி வழங்கும் திருதியை நன்னாள் அட்சய திருதியை திருநாள் ஆகும்.

ஜோதிட ரீதியாக பார்க்கும் போது நவக்கிரகங்களில் சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும் அழைக்கின்றோம். இவ்விரண்டு கிரகங்களும் ஓரே நாளில் உச்சபலத்துடன் சஞ்சரிக்கும் காலம் தான் “அக்‌ஷயதிருதியை”. அதாவது மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நன்னாள். பெரியோர் அனைவரையும் வாழ்த்தும் போது சூரிய சந்திரர் போல் நிலைத்து வாழ்க என்று வாழ்த்துவர். அதாவது நீண்ட காலம் நிலைத்து வாழ சூரிய, சந்திரனும் வலுப்பெற்றிருப்பது மிக முக்கியம். எனவே தான் அப்படி வாழ்த்துகிறார்கள்.
மேலும் சூரியன் என்பவர் பிதுர்காரகர், சந்திரன் மாத்ருகாரகர் இவர்கள் இருவரும் பலம் பெற்றும் இருக்கும் நன்னாள் அக்‌ஷயதிருதியை என்பதால் அதில் நாம் மேற்கொள்ளும், பூஜைகளும், தானதர்மங்களும், தர்ப்பணங்களும், தொழில் மற்றும் திருமண நிகழ்வுகளும், பொருட்களை வாங்குதல் என அனைத்தும் பன்மடங்காகும், தான தர்மத்தின் மூலம் கிடைக்கும் பலன்களும் பன் மடங்கு பெருகி நம்மை வாழ்விக்கும். இந்நாளில் சிறப்பமிக்க பூஜைகளும், தானதர்மமும் செய்து பன்மடங்கு அருளை பெறுவோம்.

அட்சயதிருதியை நாளில் நாம் செய்யும் தானதர்மங்கள் அளவற்ற புண்ணியத்தை சேர்க்கும்.

“பிறருக்கு நாம் கொடுப்பதெல்லாம் தமக்கே தாம் கொடுத்து கொள்வது ” என்பதாகும் என்கிறார் ரமணர். அதாவது நாம் பிறருக்கு கொடுக்கும் தான தர்மங்கள் மூலம் நமக்கு அதற்கேற் பொருட்களும், புண்ணியங்களும் மீண்டும் கிடைக்கிறது. அதுபோல், பிறருக்கு தருகின்ற அளவிற்கு வசதி பெருக்கமும் அதிகரிக்கிறது. அட்சயதிருதியை நன்னாளில் சுயநலமான பணிகளை மேற்கொள்வதை விட பிறருக்கு தேவையான தர்மத்தை வழங்குவது நல்லது.

பள்ளியில் பயில முடியாத குழந்தைகளுக்கு கல்வி உபகரணம், புத்தகம் வாங்கிதருதல், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உதவிடுதல், உணவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்றவாறு உதவிகளை செய்தல் வேண்டும். தானதர்மம் செய்ய பெரிய செல்வந்தராக தான் இருத்தல் வேண்டும் என்பது இல்லை நம்மால் இயன்ற சிறு பொருளையாவது வழங்குவது மிக நன்மை பயக்கும். அக்‌ஷய திருதியை நன்னாளில் நீர்மோர், தயிர்சாதம், பானகம் போன்றவகளை கூட மக்களுக்கு தானமாக வழங்குதல் நல்ல பலன்களை தரும்.

அனைவருக்கும்  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....... மலர்ந்திக்கும் இப்புத்தாண்டில்  அனைவரும் சகல வளங்களும் பெற்று சந...
14/04/2017

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....... மலர்ந்திக்கும் இப்புத்தாண்டில் அனைவரும் சகல வளங்களும் பெற்று சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல அன்னை ஆதிபராசக்தி... அம்பலமான கீ.பி, ஸ்ரீ முத்துமாரி அம்மன் அருள் புரிய பிரார்த்திக்கிறோம்......

13/04/2017

**ஏவிளம்பி வருடப்பிறப்பு - 2017**

**புது வருடம் பிறக்கும் விபரங்கள்,
13/04/2016 வியாகிழமை இலங்கை நேரம் நள்ளிரவு 12:48க்கு விசாகம் 3ம் பாதத்தில் பிறக்கின்றது.
**விஷூ புண்ணிய காலம்
13/04/2017 இரவு 08:48 முதல் 14/04/2017 அதிகாலை 04:48 வரையாகும். இக்காலத்தில் மருத்து நீர் தேய்த்து ஸ்நானஞ் செய்யலாம்.
**ஆடை நிறங்கள்
மஞ்சள், கபில நிறங்கள் மற்றும் மஞ்சள் பட்டாடை
**கைவிசேட நேரம்
புது வருடம் பிறக்கும் நேரம் அத்துடன்
14/04/2017 அதிகாலை 12:09 முதல் – அதிகாலை 12:31 வரை
15/04/2017 காலை 10:38 முதல் – காலை 11:38 வரை
16/04/2017 காலை 09:51 முதல் – காலை 11:51 வரை
**நட்சத்திர பலன்கள்
மேடம், விருச்சிகம், கடகம் – சமபலன்
இடபம், துலாம் – சுபம்
மிதுனம், கன்னி – பெருநஷ்டம்
தனுசு, மீனம் – நஷ்டம்
மகரம், கும்பம் – லாபம்
சிம்மம் – அதிகலாபம்

28/03/2017
26/03/2017
26/03/2017

Address

Ambalamana Lower Division
Galaha
60420

Telephone

0772328905

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Muththumari Amman kovil. Ambalamana Lower Division, Galaha. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share